பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Exodus யாத்திராகமம் שְׁמוֹת
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40
யாத்திராகமம் 36 | Exodus 36
The People Bring More than Enough
1 அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்துத் திருப்பணிகளுக்கடுத்த சகல வேலைகளையும், கர்த்தர் கற்பித்தபடியெல்லாம், பெசலெயேலும் அகோலியாபும், செய்ய அறியும்படிக்குக் கர்த்தரால் ஞானமும் புத்தியும் பெற்ற விவேக இருதயமுள்ள மற்ற அனைவரும் செய்யத்தொடங்கினார்கள்.
1 “So Bezalel, Oholiab, and every skilled person are to carry out everything commanded by the LORD, who has given them skill and ability to know how to perform all the work of constructing the sanctuary.”
1 பெட்சலேலும் ஒகொலியாபும் மேலும் தூயக அமைப்பு வேலையனைத்தையும் செய்யத் தெரியுமாறு ஆண்டவரிடமிருந்து அறிவுக் கூர்மையும் தொழில்திறமையும் பெற்றிருந்த கலைஞர் யாவரும், ஆண்டவர் கட்டளையிட்டபடி வேலை செய்யட்டும்.
2 பெசலெயேலையும் அகோலியாபையும், கர்த்தரால் ஞானமடைந்து அந்த வேலைகளைச் செய்யவரும்படி தங்கள் இருதயத்தில் எழுப்புதலடைந்த ஞான இருதயத்தாராகிய எல்லாரையும், மோசே வரவழைத்தான்.
2 Then Moses summoned Bezalel, Oholiab, and every skilled person whom the LORD had gifted—everyone whose heart stirred him to come and do the work.
2 அவ்வாறே மோசே பெட்சலேலையும், ஒகொலியாபையும், ஆண்டவரிடமிருந்து அறிவுக்கூர்மை பெற்றவரும் உள்ளார்வம் உடையவருமான கலைஞர் அனைவரையும் வேலையில் ஈடுபடுமாறு அழைத்தார்.
3 அவர்கள், இஸ்ரவேல் புத்திரர் திருப்பணிக்கடுத்த சகல வேலைகளுக்காகவும் கொண்டுவந்த காணிக்கைப் பொருள்களையெல்லாம், மோசேயினிடத்தில் வாங்கிக்கொண்டார்கள். பின்னும் ஜனங்கள் காலைதோறும் தங்களுக்கு இஷ்டமான காணிக்கைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
3 They received from Moses all the contributions that the Israelites had brought to carry out the service of constructing the sanctuary. Meanwhile, the people continued to bring freewill offerings morning after morning,
3 தூயக வேலைக்கென்று இஸ்ரயேல் மக்கள் கொண்டு வந்த காணிக்கைகள் யாவற்றையும் இவர்கள் மோசே முன்னிலையிலிருந்து எடுத்துச் சென்றனர். தொடர்ந்து தன்னார்வக் காணிக்கைகள் காலைதோறும் வந்தவண்ணமாயிருந்தன.
4 அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்து வேலைகளைச் செய்கிற விவேகிகள் யாவரும் அவரவர் செய்கிற வேலையின் காரியமாய் வந்து,
4 so that all the skilled craftsmen who were doing all the work on the sanctuary left their work
4 தூயக வேலைகளில் ஈடுபட்டிருந்த கலைஞர் தாங்கள் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வந்து,
5 மோசேயை நோக்கி: கர்த்தர் செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை ஜனங்கள் கொண்டுவருகிறார்கள் என்றார்கள்.
5 and said to Moses, “The people are bringing more than enough for doing the work the LORD has commanded us to do.”
5 மோசேயை நோக்கி, "மக்கள் கொண்டு வருவது ஆண்டவர் கட்டளையிட்ட வேலைக்கும் அதிகமாகவே உள்ளது" என்று அறிவித்தனர்.
6 அப்பொழுது மோசே இனி புருஷர்களாவது ஸ்திரீகளாவது பரிசுத்த ஸ்தலத்துக்கென்று காணிக்கையாக ஒரு வேலையும் செய்யவேண்டாம் என்று பாளயம் எங்கும் கூறும்படி கட்டளையிட்டான்; இவ்விதமாய் ஜனங்கள் கொண்டுவருகிறது நிறுத்தப்பட்டது.
