பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Exodus  யாத்திராகமம்  שְׁמוֹת

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40

யாத்திராகமம் 8 | Exodus 8

The Second Plague: Frogs

1וַיֹּ֤אמֶר יְהוָה֙ אֶל־מֹשֶׁ֔ה בֹּ֖א אֶל־פַּרְעֹ֑ה וְאָמַרְתָּ֣ אֵלָ֗יו כֹּ֚ה אָמַ֣ר יְהוָ֔ה שַׁלַּ֥ח אֶת־עַמִּ֖י וְיַֽעַבְדֻֽנִי׃

1 அப்பொழுதுகர்த்தர்மோசேயைநோக்கி:நீபார்வோனிடத்தில்போய்:எனக்குஆராதனைசெய்யஎன்ஜனங்களைஅனுப்பிவிடு.
1 Then the LORD said to Moses, “Go to Pharaoh and tell him that this is what the LORD says: ‘Let My people go, so that they may worship Me.
1 ஆண்டவர் மோசேயை நோக்கிக் கூறியது: "நீ பார்வோனிடம் போய் அவனிடம், 'ஆண்டவர் கூறுகிறார்: எனக்கு வழிபாடு செய்வதற்காக என் மக்களைப் போகவிடு'.

2וְאִם־מָאֵ֥ן אַתָּ֖ה לְשַׁלֵּ֑חַ הִנֵּ֣ה אָנֹכִ֗י נֹגֵ֛ף אֶת־כָּל־גְּבוּלְךָ֖ בַּֽצְפַרְדְּעִֽים׃

2 நீஅவர்களைஅனுப்பிவிடமாட்டேன்என்பாயாகில்,உன்எல்லைஅடங்கலையும்தவளைகளால்வாதிப்பேன்.
2 But if you refuse to let them go, I will plague your whole country with frogs.
2 அவர்களை அனுப்ப நீ மறுத்தால், இதோ நானே உன் நிலப்பகுதியையெல்லாம் தவளைகளால் தாக்கப்போகிறேன்.

3וְשָׁרַ֣ץ הַיְאֹר֮ צְפַרְדְּעִים֒ וְעָלוּ֙ וּבָ֣אוּ בְּבֵיתֶ֔ךָ וּבַחֲדַ֥ר מִשְׁכָּבְךָ֖ וְעַל־מִטָּתֶ֑ךָ וּבְבֵ֤ית עֲבָדֶ֙יךָ֙ וּבְעַמֶּ֔ךָ וּבְתַנּוּרֶ֖יךָ וּבְמִשְׁאֲרוֹתֶֽיךָ׃

3 நதிதவளைகளைத்திரளாய்ப்பிறப்பிக்கும்;அவைகள்உன்வீட்டிலும்உன்படுக்கைஅறையிலும்,உன்மஞ்சத்தின்மேலும்,உன்ஊழியக்காரர்வீடுகளிலும்,உன்ஜனங்களிடத்திலும்,உன்அடுப்புகளிலும்,மாப்பிசைகிறஉன்தொட்டிகளிலும்வந்துஏறும்.
3 The Nile will teem with frogs, and they will come into your palace and up to your bedroom and onto your bed, into the houses of your officials and your people, and into your ovens and kneading bowls.
3 தவளைகள் நைல்நதியை நிரப்பி, பின்னர் உன் வீட்டிற்குள்ளும், உன் படுக்கை அறைக்குள்ளும், உன் படுக்கையிலும், உன் அலுவலர் உன் குடிமக்கள் வீட்டிலும், உன் அடுப்புகளிலும், மாவுபிசையும் தொட்டிகளிலும் ஏறிவந்துவிடும்.

4וּבְכָ֥ה וּֽבְעַמְּךָ֖ וּבְכָל־עֲבָדֶ֑יךָ יַעֲל֖וּ הַֽצְפַרְדְּעִֽים׃

4 அந்தத்தவளைகள்உன்மேலும்,உன்ஜனங்கள்மேலும்,உன்ஊழியக்காரர்எல்லார்மேலும்வந்துஏறுமென்றுகர்த்தர்சொல்லுகிறார்என்றுசொல்என்றார்.
4 The frogs will come up on you and your people and all your officials.’”
4 உன் மேலும், உன் குடிமக்கள் மேலும், உன் அலுவலர் அனைவர் மேலும் தவளைகள் ஏறும்' என்று சொல்."

