பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Leviticus லேவியராகமம் וַיִּקְרָא
லேவியராகமம் 9 | Leviticus 9
Aaron’s First Offerings
1 எட்டாம் நாளிலே மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் இஸ்ரவேலின் மூப்பரையும் அழைத்து,
1 On the eighth day Moses summoned Aaron and his sons and the elders of Israel.
1 மோசே எட்டாம் நாளில் ஆரோனையும் அவர் புதல்வரையும் இஸ்ரயேலின் பெரியோர்களையும் வரவழைத்தார்.
2 ஆரோனை நோக்கி: நீ பாவநிவாரணபலியாகப் பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், சர்வாங்க தகனபலியாகப் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் தெரிந்துகொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் பலியிடக்கடவாய்.
2 He said to Aaron, “Take for yourself a young bull for a sin offering and a ram for a burnt offering, both without blemish, and present them before the LORD.
2 அவர் ஆரோனிடம் கூறியது: "நீ பாவம் போக்கும் பலியாக ஊனமற்ற காளைக்கன்றையும் எரிபலியாக ஊனமற்ற ஓர் ஆட்டுக்கிடாயையும் தேர்ந்தெடுத்து ஆண்டவர் திருமுன் கொண்டு வா.
3 மேலும் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் பலியிடும்படிக்கு, நீங்கள் பாவநிவாரண பலியாகப் பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக் கடாவையும், சர்வாங்க தகனபலியாக ஒரு வயதான பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், ஒரு ஆட்டுக்குட்டியையும்,
3 Then speak to the Israelites and say, ‘Take a male goat for a sin offering, a calf and a lamb—both a year old and without blemish—for a burnt offering,
3 இஸ்ரயேல் மக்களுக்கு நீ சொல்ல வேண்டியது: ஆண்டவர் திருமுன் பாவக் கழுவாய்ப் பலிக்காக ஒருவயது நிரம்பிய மறுவற்ற காளைக்கன்று ஒன்றையும் செம்மறிக்கிடாய் ஒன்றையும்
4 சமாதானபலிகளாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், எண்ணெயிலே பிசைந்த போஜனபலியையும் கொண்டுவாருங்கள்; இன்று கர்த்தர் உங்களுக்குத் தரிசனமாவார் என்று சொல் என்றான்.
4 an ox and a ram for a peace offering to sacrifice before the LORD, and a grain offering mixed with oil. For today the LORD will appear to you.’”
4 நல்லுறவுப் பலிகளுக்காக ஒரு காளையையும் ஓர் ஆட்டுக் கிடாயையும் எண்ணெயோடு கூடிய உணவுப் படையல்களையும் கொண்டு வாருங்கள். ஏனெனில், இன்று ஆண்டவர் உங்களுக்குத் தோன்றுவார்."
5 மோசே கட்டளையிட்டவைகளை அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். சபையார் எல்லாரும் சேர்ந்து, கர்த்தருடைய சந்நிதியில் நின்றார்கள்.
5 So they took what Moses had commanded to the front of the Tent of Meeting, and the whole congregation drew near and stood before the LORD.
5 அவர்கள் மோசே கட்டளையிட்டவற்றைச் சந்திப்புக் கூடாரத்திற்கு முன்பாகக் கொண்டு வந்தார்கள். சபையார் அனைவரும் வந்து ஆண்டவர் முன்பாக நின்றனர்.
6 அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட இந்தக் காரியத்தைச் செய்யுங்கள்; கர்த்தருடைய மகிமை உங்களுக்குக் காணப்படும் என்றான்.
6 And Moses said, “This is what the LORD has commanded you to do, so that the glory of the LORD may appear to you.”
6 அப்பொழுது மோசே, "நீங்கள் செய்யுமாறு ஆண்டவர் கட்டளையிட்டது இதுவே; ஆண்டவரது மாட்சி உங்களுக்குத் தோன்றும்" என்றார்.
7 மோசே ஆரோனை நோக்கி: நீ பலிபீடத்தண்டையில் சேர்ந்து, கர்த்தர் கட்டளையிட்டபடியே, உன் பாவநிவாரண பலியையும் உன் சர்வாங்க தகனபலியையும் செலுத்தி, உனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, ஜனங்களுடைய பலியையும் செலுத்தி, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய் என்றான்.
7 Then Moses said to Aaron, “Approach the altar and sacrifice your sin offering and your burnt offering to make atonement for yourself and for the people. And sacrifice the people’s offering to make atonement for them, as the LORD has commanded.”