6 After Moses had given an order, they sent a proclamation throughout the camp: “No man or woman should make anything else as an offering for the sanctuary.” So the people were restrained from bringing more,
6 அப்போது மோசே, "ஆணோ பெண்ணோ யாராயினும் இனிமேல் தூயகத்துக்காகக் காணிக்கை கொண்டுவர வேண்டாம்" என்று ஒரு கட்டளை பிறப்பிக்க, அது பாளையம் எங்கும் அறிவிக்கப்பட்டது. எனவே, மக்கள் எதையுமே கொண்டு வருவதை நிறுத்திவிட்டனர்.
7 செய்யவேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமான பொருள்கள் இருந்ததுமல்லாமல் அதிகமாயும் இருந்தது.
7 since what they already had was more than enough to perform all the work.
7 ஏற்கனவே சேகரித்தது, செய்ய வேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமானதாயும் தேவைக்கு மிஞ்சியும் இருந்தது.
The Ten Curtains for the Tabernacle (Exodus 26:1–6)
8 வேலைசெய்கிறவர்களாகிய ஞான இருதயமுள்ள யாவரும் வாசஸ்தலத்தை உண்டாக்கினார்கள் அதற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், விநோத நெசவுவேலையாகிய கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகளைப் பண்ணினான்.
8 All the skilled craftsmen among the workmen made the ten curtains for the tabernacle. They were made of finely spun linen, as well as blue, purple, and scarlet yarn, with cherubim skillfully worked into them.
8 பணியாளருள் கலைத்திறமைமிக்கோர் அனைவரும் ஒன்று சேர்ந்து திருஉறைவிடத்தைப் பத்துத் திரைகளால் அமைத்தனர். அவை முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாகவும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாகவும், கலைத் திறனுடன் கூடிய கெருபுகள் அமைந்ததாகவும் இருந்தன.
9 ஒவ்வொரு மூடுதிரை இருபத்தெட்டு முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருந்தது.
9 Each curtain was twenty-eight cubits long and four cubits wide; all the curtains were the same size.
9 திரை ஒன்றின் நீளம் இருபத்தெட்டு முழமும் அகலம் நான்கு முழமும் ஆகும். ஒரு திரையின் அளவே எல்லாத் திரைகளுக்கும் இருக்கும்.
10 ஐந்து மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்து, மற்ற ஐந்து மூடுதிரைகளையும் ஒன்றோடொன்று இணைத்தான்.
10 And he joined five of the curtains together, and the other five he joined as well.
10 இவற்றுள் ஐந்து திரைகள் ஒன்றாகவும், ஏனைய ஐந்து திரைகள் ஒன்றாகவும் இணைக்கப்பட்டன.
11 இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் இளநீலநூலால் ஐம்பது காதுகளை உண்டுபண்ணி, அப்படியே இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்திலும் உண்டுபண்ணினான்.
11 He made loops of blue material on the edge of the end curtain in the first set, and also on the end curtain in the second set.
11 பின்னர், அவர் முதல் தொகுப்பின் விளிம்பில் நீலவண்ணத் துணி வளையங்களை அமைத்தார். அடுத்த தொகுப்பின் இறுதி விளிம்பிலும் அவ்வாறே செய்தார்.
12 காதுகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவைகளாயிருந்தது.
12 He made fifty loops on one curtain and fifty loops on the end curtain of the second set, so that the loops lined up opposite one another.
12 முதல் திரைத்தொகுப்பில் அவர் அமைத்த வளையங்களை ஐம்பது. மற்றத் திரைத்தொகுப்பின் விளிம்பில் அமைத்த வளையங்கள் ஐம்பது. அவ்வளையங்கள் எதிரெதிரே இருந்தன.
13 ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, அந்தக் கொக்கிகளால் மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்துவிட்டான். இவ்விதமாக ஒரே வாசஸ்தலமாயிற்று.
13 He also made fifty gold clasps to join the curtains together, so that the tabernacle was a unit.
13 பொன்னால் ஐம்பது கொக்கிகள் செய்து, அந்தக் கொக்கிகளால் அவர் திரைகளை ஒன்றோடொன்று இணைத்தார். இவ்வாறு, ஒன்றிணைந்து திருஉறைவிடம் அமைந்தது.