5וַיֹּ֣אמֶר יְהוָה֮ אֶל־מֹשֶׁה֒ אֱמֹ֣ר אֶֽל־אַהֲרֹ֗ן נְטֵ֤ה אֶת־יָדְךָ֙ בְּמַטֶּ֔ךָ עַל־הַ֨נְּהָרֹ֔ת עַל־הַיְאֹרִ֖ים וְעַל־הָאֲגַמִּ֑ים וְהַ֥עַל אֶת־הַֽצְפַרְדְּעִ֖ים עַל־אֶ֥רֶץ מִצְרָֽיִם׃

5 மேலும்கர்த்தர்மோசேயினிடத்தில்நீஆரோனைநோக்கி:நீஉன்கையிலிருக்கிறகோலைநதிகள்மேலும்வாய்க்கால்கள்மேலும்குளங்கள்மேலும்நீட்டி,எகிப்துதேசத்தின்மேல்தவளைகளைவரும்படிசெய்என்றுசொல்என்றார்.
5 And the LORD said to Moses, “Tell Aaron, ‘Stretch out your hand with your staff over the rivers and canals and ponds, and cause the frogs to come up onto the land of Egypt.’”
5 மேலும், ஆண்டவர் மோசேயை நோக்கி, "நீ ஆரோனிடம், 'கோலைத் தாங்கியபடி உன் கையை நதிகள் மேலும் கால்வாய்களின் மேலும் குளம் குட்டைகள் மேலும் நீட்டி, எகிப்திய நிலத்தின் மேல் தவளைகள் ஏறிவரச் செய்' என்று சொல்" என்றார்.

6וַיֵּ֤ט אַהֲרֹן֙ אֶת־יָד֔וֹ עַ֖ל מֵימֵ֣י מִצְרָ֑יִם וַתַּ֙עַל֙ הַצְּפַרְדֵּ֔עַ וַתְּכַ֖ס אֶת־אֶ֥רֶץ מִצְרָֽיִם׃

6 அப்படியேஆரோன்தன்கையைஎகிப்திலுள்ளதண்ணீர்கள்மேல்நீட்டினான்;அப்பொழுதுதவளைகள்வந்து,எகிப்துதேசத்தைமூடிக்கொண்டது.
6 So Aaron stretched out his hand over the waters of Egypt, and the frogs came up and covered the land of Egypt.
6 ஆரோன் தம் கையை எகிப்தின் நீர் நிலைகள் மேல் நீட்டவே, தவளைகள் ஏறிவந்து எகிப்து நாட்டை நிரப்பின.

7וַיַּֽעֲשׂוּ־כֵ֥ן הֽ͏ַחֲרְטֻמִּ֖ים בְּלָטֵיהֶ֑ם וַיַּעֲל֥וּ אֶת־הַֽצְפַרְדְּעִ֖ים עַל־אֶ֥רֶץ מִצְרָֽיִם׃

7 மந்திரவாதிகளும்தங்கள்மந்திரவித்தையினால்அப்படிச்செய்து,எகிப்துதேசத்தின்மேல்தவளைகளைவரப்பண்ணினார்கள்.
7 But the magicians did the same thing by their magic arts, and they also brought frogs up onto the land of Egypt.
7 மந்திரவாதிகளும் தங்கள் வித்தைகளால் இது போலவே செய்து எகிப்திய நிலத்தின்மேல் தவளைகள் ஏறிவரச் செய்தனர்.

8וַיִּקְרָ֨א פַרְעֹ֜ה לְמֹשֶׁ֣ה וּֽלְאַהֲרֹ֗ן וַיֹּ֙אמֶר֙ הַעְתִּ֣ירוּ אֶל־יְהוָ֔ה וְיָסֵר֙ הַֽצְפַרְדְּעִ֔ים מִמֶּ֖נִּי וּמֵֽעַמִּ֑י וַאֲשַׁלְּחָה֙ אֶת־הָעָ֔ם וְיִזְבְּח֖וּ לַיהוָֽה׃

8 பார்வோன்மோசேயையும்ஆரோனையும்அழைப்பித்து:அந்தத்தவளைகள்என்னையும்என்ஜனங்களையும்விட்டுநீங்கும்படிகர்த்தரைநோக்கிவேண்டிக்கொள்ளுங்கள்;கர்த்தருக்குப்பலியிடும்படிஜனங்களைப்போகவிடுவேன்என்றான்.
8 Pharaoh summoned Moses and Aaron and said, “Pray to the LORD to take the frogs away from me and my people. Then I will let your people go, that they may sacrifice to the LORD.”
8 பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து, "என்னிடமிருந்தும், என் குடிமக்களிடமிருந்தும் தவளைகளை அகற்றிவிடுமாறு ஆண்டவரை மன்றாடுங்கள். ஆண்டவருக்குப் பலியிடுமாறு நான் மக்களை அனுப்பிவிடுவேன்" என்று கூறினான்.

