பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Jeremiah எரேமியா יִרְמְיָהוּ
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
எரேமியா 46 | Jeremiah 46
Judgment on Egypt
1 புறஜாதிகளுக்கு விரோதமாய் எரேமியா தீர்க்கதரிசிக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:
1 This is the word of the LORD about the nations—the word that came to Jeremiah the prophet
1 மக்களினத்தாரைக் குறித்து இறைவாக்கினர் எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு:
2 எகிப்தைக்குறித்தும், ஐப்பிராத்து நதியண்டையில் கர்கேமிசிலே இருந்ததும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே முறிய அடித்ததுமான பார்வோன்நேகோ என்னப்பட்ட எகிப்து ராஜாவின் ராணுவத்தைக்குறித்தும் அவர் சொல்லுகிறது என்னவென்றால்:
2 concerning Egypt and the army of Pharaoh Neco king of Egypt, which was defeated at Carchemish on the Euphrates River by Nebuchadnezzar king of Babylon in the fourth year of Jehoiakim the son of Josiah king of Judah:
2 எகிப்தைக் குறித்தும் யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் யூப்பிரத்தீசு பேராற்றங்கரையிலிருந்த கர்க்கெமீசில் முறியடித்த எகிப்திய மன்னன் பார்வோன் நெக்கோவின் படையைப் பற்றியும்:
3 கேடகங்களையும் பரிசைகளையும் ஆயத்தம்பண்ணி, யுத்தத்துக்கு வாருங்கள்.
3 “Deploy your shields, small and large; advance for battle!
3 பரிசை, கேடயம் தயார் செய்யுங்கள்; போருக்குப் புறப்பட்டுச் செல்லுங்கள்.
4 குதிரைவீரரே, குதிரைகளின் மேல் சேணங்களை வைத்து ஏறி, தலைச்சீராயை அணிந்துகொண்டு நில்லுங்கள்; ஈட்டிகளைத் துலக்கி, கவசங்களைத் தரித்துக்கொள்ளுங்கள்.
4 Harness the horses; mount the steeds; take your positions with helmets on! Polish your spears; put on armor!
4 குதிரைகளுக்குச் சேணம் பூட்டுங்கள்; படைவீரரே, அவற்றின்மீது ஏறுங்கள்; தலைக் கவசங்களுடன் அணிவகுத்து நில்லுங்கள்; ஈட்டிகளைத் தீட்டிக்கொள்ளுங்கள். மார்புக் கவசங்களை அணிந்து கொள்ளுங்கள்.
5 அவர்கள் கலங்கி, பின்வாங்குகிறதை நான் காண்கிறதென்ன? சுற்றிலுமுண்டான பயங்கரத்தினிமித்தம் அவர்களுடைய பராக்கிரமசாலிகள் முறியுண்டு, திரும்பிப்பாராமல் ஓட்டமாய் ஓடிப்போகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
5 Why am I seeing this? They are terrified, they are retreating; their warriors are defeated, they flee in haste without looking back; terror is on every side!” declares the LORD.
5 நான் காண்பது என்ன? அவர்கள் திகிலடைந்து புறமுதுகிட்டு ஓடுகிறார்கள்; அவர்களுடைய படைவீரர்கள் முறியடிக்கப் படுகிறார்கள்; திரும்பிப் பாராது தப்பி ஓடுகிறார்கள்;
6 வேகமாய் ஓடுகிறவன் ஓடிப்போகவேண்டாம்; பராக்கிரமசாலி தப்பிப்போகவேண்டாம்; வடக்கே ஐப்பிராத்து நதியண்டையிலே அவர்கள் இடறிவிழுவார்கள்.
6 “The swift cannot flee, and the warrior cannot escape! In the north by the River Euphrates they stumble and fall.
6 ஓட்டத்தில் வல்லவர் ஓடிப்போக முடியாது; படைவீரரும் தப்பியோட இயலாது; வடக்கே யூப்பிரத்தீசு பேராற்றங்கரையில் அவர்கள் தடுமாறிக் கீழே விழுவர்.
7 பிரவாகம்போல் புரண்டுவருகிற இவன் யார்? அலைகள் மோதியடிக்கிற நதிகள்போல் எழும்பிவருகிற இவன் யார்?