The Eleven Curtains of Goat Hair (Exodus 26:7–14)
14 வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டுமயிரினால் நெய்த பதினொரு மூடுதிரைகளையும் பண்ணினான்.
14 He then made curtains of goat hair for the tent over the tabernacle—eleven curtains in all.
14 திருஉறைவிடத்தில் மேலே கூடாரம் அமைப்பதற்கு வெள்ளாட்டு மயிரால் மூடுதிரைகள் செய்தார். பதினொரு மூடுதிரைகள் செய்தார்.
15 ஒவ்வொரு மூடுதிரை முப்பது முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது. பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாயிருந்தது.
15 Each of the eleven curtains was the same size—thirty cubits long and four cubits wide.b
15 ஒரு மூடுதிரையின் நீளம் முப்பது முழமும் அகலம் நான்கு முழமும் ஆகும். பதினொரு மூடுதிரைகளுக்கும் அளவு ஒன்றேயாம்.
16 ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், மற்ற ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்து,
16 He joined five of the curtains into one set and the other six into another.
16 இவற்றுள் ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், மற்ற ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்தார்.
17 இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கி,
17 He made fifty loops along the edge of the end curtain in the first set, and fifty loops along the edge of the corresponding curtain in the second set.
17 முதல் மூடுதிரைத்தொகுப்பின் ஓரத்தில் ஐம்பது வளையங்களை அமைத்தார். அவ்வாறே ஐம்பது வளையங்களை அடுத்த மூடுதிரைத் தொகுப்பின் ஓரத்திலும் அமைத்தார்.
18 கூடாரத்தை ஒன்றாய் இணைத்துவிட, ஐம்பது வெண்கலக் கொக்கிகளையும் உண்டாக்கினான்.
18 He also made fifty bronze clasps to join the tent together as a unit.
18 ஒரே கூடாரமாக ஒன்றிணைத்து அமைக்க ஐம்பது வெண்கல கொக்கிகள் செய்தார்.
19 சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினால் கூடாரத்துக்கு ஒரு மூடியையும் அதின்மேல் போடத் தகசுத்தோலினால் ஒரு மூடியையும் உண்டு பண்ணினான்.
19 Additionally, he made for the tent a covering of ram skins dyed red, and over that a covering of fine leather.c
19 மேலும் செந்நிறமாகப் பதனிட்ட செம்மறி ஆட்டுக்கிடாய்த் தோல்களாலும், வெள்ளாட்டுத் தோல்களாலும், கூடாரத்துக்கு ஒரு மேல்விரிப்பு செய்தார்.
The Frames and Bases (Exodus 26:15–30)
20 வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் செய்தான்.
20 Next, he constructed upright frames of acacia wood for the tabernacle.
20 திருஉறைவிடத்திற்கான செங்குத்தாய் நிற்கும் சட்டங்களை அவர் சித்திம் மரத்தால் செய்தார்.
21 ஒவ்வொரு பலகையும் பத்துமுழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாயிருந்தது.
21 Each frame was ten cubits long and a cubit and a half wide.d
21 ஒரு சட்டத்தின் நீளம் பத்து முழமும் அகலம் ஒன்றரை முழமும் ஆகும்.
22 ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றுக்கொன்று சமதூரமான இரண்டு கழுந்துகள் இருந்தது; வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்தான்.
22 Two tenons were connected to each other for each frame. He made all the frames of the tabernacle in this way.
22 சட்டம் ஒவ்வொன்றைப் பொருத்த இரு கொளுத்துகள் வீதம் திருஉறைவிடத்தின் எல்லாச் சட்டங்களுக்கும் செய்தார்.
23 வாசஸ்தலத்திற்காகச் செய்யப்பட்ட பலகைகளில் தெற்கே தென்திசைக்கு இருபது பலகைகளை உண்டாக்கி,
23 He constructed twenty frames for the south side of the tabernacle,
23 திருஉறைவிடத்திற்காகச் சட்டங்களை அவர் செய்த முறை; தெற்கே தென்திசை நோக்கி நிற்கச் செய்யப்பட்டவை இருபது சட்டங்கள்.
