பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Esther எஸ்தர் אֶסְתֵר
எஸ்தர் 9 | Esther 9
The Jews Destroy Their Enemies
1 ராஜாவின் வார்த்தையின்படியும் அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுகிறதற்கு, ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந் தேதியிலே, யூதரின் பகைஞர் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே; அந்த நாளிலேதானே, யூதரானவர்கள் தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடிந்தது.
1 On the thirteenth day of the twelfth month, the month of Adar,a the king’s command and edict were to be executed. On this day the enemies of the Jews had hoped to overpower them, but their plan was overturned and the Jews overpowered those who hated them.
1 மன்னரின் வாக்கும் நியமும் நிறைவேற்றப்படவேண்டிய அதார் என்ற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாள் வந்தது. எதிரிகள் யூதரை மேற்கொள்ளலாம் என்று நம்பியிருந்த அந்த நாள், யூதர் தம் பகைவரை மேற்கொள்ளும் நாளாக மாறியது.
2 யூதர் அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள பட்டணங்களிலே தங்களுக்குப் பொல்லாப்பு வரப்பண்ணப்பார்த்தவர்கள்மேல் கைபோடக் கூடிக்கொண்டார்கள்; ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கக் கூடாதிருந்தது; அவர்களைப் பற்றி சகல ஜனங்களுக்கும் பயமுண்டாயிற்று.
2 In each of the provinces of King Xerxes, the Jews assembled in their cities to attack those who sought to harm them. No man could withstand them, because the fear of them had fallen upon all peoples.
2 அகஸ்வேர் மன்னரின் மாநிலங்களில் இருந்த யூதர் அனைவரும் தமக்குத் துன்பம் விளைவிக்க எண்ணியோர்க்கு எதிராய்த் தம் கைகளை நீட்ட அவரவர் தம் இடங்களில் ஒன்று திரண்டனர். வேற்றினத்தாரை அச்சம் ஆட்கொள்ள, அவர்களுள் எவராலும் யூதரை எதிர்த்து நிற்க இயலவில்லை.
3 நாடுகளின் சகல அதிகாரிகளும், தேசாதிபதிகளும், துரைகளும், ராஜாவின் காரியங்களை நடப்பிக்கிறவர்களும், யூதருக்குத் துணைநின்றார்கள்; மொர்தெகாயினால் உண்டான பயங்கரம் அவர்களைப் பிடித்தது.
3 And all the officials of the provinces, the satraps, the governors, and the king’s administrators helped the Jews, because the fear of Mordecai had fallen upon them.
3 மொர்தக்காயைப் பற்றிய அச்சம் மன்னரின் அலுவல்களில் உதவி செய்கின்ற மாநிலத் தலைவர்கள், குறுநில மன்னர்கள், ஆளுநர்கள் அரச ஊழியம் செய்வோர் அனைவரையும் ஆட்கொள்ள அவர்களும் யூதருக்கு உதவி செய்யலாயினர்.
4 மொர்தெகாய் ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான்; அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவனானான்.
4 For Mordecai exercised great power in the palace, and his fame spread throughout the provinces as he became more and more powerful.
4 மொர்தக்காய் அரச மாளிகையில் வல்லவரானார். அவரது புகழ் அனைத்து மாநிலங்களிலும் பரவியது. அவரது ஆற்றல் மென்மேலும் வளர்ந்தது.
5 அப்படியே யூதர் தங்கள் சத்துருக்களையெல்லாம் பட்டயத்தால் வெட்டிக்கொன்று நிர்மூலமாக்கி, தங்கள் இஷ்டப்படி தங்கள் பகைஞருக்குச் செய்தார்கள்.
5 The Jews put all their enemies to the sword, killing and destroying them, and they did as they pleased to those who hated them.
5 எனவே, யூதர் தம் பகைவருக்கு எதிராய்த் தாம் விரும்பியபடி செய்தனர். அவர்களை வாளால் தாக்கி வெட்டி வீழ்த்தினர்.
6 யூதர் சூசான் அரமனையிலும் ஐந்நூறுபேரைக் கொன்று நிர்மூலமாக்கினார்கள்.
6 In the citadel of Susa, the Jews killed and destroyed five hundred men,
6 சூசான் அரண்மனையில் ஐந்நூறு பேரை யூதர் கொன்றொழித்தனர்.
