பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Job  யோபு  אִיּוֹב

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42

யோபு 9 | Job 9

Job: How Can I Contend with God?

1וַיַּ֥עַן אִיּ֗וֹב וַיֹּאמַֽר׃

1 அதற்கு யோபு பிரதியுத்தரமாக:
1 Then Job answered:
1 யோபு அதற்கு உரைத்த பதில்:

2אָ֭מְנָם יָדַ֣עְתִּי כִי־כֵ֑ן וּמַה־יִּצְדַּ֖ק אֱנ֣וֹשׁ עִם־אֵֽל׃

2 ஆம், காரியம் இப்படியிருக்கிறது என்று அறிவேன், தேவனுக்கு முன்பாக மனுஷன் நீதிமானாயிருப்பதெப்படி?
2 “Yes, I know that it is so, but how can a mortal be righteous before God?a
2 உண்மையில் இது இவ்வாறு என்று அறிவேன்; ஆனால், மனிதர் இறைவன்முன் நேர்மையாய் இருப்பதெப்படி?1

3אִם־יַ֭חְפֹּץ לָרִ֣יב עִמּ֑וֹ לֹֽא־יַ֝עֲנֶ֗נּוּ אַחַ֥ת מִנִּי־אָֽלֶף׃

3 அவர் அவனோடே வழக்காடச்சித்தமாயிருந்தால், ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் அவருக்கு உத்தரவு சொல்லமாட்டானே.
3 If one wished to contend with God,a he could not answer Him one time out of a thousand.
3 ஒருவர் அவருடன் வழக்காட விரும்பினால், ஆயிரத்தில் ஒன்றுக்கேனும் அம்மனிதரால் பதிலளிக்க முடியுமா?

4חֲכַ֣ם לֵ֭בָב וְאַמִּ֣יץ כֹּ֑חַ מִֽי־הִקְשָׁ֥ה אֵ֝לָ֗יו וַיִּשְׁלָֽם׃

4 அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்; அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்?
4 God is wise in heart and mighty in strength. Who has resisted Him and prospered?
4 இறைவன் உள்ளத்தில் ஞானமுள்ளவர்; ஆற்றலில் வல்லவர்; அவர்க்கு எதிராய்த் தம்மைக் கடினப்படுத்தி, வளமுடன் வாழ்ந்தவர் யார்?

5הַמַּעְתִּ֣יק הָ֭רִים וְלֹ֣א יָדָ֑עוּ אֲשֶׁ֖ר הֲפָכָ֣ם בְּאַפּֽוֹ׃

5 அவர் பர்வதங்களைச் சடிதியாய்ப் பேர்க்கிறார்; தம்முடைய கோபத்தில் அவைகளைப் புரட்டிப்போடுகிறார்.
5 He moves mountains without their knowledge and overturns them in His anger.
5 அவர் மலைகளை அகற்றுவார்; அவை அதை அறியா; அவர் சீற்றத்தில் அவைகளைத் தலைகீழாக்குவார்.

6הַמַּרְגִּ֣יז אֶ֭רֶץ מִמְּקוֹמָ֑הּ וְ֝עַמּוּדֶ֗יהָ יִתְפַלָּצֽוּן׃

6 பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் ஸ்தானத்தினின்று அசையப்பண்ணுகிறார்.
6 He shakes the earth from its place, so that its foundations tremble.
6 அசைப்பார் அவர் நிலத்தை அதனிடத்தினின்று; அதிரும் அதனுடைய தூண்கள்.

7הָאֹמֵ֣ר לַ֭חֶרֶס וְלֹ֣א יִזְרָ֑ח וּבְעַ֖ד כּוֹכָבִ֣ים יַחְתֹּֽם׃

7 அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்; அவர் நட்சத்திரங்களை மறைத்துப்போடுகிறார்.
7 He commands the sun not to shine;b He seals off the stars.
7 அவர் கட்டளையிடுவார்; கதிரவன் தோன்றான்; அவர் மறைத்திடுவார் விண்மீன்களை.

8נֹטֶ֣ה שָׁמַ֣יִם לְבַדּ֑וֹ וְ֝דוֹרֵ֗ךְ עַל־בָּ֥מֳתֵי יָֽם׃

8 அவர் ஒருவரே வானங்களை விரித்து சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர்.
8 He alone stretches out the heavens and treads on the waves of the sea.
8 தாமே தனியாய் வானை விரித்தவர், ஆழியின் முதுகை மிதித்து நடந்தவர்.