9וַיֹּ֣אמֶר מֹשֶׁ֣ה לְפַרְעֹה֮ הִתְפָּאֵ֣ר עָלַי֒ לְמָתַ֣י ׀ אַעְתִּ֣יר לְךָ֗ וְלַעֲבָדֶ֙יךָ֙ וּֽלְעַמְּךָ֔ לְהַכְרִית֙ הַֽצֲפַרְדְּעִ֔ים מִמְּךָ֖ וּמִבָּתֶּ֑יךָ רַ֥ק בַּיְאֹ֖ר תִּשָּׁאַֽרְנָה׃

9 அப்பொழுதுமோசேபார்வோனைநோக்கி:தவளைகள்நதியிலேமாத்திரம்இருக்கத்தக்கதாய்அவைகளைஉம்மிடத்திலும்உம்முடையவீட்டிலும்இல்லாமல்ஒழிந்துபோகும்படிசெய்ய,உமக்காகவும்உம்முடையஊழியக்காரருக்காகவும்உம்முடையஜனங்களுக்காகவும்நான்விண்ணப்பம்பண்ணவேண்டியகாலத்தைக்குறிக்கும்மேன்மைஉமக்கேஇருப்பதாகஎன்றான்.
9 Moses said to Pharaoh, “You may have the honor over me. When shall I pray for you and your officials and your people that the frogs (except for those in the Nile) may be taken away from you and your houses?”
9 மோசே பார்வோனை நோக்கி, "தவளைகள் உம்மிடமிருந்தும் உம் வீட்டிலிருந்தும் அழிக்கப்பட்டு ஆற்றில் மட்டும் இருக்குமாறு நான் உமக்காகவும் உம் அலுவலர்க்காகவும் உம் குடிமக்களுக்காகவும் எப்போது மன்றாட வேண்டுமென என்னிடம் தெரியப்படுத்தும்" என்று கூறினார்.

10וַיֹּ֖אמֶר לְמָחָ֑ר וַיֹּ֙אמֶר֙ כִּדְבָ֣רְךָ֔ לְמַ֣עַן תֵּדַ֔ע כִּי־אֵ֖ין כַּיהוָ֥ה אֱלֹהֵֽינוּ׃

10 அதற்குஅவன்:நாளைக்குஎன்றான்.அப்பொழுதுஇவன்:எங்கள்தேவனாகியகர்த்தருக்குஒப்பானவர்இல்லைஎன்பதைநீர்அறியும்படிக்குஉம்முடையவார்த்தையின்படிஆகக்கடவது.
10 “Tomorrow,” Pharaoh answered. “May it be as you say,” Moses replied, “so that you may know that there is no one like the LORD our God.
10 அவன், "நாளைக்கு" என்றான். அதற்கு மோசே, "எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யாரும் இல்லை என நீர் அறிந்து கொள்வதற்காக உம் சொற்படியே ஆகும்;

11וְסָר֣וּ הַֽצְפַרְדְּעִ֗ים מִמְּךָ֙ וּמִבָּ֣תֶּ֔יךָ וּמֵעֲבָדֶ֖יךָ וּמֵעַמֶּ֑ךָ רַ֥ק בַּיְאֹ֖ר תִּשָּׁאַֽרְנָה׃

11 தவளைகள்உம்மையும்உம்முடையவீட்டையும்உம்முடையஊழியக்காரரையும்உம்முடையஜனங்களையும்விட்டுநீங்கி,நதியிலேமாத்திரம்இருக்கும்என்றான்.
11 The frogs will depart from you and your houses and your officials and your people; they will remain only in the Nile.”
11 உம்மிடமிருந்தும், உம் வீடுகளிலிருந்தும், உம் அலுவலரிடமிருந்தும், உம் குடி மக்களிடமிருந்தும் தவளைகள் ஒழிந்துபோகும்; ஆற்றில் மட்டும் அவைவிட்டு வைக்கப்படும்" என்றார்.

12וַיֵּצֵ֥א מֹשֶׁ֛ה וְאַהֲרֹ֖ן מֵעִ֣ם פַּרְעֹ֑ה וַיִּצְעַ֤ק מֹשֶׁה֙ אֶל־יְהוָ֔ה עַל־דְּבַ֥ר הַֽצְפַרְדְּעִ֖ים אֲשֶׁר־שָׂ֥ם לְפַרְעֹֽה׃

12 மோசேயும்ஆரோனும்பார்வோனைவிட்டுப்புறப்பட்டார்கள்.பார்வோனுக்குவிரோதமாகவரப்பண்ணினதவளைகள்நிமித்தம்மோசேகர்த்தரைநோக்கிக்கூப்பிட்டான்.
12 After Moses and Aaron had left Pharaoh, Moses cried out to the LORD for help with the frogs that He had brought against Pharaoh.
12 மோசேயும், ஆரோனும் பார்வோனை விட்டகன்றனர். பின்பு, பார்வோனின் மேல் ஆண்டவர் வரவிட்டிருந்த தவளைகளைக் குறித்து மோசே ஆண்டவரை நோக்கி மன்றாடினார்.