7 அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் யூதருடைய சத்துருவின் குமாரரான பர்சான்தாத்தா, தல்போன், அஸ்பாதா,
7 including Parshandatha, Dalphon, Aspatha,
7 பர்சந்தத்தா, தல்போன், அஸ்பாத்தா,
8 பொராதா, அதலியா, அரிதாத்தா,
8 Poratha, Adalia, Aridatha,
8 போராத்தா, அதலியா, அரிதாத்தா,
9 பர்மஷடா, அரிசாய், அரிதாய், வாய்சாதா ஆகிய பத்துப்பேரையும் கொன்றுபோட்டார்கள்.
9 Parmashta, Arisai, Aridai, and Vaizatha.
9 பர்மஸ்தா, அரிசாய், அரிதாய், வய்சாத்தா ஆகிய
10 ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.
10 They killed these ten sons of Haman son of Hammedatha, the enemy of the Jews, but they did not lay a hand on the plunder.
10 யூதரின் எதிரியும் அம்மதாத்தின் மகனுமான ஆமானின் புதல்வர் பதின்மரையும் அவர்கள் கொன்றனர்; ஆயினும், அவர்களின் உடைமைகளைக் கொள்ளையடிக்கவில்லை.
Haman’s Sons Hanged
11 அன்றையதினம் சூசான் அரமனையில் கொன்றுபோடப்பட்டவர்களின் தொகை ராஜசமுகத்தில் கொண்டுவரப்பட்டது.
11 On that day the number of those killed in the citadel of Susa was reported to the king,
11 மன்னரின் பிற மாநிலங்களில் வாழ்ந்த யூதர் ஒன்று திரண்டு தம்மைப் பாதுகாத்துக்கொன்டனர். தம் பகைவரிடமிருந்து விடுதலை பெறுமாறு அவர்கள் எழுபத்தைந்து ஆயிரம் பேரைக் கொன்றனர். ஆயினும் அவர்கள் உடைமைகளைக் கொள்ளையடிக்கவில்லை.
12 அப்பொழுது ராஜா, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: யூதர் சூசான் அரமனையில் ஐந்நூறுபேரையும் ஆமானின் பத்துக் குமாரரையும் கொன்று நிர்மூலமாக்கினார்கள்; ராஜாவின் மற்ற நாடுகளிலும் என்ன செய்திருப்பார்களோ! இப்போதும் உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கட்டளையிடப்படும்; உன் மன்றாட்டு என்ன? அதின்படி செய்யப்படும் என்றான்.
12 who said to Queen Esther, “In the citadel of Susa the Jews have killed and destroyed five hundred men, including Haman’s ten sons. What have they done in the rest of the royal provinces? Now what is your petition? It will be given to you. And what further do you request? It will be fulfilled.”
12 அதார் மாதம் பதின்மூன்றாம் நாளையடுத்த பதினான்காம் நாளன்று அவர்கள் ஓய்வெடுத்தனர். அந்நாளை விருந்துண்டு மகிழும் விழாவாக ஆக்கினர்.
13 அப்பொழுது எஸ்தர்: ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், இன்றையத்தினத்துக் கட்டளையின்படியே சூசானிலிருக்கிற யூதர் நாளையதினமும் செய்யவும், ஆமானின் பத்துக் குமாரரின் உடலையும் தூக்குமரத்தில் தூக்கிப்போடவும் உத்தரவாகவேண்டும் என்றாள்.
13 Esther replied, “If it pleases the king, may the Jews in Susa also have tomorrow to carry out today’s edict, and may the bodies of Haman’s ten sons be hanged on the gallows.”
13 சூசான் வாழ் யூதரோ அதார் மாதம் பதின்மூன்றாம், பதினான்காம் நாள்களில் ஒன்றுகூடி அடுத்துவந்த பதினைந்தாம் நாளை ஒய்வெடுத்து, விருந்துண்டு மகிழும் விழாவாக ஆக்கினர்.
14 அப்படியே செய்யும்படிக்கு ராஜா உத்தரவு கொடுத்தான், அதற்குச் சூசானிலே கட்டளை பிறந்தது; ஆமானின் பத்துக் குமாரருடைய உடலையும் தூக்கிப்போட்டார்கள்.
14 So the king commanded that this be done. An edict was issued in Susa, and they hanged the ten sons of Haman.
14 அரணற்ற நகர்ப்புறச் சிற்றூர்களில் வாழ்ந்த யூதர், அதார் மாதம் பதினான்காம் நாளை விருந்துண்டு மகிழ்ந்து, ஒருவருக்கொருவர் அன்பளிப்பு கொடுத்துக் கொள்ளும் விழாவாக ஆக்கினர்.