7 மோசே ஆரோனிடம், "நீ பலிபீடத்தருகில் வந்து உன் பாவம் போக்கும் பலியையும் எரிபலியையும் செலுத்தி, உனக்காகவும் மக்களுக்காகவும் கறை நீக்கம் செய்வாய். ஆண்டவர் கட்டளைப்படி அதற்காக மக்கள் செலுத்த வேண்டிய பலியையும் செலுத்தி அவர்களுக்காகக் கறை நீக்கம் செய்வாய்" என்றார்.1
1 எபி 7:27.
8 அப்பொழுது ஆரோன் பலிபீடத்தண்டையில் சேர்ந்து, தன் பாவநிவாரண பலியாகிய கன்றுக்குட்டியைக் கொன்றான்.
8 So Aaron approached the altar and slaughtered the calf as a sin offering for himself.
8 ஆரோன் பலிபீடத்தருகில் தமக்கென்று பாவக்கழுவாய்ப் பலியாகக் காளைக்கன்று ஒன்றை அடித்தார்.
9 ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் தன் விரலை அந்த இரத்தத்தில் தோய்த்து, பலிபீடத்தின் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி,
9 The sons of Aaron brought the blood to him, and he dipped his finger in the blood and applied it to the horns of the altar. And he poured out the rest of the blood at the base of the altar.
9 ஆரோனின் புதல்வர்கள் அதன் இரத்தத்தை அவரிடம் கொண்டு வர, அவர் தம் விரலை அதில் தோய்த்து பலிபீடத்தில் கொம்புகளில் பூசி, எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்திற்கு அடியில் ஊற்றினார்.
10 பாவநிவாரணபலியின் கொழுப்பையும், குண்டிக்காய்களையும், கல்லீரலில் எடுத்த ஜவ்வையும், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, பலிபீடத்தின்மேல் தகனித்து,
10 On the altar he burned the fat, the kidneys, and the lobe of the liver from the sin offering, as the LORD had commanded Moses.
10 பாவம் போக்கும் பலியின் கொழுப்பையும் சிறுநீரகங்களையும் கல்லீரலிலிருந்து எடுத்த சவ்வையும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே பலிபீடத்தின் மேல் சுட்டெரித்து,
11 மாம்சத்தையும் தோலையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரித்தான்.
11 But he burned up the flesh and the hide outside the camp.
11 இறைச்சியையும் தோலையும் பாளையத்திற்கு வெளியே நெருப்பிலிட்டு அழித்தார்.
12 பின்பு சர்வாங்க தகனபலியையும் கொன்றான்; ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனித்து,
12 Then Aaron slaughtered the burnt offering. His sons brought him the blood, and he sprinkled it on all sides of the altar.
12 பின்பு, அவர் எரிபலிக்கிடாயை அடித்தார். ஆரோனின் புதல்வர் அதன் இரத்தத்தை அவரிடம் கொண்டு வர, அவர் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தார்.
13 சர்வாங்க தகனபலியின் துண்டங்களையும் தலையையும் அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனித்து,
13 They brought him the burnt offering piece by piece, including the head, and he burned them on the altar.
13 எரி பலியின் துண்டங்களையும் தலையையும் அவரிடம் கொண்டு வந்தனர். அவர் அவைகளைப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்து,
14 குடல்களையும் தொடைகளையும் கழுவி, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியின்மேல் தகனித்தான்.
14 He washed the entrails and the legs and burned them atop the burnt offering on the altar.
14 குடல்களையும் தொடைகளையும் கழுவி, இவற்றைப் பலிபீடத்தின் மேல் இருக்கும் எரிபலியோடு சுட்டெரித்தார்.
15 பின்பு அவன் ஜனங்களின் பலியைக் கொண்டுவந்து, ஜனங்களின் பாவநிவிர்த்திக்குரிய வெள்ளாட்டுக்கடாவைக் கொன்று, முந்தினதைப் பலியிட்டதுபோல, அதைப்பாவநிவாரணபலியாக்கி,
15 Aaron then presented the people’s offering. He took the male goat for the people’s sin offering, slaughtered it, and offered it for sin like the first one.
15 பின்னர், அவர் மக்களுக்கான பலியை, பாவம் போக்கும் பலிக்கிடாயைக் கொண்டுவந்து அதைக்கொன்று, முன்னதைப்போலவே பாவம்போக்கும் பலியாகச் செலுத்தினார்.
16 சர்வாங்க தகனபலியையும் கொண்டுவந்து, நியமத்தின்படி, அதைப் பலியிட்டு,
16 He presented the burnt offering and offered it according to the ordinance.
16 பின்னர் அவர் எரிபலியைக் கொண்டு வந்து நியமத்தின்படியே செலுத்தினார்;
17 போஜனபலியையும் கொண்டுவந்து, அதில் கைநிறைய எடுத்து, அதைக் காலையில் செலுத்தும் சர்வாங்க தகனபலியுடனே பலிபீடத்தின்மேல் தகனித்தான்.