13וַיַּ֥עַשׂ יְהוָ֖ה כִּדְבַ֣ר מֹשֶׁ֑ה וַיָּמֻ֙תוּ֙ הַֽצְפַרְדְּעִ֔ים מִן־הַבָּתִּ֥ים מִן־הַחֲצֵרֹ֖ת וּמִן־הַשָּׂדֹֽת׃

13 கர்த்தர்மோசேயின்சொற்படிசெய்தார்;வீடுகளிலும்முற்றங்களிலும்வயல்களிலும்இருந்ததவளைகள்செத்துப்போயிற்று.
13 And the LORD did as Moses requested, and the frogs in the houses, the courtyards, and the fields died.
13 ஆண்டவரும் மோசேயின் மன்றாட்டின்படியே செய்தருளினார். ஆக, வீடுகள், முற்றங்கள், வயல்கள் ஆகியவற்றில் தவளைகள் மடிந்து போயின.

14וַיִּצְבְּר֥וּ אֹתָ֖ם חֳמָרִ֣ם חֳמָרִ֑ם וַתִּבְאַ֖שׁ הָאָֽרֶץ׃

14 அவைகளைக்குவியல்குவியலாகச்சேர்த்தார்கள்;அதினால்பூமியெங்கும்நாற்றமெடுத்தது.
14 They were piled into countless heaps, and there was a terrible stench in the land.
14 அவற்றைக் குவியல் குவியலாக திரட்டினர்; எனவே அந்நாடு நாற்றமெடுத்தது.

15וַיַּ֣רְא פַּרְעֹ֗ה כִּ֤י הָֽיְתָה֙ הָֽרְוָחָ֔ה וְהַכְבֵּד֙ אֶת־לִבּ֔וֹ וְלֹ֥א שָׁמַ֖ע אֲלֵהֶ֑ם כַּאֲשֶׁ֖ר דִּבֶּ֥ר יְהוָֽה׃

15 இலகுவுண்டாயிற்றென்றுபார்வோன்கண்டபோதோ,தன்இருதயத்தைக்கடினப்படுத்தி,அவர்களுக்குச்செவிகொடாமற்போனான்;கர்த்தர்சொல்லியிருந்தபடிஆயிற்று.
15 When Pharaoh saw that there was relief, however, he hardeneda his heart and would not listen to Moses and Aaron, just as the LORD had said.
15 தொல்லை ஓய்ந்தது என்று கண்ட பார்வோன் தன் மனத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். ஆண்டவர் சொன்னபடி அவன் அவர்களுக்குச் செவி சாய்க்கவில்லை.

The Third Plague: Gnats

16וַיֹּ֣אמֶר יְהוָה֮ אֶל־מֹשֶׁה֒ אֱמֹר֙ אֶֽל־אַהֲרֹ֔ן נְטֵ֣ה אֶֽת־מַטְּךָ֔ וְהַ֖ךְ אֶת־עֲפַ֣ר הָאָ֑רֶץ וְהָיָ֥ה לְכִנִּ֖ם בְּכָל־אֶ֥רֶץ מִצְרָֽיִם׃

16 அப்பொழுதுகர்த்தர்மோசேயினிடத்தில்:நீஆரோனைநோக்கி:உன்கோலைநீட்டி,பூமியின்புழுதியின்மேல்அடி;அப்பொழுதுஅதுஎகிப்துதேசமெங்கும்பேன்களாய்ப்போம்என்றுசொல்என்றார்.
16 Then the LORD said to Moses, “Tell Aaron, ‘Stretch out your staff and strike the dust of the earth, that it may turn into swarms of gnats throughout the land of Egypt.’”
16 மீண்டும் ஆண்டவர் மோசேயை நோக்கி, "நீ ஆரோனிடம், 'நீ உன்கோலை நீட்டி, நிலத்திலுள்ள புழுதியை அடி! அது எகிப்து நாடெங்கும் கொசுக்களாக மாறும்' என்று சொல்" என்றார்.

17וַיַּֽעֲשׂוּ־כֵ֗ן וַיֵּט֩ אַהֲרֹ֨ן אֶת־יָד֤וֹ בְמַטֵּ֙הוּ֙ וַיַּךְ֙ אֶת־עֲפַ֣ר הָאָ֔רֶץ וַתְּהִי֙ הַכִּנָּ֔ם בָּאָדָ֖ם וּבַבְּהֵמָ֑ה כָּל־עֲפַ֥ר הָאָ֛רֶץ הָיָ֥ה כִנִּ֖ים בְּכָל־אֶ֥רֶץ מִצְרָֽיִם׃

17 அப்படியேசெய்தார்கள்;ஆரோன்தன்கையிலிருந்ததன்கோலைநீட்டி,பூமியின்புழுதியின்மேல்அடித்தான்;அப்பொழுதுஅதுமனிதர்மேலும்மிருகஜீவன்கள்மேலும்பேன்களாய்எகிப்துதேசமெங்கும்பூமியின்புழுதியெல்லாம்பேன்களாயிற்று.
17 This they did, and when Aaron stretched out his hand with his staff and struck the dust of the earth, gnats came upon man and beast. All the dust of the earth turned into gnats throughout the land of Egypt.
17 அவ்வாறே, அவர்களும் செய்தனர். கோல் ஏந்திய தம் கையை நீட்டி ஆரோன் நிலத்தின் புழுதியை அடிக்க, மனிதர் மேலும் விலங்குகள் மேலும் கொசுக்கள் தோன்றின. எகிப்து நாடெங்கும், நிலத்திலுள்ள புழுதியெல்லாம் கொசுக்களாக மாறிற்று.