15 சூசானிலிருக்கிற யூதர் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியிலும் கூடிச்சேர்ந்து, சூசானில் முந்நூறுபேரைக்கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.
15 On the fourteenth day of the month of Adar, the Jews in Susa came together again and put to death three hundred men there, but they did not lay a hand on the plunder.
15 மொர்தக்காய் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் மடல்களில் வரைந்து, அவற்றை அருகிலும் தொலையிலும், மன்னர் அகஸ்வோரின் அனைத்து மாநிலங்களிலும் வாழ்ந்த யூதருக்கு அனுப்பி,
16 ராஜாவின் நாடுகளிலுள்ள மற்ற யூதர்கள் தங்கள் பிராணனைத் தற்காக்கவும், தங்கள் பகைஞருக்கு விலகி இளைப்பாறுதல் அடையவும் ஒருமிக்கச் சேர்ந்து, தங்கள் விரோதிகளில் எழுபத்தையாயிரம் பேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.
16 The rest of the Jews in the royal provinces also assembled to defend themselves and rid themselves of their enemies. They killed 75,000 who hated them, but they did not lay a hand on the plunder.
16 ஆண்டுதோறும் அதார் மாதம் பதினான்காம், பதினைந்தாம் நாள்களை
17 ஆதார் மாதத்தின் பதின்முன்றாந்தேதியிலே இப்படிச் செய்து, பதினாலாந்தேதியிலே இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள்.
17 This was done on the thirteenth day of the month of Adar, and on the fourteenth day they rested, making it a day of feasting and joy.
17 யூதர் தம் பகைவரின் தொல்லையினின்று விடுதலை பெற்ற நாள்களாகவும், அவர்களின் துன்பம் மகிழ்ச்சியாகவும், புலம்பல் விழாக் கோலமாகவும் மாறின மாதமாகவும் கொண்டு, அந்நாள்களில் விருந்துண்டு மகிழவும், ஒருவருக்கொருவர் அன்பளிப்பு கொடுத்துக் கொள்ளவும், ஏழைகளுக்கு உணவளிக்கவும், வேண்டுமென்று நியமம் தந்தார்.
The Feast of Purim Instituted
18 சூசானிலுள்ள யூதரோவென்றால், அந்த மாதத்தின் பதின்முன்றாந்தேதியிலும் பதினாலாந்தேதியிலும் ஏகமாய்க்கூடி, பதினைந்தாந்தேதியில் இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகைநாளாக்கினார்கள்.
18 The Jews in Susa, however, had assembled on the thirteenth and the fourteenth days of the month. So they rested on the fifteenth day, making it a day of feasting and joy.
18 யூதர்கள் தாம் செய்யத் தொடங்கிவாறும், மொர்தக்காய் தங்களுக்கு எழுதியவாறும் செய்ய உடன்பட்டார்கள்.
19 ஆதலால் அலங்கமில்லாத ஊர்களில் குடியிருக்கிற நாட்டுப்புறத்தாரான யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியைச் சந்தோஷமும், விருந்துண்கிற பூரிப்புமான நாளும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்புகிற நாளுமாக்கினார்கள்.
19 This is why the rural Jews, who live in the villages, observe the fourteenth day of the month of Adar as a day of joy and feasting. It is a holiday for sending gifts to one another.
19 ஆகாகியனும் அம்மதாத்தின் மகனுமான ஆமான், யூதர்க்கெல்லாம் எதிரியாய் இருந்து, அவர்களை அழிக்கவும், அடியோடு ஒழிக்கவும், 'பூர்' என்ற சீட்டைப் போட்டான்.
20 மொர்தெகாய் இந்த வர்த்தமானங்களை எழுதி, சமீபத்திலும் தூரத்திலுமிருக்கிற அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள எல்லா யூதருக்கும் நிருபங்களை அனுப்பி,
20 Mordecai recorded these events and sent letters to all the Jews in all the provinces of King Xerxes, both near and far,
20 அப்போது எஸ்தர், மன்னரின் உதவியை நாட, யூதருக்கு எதிராய்ச் சதிசெய்த ஆமானின் தீவினை அவன் தலைமேலே விழுமாறு அவர் கட்டளை பிறப்பித்தார். அதன்படி அவனும் அவன் புதல்வரும் தூக்கிலிடப்பட்டனர்.
