பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Ezekiel எசேக்கியேல் יְחֶזְקֵאל
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48
எசேக்கியேல் 29 | Ezekiel 29
A Prophecy against Pharaoh
1 பத்தாம் வருஷம் பத்தாம் மாதம் பன்னிரண்டாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
1 In the tenth year, on the twelfth day of the tenth month, the word of the LORD came to me, saying,
1 பத்தாம் ஆண்டின் பத்தாம் மாதத்தில் பன்னிரண்டாம் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;
2 மனுபுத்திரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவனுக்கும் எகிப்து முழுவதுக்கும் விரோதமாய்த் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்:
2 “Son of man, set your face against Pharaoh king of Egypt and prophesy against him and against all Egypt.
2 மானிடா! உன் முகத்தை எகிப்திய மன்னன் பார்வோனுக்கு நேராகத் திருப்பி அவனுக்கு எதிராகவும் அனைத்து எகிப்துக்கு எதிராகவும் இறைவாக்குரை.
3 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே, நீ உன் நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு என் நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டுபண்ணினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாய் வந்து,
3 Speak to him and tell him that this is what the Lord GOD says: Behold, I am against you, O Pharaoh king of Egypt, O great monster who lies among his rivers, who says, ‘The Nile is mine; I made it myself.’
3 அவனிடம் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; எகிப்து மன்னனாகிய பார்வோனே! நான் உனக்கு எதிராய் இருக்கின்றேன்; உன் ஆறுகளின் நடுவே வாழும் பெரிய முதலை நீ! "நைல் என்னுடையது; நானே அதை உருவாக்கிக்கொண்டேன்" என்கிறாய் நீ!
4 உன் வாயிலே துறடுகளை மாட்டி உன் நதிகளின் மச்சங்களை உன் செதிள்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்து, உன்னை உன் நதிகளின் நடுவிலிருந்து தூக்கிவிடுவேன்; உன் நதிகளின் மச்சங்களெல்லாம் உன் செதில்களில் ஒட்டிக்கொண்டிருக்கும்.
4 But I will put hooks in your jaws and cause the fish of your streams to cling to your scales. I will haul you up out of your rivers, and all the fish of your streams will cling to your scales.
4 ஆனால், நான் உன் வாயில் தூண்டில்களை மாட்டி உன் ஆறுகளின் மீன்கள் யாவும் உன் செதில்களில் ஒட்டிக்கொள்ளச் செய்வேன்; உன்னையும் உன் செதில்களில் ஒட்டியுள்ள மீன்களையும் உன் ஆறுகளினின்று வெளியே இழுத்துப் போடுவேன்.
5 உன்னையும் உன் நதிகளின் எல்லா மச்சங்களையும் வனாந்தரத்திலே போட்டுவிடுவேன்; வெட்டவெளியிலே விழுவாய்; நீ சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை; உன்னை பூமியின் மிருகங்களுக்கும் ஆகாயத்தின் பறவைகளுக்கும் இரையாகக் கொடுப்பேன்.
5 I will leave you in the desert, you and all the fish of your streams. You will fall on the open field and will not be taken away or gathered for burial. I have given you as food to the beasts of the earth and the birds of the air.
5 உன்னையும் உன் ஆறுகளின் மீன்களையும் பாலை நிலத்தில் விட்டுவிடுவேன்; உலர்ந்த தரையில் விழுந்து மடிவாய் நீ; உன்னைச் சேகரிக்கவோ பொறுக்கி எடுக்கவோ எவரும் இரார்; காட்டு விலங்குகளுக்கும் வானத்துப் பறவைகளுக்கும் உன்னை இரையாய்த் தருவேன்.
6 அப்பொழுது எகிப்துதேசத்தின் குடிகளெல்லாரும் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்; அவர்கள் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு நாணற்கோலாயிருந்தார்களே.