18וַיַּעֲשׂוּ־כֵ֨ן הַחַרְטֻמִּ֧ים בְּלָטֵיהֶ֛ם לְהוֹצִ֥יא אֶת־הַכִּנִּ֖ים וְלֹ֣א יָכֹ֑לוּ וַתְּהִי֙ הַכִּנָּ֔ם בָּאָדָ֖ם וּבַבְּהֵמָֽה׃

18 மந்திரவாதிகளும்தங்கள்மந்திரவித்தையினால்பேன்களைப்பிறப்பிக்கும்படிப்பிரயத்தனஞ்செய்தார்கள்;செய்தும்,அவர்களால்கூடாமற்போயிற்று;பேன்கள்மனிதர்மேலும்மிருகஜீவன்கள்மேலும்இருந்தது.
18 The magicians tried to produce gnats using their magic arts, but they could not. And the gnats remained on man and beast.
18 கொசுக்கள் தோன்றுவதற்காக மந்திரவாதிகளும் தங்கள் வித்தையால் அது போலவே செய்ய முயன்றனர்; ஆனால், அது அவர்களால் இயலாமற் போயிற்று. கொசுக்கள் மனிதர் மேலும் விலங்குகள் மேலும் தங்கியிருந்தன.

19וַיֹּאמְר֤וּ הַֽחַרְטֻמִּים֙ אֶל־פַּרְעֹ֔ה אֶצְבַּ֥ע אֱלֹהִ֖ים הִ֑וא וַיֶּחֱזַ֤ק לֵב־פַּרְעֹה֙ וְלֹֽא־שָׁמַ֣ע אֲלֵהֶ֔ם כַּאֲשֶׁ֖ר דִּבֶּ֥ר יְהוָֽה׃

19 அப்பொழுதுமந்திரவாதிகள்பார்வோனைநோக்கி:இதுதேவனுடையவிரல்என்றார்கள்.ஆனாலும்,கர்த்தர்சொல்லியிருந்தபடிபார்வோனுடையஇருதயம்கடினப்பட்டது;அவர்களுக்குச்செவிகொடாமற்போனான்.
19 “This is the finger of God,” the magicians said to Pharaoh. But Pharaoh’s heart was hardened,b and he would not listen to them, just as the LORD had said.
19 மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி, "இது கடவுளின் கைவன்மையே" என்றனர். ஆயினும் பார்வோனுடைய மனம் கடினப்பட்டது. ஆண்டவர் அறிவித்தபடியே அவன் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை.*

The Fourth Plague: Flies

20וַיֹּ֨אמֶר יְהוָ֜ה אֶל־מֹשֶׁ֗ה הַשְׁכֵּ֤ם בַּבֹּ֙קֶר֙ וְהִתְיַצֵּב֙ לִפְנֵ֣י פַרְעֹ֔ה הִנֵּ֖ה יוֹצֵ֣א הַמָּ֑יְמָה וְאָמַרְתָּ֣ אֵלָ֗יו כֹּ֚ה אָמַ֣ר יְהוָ֔ה שַׁלַּ֥ח עַמִּ֖י וְיַֽעַבְדֻֽנִי׃

20 அப்பொழுதுகர்த்தர்மோசேயைநோக்கி:நாளைஅதிகாலமேநீஎழுந்துபோய்,பார்வோன்நதிக்குப்புறப்பட்டுவரும்போது,அவனுக்குமுன்பாகநின்று;எனக்குஆராதனைசெய்யும்படிஎன்ஜனங்களைப்போகவிடு.
20 Then the LORD said to Moses, “Get up early in the morning, and when Pharaoh goes out to the water, stand before him and tell him that this is what the LORD says: ‘Let My people go, so that they may worship Me.
20 மேலும் ஆண்டவர் மோசேயை நோக்கி, "அதிகாலையில் நீ எழுந்து பார்வோனுக்காகக் காத்து நில். அவன் நீராடத் தண்ணீரை நோக்கி வருவான். அப்போது அவனை நோக்கிச் சொல்; ஆண்டவர் கூறுவது இதுவே: "எனக்கு வழிபாடு செலுத்தும் பொருட்டு என் மக்களைப் போகவிடு;

21כִּ֣י אִם־אֵינְךָ֮ מְשַׁלֵּ֣חַ אֶת־עַמִּי֒ הִנְנִי֩ מַשְׁלִ֨יחַ בְּךָ֜ וּבַעֲבָדֶ֧יךָ וּֽבְעַמְּךָ֛ וּבְבָתֶּ֖יךָ אֶת־הֶעָרֹ֑ב וּמָ֨לְא֜וּ בָּתֵּ֤י מִצְרַ֙יִם֙ אֶת־הֶ֣עָרֹ֔ב וְגַ֥ם הָאֲדָמָ֖ה אֲשֶׁר־הֵ֥ם עָלֶֽיהָ׃