24 அந்த இருபது பலகைகளின் கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டுபண்ணினான்; ஒரு பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களையும், மற்றப் பலகையின்கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களையும் பண்ணிவைத்து;
24 with forty silver bases to put under the twenty frames—two bases for each frame, one under each tenon.
24 ஒரு சட்டத்துக்குக் கீழே, இரு கொளுத்துகளுக்கு இருபாதப்பொருத்துகள்; அடுத்த சட்டத்துக்குக் கீழே இரு கொளுத்துகளுக்கு இரு பாதப்பொருத்துகள். இவ்வாறு இருபது சட்டங்களுக்கும்கீழே அவர் நாற்பது வெள்ளிப் பாதப்பொருத்துகளை அமைத்தார்.
25 வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்தில் இருபது பலகைகளையும், அவைகளுக்கு நாற்பது வெள்ளிப் பாதங்களையும் செய்தான்.
25 For the second side of the tabernacle, the north side, he made twenty frames
25 திருஉறைவிடத்தின் இரண்டாம் பக்கமாகிய வடதிசைக்கான சட்டங்கள் இருபது செய்தார்.
26 ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் செய்தான்.
26 and forty silver bases—two bases under each frame.
26 ஒரு சட்டத்திற்குக் கீழே இரண்டு பாதப்பொருள்கள், மறு சட்டத்திற்குக் கீழே இரண்டு பாதப்பொருத்துகள் என்று நாற்பது வெள்ளி பாதப்பொருத்துகள் செய்யப்பட்டன.
27 வாசஸ்தலத்தின் மேல்புறத்திற்கு ஆறு பலகைகளையும்,
27 He made six frames for the rear of the tabernacle, the west side,
27 திருஉறைவிடத்தின் பின்புறமாகிய மேற்றிசைக்காக ஆறு சட்டங்கள் செய்தார்.
28 வாசஸ்தலத்தின் இருபக்கங்களிலுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் செய்தான்.
28 and two frames for the two back corners of the tabernacle,
28 அத்துடன் திருஉறைவிடத்தின் பின்புற மூலைகளுக்காக இரண்டு சட்டங்களைச் செய்தார்.
29 அவைகள் கீழே இசைக்கப்பட்டிருந்தது, மேலேயும் ஒரு வளையத்தினால் இசைக்கப்பட்டிருந்தது; இரண்டு மூலைகளிலுமுள்ள அவ்விரண்டிற்கும் அப்படியே செய்தான்.
29 coupled together from bottom to top and fitted into a single ring. He made both corners in this way.
29 அவற்றுள் ஒவ்வொன்றும் கீழிருந்து மேலே முதல் வளையம் வரைக்கும் இரட்டைக் கனமாக அமைக்கப்பட்டன. இவ்வாறே, இரண்டு மூலைகளும் அமைக்கப்பட்டன.
30 அப்படியே எட்டுப் பலகைகளும், அவைகளுடைய ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டிரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப்பாதங்களும் இருந்தது.
30 So there were eight frames and sixteen silver bases—two under each frame.
30 ஒவ்வொரு சட்டத்தின் அடியிலும் இரண்டு பாதப்பொருத்துகள் வீதம் எட்டுச் சட்டங்களுக்கும் அவற்றிற்காகப் பதினாறு வெள்ளிப் பாதப்பொருத்துகளும் இருந்தன.
31 சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,
31 He also made five crossbars of acacia wood for the frames on one side of the tabernacle,
31 சித்திம் மரத்தால் குறுக்குச் சட்டங்களையும் செய்தார்; திருஉறைவிடத்தின் ஒருபுறச் சட்டங்களின் மேலே பொருத்த ஐந்து;
32 வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேல்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணினான்.
32 five for those on the other side, and five for those on the rear side of the tabernacle, to the west.
32 திருஉறைவிடத்தின் மறுபுறச் சட்டங்கள் மேலே பொருத்த குறுக்குச் சட்டங்கள் ஐந்து; மேற்கே திருஉறைவிடத்தின் பின்புறச் சட்டங்கள் மேலே பொருத்த குறுக்குச் சட்டங்கள் ஐந்து.