9עֹֽשֶׂה־עָ֭שׁ כְּסִ֥יל וְכִימָ֗ה וְחַדְרֵ֥י תֵמָֽן׃

9 அவர் துருவச்சக்கர நட்சத்திரங்களையும், மிருகசீரிஷத்தையும் அறுமீனையும், தட்சன மண்டலங்களையும் உண்டாக்கினவர்.
9 He is the Maker of the Bear and Orion, of the Pleiades and the constellations of the south.
9 வடமீன் குழுவையும், மிருகசீரிடத்தையும், கார்த்திகை விண்மீன்களையும், தென்திசை விண்மீன் குழுக்களையும் அமைத்தவர் அவரே.2

10עֹשֶׂ֣ה גְ֭דֹלוֹת עַד־אֵ֣ין חֵ֑קֶר וְ֝נִפְלָא֗וֹת עַד־אֵ֥ין מִסְפָּֽר׃

10 ஆராய்ந்து முடியாத பெரியகாரியங்களையும் எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
10 He does great things beyond searching out, and wonders without number.
10 உணர்ந்திட இயலாப் பெருஞ்செயல்களையும், கணக்கிட முடியா அருஞ்செயல்களையும் ஆற்றுநர் அவரே.

11הֵ֤ן יַעֲבֹ֣ר עָ֭לַי וְלֹ֣א אֶרְאֶ֑ה וְ֝יַחֲלֹ֗ף וְֽלֹא־אָבִ֥ין לֽוֹ׃

11 இதோ, அவர் என் அருகில் போகிறார், நான் அவரைக் காணேன்; அவர் கடந்துபோகிறார் நான் அவரை அறியேன்.
11 Were He to pass by me, I would not see Him; were He to move, I would not recognize Him.
11 இதோ! என் அருகே அவர் கடந்து செல்கையில் நான் பார்க்க முடியவில்லை; நழுவிச் செல்கையில் நான் உணர முடியவில்லை.

12הֵ֣ן יַ֭חְתֹּף מִ֣י יְשִׁיבֶ֑נּוּ מִֽי־יֹאמַ֥ר אֵ֝לָ֗יו מַֽה־תַּעֲשֶֽׂה׃

12 இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை மறிப்பவன் யார்? நீர் என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார்?
12 If He takes away,c who can stop Him? Who dares to ask Him, ‘What are You doing?’
12 இதோ! அவர் பறிப்பாரானால், அவரை மறிப்பார் யார்? யாது செய்கின்றீர் என அவரைத் கேட்பார் யார்?

13אֱ֭לוֹהַּ לֹא־יָשִׁ֣יב אַפּ֑וֹ תחתו שָׁ֝חֲח֗וּ עֹ֣זְרֵי רָֽהַב׃

13 தேவன் தம்முடைய கோபத்தைத் திருப்பமாட்டார்; ஒருவருக்கொருவர் துணை நிற்கிற அகங்காரிகள் அவருக்கு அடங்கவேண்டும்.
13 God does not restrain His anger; the helpers of Rahab cower beneath Him.
13 கடவுள் தம் சீற்றத்தைத் தணிக்கமாட்டார்; அவரடி பணிந்தனர் இராகாபின் துணைவர்கள்.3

3 இராகாபு = தீங்கை விளைவிக்கும் ஒரு நீர்வாழ் விலங்கு.

14אַ֭ף כִּֽי־אָנֹכִ֣י אֶֽעֱנֶ֑נּוּ אֶבְחֲרָ֖ה דְבָרַ֣י עִמּוֹ׃

14 இப்படியிருக்க, அவருக்கு மறுமொழி கொடுக்கவும், அவரோடே வழக்காடும் வார்த்தைகளைத் தெரிந்துகொள்ளவும் நான் எம்மாத்திரம்?
14 How then can I answer Him or choose my arguments against Him?
14 இப்படியிருக்க, எப்படி அவருக்குப் பதிலுரைப்பேன்? எதிர்நின்று அவரோடு எச்சொல் தொடுப்பேன்?