7 Who is this, rising like the Nile, like rivers whose waters churn?
7 நைல்நதி போல் பொங்கி எழுந்து, அலைமோதும் நதிகளெனப் பாய்ந்து வரும் இவன் யார்?
8 எகிப்தியனே பிரவாகத்தைப் போல் புரண்டுவருகிறான், அவனே அலைகள் மோதியடிக்கிற நதிகள்போல எழும்பிவருகிறான்; நான் போய், தேசத்தை மூடி, நகரத்தையும் அதில் குடியிருக்கிறவர்களையும் அழிப்பேன் என்றான்.
8 Egypt rises like the Nile, and its waters churn like rivers, boasting, ‘I will rise and cover the earth; I will destroy the cities and their people.’
8 நைல்நதிபோல் பொங்கி எழுந்து அலைமோதும் நதிகளெனப் பாய்ந்து வருகின்றது எகிப்து. நான் பொங்கி எழுந்து, மண்ணுலகை மூடிக்கொள்வேன்; நகரையும் அதன் குடிகளையும் அழித்தொழிப்பேன் என்று அவன் சொல்லிக்கொள்கிறான்.
9 குதிரைகளே, போய் ஏறுங்கள்; இரதங்களே, கடகட என்று ஓடுங்கள்; பராக்கிரமசாலிகளும், கேடகம் பிடிக்கிற எத்தியோப்பியரும், பூத்தியரும், வில்லைபிடித்து நாணேற்றுகிற லீதியரும் புறப்படக்கடவர்கள்.
9 Advance, O horses! Race furiously, O chariots! Let the warriors come forth—Cush and Put carrying their shields, men of Lydia drawing the bow.
9 குதிரைகளே, பாய்ந்து செல்லுங்கள்; தேர்களே, விரைந்து ஓடுங்கள்; படைவீரர்களே, முன்னேறிச் செல்லுங்கள். எத்தியோப்பியரும் லீபியரும் கேடயம் ஏந்தட்டும்! லீதியர் அம்புகளைத் தொடுத்து நாணேற்றட்டும்!
10 ஆனாலும், இது சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரின் நாளும், அவர் தம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிற நாளுமாயிருக்கிறது; ஆகையால், பட்டயம் பட்சித்து, அவர்களுடைய இரத்தத்தால் திருப்தியாகி வெறித்திருக்கும்; வடதேசத்தில் ஐப்பிராத்து நதியண்டையிலே சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவருக்கு ஒரு யாகமும் உண்டு.
10 For that day belongs to the Lord GOD of Hosts, a day of vengeance against His foes. The sword will devour until it is satisfied, until it is quenched with their blood. For the Lord GOD of Hosts will hold a sacrifice in the land of the north by the River Euphrates.
10 அந்த நாள், படைகளின் ஆண்டவராகிய தலைவரின் நாள்; ஆண்டவர் தம் எதிரிகளைப் பழிவாங்கும் நாள், வாள் உண்டு நிறைவுகொள்ளும்; குருதி குடித்து வெறிகொள்ளும். வடக்கு நாட்டு யூப்பிரத்தீசு பேராற்றங்கரையில் படைகளின் ஆண்டவராகிய தலைவருக்குப் பலியிடப்படும்.
11 எகிப்தின் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ கீலேயாத்துக்குப் போய், பிசின் தைலம் வாங்கு; திரளான அவிழ்தங்களை நீ கூட்டுகிறது விருதா, உனக்கு ஆரோக்கியமுண்டாகாது.
11 Go up to Gilead for balm, O Virgin Daughter of Egypt! In vain you try many remedies, but for you there is no healing.
11 கன்னிப் பெண் எகிப்தே! கிலயாதுக்குச் சென்று, பொன் மெழுகு கொண்டுவா, பல்வகை மருந்துகளை நீ பயன்படுத்துவது வீணே! உன் காயங்கள் ஆறவே ஆறா.
12 ஜாதிகள் உன் இலச்சையைக் கேள்விப்பட்டார்கள்; உன் கூக்குரலால் தேசம் நிறைந்தது; பராக்கிரமசாலியின்மேல் பராக்கிரமசாலி இடறி, இருவரும் ஏகமாய் விழுந்தார்கள் என்றார்.