33 நடுத்தாழ்ப்பாள் ஒரு முனைதொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப்பாயும்படி செய்தான்.
33 He made the central crossbar to run through the center of the frames, from one end to the other.
33 நடுவிலுள்ள குறுக்குச்சட்டம் சட்டங்களுக்குச் சரிபாதியில் ஒரு முனையிலிருந்து மறு முனைக்குச் செலுத்தப்பட்டது.
34 பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் பண்ணி, தாழ்ப்பாள்களைப் பொன்தகட்டால் மூடினான்.
34 And he overlaid the frames with gold and made gold rings to hold the crossbars. He also overlaid the crossbars with gold.
34 அவர் சட்டங்களைப் பொன்னால் பொதிந்தார். அதிலுள்ள குறுக்குச் சட்டங்களைச் செருகுவதற்கான வளையங்களையும் பொன்னால் செய்தார். குறுக்குச் சட்டங்களையும் பொன்னால் பொதிந்தார்.
The Veil (Exodus 26:31–35)
35 இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்டதும், விசித்திரவேலையாகிய கேருபீன்களுள்ளதுமான ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணி,
35 Next, he made the veil of blue, purple, and scarlet yarn, and finely spun linen, with cherubim skillfully worked into it.
35 மேலும், அவர் ஒரு தொங்குதிரை செய்தார். நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாகவும் முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாகவும் கலைத்திறனுடன் கூடிய கெருபுகள் அமைந்ததாகவும் அதைச் செய்தார்.
36 அதற்குச் சீத்திம் மரத்தினால் நாலு தூண்களைச்செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளின் கொக்கிகளைப் பொன்னினால் பண்ணி, அவைகளுக்கு நான்கு வெள்ளிப்பாதங்களை வார்ப்பித்தான்.
36 He also made four posts of acacia wood for it and overlaid them with gold, along with gold hooks; and he cast four silver bases for the posts.
36 அதற்காகச் சித்திம் மரத்தால் நான்கு தூண்கள் செய்தார். அவற்றைப் பொன்னால் பொதிந்து பொன் கொக்கிகளையும் பொருத்திவிட்டார். அவற்றிற்காக நான்கு வெள்ளிப் பாதப்பொருத்துகளை வார்த்தார்.
The Curtain for the Entrance (Exodus 26:36–37)
37 கூடாரவாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்த சித்திரத் தையல்வேலையான ஒரு தொங்குதிரையையும்,
37 For the entrance to the tent, he made a curtain embroidered with blue, purple, and scarlet yarn, and finely spun linen,
37 கூடாரத்தின் நுழை வாயிலுக்காக அவர் ஒரு தொங்குதிரை செய்தார். அது நீலம் கருஞ்சிவப்பு சிவப்புநிற நூலும் முறுக்கேற்றி நெய்த நார்ப்பட்டும் பின்னல் வேலைப்பாடும் கொண்டதாக விளங்கியது.
38 அதின் ஐந்து தூண்களையும், அவைகளின் வளைவாணிகளையும் உண்டாக்கி, அவைகளின் குமிழ்களையும் வளையங்களையும் பொன்தகட்டால் மூடினான்: அவைகளின் ஐந்து பாதங்களும் வெண்கலமாயிருந்தது.
38 together with five posts and their hooks. He overlaid the tops of the posts and their bands with gold, and their five bases were bronze.
38 ஐந்து தூண்களையும், அவற்றின் வளைவு ஆணிகளையும் செய்தார். அவற்றின் பொதிகைகளையும் பூண்களையும் பொன்னால் பொதிந்தார். ஐந்து பாதப்பொருத்துகளை வெண்கலத்தால் செய்தார்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
9 a Each of the ten curtains was approximately 42 feet long and 6 feet wide (12.8 meters long and 1.8 meters wide).
15 b Each of the eleven curtains was approximately 45 feet long and 6 feet wide (13.7 meters long and 1.8 meters wide).
19 c Possibly the hides of large aquatic mammals
21 d Each frame was approximately 15 feet long and 2.25 feet wide (4.6 meters long and 68.6 centimeters wide).
22 e That is, projecting pieces of wood made for insertion into another piece; similarly in verse 24
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.