பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Leviticus லேவியராகமம் וַיִּקְרָא
லேவியராகமம் 16 | Leviticus 16
The Day of Atonement (Leviticus 23:26–32; Numbers 29:7–11)
1 ஆரோனின் இரண்டு குமாரர் கர்த்தருடைய சந்நிதியிலே சேர்ந்து மரித்துப்போனபின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி:
1 Now the LORD spoke to Moses after the death of two of Aaron’s sons when they approached the presence of the LORD.
1 ஆரோனின் புதல்வர் இருவர் ஆண்டவரது திருமுன்னிலையை நெருங்கியதால் சாவுக்குள்ளானபின், ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் சாகாதபடி, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாகச் சகல வேளையிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல்.
2 And the LORD said to Moses: “Tell your brother Aaron not to enter freely into the Most Holy Placea behind the veil in front of the mercy seatb on the ark, or else he will die, because I appear in the cloud above the mercy seat.
2 "ஆரோனிடம் நீ கூற வேண்டியது; அவன் சாகாது இருக்க வேண்டுமெனில், தூயகத்தில் தொங்குதிரைக்கு உள்ளே இருக்கும் இரக்கத்தின் இருக்கையின் மூடிக்கு முன்பாக, அவன் விரும்பும் போதெல்லாம் வரக்கூடாது; வந்தால் சாவுக்குள்ளாவான். ஏனெனில், இரக்கத்தின் இருக்கையின்மேல் மேகத்தில் நான் தோன்றுவேன்.1
1 எபி 6:19.
3 ஆரோன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கவேண்டிய விதமாவது: அவன் ஒரு காளையைப் பாவநிவாரணபலியாகவும், ஒரு ஆட்டுக்கடாவைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்திப் பிரவேசிக்கவேண்டும்.
3 This is how Aaron is to enter the Holy Place: with a young bull for a sin offering and a ram for a burnt offering.
3 ஒரு காளையைப் பாவம் போக்கும் பலியாகவும் ஓர் ஆட்டுக்கிடாயை எரிபலியாகவும் செலுத்தி ஆரோன் தூயகத்திற்குள் நுழையலாம்.2
2 எபி 9:7.
4 அவன் பரிசுத்தமான சணல்நூல் சட்டையைத் தரித்து, தன் அரைக்குச் சணல்நூல் ஜல்லடத்தைப்போட்டு, சணல்நூல் இடைக்கச்சையைக் கட்டி, சணல்நூல் பாகையைத் தரித்துக்கொண்டிருக்கவேண்டும்; அவைகள் பரிசுத்த வஸ்திரங்கள்; அவன் ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அவைகளைத் தரித்துக்கொண்டு,
4 He is to wear the sacred linen tunic, with linen undergarments. He must tie a linen sash around him and put on the linen turban. These are holy garments, and he must bathe himself with water before he wears them.
4 அவன் புனித நார்ப்பட்டு மேற்சட்டை அணியவேண்டும். நார்ப்பட்டாலான உள்ளாடை, கச்சை, தலைப்பாகை அணிய வேண்டும். இந்தப் புனித ஆடைகளை நீராடிய பின்னரே அவன் அணியலாம்.
5 இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்திலே, பாவநிவாரணபலியாக இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும், சர்வாங்க தகனபலியாக ஒரு ஆட்டுக்கடாவையும் வாங்கக்கடவன்.
5 And he shall take from the congregation of Israel two male goats for a sin offering and one ram for a burnt offering.
5 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு பாவம்போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக் கிடாய்கள் இரண்டையும் எரி பலிக்காக ஆட்டுக்கிடாய் ஒன்றையும் கொண்டுவர வேண்டும்.
6 பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு, தன்னுடைய பாவநிவாரணபலியின் காளையைச் சேரப்பண்ணி,
6 Aaron is to present the bull for his sin offering and make atonement for himself and his household.
6 ஆரோன், பாவம் போக்கும் பலிக்குரிய காளையைத் தனக்காகவும் தன் குடும்பத்தினருக்காகவும் பலியிட்டுப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான்.
7 அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி,
7 Then he shall take the two goats and present them before the LORD at the entrance to the Tent of Meeting.
7 வெள்ளாட்டுக் கிடாய்கள் இரண்டையும் சந்திப்புக் கூடார வாயிலில், ஆண்டவர் திருமுன் நிறுத்த வேண்டும்.