6 Then all the people of Egypt will know that I am the LORD. For you were only a staff of reeds to the house of Israel.
6 அப்போது எகிப்தில் வாழும் யாவரும் 'நானே ஆண்டவர்' என அறிந்து கொள்வர்.1
1 எசா 36:6.
7 அவர்கள் உன்னைக் கையிலே பிடிக்கும்போது, நீ ஒடிந்துபோய், அவர்கள் விலாவையெல்லாம் பிளப்பாய்; அவர்கள் உன்மேல் சாயும்போது, நீ முறிந்து, அவர்கள் இடுப்பு முழுவதையும் மரத்துப்போகப்பண்ணுவாய்.
7 When Israel took hold of you with their hands, you splintered, tearing all their shoulders; when they leaned on you, you broke, and their backs were wrenched.a
7 இஸ்ரயேல் வீட்டாருக்கு நாணற் கோலாய் இருந்தாய் நீ; அவர்கள் உன்னைப் பற்றிப் பிடித்தபோது நீ முறித்தாய்; அவர்கள் தோள்களைக் கிழித்தாய்; உன்மேல் அவர்கள் சாய்ந்தபோது நீ ஒடிந்தாய்; அவர்கள் இடுப்பு நொறுங்கிற்று.
The Desolation of Egypt
8 ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உன்மேல் பட்டயத்தைவரப்பண்ணி, உன்னில் மனுஷரையும் மிருகங்களையும் சங்காரம்பண்ணுவேன்.
8 Therefore this is what the Lord GOD says: I will bring a sword against you and cut off from you man and beast.
8 எனவே தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான் உனக்கு எதிராய் ஒரு வாளைக் கொண்டுவந்து உன் மாந்தரையும் விலங்குகளையும் கொல்வேன்.
9 எகிப்து தேசம் பாழும் வனாந்தரமுமாகும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் நதி என்னுடையது, நான் அதை உண்டாக்கினேன் என்று சொன்னானே.
9 The land of Egypt will become a desolate wasteland. Then they will know that I am the LORD. Because you said, ‘The Nile is mine; I made it,’
9 எகிப்து நாடு, பாழடைந்த பாலைநிலமாகும். அப்போது 'நானே ஆண்டவர்' என்பதை அவர்கள் அறிந்து கொள்வர். ஏனெனில் நைல் என்னுடையது, நானே அதை உருவாக்கிக் கொண்டேன்' என்று உரைத்தாய்.
10 ஆகையால், இதோ, நான் உனக்கும் உன் நதிகளுக்கும் விரோதமாக வந்து, மிக்தோல்முதல் எத்தியோப்பியாவின் எல்லையிலுள்ள செவெனேவரைக்கும் எகிப்துதேசத்தை அவாந்தரமும் பாழுமான வனாந்தரங்களாக்குவேன்.
10 therefore I am against you and against your rivers. I will turn the land of Egypt into a ruin, a desolate wasteland from Migdol to Syene, and as far as the border of Cush.b
10 எனவே, நான் உனக்கெதிராகவும் உன் ஆறுகளுக்கு எதிராகவும் இருக்கிறேன். மிக்தோல் முதல் சீனிம் வரை — கூசு எல்லைப் பகுதிவரை — எகிப்து நாட்டைப் பாழடைந்த பாலைநிலமாக மாற்றுவேன்.
11 மனுஷனுடைய கால் அதைக்கடப்பதுமில்லை மிருகஜீவனுடைய கால் அதை மிதிப்பதுமில்லை; அது நாற்பது வருஷம் குடியற்றிருக்கும்.
11 No foot of man or beast will pass through, and it will be uninhabited for forty years.
11 ஆள் நடமாட்டமோ கால்நடை நடமாட்டமோ அதில் இராது; நாற்பது ஆண்டுகள் யாரும் அங்கே குடியிரார்.
12 எகிப்துதேசத்தைப் பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போகப்பண்ணுவேன்; அதின் பட்டணங்கள் அவாந்தரமாக்கப்பட்ட பட்டணங்களின் நடுவிலே நாற்பதுவருஷம் பாழாய்க்கிடக்கும்; நான் எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களுக்குள்ளே தூற்றிவிடுவேன்.