15אֲשֶׁ֣ר אִם־צָ֭דַקְתִּי לֹ֣א אֶעֱנֶ֑ה לִ֝מְשֹׁפְטִ֗י אֶתְחַנָּֽן׃

15 நான் நீதிமானாயிருந்தாலும் அவரோடே வழக்காடாமல், என் நியாயாதிபதியினிடத்தில் இரக்கத்துக்குக் கெஞ்சுவேன்.
15 For even if I were right, I could not answer. I could only beg my Judge for mercy.
15 நான் நேர்மையாக இருந்தாலும் அவருக்குப் பதிலுரைக்க இயலேன்; என் நீதிபதியிடம் நான் இரக்கத்தையே கெஞ்சுவேன்.

16אִם־קָרָ֥אתִי וַֽיַּעֲנֵ֑נִי לֹֽא־אַ֝אֲמִ֗ין כִּֽי־יַאֲזִ֥ין קוֹלִֽי׃

16 நான் கெஞ்ச, அவர் எனக்கு உத்தரவு அருளினாலும், அவர் என் விண்ணப்பத்துக்குச் செவிகொடுத்தார் என்று நம்பேன்.
16 If I summoned Him and He answered me, I do not believe He would listen to my voice.
16 நான் கூப்பிட அவர் பதிலுரைப்பினும், என் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார் என்று நம்புவதற்கில்லை.

17אֲשֶׁר־בִּשְׂעָרָ֥ה יְשׁוּפֵ֑נִי וְהִרְבָּ֖ה פְצָעַ֣י חִנָּֽם׃

17 அவர் புசலினால் என்னை முறிக்கிறார்; முகாந்தரமில்லாமல் அநேகம் காயங்களை எனக்கு உண்டாக்குகிறார்.
17 For He would crush me with a tempest and multiply my wounds without cause.
17 புயலினால் என்னை நொறுக்குவார்; காரணமின்றி என் காயங்களைப் பெருக்குவார்.

18לֹֽא־יִ֭תְּנֵנִי הָשֵׁ֣ב רוּחִ֑י כִּ֥י יַ֝שְׂבִּעַ֗נִי מַמְּרֹרִֽים׃

18 நான் மூச்சுவிட எனக்கு இடங்கொடாமல், கசப்பினால் என்னை நிரப்புகிறார்.
18 He does not let me catch my breath, but overwhelms me with bitterness.
18 அவர் என்னை மூச்சிழுக்கவும் விடாது, கசப்பினால் என்னை நிரப்புகின்றார்.

19אִם־לְכֹ֣חַ אַמִּ֣יץ הִנֵּ֑ה וְאִם־לְ֝מִשְׁפָּ֗ט מִ֣י יוֹעִידֵֽנִי׃

19 பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்; நியாயத்தைப் பார்த்தால் என் பட்சத்தில் சாட்சிசொல்லுகிறவன் யார்?
19 If it is a matter of strength, He is indeed mighty! If it is a matter of justice, who can summon Himd?
19 வலிமையில் அவருக்கு நிகர் அவரே! அவர்மேல் வழக்குத் தொடுப்பவர் யார்?

20אִם־אֶ֭צְדָּק פִּ֣י יַרְשִׁיעֵ֑נִי תָּֽם־אָ֝֗נִי וַֽיַּעְקְשֵֽׁנִי׃

20 நான் என்னை நீதிமானாக்கிலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சிகொடுக்கும்.
20 Even if I were righteous, my mouth would condemn me; if I were blameless, it would declare me guilty.e
20 நான் நேர்மையாக இருந்தாலும், என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; நான் குற்றமற்றவனாக இருந்தாலும், மாறுபட்டவனாக அது என்னைத் தீர்ப்பிடும்.

21תָּֽם־אָ֭נִי לֹֽא־אֵדַ֥ע נַפְשִׁ֗י אֶמְאַ֥ס חַיָּֽי׃

21 நான் உத்தமனென்றாலும் என் உள்ளத்தை நான் அறியேன், என் ஜீவனை அரோசிப்பேன்.
21 Though I am blameless, I have no concern for myself; I despise my own life.
21 குற்றமற்றவன் நான்; என்னைப்பற்றிக் கவலையில்லை; என் வாழ்க்கையையே வெறுக்கின்றேன்.

22אַחַ֗ת הִ֥יא עַל־כֵּ֥ן אָמַ֑רְתִּי תָּ֥ם וְ֝רָשָׁ֗ע ה֣וּא מְכַלֶּֽה׃

22 ஒரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன்; சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அவர் அழிக்கிறார்.
22 It is all the same, and so I say, ‘He destroys both the blameless and the wicked.’
22 எல்லாம் ஒன்றுதான்; எனவேதான் சொல்கின்றேன்; "அவர் நல்லாரையும் பொல்லாரையும் ஒருங்கே அழிக்கின்றார்'.