8 அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையுங்குறித்துக் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு,
8 After Aaron casts lots for the two goats, one for the LORD and the other for the scapegoat,c
8 ஆண்டவருக்கென ஒன்றும் போக்கு ஆடாக விடப்படுவதற்கென ஒன்றுமாக அந்தக் கிடாய்கள்மேல் சீட்டு இடப்படும்.
9 கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரப்பண்ணி,
9 he shall present the goat chosen by lot for the LORD and sacrifice it as a sin offering.
9 ஆண்டவருக்கெனச் சீட்டு விழுந்த ஆட்டுக்கிடாயைப் பாவம் போக்கும் பலியாகச் செலுத்த வேண்டும்.
10 போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை, அதைக்கொண்டு பாவநிவிர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்தரத்திலே போகவிடவும், கர்த்தருடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி;
10 But the goat chosen by lot as the scapegoat shall be presented alive before the LORD to make atonement by sending it into the wilderness as the scapegoat.
10 போக்கு ஆடாக விடப்படுவதற்கெனச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கிடாய், பாவக்கழுவாய்க்கெனப் பாலை நிலத்திற்கு அனுப்பப்படுமாறு, ஆண்டவர் திருமுன் உயிருடன் நிறுத்தி வைக்கப்படும்.
11 பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய பாவநிவாரணத்துக்கான காளையைக் கொண்டுவந்து, அதைக் கொன்று,
11 When Aaron presents the bull for his sin offering and makes atonement for himself and his household, he is to slaughter the bull for his own sin offering.
11 ஆரோன் பாவம்போக்கும் பலிக்குரிய காளையைத் தன் குடும்பத்தாருக்காகவும் பலியிட்டுப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான்.
12 கர்த்தருடைய சந்நிதியிலிருக்கும் பலிபீடத்தின்மேலுள்ள நெருப்புத்தணலினால் தூபகலசத்தை நிரப்பி, பொடியாக்கப்பட்ட சுகந்த தூபவர்க்கத்திலே தன் கைப்பிடிகள் நிறைய எடுத்து, திரைக்கு உட்புறமாகக் கொண்டு வந்து,
12 Then he must take a censer full of burning coals from the altar before the LORD, and two handfuls of finely ground fragrant incense, and take them inside the veil.
12 ஆரோன் கலசத்தை ஆண்டவர் திருமுன் இருக்கும் பலிபீடத்து நெருப்புத்தணலால் நிரப்பிக்கொண்டு, பொடியாக்கப்பட்ட நறுமணமிக்க சாம்பிராணியும் எடுத்துக் கொண்டு, தொங்குதிரைக்கு உள்ளே வருவான்.
13 தான் சாகாதபடிக்குத் தூபமேகமானது சாட்சிப்பெட்டியின்மேல் இருக்கும் கிருபாசனத்தை மூடத்தக்கதாக, கர்த்தருடைய சந்நிதியில் அக்கினியின்மேல் தூபவர்க்கத்தைப் போடக்கடவன்
13 He is to put the incense on the fire before the LORD, and the cloud of incense will cover the mercy seat above the Testimony,d so that he will not die.
13 அவன் சாகாதிருக்க, உடன்படிக்கைப் பேழையின்மேல் இருக்கும் இரக்கத்தின் இருக்கையைப் புனிதப்புகை மூடுமளவிற்கு ஆண்டவர் திருமுன் நெருப்பில் சாம்பிராணி போடுவான்.
14 பின்பு காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் கிருபாசனத்தின்மேல் தெளித்து, அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துக் கிருபாசனத்துக்கு முன்பாக, ஏழுதரம் தன் விரலினால் தெளிக்கக்கடவன்.
14 And he is to take some of the bull’s blood and sprinkle it with his finger on the east side of the mercy seat; then he shall sprinkle some of it with his finger seven times before the mercy seat.
14 மேலும், அவன் கீழே நின்று கொண்டு, காளையின் இரத்தத்தில் சிறிது எடுத்து இரக்கத்தின் இருக்கைமீது தன் விரலால் தெளிப்பான். மீண்டும் சிறிது எடுத்து இரக்கத்தின் இருக்கை முன்னர் ஏழுமுறை தெளிப்பான்.