12 I will make the land of Egypt a desolation among desolate lands, and her cities will lie desolate for forty years among the ruined cities. And I will disperse the Egyptians among the nations and scatter them throughout the countries.
12 அழிந்த நாடுகளில் ஒன்றாக எகிப்து நாட்டை மாற்றுவேன். நாற்பது ஆண்டுகள் அதன் நகர்கள், அழிந்த நகர்களிடையே பாழடைந்து கிடக்கும். எகிப்தியரை மக்களினங்களிடையே சிதறடித்து, நாடுகளிடையே கலந்தொழியச் செய்வேன்.
13 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நாற்பதுவருஷம் முடியும்போது, நான் எகிப்தியரை அவர்கள் சிதறுண்டிருக்கிற ஜனங்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டு,
13 For this is what the Lord GOD says: At the end of forty years I will gather the Egyptians from the nations to which they were scattered.
13 ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நாற்பதாண்டுகள் முடிந்தபின் எகிப்தியரை அவர்கள் சிதறுண்டிருக்கும் நாடுகளினின்று கூட்டிச் சேர்ப்பேன்.
14 எகிப்தியரின் சிறையிருப்பைத் திருப்பி, அவர்களை அவர்களுடைய ஜநநதேசமாகிய பத்ரோஸ் தேசத்திலே திரும்பிவரப்பண்ணுவேன்; அங்கே அவர்கள் அற்ப ராஜ்யமாயிருப்பார்கள்.
14 I will restore Egypt from captivityc and bring them back to the land of Pathros, the land of their origin. There they will be a lowly kingdom.
14 எகிப்தின் செல்வங்களை அவர்களுக்குத் திருப்பிக் கொடுப்பேன். அவர்களை அவர்களின் முன்னோர் நாடாகிய பத்ரோசுக்குக் கொண்டு சேர்ப்பேன்.
15 அது இனி ஜாதிகளின்மேல் தன்னை உயர்த்தாமல், மற்ற ராஜ்யங்களிலும் அற்பமானதாயிருக்கும்; அவர்கள் இனி ஜாதிகளை ஆளாதபடிக்கு அவர்களைக் குறுகிப்போகப்பண்ணுவேன்.
15 Egypt will be the lowliest of kingdoms and will never again exalt itself above the nations. For I will diminish Egypt so that it will never again rule over the nations.
15 அங்கே எல்லா அரசுகளையும் விடச் சிறிய அரசாய் அது இருக்கும். மற்ற நாடுகளைவிட ஒருபோதும் தன்னை உயர்த்திக் கொள்ளாது. நாடுகளை ஒருபோதும் அது ஆட்சி செய்ய இயலாதவாறு அதை மிகவும் வலுவிழக்கச் செய்வேன்.
16 அவர்களின் பிறகே போய், அவர்களை நோக்கிக்கொண்டிருக்கிறதினால் இஸ்ரவேல் வம்சத்தார் எனக்குத் தங்கள் அக்கிரமத்தை நினைப்பூட்டாதபடிக்கு, இனி அவர்கள் இவர்களுடைய நம்பிக்கையாயிராமற்போவார்கள்; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.
16 Egypt will never again be an object of trust for the house of Israel, but will remind them of their iniquity in turning to the Egyptians. Then they will know that I am the Lord GOD.”
16 இஸ்ரயேல் மக்களுக்கு எகிப்து ஒருபோதும் நம்பிக்கையின் அடிப்படையாய் இராமல், அதனிடம் அவர்கள் உதவி கேட்ட பாவத்தின் நினைவாக மட்டுமே இருக்கும். அப்போது 'நானே தலைவராகிய ஆண்டவர்' என அறிந்து கொள்வர்.
