பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Habakkuk ஆபகூக் חֲבַקּוּק
ஆபகூக் 3 | Habakkuk 3
Habakkuk’s Prayer
1 ஆபகூக் தீர்க்கதரிசி சிகாயோனில் பாடின விண்ணப்பம்
1 This is a prayer of Habakkuk the prophet, according to Shigionoth:a
1 இறைவாக்கினர் அபக்கூக்கு 'சிகாயோன்' பண்களில் பாடிய மன்றாட்டு:
2 கர்த்தாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப் பயமுண்டாயிற்று; கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே அதை விளங்கப்பண்ணும், கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும்.
2 O LORD, I have heard the report of You; I stand in awe, O LORD, of Your deeds. Revive them in these years; make them known in these years. In Your wrath, remember mercy!
2 ஆண்டவரே, உம்மைப்பற்றிக் கேள்வியுற்றேன்; ஆண்டவரே, உம் செயலைக் கண்டு அச்சமடைகிறேன்; எங்கள் வாழ்நாள் காலத்திலேயே அதை மீண்டும் செய்யும்; காலப்போக்கில் அதை அனைவரும் அறியும்படி செய்யும்; சினமுற்றபோதும் உமது இரக்கத்தை நினைவு கூரும்.
3 தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார்; சேலா. அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது.
3 God came from Teman, and the Holy One from Mount Paran. Selahb His glory covered the heavens, and His praise filled the earth.
3 தேமானிலிருந்து இறைவன் வருகிறார்; பாரான் மலையிலிருந்து புனிதர் வருகிறார். (சோலா) அவரது மாட்சி விண்ணுலகை மூடியிருக்கின்றது; அவரது புகழால் மண்ணுலகம் நிறைந்திருக்கின்றது.
4 அவருடைய பிரகாசம் சூரியனைப்போலிருந்தது; அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள் வீசின; அங்கே அவருடைய பராக்கிரமம் மறைந்திருந்தது.
4 His radiance was like the sunlight; rays flashed from His hand, where His power is hidden.
4 அவரது பேரொளி கதிரவன் ஒளிபோல் இருக்கின்றது; அவர் கையினின்று ஒளிக்கதிர்கள் புறப்படுகின்றன; அங்கேதான் அவரது வல்லமை மறைந்திருக்கின்றது.
5 அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது; அவர் செடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது.
5 Plague went before Him, and fever followed in His steps.
5 அவருக்கு முன்பாகப் பெருவாரி நோய் செல்கின்றது; அவருடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து கொள்ளைநோய் புறப்படுகின்றது.
6 அவர் நின்று பூமியை அளந்தார்; அவர் பார்த்துப் புறஜாதிகளைக் கரையப்பண்ணினார்; பூர்வ பர்வதங்கள் சிதறடிக்கப்பட்டது, என்றுமுள்ள மலைகள் தாழ்ந்தது; அவருடைய நடைகள் நித்திய நடைகளாயிருந்தது.
6 He stood and measured the earth; He looked and startled the nations; the ancient mountains crumbled; the perpetual hills collapsed. His ways are everlasting.
6 அவர் நின்றால், நிலம் அதிர்கின்றது, அவர் நோக்கினால் வேற்றினத்தார் நடுங்குகின்றனர்; தொன்றுதொட்டு இருக்கும் மலைகள் பிளவுண்டு போகின்றன. பண்டைக் காலக் குன்றுகள் அமிழ்ந்து விடுகின்றன. அவர்தம் வழிகளோ என்றும் உள்ளவை.
7 கூஷானின் கூடாரங்கள் வருத்தத்தில் அகப்பட்டிருக்கக்கண்டேன்; மீதியான் தேசத்தின் திரைகள் நடுங்கின.
7 I saw the tents of Cushan in distress; the curtains of Midian were trembling.
7 கூசாவின் கூடாரங்களில் வேதனை நிறைந்திருப்பதை நான் கண்டேன்; மிதியான் நாட்டுக் கூடாரத் திரைகள் நடுநடுங்கின.