15 பின்பு ஜனத்தினுடைய பாவநிவாரணபலியான வெள்ளாட்டுக்கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத் தெளித்ததுபோல, அதின் இரத்தத்தையும் கிருபாசனத்தின்மேலும் அதற்கு முன்பாகவும் தெளித்து,
15 Aaron shall then slaughter the goat for the sin offering for the people and bring its blood behind the veil, and with its blood he must do as he did with the bull’s blood: He is to sprinkle it against the mercy seat and in front of it.
15 மக்களின் பாவம்போக்கும் பலியான வெள்ளாட்டுக்கிடாயை அவன் அடித்து, அதன் இரத்தத்தைத் தொங்குதிரைக்கு உள்ளே கொண்டு செல்வான், காளையின் இரத்தத்தைக் தெளித்தது போலவே, இதனையும் இரக்கத்தின் இருக்கையின்மேலும், அதன் முன்னிலையிலும் தெளிப்பான்.3
3 எபி 9:12.
16 இஸ்ரவேல் புத்திரருடைய தீட்டுகளினிமித்தமும் அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக் கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன்.
16 So he shall make atonement for the Most Holy Place because of the impurities and rebellious acts of the Israelites in regard to all their sins. He is to do the same for the Tent of Meeting which abides among them, because it is surrounded by their impurities.
16 இஸ்ரயேல் மக்களின் தீட்டுகளை முன்னிட்டும் அவர்களின் பாவங்களால் விளைந்த குற்றங்களை முன்னிட்டும் தீட்டுப்பட்ட தூயகத்திற்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான்; அவர்களின் தூய்மையற்ற நிலைக்குள் அமைந்துள்ள சந்திப்புக் கூடாரத்துக்காகவும் அவன் அப்படியே செய்வான்.
17 பாவநிவிர்த்தி செய்யும்படி அவன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, வெளியே வருமளவும் ஆசரிப்புக் கூடாரத்தில் ஒருவரும் இருக்கலாகாது.
17 No one may be in the Tent of Meeting from the time Aaron goes in to make atonement in the Most Holy Place until he leaves, after he has made atonement for himself, his household, and the whole assembly of Israel.
17 அவன் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் சபை மக்கள் அனைவருக்காகவும் பாவக்கழுவாய் நிறைவேற்றும்படி தூயகத்திற்குள் சென்று, பாவக்கழுவாய் நிறைவேற்றிவிட்டு வெளியே வரும் வரை சந்திப்புக்கூடாரத்தில் எவரும் இருத்தல் கூடாது.
18 பின்பு அவன் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தண்டை வந்து, அதற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக்கடாவின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்துக் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி,
18 Then he shall go out to the altar that is before the LORD and make atonement for it. He is to take some of the bull’s blood and some of the goat’s blood and put it on all the horns of the altar.
18 அவன் ஆண்டவர் திருமுன் இருக்கிற பலிபீடத்திற்கு அருகில் வந்து அதற்குப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான். காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக் கிடாயின் இரத்தத்திலும் சிறிது எடுத்துப் பலிபீடக் கொம்புகளில் பூசுவான்.
19 தன் விரலினால் அந்த இரத்தத்தில் எடுத்து, ஏழுதரம் அதின்மேல் தெளித்து, அதை இஸ்ரவேல் புத்திரரின் தீட்டுகள் நீங்கச் சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தக்கடவன்
19 He is to sprinkle some of the blood on it with his finger seven times to cleanse it and consecrate it from the uncleanness of the Israelites.
19 தன் விரலினால் அந்த இரத்தத்தை எடுத்து, ஏழு முறை அதன் மேல் தெளித்து, இஸ்ரயேல் மக்களின் தீட்டுகள் நீங்க அர்ப்பணிப்பான்.
20 அவன் இப்படிப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ்செய்து தீர்த்தபின்பு, உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக்கடாவைச் சேரப்பண்ணி,
20 When Aaron has finished purifying the Most Holy Place, the Tent of Meeting, and the altar, he is to bring forward the live goat.
20 இவ்வாறு, அவன் தூயகத்திற்கும், சந்திப்புக் கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும் கழுவாய் நிறைவேற்றியபின், உயிரோடிருக்கிற ஆட்டுக்கிடாயைக் கொண்டுவருவான்.