17 Next he presented the grain offering, took a handful of it, and burned it on the altar in addition to the morning’s burnt offering.
17 உணவுப் படையல்களைக் கொண்டுவந்து தம் கைநிறைய எடுத்து காலையில் செலுத்தும் எரிபலியோடு பலிபீடத்தின்மேல் சுட்டெரித்தார்.
18 பின்பு ஜனங்களின் சமாதானபலிகளாகிய காளையையும் ஆட்டுக்கடாவையும் கொன்றான்; ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
18 Then he slaughtered the ox and the ram as the people’s peace offering. His sons brought him the blood, and he sprinkled it on all sides of the altar.
18 பின்னர், மக்களின் நல்லுறவுப் பலிகளாகிய காளையையும் கிடாயையும் கொன்று, அவற்றின் இரத்தத்தை ஆரோனின் புதல்வர் அவரிடத்தில் கொண்டு வந்தனர். அவர் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தார்.2
2 லேவி 3:1-11.
19 காளையிலும் ஆட்டுக்கடாவிலும் எடுத்த கொழுப்பையும், வாலையும், குடல்களை மூடிய ஜவ்வையும், குண்டிக்காய்களையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும் கொண்டுவந்து,
19 They also brought the fat portions from the ox and the ram—the fat tail, the fat covering the entrails, the kidneys, and the lobe of the liver—
19 காளையிலும் கிடாயிலுமிருந்து எடுத்த கொழுப்பு வாலையும் குடல்களையும் சிறுநீரகங்களையும் கல்லீரலின் மேலிருந்த சவ்வையும் கொண்டு வந்து,
20 கொழுப்பை மார்க்கண்டங்களின்மேல் வைத்தார்கள்; அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனித்தான்.
20 and placed these on the breasts. Aaron burned the fat portions on the altar,
20 நெஞ்சுக் கறிகளின்மீது வைத்தார்கள். கொழுப்புப் பகுதிகளைப் பலிபீடத்தின்மேல் ஆரோன் சுட்டெரித்தார்.
21 மார்க்கண்டங்களையும் வலது முன்னந்தொடையையும், மோசே கட்டளையிட்டபடியே, ஆரோன் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான்.
21 but he waved the breasts and the right thigh as a wave offering before the LORD, as Moses had commanded.
21 நெஞ்சுக் கறியையும் வலதுமுன்னந்தொடையையும் மோசே நியமித்தபடி ஆரோன் ஆண்டவர் திருமுன் ஆரத்திப்பலியாக அசைத்தார்.
22 பின்பு ஆரோன் ஜனங்களுக்கு நேராகத் தன் கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்து, தான் பாவநிவாரணபலியையும், சர்வாங்க தகனபலியையும், சமாதானபலிகளையும் செலுத்தின இடத்திலிருந்து இறங்கினான்.
22 Aaron lifted up his hands toward the people and blessed them. And having made the sin offering, the burnt offering, and the peace offering, he stepped down.
22 பின்னர், ஆரோன் மக்களுக்கு நேராகத் தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார்; தாம் பாவம் போக்கும் பலியையும் எரிபலியையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்திய பின் கீழே இறங்கினார்.3
3 எண் 6:22-26.
23 பின்பு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசித்து, வெளியே வந்து, ஜனங்களை ஆசீர்வதித்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சகல ஜனங்களுக்கும் காணப்பட்டது.
23 Moses and Aaron then entered the Tent of Meeting. When they came out, they blessed the people, and the glory of the LORD appeared to all the people.
23 மோசேயும் ஆரோனும் சந்திப்புக் கூடாரத்தினுள் நுழைந்தனர்; பின்னர், வெளியே வந்து மக்களுக்கு ஆசி வழங்கினர். அப்போது ஆண்டவருடைய மாட்சி மக்கள் அனைவருக்கும் தோன்றியது.
24 அன்றியும் கர்த்தருடைய சந்நிதியிலிருந்து அக்கினி புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்துவிட்டது; ஜனங்களெல்லாரும் அதைக் கண்டபோது ஆரவாரித்து முகங்குப்புற விழுந்தார்கள்.
24 Fire came out from the presence of the LORD and consumed the burnt offering and the fat portions on the altar. And when all the people saw it, they shouted for joy and fell facedown.
24 ஆண்டவர் முன்னிலையிலிருந்து நெருப்பு புறப்பட்டு வந்து, பலிபீடத்தின் மேலிருந்த எரிபலியையும் கொழுப்பையும் விழுங்கியது. மக்கள் அதைக் கண்டு ஆரவாரம் செய்து முகங்குப்புற விழுந்தனர்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
4 a Or a bull or a cow ; also in verses 18 and 19
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.