12 The nations have heard of your shame, and your outcry fills the earth, because warrior stumbles over warrior and both of them have fallen together.”
12 மக்களினத்தார் உன் இழிவுபற்றிக் கேள்வியுற்றனர்; உன் அழுகுரல் மண்ணுலகை நிறைந்தது; படைவீரன் படைவீரனோடு இடறிக்கொள்ள இருவரும் சேர்ந்து கீழே விழுந்தனர்.
13 எகிப்துதேசத்தை அழிக்கப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத் நேச்சார் வருவானென்பதைக்குறித்து, எரேமியா தீர்க்கதரிசியினிடத்தில் கர்த்தர் சொன்ன வசனம்:
13 This is the word that the LORD spoke to Jeremiah the prophet about the coming of Nebuchadnezzar king of Babylon to strike the land of Egypt:
13 பாபிலோனிய மன்னன் நெபுகத்தேனசர் எகிப்து நாட்டைத் தாக்க வருவதைப் பற்றி, ஆண்டவர் இறைவாக்கினர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு:
14 ஆயத்தப்பட்டு நில், பட்டயம் உன்னைச் சுற்றிலும் உண்டானதைப் பட்சித்துபோடுகிறதென்று சொல்லி, எகிப்திலே அறிவித்து, மிக்தோலிலே கூறி, நோப்பிலும் தக்பானேசிலும் பிரசித்தம்பண்ணுங்கள்.
14 “Announce it in Egypt, and proclaim it in Migdol; proclaim it in Memphisb and Tahpanhes: ‘Take your positions and prepare yourself, for the sword devours those around you.’
14 எகிப்தில் அறிவியுங்கள்; மிக்தோலில் பறைசாற்றுங்கள்; மெம்பிசிலும் தகபனகேசிலும் முரசறையுங்கள்; அணிவகுத்து நில்; தயாராய் இரு! உன்னைச் சுற்றிலும் உள்ளவை வாளுக்கு இரையாகும்.
15 உன் வீரர் வாரிக்கொள்ளப்படுகிறதென்ன? கர்த்தர் அவர்களைத் தன்ளினதால் அவர்கள் நிலைநிற்கவில்லை.
15 Why have your warriors been laid low? They cannot stand, for the LORD has thrust them down.
15 உன் படைவீரர் வீழ்ச்சியுற்றது ஏன்? அவர்கள் எதிர்த்து நிற்காதது ஏன்? ஆண்டவர் அவனைத் தள்ளிவிட்டதால் அன்றோ!
16 அநேகரை இடறப்பண்ணுகிறார்; அவனவன் தனக்கடுத்தவன்மேல் விழுகிறான்; அவர்கள்: எழுந்திருங்கள், கொல்லுகிற பட்டயத்துக்குத் தப்ப நமது ஜனத்தண்டைக்கும், நாம் பிறந்த தேசத்துக்கும் திரும்பிப்போவோம் என்கிறார்கள்.
16 They continue to stumble; indeed, they have fallen over one another. They say, ‘Get up! Let us return to our people and to the land of our birth, away from the sword of the oppressor.’
16 அவர் பலரை இடறிவிழச் செய்தார். 'எழுந்திருங்கள், கொடுங்கோலன் வாளினின்று தப்பிப்போம்; நம் சொந்த மக்களிடம் நம் தாய் நாட்டுக்கே திரும்பிச் செல்வோம்' என்று ஒருவர் மற்றவரிடம் சொல்லிக்கொண்டனர்.
17 எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் பாழாக்கப்பட்டான்; அவனுக்குக் குறித்த காலம் முடிந்ததென்று அங்கே சத்தமிட்டுச் சொல்லுகிறார்கள்.
17 There they will cry out: ‘Pharaoh king of Egypt was all noise; he has let the appointed time pass him by.’
17 'வாய்ப்பை நழுவவிடும் வாயாடி' என்று எகிப்திய மன்னன் பார்வோனுக்குப் பெயர் சூட்டுங்கள்.
18 பர்வதங்களில் தாபோரும் சமுத்திரத்தின் அருகே கர்மேலும் இருக்கிற நிச்சயம்போல் அவன் வருவானென்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா தம்முடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறார்.