21 அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள்வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிடக்கடவன்.
21 Then he is to lay both hands on the head of the live goat and confess over it all the iniquities and rebellious acts of the Israelites in regard to all their sins. He is to put them on the goat’s head and send it away into the wilderness by the hand of a man appointed for the task.
21 ஆரோன் இரு கைகளையும் உயிரோடிருக்கும் அந்தக் கிடாயின் மேல் வைத்து, இஸ்ரயேல் மக்களின் எல்லாக் குற்றங்களையும் தவறுகளையும் பாவங்களையும் அறிக்கையிட்டு அதன் தலைமேல் சுமத்தி, அதைப் பாலை நிலத்துக்குக் கொண்டு செல்ல நியமிக்கப்பட்ட ஆள் மூலம் அங்கு அனுப்பிவிடுவான்.
22 அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்துக்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்தரத்திலே போகவிடக்கடவன்.
22 The goat will carry on itself all their iniquities into a solitary place, and the man will release it into the wilderness.
22 அந்த வெள்ளாட்டுக் கிடாய் அவர்களின் பாவங்களைச் சுமந்துகொண்டு தனிமையான இடத்திற்குச் செல்லும்; அந்த ஆள் அதைப் பாலைநிலத்தில் விட்டுவிடுவான்.
23 ஆரோன் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் வந்து, தான் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போது, உடுத்தியிருந்த சணல்நூல் வஸ்திரங்களைக் களைந்து, அங்கே வைத்துவிட்டு,
23 Then Aaron is to enter the Tent of Meeting, take off the linen garments he put on before entering the Most Holy Place, and leave them there.
23 ஆரோன் சந்திப்புக் கூடாரத்திற்கு வந்து, தூயகத்தில் உடுத்தியிருந்த நார்ப்பட்டு ஆடைகளை அங்கே களைந்து வைத்துவிடுவான்.4
4 எசே 44:19.
24 பரிசுத்த இடத்திலே ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, தன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, வெளியே வந்து, தன் சர்வாங்க தகனபலியையும் ஜனங்களின் சர்வாங்க தகனபலியையும் இட்டு, தனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து,
24 He is to bathe himself with water in a holy place and put on his own clothes. Then he must go out and sacrifice his burnt offering and the people’s burnt offering to make atonement for himself and for the people.
24 பின்பு, அவன் தூய்மையான இடத்தில் குளித்துத் தன் ஆடைகளை அணிந்துகொண்டு தன் எரி பலியையும் மக்களின் எரிபலிகளையும் செலுத்தி, தனக்காகவும் மக்களுக்காகவும் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான்.
25 பாவநிவாரணபலியின் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்.
25 He is also to burn the fat of the sin offering on the altar.
25 பாவம் போக்கும் பலியின் கொழுப்பை அவன் பலிபீடத்தில் எரித்து விடுவான்.
26 போகவிடப்படும் போக்காடாகிய வெள்ளாட்டுக்கடாவைக் கொண்டுபோய் விட்டவன், தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்துக்குள் வருவானாக.
26 The man who released the goat as the scapegoat must wash his clothes and bathe himself with water; afterward he may reenter the camp.
26 போகவிட்ட போக்கு ஆடாகிய வெள்ளாட்டுக் கிடாயைக் கொண்டு போய் விட்டவன், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்த பின்னரே பாளையத்துக்குள் வருவான்.
27 பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்தஸ்தலத்துக்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும், பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவைகளின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் அக்கினியிலே சுட்டெரிக்கக்கடவர்கள்.
27 The bull for the sin offering and the goat for the sin offering, whose blood was brought into the Most Holy Place to make atonement, must be taken outside the camp; and their hides, flesh, and dung must be burned up.
27 தூயகத்திற்குள் பாவம் போக்குவதற்கென இரத்தம் எடுக்கப்பட்ட காளையும் கிடாயும், பாளையத்திற்கு வெளியே கொண்டுபோகப்படும்; அவற்றின் தோல், இறைச்சி, சாணம் ஆகியவை நெருப்பில் சுட்டெரிக்கப்படும்.5
5 எபி 13:11.
28 அவைகளைச் சுட்டெரித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்துக்குள் வருவானாக.