8 கர்த்தர் நதிகளின்மேல் கோபமாயிருந்தாரோ? தேவரீர் உம்முடைய குதிரைகளின்மேலும் இரட்சிப்புண்டாக்குகிற உம்முடைய இரதங்களின்மேலும் ஏறிவருகிறபோது, உமது கோபம் நதிகளுக்கும் உமது சினம் சமுத்திரத்திற்கும் விரோதமாயிருந்ததோ?
8 Were You angry at the rivers, O LORD? Was Your wrath against the streams? Did You rage against the sea when You rode on Your horses, on Your chariots of salvation?
8 ஆண்டவரே, நீர் உம்முடைய குதிரைகள் மேலும், வெற்றித் தேர்மேலும் ஏறிவரும்போது, நீரோடைகள்மீதா உம் கோபத்தீ மூண்டது? ஆறுகள் மீதா உம் சினம் பெருகியது? கடல்மீதா உம் சீற்றம் மிகுந்தது?
9 கோத்திரங்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த வாக்கின்படியே உம்முடைய வில் நாணேற்றப்பட்டதாக விளங்கினது; சேலா. நீர் பூமியைப் பிளந்து ஆறுகளை உண்டாக்கினீர்.
9 You brandished Your bow; You called for many arrows. Selah You split the earth with rivers.
9 நீர் உம் வில்லைக் கையிலெடுத்து நாணேற்றுகின்றீர்; அம்பறாத் தூணியை அம்புகளால் நிரப்புகின்றீர்; (சேலா) நிலத்தை ஆறுகளால் பிளக்கின்றீர்.
10 பர்வதங்கள் உம்மைக் கண்டு நடுங்கின; ஜலம் பிரவாகித்துக் கடந்துபோயிற்று, ஆழி இரைந்தது, அதின் கைகளை உயர எடுத்தது.
10 The mountains saw You and quaked; torrents of water swept by. The deep roared with its voice and lifted its hands on high.
10 மலைகள் உம்மைக்கண்டு நடுங்கின்றன; பெரும் வெள்ளங்கள் பீறிட்டுப் பாய்கின்றன; ஆழ்கடல் தன் இரைச்சலை எழுப்புகின்றது; அது தன் கைகளை மேலே உயர்த்துகின்றது.
11 சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன; உமது அம்புகளின் ஜோதியிலும், உமது ஈட்டியினுடைய மின்னல் பிரகாசத்திலும் நடந்தன.
11 Sun and moon stood still in their places at the flash of Your flying arrows, at the brightness of Your shining spear.
11 கதிரவனும் நிலவும் தங்கள் இருப்பிடத்திலேயே நிலைத்து நிற்கின்றன; பாய்ந்தோடும் உம் அம்புகளின் ஒளியின் முன்னும், பளிச்சிடும் உம் ஈட்டியினுடைய சுடரின் முன்னும் தங்கள் செயல் திறனை இழந்து நிற்கின்றன.
12 நீர் கோபத்தோடே பூமியில் நடந்தீர், உக்கிரத்தோடே ஜாதிகளைப் போரடித்தீர்.
12 You marched across the earth with fury; You threshed the nations in wrath.
12 சினத்தோடு மண்ணுலகில் நடந்து போகின்றீர்; சீற்றம்கொண்டு வேற்றினத்தாரை நசுக்குகின்றீர்.
13 உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம் பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காவுமே நீர் புறப்பட்டீர். கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, துஷ்டனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; சேலா.