21 என்ஜனங்களைப்போகவிடாயாகில்,நான்உன்மேலும்,உன்ஊழியக்காரர்மேலும்,உன்ஜனங்கள்மேலும்,உன்வீடுகள்மேலும்பலவிதவண்டுகளைஅனுப்புவேன்;எகிப்தியர்வீடுகளும்அவர்கள்இருக்கிறதேசமும்அந்தவண்டுகளால்நிறையும்.
21 But if you will not let My people go, I will send swarms of fliesc upon you and your officials and your people and your houses. The houses of the Egyptians and even the ground where they stand will be full of flies.
21 என் மக்களை நீ போகவிடவில்லையென்றால், இதோ உன்மேலும், உன் அலுவலர் மேலும், உன் குடிமக்கள் மேலும், உன் வீட்டின் மேலும், ஈக்கள் வரச்செய்வேன். எகிப்தியருடைய வீடுகளும் அவர்கள் இருக்கும் நிலமும் ஈக்களால் நிரம்பும்.

22וְהִפְלֵיתִי֩ בַיּ֨וֹם הַה֜וּא אֶת־אֶ֣רֶץ גֹּ֗שֶׁן אֲשֶׁ֤ר עַמִּי֙ עֹמֵ֣ד עָלֶ֔יהָ לְבִלְתִּ֥י הֱיֽוֹת־שָׁ֖ם עָרֹ֑ב לְמַ֣עַן תֵּדַ֔ע כִּ֛י אֲנִ֥י יְהוָ֖ה בְּקֶ֥רֶב הָאָֽרֶץ׃

22 பூமியின்நடுவில்நானேகர்த்தர்என்பதைநீஅறியும்படிஎன்ஜனங்கள்இருக்கிறகோசேன்நாட்டில்அந்நாளிலேவண்டுகள்வராதபடிக்கு,அந்தநாட்டைவிசேஷப்படுத்தி,
22 But on that day I will give special treatment to the land of Goshen, where My people live; no swarms of flies will be found there. In this way you will know that I, the LORD, am in the land.
22 அந்நாளில், என் மக்கள் தங்கியிருக்கும் கோசேன் நிலப்பகுதியை வேறுபடுத்திக் காட்டுவேன். அங்கு ஈக்கள் எவையுமே இரா. இதனால் இந்நாட்டில் நானே ஆண்டவர் என நீ அறிந்து கொள்வாய்.

23וְשַׂמְתִּ֣י פְדֻ֔ת בֵּ֥ין עַמִּ֖י וּבֵ֣ין עַמֶּ֑ךָ לְמָחָ֥ר יִהְיֶ֖ה הָאֹ֥ת הַזֶּֽה׃

23 என்ஜனங்களுக்கும்உன்ஜனங்களுக்கும்வித்தியாசம்உண்டாகும்படிசெய்வேன்;இந்தஅடையாளம்நாளைக்குஉண்டாகும்என்றுகர்த்தர்சொல்லுகிறார்என்றுசொல்என்றார்.
23 I will make a distinctiond between My people and your people. This sign will take place tomorrow.’”
23 மேலும், என் மக்களுக்கும் உன் மக்களுக்கும் இடையே நான் வேறுபாடு காட்டுவேன். நாளையதினம் இந்த அருஞ்செயல் செய்யப்படும்" என்றார்.

24וַיַּ֤עַשׂ יְהוָה֙ כֵּ֔ן וַיָּבֹא֙ עָרֹ֣ב כָּבֵ֔ד בֵּ֥יתָה פַרְעֹ֖ה וּבֵ֣ית עֲבָדָ֑יו וּבְכָל־אֶ֧רֶץ מִצְרַ֛יִם תִּשָּׁחֵ֥ת הָאָ֖רֶץ מִפְּנֵ֥י הֶעָרֹֽב׃

24 அப்படியேகர்த்தர்செய்தார்;மகாதிரளானவண்டுஜாதிகள்பார்வோன்வீட்டிலும்,அவன்ஊழியக்காரர்வீடுகளிலும்,எகிப்துதேசம்முழுவதிலும்வந்தது;வண்டுகளினாலேதேசம்கெட்டுப்போயிற்று.
24 And the LORD did so. Thick swarms of flies poured into Pharaoh’s palace and into the houses of his officials. Throughout Egypt the land was ruined by swarms of flies.
24 அவ்வாறே ஆண்டவரும் செய்து முடித்தார். ஈக்கள் பார்வோன் வீட்டிலும், அவனுடைய அலுவலர் வீட்டிலும், எகிப்து நாடெங்கும் திரளாய்ப் பெருகின. ஈக்களால் நாடே பாழாகிவிட்டது.