21 வருஷந்தோறும் ஆதார் மாதத்தின் பதினாலாம் பதினைந்தாந்தேதிகளை யூதர் தங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும், அவர்கள் சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்கள் துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் ஆசரித்து,
21 to establish among them an annual celebration on the fourteenth and fifteenth days of the month of Adar
21 எனவே, யூதர் இந்நாள்களை, 'பூர்' என்ற சொல்லினின்று எழுந்த 'பூரிம்' என்ற பெயரால் அழைக்கலாயினர். 'பூரிம்' என்ற இவ்விழாவிற்கு மொர்தக்காயின் மடலின் வாசகமும் அவர்கள் கண்டவையும் அனுபவித்தவையுமே அடிப்படை ஆயின.
22 அந்நாட்களில் விருந்துண்டு சந்தோஷங்கொண்டாடவும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்பவும், எளியவர்களுக்குத் தானதர்மஞ்செய்யவும் வேண்டுமென்று திட்டம்பண்ணினான்.
22 as the days on which the Jews gained rest from their enemies and the month in which their sorrow turned to joy and their mourning into a holiday. He wrote that these were to be days of feasting and joy, of sending gifts to one another and to the poor.
22 அவர்களும் அவர்களின் வழிமரபினரும் அவர்களைச் சார்ந்தோர் அனைவரும், இந்த இரு நாள்களை அவை பற்றிய மடல்களின்படியும் குறிக்கப்பட்ட காலத்திலும் கண்டிப்பாய்க் கொண்டாடுவது என்று கீழ்க் கண்டவாறு உறுதி பூண்டனர்:
23 அப்பொழுது யூதர் தாங்கள் செய்யத்தொடங்கினபடியும் மொர்தெகாய் தங்களுக்கு எழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள்.
23 So the Jews agreed to continue the custom they had started, as Mordecai had written to them.
23 "இந்நாள்கள் தலைமுறைதோறும், ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நகரிலும் நினைவுகூரப்பட்டுக் கொண்டாடப்பட வேண்டும். 'பூரிம்' என்ற இந்நாள்கள் யூதரிடையே கொண்டாடப்படாமல் போகா. இவற்றின் நினைவு அவர்களின் வழிமரபினரிடையிலும் ஒழிந்து போகாது".
24 அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன், யூதருக்கெல்லாம் சத்துருவாயிருந்து யூதரைச் சங்கரிக்க நினைத்து, அவர்களை அழிக்கவும் நிர்மூலமாக்கவும், பூர் என்னப்பட்ட சீட்டைப் போடுவித்தான்.
24 For Haman son of Hammedatha, the Agagite, the enemy of all the Jews, had plotted against the Jews to destroy them and had cast the Pur (that is, the lot) to crush and destroy them.
24 அபிகாயிலின் மகளான அரசி எஸ்தரும் யூதராகிய மொர்தக்காயும் 'பூரிம்' பற்றிய இந்த இரண்டாம் மடலை முழு அதிகாரத்துடன் எழுதி உறுதிப்படுத்தினர்.*
* எஸ் 3:7.
25 ஆனாலும் எஸ்தர், ராஜசமுகத்தில்போய், யூதருக்கு விரோதமாய் அவன் நினைத்த அவனுடைய பொல்லாத யோசனை அவனுடைய தலையின்மேல் திரும்பும்படி கட்டளை பிறப்பித்ததினாலே, அவனையும் அவன் குமாரரையும் மரத்திலே தூக்கிப்போட்டார்கள்.
25 But when it came before the king, he commanded by letter that the wicked scheme which Haman had devised against the Jews should come back upon his own head, and that he and his sons should be hanged on the gallows.
25 அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் அம்மடல் எழுதப்பட்டு, அகஸ்வேரின் ஆட்சிக்குட்பட்ட நூற்றிருப்பத்தேழு மாநிலங்களிலும் வாழ்ந்த யூதருக்கு அனுப்பப்பட்டது.
