பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Esther எஸ்தர் אֶסְתֵר
எஸ்தர் 7 | Esther 7
Esther Pleads for Her People
1 ராஜாத்தியாகிய எஸ்தருடனே விருந்துண்ண, ராஜாவும் ஆமானும் வந்தபோது,
1 So the king and Haman went to dine with Esther the queen,
1 மன்னரும் ஆமானும் அரசி எஸ்தர் வைத்த விருந்துக்குச் சென்றனர்.
2 இரண்டாம் நாள் விருந்தில் திராட்சரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றான்.
2 and as they drank their wine on that second day, the king asked once more, “Queen Esther, what is your petition? It will be given to you. What is your request? Even up to half the kingdom, it will be fulfilled.”
2 மன்னர் இரண்டாம் நாள் விருந்தில் திராட்சை மதுவை மீண்டும் அருந்துகையில், எஸ்தரிடம் "எஸ்தர் அரசியே, உன் விண்ணப்பம் யாது? அது உனக்கு அளிக்கப்படும். நீ வேண்டுவது என் அரசின் பாதியே ஆனாலும் அது உனக்குக் கொடுக்கப்படும்" என்றார்.
3 அப்பொழுது ராஜாத்தியாகிய எஸ்தர் பிரதியுத்தரமாக: ராஜாவே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்து, ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால் என் வேண்டுதலுக்கு என் ஜீவனும், என் மன்றாட்டுக்கு என் ஜனங்களும் எனக்குக் கட்டளையிடப்படுவதாக.
3 Queen Esther replied, “If I have found favor in your sight, O king, and if it pleases the king, grant me my life as my petition, and the lives of my people as my request.
3 அப்பொழுது அரசி எஸ்தர், "உம் கண்களில் எனக்குத் தயவு கிடைத்திருப்பின், அரசே! உமக்கு நலமெனப்பட்டால், எனது விண்ணப்பத்திற்கிணங்க எனக்கும் என் வேண்டுகோளின்படி என் மக்களுக்கும் உயிர்ப்பிச்சை அருள்வீராக!
4 எங்களை அழித்துக் கொன்று நிர்மூலமாக்கும்படி நானும் என் ஜனங்களும் விற்கப்பட்டோம்; அடிமைகளாகவும் வெள்ளாட்டிகளாகவும் விற்கப்பட்டுப்போனாலும் நான் மவுனமாயிருப்பேன்; இப்பொழுதோ ராஜாவுக்கு உண்டாகும் நஷ்டத்துக்கு அந்தச் சத்துரு உத்தரவாதம்பண்ணமுடியாது என்றாள்.
4 For my people and I have been sold out to destruction, death, and annihilation. If we had merely been sold as menservants and maidservants, I would have remained silent, because no such distress would justify burdening the king.”
4 என் மக்களும் நானும் கொலையுண்டு அழிந்து ஒழிந்துபோகும்படி விலை பேசப்பட்டிருக்கிறோம்; ஆண்களும் பெண்களுமாக நாங்கள் அடிமைகளாய் விற்கப்பட்டிருந்தால் கூட நான் மௌனமாய் இருந்திருப்பேன். ஆனால் மன்னருக்கு உண்டாகும் இழப்பிற்கு எதிரியால் ஈடு செய்ய முடியாது" என்று பதிலளித்தார்.
5 அப்பொழுது ராஜாவாகிய அகாஸ்வேரு மறுமொழியாக, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: இப்படிச் செய்யத்துணிரங்கொண்டவன் யார்? அவன் எங்கே என்றான்.
5 Then King Xerxes spoke up and asked Queen Esther, “Who is this, and where is the one who would devisea such a scheme?”
5 மன்னர் அகஸ்வேர் அரசி எஸ்தரை நோக்கி, "இப்படிச் செய்தவன் எவன்? தன் இதயத்தில் செருக்குற்று இவ்வாறு செய்யும்படி நினைத்த அவன் எங்கே?" என வினவினார்.
6 அதற்கு எஸ்தர்: சத்துருவும் பகைஞனுமாகிய அந்த மனிதன் இந்தத் துஷ்ட ஆமான்தான் என்றாள்; அப்பொழுது ராஜாவுக்கும் ராஜாத்திக்கும் முன்பாக ஆமான் திகிலடைந்தான்.
6 Esther replied, “The adversary and enemy is this wicked man—Haman!” And Haman stood in terror before the king and queen.