18 As surely as I live, declares the King, whose name is the LORD of Hosts, there will come one who is like Tabor among the mountains and like Carmel by the sea.
18 படைகளின் ஆண்டவர் என்னும் பெயருடைய மன்னர் கூறுகிறார்: வாழும் என் மேல் ஆணை! மலைகளுக்குள் தாபோர் போலவும் கடலோரத்துக் கர்மேல் போலவும் ஒருவன் ஆற்றலுடன் வருவான்.
19 எகிப்துதேசவாசியாகிய குமாரத்தியே, சிறையிருப்புக்குப் போகும் பிரயாண சாமான்களை ஆயத்தப்படுத்து, நோப் பாழாகும்; அது குடியில்லாமல் சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கும்.
19 Pack your bags for exile, O daughter dwelling in Egypt! For Memphis will be laid waste, destroyed and uninhabited.
19 மகள் எகிப்தே! அடிமைத்தனத்துக்கென மூட்டை கட்டிக்கொள்; மெம்பிசு அழிந்துபோகும்; குடியிருப்பாரற்றுப் பாழாய்ப் போகும்.
20 எகிப்து மகா நேர்த்தியான கடாரி, அடிக்கிறவன் வடக்கேயிருந்து வருகிறான்.
20 Egypt is a beautiful heifer, but a gadfly from the north is coming against her.
20 எகிப்து ஓர் அழகான இளம்பசு! வடக்கினின்று உண்ணி ஒன்று அவள்மீது வந்து அமர்ந்துள்ளது.
21 அதின் நடுவில் இருக்கிற அதின் கூலிப்படைகள் கொழுத்த காளைகள் போலிருக்கிறார்கள்; இவர்களும் நிற்காமல், திரும்பிக்கொண்டு ஏகமாய் ஓடிப்போவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படுகிற அவர்களுடைய ஆபத்துநாள் அவர்கள் மேல் வந்தது.
21 Even the mercenaries among her are like fattened calves. They too will turn back; together they will flee, they will not stand their ground, for the day of calamity is coming upon them—the time of their punishment.
21 அவள் நடுவில் உள்ள கூலிப் படையினர் கொழுத்த கன்று போன்றவர்கள்; அவர்களும் புறமுதுகுகாட்டி ஒருமிக்க ஓடிவிட்டார்கள். அவர்களால் எதிர்த்து நிற்க முடியவில்லை. அவர்களுடைய அழிவின் நாள், அவர்களது தண்டனையின் காலம் அவர்கள்மேல் வந்துற்றது.
22 அவன் பாம்பைபோல சீறிவருவான், இராணுவபலத்தோடே நடந்து, காடுவெட்டிகளைப்போல் கோடாரிகளோடு அதின்மேல் வருவார்கள்.
22 Egypt will hiss like a fleeing serpent,c for the enemy will advance in force; with axes they will come against her like woodsmen cutting down trees.
22 நழுவிச் செல்லும் பாம்பு போன்று அவள் சீறுகின்றாள்; அவள் எதிரிகள் வலிமையோடு அணிவகுத்து வருகின்றார்கள்; மரம் வெட்டிகள் போல் கோடரிகளோடு அவளை எதிர்த்து வருகின்றார்கள்.
23 எண்ணப்படாத மரங்களாயிருந்தாலும் அந்தக் காட்டை வெட்டுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வெட்டுக்கிளிகளைப் பார்க்கிலும் அதிகமானவர்கள், அவர்களுக்குத் தொகையில்லை.
23 They will chop down her forest, declares the LORD, dense though it may be, for they are more numerous than locusts; they cannot be counted.
23 அவளது காடு ஆள் நுழையமுடியாததாய் இருக்கிறது. அவர்கள் அதை வெட்டுவார்கள், என்கிறார் ஆண்டவர். அவர்கள் வெட்டுக்கிளிகளைவிட மிகுதியானவர்கள். அவர்களைக் கணக்கிட முடியாது.
24 எகிப்தின் குமாரத்தி கலங்குவாள்; வடதிசை ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாள்.
24 The Daughter of Egypt will be put to shame; she will be delivered into the hands of the people of the north.”
24 மகள் எகிப்து இகழ்ச்சிக்கு உள்ளாவாள்; வடக்கு நாட்டு மக்களிடம் அவள் கையளிக்கப்படுவாள்.