25וַיִּקְרָ֣א פַרְעֹ֔ה אֶל־מֹשֶׁ֖ה וּֽלְאַהֲרֹ֑ן וַיֹּ֗אמֶר לְכ֛וּ זִבְח֥וּ לֽ͏ֵאלֹהֵיכֶ֖ם בָּאָֽרֶץ׃

25 அப்பொழுதுபார்வோன்மோசேயையும்ஆரோனையும்அழைப்பித்து:நீங்கள்போய்,உங்கள்தேவனுக்குதேசத்திலேதானேபலியிடுங்கள்என்றான்.
25 Then Pharaoh summoned Moses and Aaron and said, “Go, sacrifice to your God within this land.”
25 பார்வோன் மோசேயையும் ஆரோனையும் வரவழைத்து, "போங்கள், ஆனால் இந்நாட்டிலேயே உங்கள் கடவுளுக்குப் பலியிடுங்கள்" என்றான்.

26וַיֹּ֣אמֶר מֹשֶׁ֗ה לֹ֤א נָכוֹן֙ לַעֲשׂ֣וֹת כֵּ֔ן כִּ֚י תּוֹעֲבַ֣ת מִצְרַ֔יִם נִזְבַּ֖ח לַיהוָ֣ה אֱלֹהֵ֑ינוּ הֵ֣ן נִזְבַּ֞ח אֶת־תּוֹעֲבַ֥ת מִצְרַ֛יִם לְעֵינֵיהֶ֖ם וְלֹ֥א יִסְקְלֻֽנוּ׃

26 அதற்குமோசே:அப்படிச்செய்யத்தகாது;எங்கள்தேவனாகியகர்த்தருக்குநாங்கள்எகிப்தியருடையஅருவருப்பைபலியிடுகிறதாய்இருக்குமே,எகிப்தியருடையஅருவருப்பைநாங்கள்அவர்கள்கண்களுக்குமுன்பாகபலியிட்டால்,எங்களைக்கல்லெறிவார்கள்அல்லவா?
26 But Moses replied, “It would not be right to do that, because the sacrifices we offer to the LORD our God would be detestable to the Egyptians. If we offer sacrifices that are detestable before the Egyptians, will they not stone us?
26 அதற்கு மோசே, "அது முறையல்ல; அவ்வாறு செய்தால் எகிப்தியருக்கு அருவருப்பானதை எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள் பலியிடுவதாகும். எகிப்தியருக்கு அருவருப்பானதை அவர்கள் கண்முன் நாங்கள் அப்படிப் பலியிட்டால் அவர்கள் எங்களைக் கல்லால் எறியாமல் விடுவார்களா?

27דֶּ֚רֶךְ שְׁלֹ֣שֶׁת יָמִ֔ים נֵלֵ֖ךְ בַּמִּדְבָּ֑ר וְזָבַ֙חְנוּ֙ לַֽיהוָ֣ה אֱלֹהֵ֔ינוּ כַּאֲשֶׁ֖ר יֹאמַ֥ר אֵלֵֽינוּ׃

27 நாங்கள்வனாந்தரத்தில்மூன்றுநாள்பிரயாணம்போய்,எங்கள்தேவனாகியகர்த்தர்எங்களுக்குவிதிக்கிறபடியேஅவருக்குப்பலியிடுவோம்என்றான்.
27 We must make a three-day journey into the wilderness and sacrifice to the LORD our God as He commands us.”
27 பாலை நிலத்தில் நாங்கள் மூன்று நாள்கள் வழிநடந்து, எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு, அவர் எங்களுக்குச் சொல்வதுபோல் பலியிடுவோம்" என்றார்.

28וַיֹּ֣אמֶר פַּרְעֹ֗ה אָנֹכִ֞י אֲשַׁלַּ֤ח אֶתְכֶם֙ וּזְבַחְתֶּ֞ם לַיהוָ֤ה אֱלֹֽהֵיכֶם֙ בַּמִּדְבָּ֔ר רַ֛ק הַרְחֵ֥ק לֹא־תַרְחִ֖יקוּ לָלֶ֑כֶת הַעְתִּ֖ירוּ בַּעֲדִֽי׃

28 அப்பொழுதுபார்வோன்:நீங்கள்உங்கள்தேவனாகியகர்த்தருக்குவனாந்தரத்தில்பலியிடும்படிக்குநான்உங்களைப்போகவிடுவேன்;ஆனாலும்,நீங்கள்அதிகதூரமாய்ப்போகவேண்டாம்;எனக்காகவேண்டுதல்செய்யுங்கள்என்றான்.
28 Pharaoh answered, “I will let you go and sacrifice to the LORD your God in the wilderness, but you must not go very far. Now pray for me.”
28 அப்பொழுது பார்வோன், "உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நீங்கள் பாலைநிலத்தில் பலியிட நான் உங்களைப் போகவிடுவேன். ஆனால், வெகுதூரம் சென்று விடாதீர்கள்; மேலும் எனக்காகவும் மன்றாடுங்கள்" என்றுரைத்தான்.