23אִם־שׁ֭וֹט יָמִ֣ית פִּתְאֹ֑ם לְמַסַּ֖ת נְקִיִּ֣ם יִלְעָֽג׃

23 சவுக்கானது அசுப்பிலே வாதித்துக் கொல்லும்போது, அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப்பார்த்து நகைக்கிறார்.
23 When the scourge brings sudden death, He mocks the despair of the innocent.
23 பேரிடர் சாவைத் திடீரெனத் தரும்போது, அவர் மாசற்றவரின் நெருக்கடி கண்டு நகைப்பார்.

24אֶ֤רֶץ ׀ נִתְּנָ֬ה בְֽיַד־רָשָׁ֗ע פְּנֵֽי־שֹׁפְטֶ֥יהָ יְכַסֶּ֑ה אִם־לֹ֖א אֵפ֣וֹא מִי־הֽוּא׃

24 உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது; அதிலிருக்கிற நியாயாதிபதிகளின் முகத்தை மூடிப்போடுகிறார்; அவர் இதைச் செய்கிறதில்லையென்றால் பின்னை யார் இதைச் செய்கிறார்.
24 The earth is given into the hand of the wicked; He blindfolds its judges. If it is not He, then who is it?
24 வையகம் கொடியோர் கையில் கொடுக்கப்படுகின்றது; அதன் நீதிபதிகளின் கண்களை அவர் கட்டுகின்றார். அவரேயன்றி வேறு யார் இதைச் செய்வார்?

25וְיָמַ֣י קַ֭לּוּ מִנִּי־רָ֑ץ בָּֽ֝רְח֗וּ לֹא־רָא֥וּ טוֹבָֽה׃

25 என் நாட்கள் அஞ்சற்காரர் ஓட்டத்திலும் தீவிரமாயிருக்கிறது; அவைகள் நன்மையைக் காணாமல் பறந்துபோம்.
25 My days are swifter than a runner; they flee without seeing good.
25 ஓடுபவரைவிட விரைந்து செல்கின்றன என் வாழ்நாள்கள்; அவை பறந்து செல்கின்றன; நன்மையொன்றும் அவை காண்பதில்லை.

26חָ֭לְפוּ עִם־אֳנִיּ֣וֹת אֵבֶ֑ה כְּ֝נֶ֗שֶׁר יָט֥וּשׂ עֲלֵי־אֹֽכֶל׃

26 அவைகள் வேகமாய் ஓடுகிற கப்பல்களைப்போலவும், இரையின்மேல் பாய்கிற கழுகைப்போலவும் கடந்துபோகிறது.
26 They sweep by like boats of papyrus, like an eagle swooping down on its prey.
26 நாணற் படகுபோல் அவை விரைந்தோடும்; இரைமேல் பாயும் ஒரு கழுகைப்போல் ஆகும்.

27אִם־אָ֭מְרִי אֶשְׁכְּחָ֣ה שִׂיחִ֑י אֶעֶזְבָ֖ה פָנַ֣י וְאַבְלִֽיגָה׃

27 என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, திடன்கொள்வேன் என்று சொன்னால்,
27 If I were to say, ‘I will forget my complaint and change my expression and smile,’
27 'நான் துயர் மறப்பேன்; முகமலர்ச்சி கொள்வேன்; d புன்முறுவல் பூப்பேன், எனப் புகல்வேனாயினும்,

28יָגֹ֥רְתִּי כָל־עַצְּבֹתָ֑י יָ֝דַ֗עְתִּי כִּי־לֹ֥א תְנַקֵּֽנִי׃

28 என் வருத்தங்களைப்பற்றி பயமாயிருக்கிறேன்; என்னைக் குற்றமில்லாதவனாக எண்ணமாட்டீர் என்று அறிவேன்.
28 I would still dread all my sufferings; I know that You will not acquit me.
28 என் இடுக்கண் கண்டு நடுக்கமுறுகின்றேன், ஏனெனில், அவர் என்னைக் குற்றமற்றவனாய்க் கொள்ளார் என அறிவேன்.