25 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் நோ என்னும் பட்டணத்திலுள்ள திரளான ஜனங்களையும், பார்வோனையும், எகிப்தையும், அதின் தேவர்களையும், அதின் ராஜாக்களையும், பார்வோனையும், அவனை நம்பியிருக்கிறவர்களையும் விசாரித்து,
25 The LORD of Hosts, the God of Israel, says: “Behold, I am about to punish Amon god of Thebes,d along with Pharaoh, Egypt with her gods and kings, and those who trust in Pharaoh.
25 இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுகிறார்; இதோ, நோ நகரத்து ஆமோனையும், பார்வோனையும் எகிப்தையும் அவளுடைய தெய்வங்களையும் அரசர்களையும், பார்வோனையும் அவனில் நம்பிக்கை வைப்போரையும் நான் தண்டிக்கப் போகிறேன்.
26 அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும், அவனுடைய சேவகரின் கையிலும், அவர்களை ஒப்புக்கொடுப்பேன்; அதற்குப்பின்பு அது பூர்வகாலத்தில் இருந்ததுபோல் குடியேற்றப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
26 I will deliver them into the hands of those who seek their lives—of Nebuchadnezzar king of Babylon and his officers. But after this, Egypt will be inhabited as in days of old, declares the LORD.
26 அவர்களுடைய உயிரைப் பறிக்கத் தேடுவோர் கையிலும், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் கையிலும் அவனுடைய அலுவலர் கையிலும் அவர்களை நான் ஒப்புவிப்பேன். அதன் பின்னர் முன்னாளில் போன்று எகிப்தில் மக்கள் குடியேறுவார்கள், என்கிறார் ஆண்டவர்.1
1 எசா 19:1-25; எசே 29:1-32:32.
27 என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, நீ கலங்காதே; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியை அவர்கள் சிறையிருப்பின் தேசத்திலுமிருந்து விடுவித்து இரட்சிப்பேன்; அப்பொழுது யாக்கோபு திரும்பிவந்து, அமைதியோடும் சாங்கோபாங்கத்தோடும் இருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுவார் இல்லை.
27 But you, O Jacob My servant, do not be afraid, and do not be dismayed, O Israel. For I will surely save you out of a distant place, your descendants from the land of their captivity! Jacob will return to quiet and ease, with no one to make him afraid.
27 என் ஊழியன் யாக்கோபே, அஞ்சாதே; இஸ்ரயேலே, கலங்காதே! தொலை நாட்டினின்று உன்னை நான் மீட்பேன்; அடிமைத்தன நாட்டினின்று உன் வழிமரபினரை விடுவிப்பேன்; யாக்கோபு திரும்பிவந்து அமைதியில் இளைப்பாறுவான்; அவனை அச்சுறுத்துவார் எவருமிலர்.
28 என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னுடனே இருக்கிறேன்; உன்னைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமல், உன்னை மட்டாய் தண்டிப்பேன்; ஆனாலும் உன்னை நான் குற்றமில்லாமல் நீங்கலாக விடுவதில்லையென்கிறார்.
28 And you, My servant Jacob, do not be afraid, declares the LORD, for I am with you. Though I will completely destroy all the nations to which I have banished you, I will not completely destroy you. Yet I will discipline you justly, and will by no means leave you unpunished.”
28 என் ஊழியன் யாக்கோபே, அஞ்சாதே, என்கிறார் ஆண்டவர். நான் உன்னோடு இருக்கிறேன்; எந்த மக்களினத்தாரிடையே உன்னைத் துரத்தியடித்தேனோ, அவர்கள் அனைவரையும் முற்றிலும் அழித்தொழிப்பேன்; உன்னையோ முற்றிலும் அழிக்க மாட்டேன்; உன்னை நீதியோடு தண்டிப்பேன்; உன்னை எவ்வகையிலேனும் தண்டியாது விடேன்.2
2 எரே 30:10-11.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
9 a That is, the upper Nile region
14 b LXX; Hebrew Noph ; also in verse 19
22 c Hebrew nachash ; translated in most cases as snake
25 d Hebrew Amon of No
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.