6 "எதிரியும் வஞ்சனகனுமாகிய மனிதன் இந்த ஆமானே; இவனே அந்தத் தீயவன்!" என்று எஸ்தர் பதிலுரைத்தார். இது கேட்ட ஆமான், மன்னருக்கும் எஸ்தருக்கும் முன்பாகப் பேரச்சம் கொண்டான்.
The Hanging of Haman
7 ராஜா உக்கிரத்தோடே திராட்சரப் பந்தியை விட்டெழுந்து, அரமனைத்தோட்டத்திற்குப் போனான்; ராஜாவினால் தனக்குப் பொல்லாப்பு நிர்ணயிக்கப்பட்டதென்று ஆமான் கண்டு, ராஜாத்தியாகிய எஸ்தரிடத்தில் தன் பிராணனுக்காக விண்ணப்பம்பண்ண எழுந்து நின்றான்.
7 In his fury, the king arose from drinking his wine and went to the palace garden, while Haman stayed behind to beg Queen Esther for his life, for he realized that the king was planning a terrible fate for him.
7 மன்னர் கடுஞ்சினமுற்று, விருந்தில் திராட்சை மது அருந்துவதை விட்டுவிட்டு, எழுந்து அரண்மனைப் பூங்காவில் நுழைந்தார். தனக்குத் தீங்கிழைக்க மன்னர் முடிவு செய்துவிட்டார் என்று கண்ட ஆமான் அரசி எஸ்தரிடம் தன் உயிருக்காய் மன்றாட எண்ணிப் பின்தங்கினான்.
8 ராஜா அரமனைத் தோட்டத்திலிருந்து திராட்சரசம் பரிமாறப்பட்ட இடத்துக்குத் திரும்பிவருகையில், எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்துகிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரமனையிலிருக்கும்போதே என் கண்முன்னே இவன் ராஜாத்தியைப் பலவந்தம் செய்யவேண்டுமென்றிருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து பிறந்தவுடனே ஆமானின் முகத்தை மூடிப்போட்டார்கள்.
8 Just as the king returned from the palace garden to the banquet hall, Haman was falling on the couch where Esther was reclining. The king exclaimed, “Would he actually assault the queen while I am in the palace?” As soon as the words had left the king’s mouth, they covered Haman’s face.
8 மன்னர் அரண்மனைப் பூங்காவிலிருந்து விருந்து நடைபெற இடத்திற்குத் திரும்பிய பொழுது, எஸ்தரின் மெத்தையில் ஆமான் வீழ்ந்து கிடக்கக் கண்டார். "என் மாளிகையில் நான் இருக்கும் போதே, இவன் அரசியைக் கெடுப்பானோ?" என்ற சொற்கள் மன்னரின் வாயினின்று வெளிப்பட, காவலர் ஆமானின் முகத்தை மூடிவிட்டனர்.
9 அப்பொழுது ராஜசமுகத்தில் இருக்கிற பிரதானிகளில் அற்போனா என்னுமொருவன்: இதோ, ராஜாவின் நன்மைக்காகப் பேசின மொர்தெகாய்க்கு ஆமான் செய்வித்த ஐம்பது முழ உயரமான தூக்குமரம் ஆமானின் வீட்டண்டையில் நாட்டப்பட்டிருக்கிறது என்றான்; அப்பொழுது ராஜா: அதிலே அவனைத் தூக்கிப்போடுங்கள் என்றான்.
9 Then Harbonah, one of the eunuchs attending the king, said: “There is a gallows fifty cubits highb at Haman’s house. He had it built for Mordecai, who gave the report that saved the king.” “Hang him on it!” declared the king.
9 அச்சமயம், மன்னருக்குப் பணிவிடை செய்த அர்போனா என்ற அலுவலர் மன்னரை நோக்கி, "அதோ! ஆமானின் வீட்டெதிரே மன்னருக்கு நல்லது செய்த மொர்தக்காயைத் தூக்கிலிட ஆமான் நாட்டிய ஐம்பது முழத் தூக்குமரம்!" என்றார். அதற்கு மன்னர், "அதிலேயே அவனைத் தூக்கிலிடுங்கள்!" என்றார்.
10 அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் உக்கிரம் தணிந்தது.
10 So they hanged Haman on the gallows he had prepared for Mordecai. Then the fury of the king subsided.
10 மொர்தக்காயைத் தூக்கிலிட அவன் நாட்டிய தூக்கு மரத்திலேயே ஆமான் தூக்கிலிடப்பட்டான். மன்னரின் சீற்றமும் தணிந்தது.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
5 a Hebrew whose heart has filled him to do
9 b 50 cubits is approximately 75 feet or 22.9 meters high.
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.