26 ஆகையினால் அந்த நாட்கள் பூர் என்னும் பேரினால் பூரீம் என்னப்பட்டது; அவன் அந்த நிருபத்தில் எழுதியிருந்த எல்லா வார்த்தைகளினிமித்தமும், தாங்களே இந்த விஷயத்தில் அநுபவித்தவைகளினித்தமும், தங்களுக்கு நேரிட்டவைகளினிமித்தமும்,
26 Therefore these days are called Purim, from the word Pur. Because of all the instructions in this letter, and because of all they had seen and experienced,
26 யூதராகிய மொர்தக்காயும் அரசி எஸ்தரும் இட்ட ஆணையின்படி, 'பூரிம்' என்ற இந்த நாள்களை யூதரும், அவர்களின் வழிமரபினரும் குறிக்கப்பட்ட காலத்தில் நோன்பு, புலம்பல் நாள்களாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
27 யூதர் அதைத் திட்டப்படுத்தி, அந்த இரண்டு நாட்களைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, அவைகளை வருஷந்தோறும் அவைகளின் சரியான காலத்திலே ஆசரியாமலிருப்பதில்லை என்பதையும்,
27 the Jews bound themselves to establish the custom that they and their descendants and all who join them should not fail to celebrate these two days at the appointed time each and every year, according to their regulation.
27 இந்தப் 'பூரிம்' விழாபற்றிய ஒழுங்குமுறைகள் யாவற்றையும் உறுதிப்படுத்திய எஸ்தரின் ஆணை ஓர் ஏட்டுச் சுருளில் எழுதி வைக்கப்பட்டது.
28 இந்த நாட்கள் எல்லாத் தலைமுறைகளிலும், வம்சங்களிலும், தேசங்களிலும், ஊர்களிலும் நினைவுகூரப்பட்டு ஆசரிக்கப்படவேண்டும் என்பதையும் இந்தப் பூரீம் என்னும் பண்டிகை நாட்கள் யூதருக்குள்ளே தவறிப்போகாமலும், அவைகளை நினைவுருதல் தங்கள் சந்ததியாருக்குள்ளே ஒழிந்துபோகாமலும் இருக்கவேண்டும் என்பதையும், தங்கள்மேலும், தங்கள் சந்ததியார்மேலும், தங்கள் மார்க்கத்தில் அமையப்போகிற மற்ற யாவர்மேலும் கடனாக நியமித்துக்கொண்டார்கள்.
28 These days should be remembered and celebrated by every generation, family, province, and city, so that these days of Purim should not fail to be observed among the Jews, nor should the memory of them fade from their descendants.
29 பூரீமைக்குறித்து எழுதியிருக்கிற இந்த இரண்டாம் நிருபத்தைத் திடப்படுத்தும்படிக்கு, அபியாயேலின் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் ராஜாத்தியும், யூதனாகிய மொர்தெகாயும், பின்னும் மகா உறுதியாய் எழுதினார்கள்.
29 So Queen Esther daughter of Abihail, along with Mordecai the Jew, wrote with full authority to confirm this second letter concerning Purim.
30 யூதனாகிய மொர்தெகாயும், ராஜாத்தியாகிய எஸ்தரும் யூதருக்கு உறுதிப்பாடுபண்ணினதும், அவர்கள்தானே உபவாசத்தோடும் அலறுதலோடும் ஆசரிப்போம் என்று தங்கள்மேலும் தங்கள் சந்ததியார்மேலும் கடனாக நியமித்துக்கொண்டதுமான, பூரீம் என்னப்பட்ட இந்த நாட்கள் அவைகளின் சரியான காலங்களில் ஆசரிக்கப்படும் காரியத்தை உறுதியாக்க,
30 And Mordecai sent letters with words of peace and truth to all the Jews in the 127 provinces of the kingdom of Xerxes,
31 அவன் அகாஸ்வேருவின் ராஜ்யத்திலுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளிலுமிருக்கிற எல்லா யூதருக்கும் சமாதானமும் உண்மையுமான வார்த்தைகளையுடைய நிருபங்களை அனுப்பினான்.
31 in order to confirm these days of Purim at their appointed time, just as Mordecai the Jew and Queen Esther had established them and had committed themselves and their descendants to the times of fasting and lamentation.
32 இப்படியே எஸ்தரின் கட்டளையானது பூரீம் நாட்களைப்பற்றின இந்த வர்த்தமானங்களைத் திடப்படுத்தினது; அது ஒரு புஸ்தகத்தில் எழுதப்பட்டது.
32 So Esther’s decree confirmed these regulations about Purim, which were written into the record.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a Adar is the twelfth month of the Hebrew lunar calendar, usually occurring within the months of February and March; also in verses 15, 17, 19, and 21.
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.