29וַיֹּ֣אמֶר מֹשֶׁ֗ה הִנֵּ֨ה אָנֹכִ֜י יוֹצֵ֤א מֵֽעִמָּךְ֙ וְהַעְתַּרְתִּ֣י אֶל־יְהוָ֔ה וְסָ֣ר הֶעָרֹ֗ב מִפַּרְעֹ֛ה מֵעֲבָדָ֥יו וּמֵעַמּ֖וֹ מָחָ֑ר רַ֗ק אַל־יֹסֵ֤ף פַּרְעֹה֙ הָתֵ֔ל לְבִלְתִּי֙ שַׁלַּ֣ח אֶת־הָעָ֔ם לִזְבֹּ֖חַ לַֽיהוָֽה׃

29 அதற்குமோசே:நான்உம்மைவிட்டுப்புறப்பட்டபின்,நாளைக்குவண்டுகள்பார்வோனையும்அவர்ஊழியக்காரரையும்அவர்ஜனங்களையும்விட்டுநீங்கும்படி,நான்கர்த்தரைநோக்கிவேண்டுதல்செய்வேன்;ஆனாலும்,கர்த்தருக்குப்பலியிடுகிறதற்குஜனங்களைப்போகவிடாதபடிப்பார்வோன்இனிவஞ்சனைசெய்யாதிருப்பாராகஎன்றான்.
29 “As soon as I leave you,” Moses said, “I will pray to the LORD, so that tomorrow the swarms of flies will depart from Pharaoh and his officials and his people. But Pharaoh must not act deceitfully again by refusing to let the people go and sacrifice to the LORD.”
29 மோசே மறுமொழியாக, "நான் உம்மிடமிருந்தும் போய், பார்வோனிடமிருந்தும் அவன் அலுவலரிடமிருந்தும் அவன் குடிமக்களிடமிருந்தும் நாளைய தினமே ஈக்கள் அகன்றுவிட வேண்டும் என ஆண்டவரை நோக்கி மன்றாடுவேன். ஆனால், ஆண்டவருக்குப் பலியிடுமாறு மக்களை அனுப்பாமல் பார்வோன் இவ்வாறு தொடர்ந்து ஏமாற்ற வேண்டாம்" என்று கூறினார்.

30וַיֵּצֵ֥א מֹשֶׁ֖ה מֵעִ֣ם פַּרְעֹ֑ה וַיֶּעְתַּ֖ר אֶל־יְהוָֽה׃

30 மோசேபார்வோனைவிட்டுப்புறப்பட்டுப்போய்,கர்த்தரைநோக்கிவேண்டுதல்செய்தான்.
30 Then Moses left Pharaoh and prayed to the LORD,

31וַיַּ֤עַשׂ יְהוָה֙ כִּדְבַ֣ר מֹשֶׁ֔ה וַיָּ֙סַר֙ הֶעָרֹ֔ב מִפַּרְעֹ֖ה מֵעֲבָדָ֣יו וּמֵעַמּ֑וֹ לֹ֥א נִשְׁאַ֖ר אֶחָֽד׃

31 அப்பொழுதுகர்த்தர்மோசேயின்சொற்படி,வண்டுஜாதிகள்பார்வோனையும்அவன்ஊழியக்காரரையும்அவன்ஜனங்களையும்விட்டுநீங்கும்படிசெய்தார்;ஒன்றாகிலும்மீந்திருக்கவில்லை.
31 and the LORD did as Moses requested. He removed the swarms of flies from Pharaoh and his officials and his people; not one fly remained.
31 மோசேயின் மன்றாட்டுக்கிணங்க ஆண்டவரும் செயலாற்றினார். பார்வோனிடமிருந்தும் அவனுடைய அலுவலரிடமிருந்தும் அவனுடைய குடிமக்களிடமிருந்தும் ஈக்கள் அகன்று போயின, ஒன்றுகூட எஞ்சி நிற்கவில்லை.

32וַיַּכְבֵּ֤ד פַּרְעֹה֙ אֶת־לִבּ֔וֹ גַּ֖ם בַּפַּ֣עַם הַזֹּ֑את וְלֹ֥א שִׁלַּ֖ח אֶת־הָעָֽם׃

32 பார்வோனோஇந்தமுறையும்தன்இருதயத்தைக்கடினப்படுத்தி,ஜனங்களைப்போகவிடாதிருந்தான்.
32 But Pharaoh hardened his heart this time as well, and he would not let the people go.
32 இம்முறையும் பார்வோன் தன் மனத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். மக்களை அவன் போகவிடவில்லை.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Exodus Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40

Footnotes:
15 a Or made heavy ; also in verse 32
19 b Or stiffened  or strengthened
21 c Literally a noxious mixture ; also in verses 22, 24, 29, and 31
23 d LXX and Vulgate; Hebrew I will set redemption

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.