Egypt the Reward of Nebuchadnezzar
17 இருபத்தேழாம் வருஷம் முதலாம் மாதம் முதலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
17 In the twenty-seventh year, on the first day of the first month, the word of the LORD came to me, saying,
17 இருபத்து ஏழாம் ஆண்டு, முதல் மாதம், முதல் நாள், ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;
18 மனுபுத்திரனே, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தீருவின் முன்னே தன் சேனையினிடத்தில் கடும் ஊழியம் வாங்கினான்; ஒவ்வொரு தலையும் மொட்டையாயிற்று; ஒவ்வொரு தோள்பட்டையின் தோலும் உரிந்துபோயிற்று; ஆனாலும் அவன் தீருவுக்கு விரோதமாகச் செய்த ஊழியத்தினாலே அவனுக்காவது அவன் சேனைக்காவது கூலி கிடைக்கவில்லை.
18 “Son of man, Nebuchadnezzar king of Babylon caused his army to labor strenuously against Tyre. Every head was made bald and every shoulder made raw. But he and his army received no wages from Tyre for the labor they expended on it.
18 "மானிடா! பாபிலோன் மன்னன் நெபுகத்னேசர் தீர் நகரை முற்றுகையிடுகையில் தன் படைகளுடன் வருந்தி முயன்றான்; தலைகள் யாவும் மொட்டையடிக்கப்பட்டன; தோள்கள் யாவும் புண்ணாய்ப் போயின. ஆயினும் தீர் நகருக்கு எதிராக அவனும் அவன் படைகளும் செய்த முற்றுகையில் அவர்களுக்கு யாதொரு கைம்மாறும் கிட்டாமற் போயிற்று.
19 ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ நான் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு எகிப்துதேசத்தைக் கொடுக்கிறேன்; அவன் அதின் ஏராளமான ஜனத்தைச் சிறைபிடித்து அதின் ஆஸ்தியைச் சூறையாடி அதின் கொள்ளைப்பொருளை எடுத்துக்கொள்வான்; இது அவனுடைய சேனைக்குக் கூலியாயிருக்கும்.
19 Therefore this is what the Lord GOD says: I will give the land of Egypt to Nebuchadnezzar king of Babylon, who will carry off its wealth, seize its spoil, and remove its plunder. This will be the wages for his army.
19 எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நான் எகிப்தை பாபிலோனின் மன்னன் நெபுகத்னேசருக்குக் கொடுக்கப் போகிறேன். அவன் அதன் செல்வத்தைக் கொள்ளையிட்டு வாரிக் கொண்டு போவான். அது அவன் படைகளுக்குக் கூலியாக அமையும்.
20 அவன் அதிலே செய்த வேலைக்கு எகிப்துதேசத்தை நான் அவனுக்குக் கூலியாகக் கொடுத்தேன்; எனக்காக அதைச் செய்தார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
20 I have given him the land of Egypt as the reward for his labor, because it was done for Me, declares the Lord GOD.
20 அவனுடைய முயற்சிகளுக்குக் கைம்மாறாய் நான் எகிப்தை அவனுக்குக் கொடுப்பேன். ஏனெனில், அவனும் அவன் படைகளும் அதை எனக்காகவே செய்தனர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
21 அந்நாளிலே நான் இஸ்ரவேல் வம்சத்தாரின் கொம்பை முளைக்கப்பண்ணி, அவர்கள் நடுவிலே தாராளமாய்ப் பேசும் வாயை உனக்குக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.
21 In that day I will cause a horn to sprout for the house of Israel, and I will open your mouth to speak among them. Then they will know that I am the LORD.”
21 அந்நாளில் இஸ்ரயேல் வீட்டாருக்காக ஒரு கொம்பு முளைக்கச் செய்வேன். அவர்கள் நடுவில் உன்னைப் பேச வைப்பேன். அப்போது, 'நானே ஆண்டவர்' என அறிந்து கொள்வர்.2
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
7 a Syriac (see also LXX and Vulgate); Hebrew and you caused their loins to shake.
10 b That is, the upper Nile region
14 c Or restore the fortunes of Egypt
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.