29אָנֹכִ֥י אֶרְשָׁ֑ע לָמָּה־זֶּ֝֗ה הֶ֣בֶל אִיגָֽע׃

29 நான் பொல்லாதவனாயிருந்தால் விருதாவாய்ப் போராடவேண்டியது என்ன?
29 Since I am already found guilty, why should I labor in vain?
29 நான்தான் குற்றவாளி எனில், வீணே ஏன் நான் போராடவேண்டும்?

30אִם־הִתְרָחַ֥צְתִּי במו־שָׁ֑לֶג וַ֝הֲזִכּ֗וֹתִי בְּבֹ֣ר כַּפָּי׃

30 நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி, என் கைகளைச் சவுக்காரத்தினால் சுத்தம்பண்ணினாலும்,
30 If I should wash myself with snowf and cleanse my hands with lye,
30 பனிநீரில் நான் என்னைக் கழுவினும், சவர்க்காரத்தினால் என் கைகளைத் தூய்மையாக்கினும்,

31אָ֭ז בַּשַּׁ֣חַת תִּטְבְּלֵ֑נִי וְ֝תִֽעֲב֗וּנִי שַׂלְמוֹתָֽי׃

31 நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர். அப்பொழுது என் வஸ்திரமே என்னை அருவருக்கும்.
31 then You would plunge me into the pit, and even my own clothes would despise me.
31 குழியில் என்னை அவர் அமிழ்த்திடுவார்; என் உடையே என்னை வெறுத்திடுமே!

32כִּי־לֹא־אִ֣ישׁ כָּמֹ֣נִי אֶֽעֱנֶ֑נּוּ נָב֥וֹא יַ֝חְדָּ֗ו בַּמִּשְׁפָּֽט׃

32 நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்லுகிறதற்கும், நாங்கள் கூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், அவர் என்னைப்போல மனுஷன் அல்லவே.
32 For He is not a man like me, that I can answer Him, that we can take each other to court.
32 ஏனெனில், அவரோடு நான் வழக்காடவும், வழக்கு மன்றத்தில் எதிர்க்கவும் என்னைப்போல் அவர் மனிதர் இல்லை.

33לֹ֣א יֵשׁ־בֵּינֵ֣ינוּ מוֹכִ֑יחַ יָשֵׁ֖ת יָד֣וֹ עַל־שְׁנֵֽינוּ׃

33 எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க மத்தியஸ்தன் எங்களுக்குள் இல்லையே.
33 Nor is there a mediator between us, to lay his hand upon us both.
33 இருவர்மீதும் தம் கையை வைக்க, ஒரு நடுவர்கூட எம் நடுவே இல்லையே.

34יָסֵ֣ר מֵעָלַ֣י שִׁבְט֑וֹ וְ֝אֵמָת֗וֹ אַֽל־תְּבַעֲתַֽנִּי׃

34 அவர் தமது மிலாற்றை என்னைவிட்டு அகற்றுவாராக; அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.
34 Let Him remove His rod from me, so that His terror will no longer frighten me.
34 அகற்றப்படுக அவர் கோல் என்னிடமிருந்து! அப்போது மிரட்டாது என்னை அவரைப்பற்றிய அச்சம்!

35אַֽ֭דַבְּרָה וְלֹ֣א אִירָאֶ֑נּוּ כִּ֥י לֹא־כֵ֥ן אָ֝נֹכִ֗י עִמָּדִֽי׃

35 அப்பொழுது நான் அவருக்கு பயப்படாமல் பேசுவேன்; இப்பொழுதோ அப்படிச் செய்ய இடமில்லை.
35 Then I would speak without fear of Him. But as it is, I am on my own.
35 அவரிடம் அச்சமின்றிப் பேசுவேன் அப்போது; அப்படிப் பேசும் நிலையில் நான் இல்லையே இப்போது.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Job Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42

Gen   Exo   Lev   Num   Deut   Josh   Judg   Ruth   1Sam   2Sam   1Kgs   2Kgs   1Chr   2Chr   Ezra   Neh   Esth   Job   Pslm   Prov
Ecc   Song   Isa   Jer   Lam   Eze   Dan   Hos   Joel   Amos   Obad   Jnh   Mic   Nah   Hab   Zeph   Hag   Zech   Mal

Footnotes:
3 a Or If God wished to contend with someone
7 b Or rise
12 c Or snatches someone in death
19 d See LXX; Hebrew me
20 e Or He would declare me guilty
30 f Or soap

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.