13 You went forth for the salvation of Your people, to save Your anointed. You crushed the head of the house of the wicked and stripped him from head to toe. Selah
13 உம் மக்களை மீட்கவும், நீர் திருப்பொழிவு செய்தவரை விடுவிக்கவுமே நீர் புறப்படுகின்றீர். பொல்லாதவனின் குடும்பத் தலைவனை வெட்டி வீழ்த்துகின்றீர். அவனைப் பின்பற்றுவோரை முற்றிலும் அழித்து விடுகின்றீர். (சேலா)
14 என்னைச் சிதறடிப்பதற்குப் பெருங்காற்றைப்போல் வந்தார்கள்; சிறுமையானவனை மறைவிடத்திலே பட்சிப்பது அவர்களுக்குச் சந்தோஷமாயிருந்தது, நீர் அவனுடைய ஈட்டிகளினாலேயே அவனுடைய கிராமத்து அதிபதிகளை உருவக் குத்தினீர்.
14 With his own spear You pierced his head, when his warriors stormed out to scatter us, gloating as though ready to secretly devour the weak.
14 அவன் படைத்தலைவனின் தலையை அவன் ஈட்டிகளைக் கொண்டே பிளக்கின்றீர்; அவனோ ஒடுக்கப்பட்டவனை மறைவாக விழுங்கி மகிழ்வது போல மகிழ்ந்து, சூறாவளிக் காற்றென என்னைச் சிதறடிக்கப் பாய்ந்து வருகின்றான்.
15 திரளான தண்ணீர் குவியலாகிய சமுத்திரத்துக்குள் உமது குதிரைகளோடே நடந்துபோனீர்.
15 You trampled the sea with Your horses, churning the great waters.
15 ஆனால், நீர் உம்முடைய குதிரைகளால் ஆழ்கடலை மிதித்து, பெருவெள்ளக் குவியலைச் சிதறடிக்கின்றீர்.
16 நான் கேட்டபொழுது என் குடல் குழம்பிற்று; அந்தச் சத்தத்துக்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் உக்கல் உண்டாயிற்று; என் நிலையிலே நடுங்கினேன்; ஆனாலும் எங்களோடே எதிர்க்கும் ஜனங்கள் வரும்போது, இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன்.
16 I heard and trembled within; my lips quivered at the sound. Decay entered my bones; I trembled where I stood. Yet I must wait patiently for the day of distress to come upon the people who invade us.
16 இதை நான் கேட்கும்போது என் உடல் நடுநடுங்குகின்றது; அப்பேரொலியைக் கேட்பதனால் என் உதடுகள் துடிதுடிக்கின்றன; என் எலும்புகள் உளுத்துப் போகின்றன; என் காலடிகள் நிற்கும் இடத்திலேயே தடுமாறுகின்றன; எங்களைத் தாக்கும் மக்கள்மீது இடுக்கண் வரும் நாள்வரை அமைதியாய்க் காத்திருப்பேன்.
Habakkuk Rejoices
17 அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின்பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்,
17 Though the fig tree does not bud and no fruit is on the vines, though the olive crop fails and the fields produce no food, though the sheep are cut off from the fold and no cattle are in the stalls,
17 அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும், திராட்சைக் கொடிகள் கனி தராவிடினும் ஒலிவ மரங்கள் பயன் அற்றுப் போயினும், வயல்களில் தானியம் விளையாவிடினும், கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும், தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும்,
18 நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.
18 yet I will exult in the LORD; I will rejoice in the God of my salvation!
18 நான் ஆண்டவரில் களிகூர்வேன்; என் மீட்பரான கடவுளில் மகிழ்ச்சியுறுவேன்.
19 ஆண்டவராகிய கர்த்தர் என்பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார். இது நெகிநோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.
19 GOD the Lord is my strength; He makes my feet like those of a deer; He makes me walk upon the heights! For the choirmaster. With stringed instruments.
19 ஆண்டவராகிய என் தலைவரே என் வலிமை; அவர் என் கால்களைப் பெண்மானின் கால்களைப் போலாக்குவார்; உயர்ந்த இடங்களுக்கு என்னை நடத்திச் செல்வார்.*
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a Shigionoth is probably a musical term indicating the setting for the prayer.
3 b Selah or Interlude is probably a musical or literary term; also in verses 9 and 13.
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.