28 The one who burns them must wash his clothes and bathe himself with water, and afterward he may reenter the camp.
28 அவற்றை எரித்தவன் தன்உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்த பின்னரே பாளையத்திற்குள் வருவான்.
29 ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, சுதேசியானாலும் உங்களுக்குள் தங்கும் பரதேசியானாலும், தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவதுமன்றி, ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது.
29 This is to be a permanent statute for you: On the tenth day of the seventh month, you shall humble yourselvese and not do any work—whether the native or the foreigner who resides among you—
29 ஏழாம் மாதம் பத்தாம் நாள் குடிமக்களும் உங்களோடு வாழும் அன்னியரும் வேலை ஒன்றும் செய்யாமல் நோன்பிருக்க வேண்டும். இது உங்களுக்கு என்றுமுள் நியமம் ஆகும்.
30 கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்கும் பொருட்டு, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும்.
30 because on this day atonement will be made for you to cleanse you, and you will be clean from all your sins before the LORD.
30 அந்த நாளில் நீங்கள் தூய்மையாக்கப்படும்படி உங்களுக்கெனப் பாவக்கழுவாய் நிறைவேற்றப்படும்; ஆண்டவர் திருமுன் உங்கள் பாவங்களுக்காகக் கழுவாய் நிறைவேற்றப்பட, நீங்கள் தூய்மையடைவீர்கள்.
31 உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வுநாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப் படுத்தக்கடவீர்கள்; இது நித்திய கட்டளை.
31 It is a Sabbath of complete rest for you, that you may humble yourselves; it is a permanent statute.
31 அது உங்களுக்கு நோன்புநாள். அந்த நாள் நீங்கள் முழு ஓய்வெடுக்கும் 'ஓய்வு நாள்'. இது என்றுமுள நியமம் ஆகும்.
32 அபிஷேகம் பெற்றவனும், தன் தகப்பன் பட்டத்திற்கு வந்து ஆசாரிய ஊழியஞ்செய்யப் பிரதிஷ்டைபண்ணப்பட்டவனுமாகிய ஆசாரியனே பாவநிவிர்த்தி செய்யக்கடவன். அவன் பரிசுத்த வஸ்திரங்களாகிய சணல்நூல் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு,
32 The priest who is anointed and ordained to succeed his father as high priest shall make atonement. He will put on the sacred linen garments
32 அருள்பொழிவு செய்யப்பட்டு, தன் தந்தைக்குப் பின்னர் குருவாக நியமனம் பெற்றவனே பாவக்கழுவாய் நிறைவேற்றுவான். அவன் தூய உடைகளான நார்ப்பட்டு ஆடைகளை அணிந்து கொண்டு,
33 பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ்செய்து, ஆசாரியருக்காகவும் சபையின் சகல ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
33 and make atonement for the Most Holy Place,f the Tent of Meeting, and the altar, and for the priests and all the people of the assembly.
33 தூயகத்திற்காகவும், சந்திப்புக் கூடாரத்திற்காகவும் பாவக் கழுவாய் நிறைவேற்றுவான். குருக்களுக்காகவும், சபையின் எல்லா மக்களுக்காகவும் பாவக் கழுவாய் செய்வான்.
34 இப்படி வருஷத்தில் ஒருமுறை இஸ்ரவேல் புத்திரருக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது என்று சொல் என்றார். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான்.
34 This is to be a permanent statute for you, to make atonement once a year for the Israelites because of all their sins.” And all this was done as the LORD had commanded Moses.
34 ஆண்டுக்கு ஒரு முறை இஸ்ரயேல் மக்களுக்காகவும் அவர்களுடைய எல்லாப் பாவங்களுக்காகவும் கழுவாய் நிறைவேற்ற வேண்டும். இது என்றுமுள நியமம் ஆகும் என்று சொல்" என்றார். ஆண்டவர் இட்ட ஆணையின்படி மோசே செய்தார்.6
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
2 a Or the Holy Place ; also in verses 16, 17, 20, 23, and 27
2 b Or atonement cover ; here and throughout this chapter
8 c Literally the other to Azazel ; similarly twice in verse 10 and once in verse 26
13 d The Testimony refers to the stone tablets in the ark of the covenant inscribed with the Ten Commandments.
29 e Or afflict your souls or deny yourselves ; also in verse 31
33 f Or the Holy Sanctuary
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.