பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Micah மீகா מִיכָה
மீகா 5 | Micah 5
A Ruler from Bethlehem (Matthew 2:1–12)
1 சேனைகளையுடைய நகரமே, இப்போது தண்டுதண்டாகக் கூடிக்கொள்; நமக்கு விரோதமாக முற்றிக்கை போடப்படும்; இஸ்ரவேலுடைய நியாயாதிபதியைக் கோலினால் கன்னத்திலே அடிப்பார்கள்.
1 அரண்சூழ் நகரில் வாழும் மக்களே! உங்கள் மதில்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளுங்கள்; உங்களுக்கு எதிராக முற்றுகையிடப்பட்டுள்ளது; இஸ்ரயேலின் ஆளுநன் கோலால் கன்னத்தில் அடி பெறுவான்.
1 Now, O daughter of troops, mobilize your troops; for a siege is laid against us! With a rod they will strike the cheek of the judge of Israel.
2 எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.
2 But you, Bethlehem Ephrathah, who are small among the clansa of Judah, out of you will come forth for Me One to be ruler over Israelb—One whose origins are of old, from the days of eternity.
2 நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழி மரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும்.1
3 ஆனாலும் பிரசவிக்கிறவள் பிரசவிக்கிறமட்டும் அவர்களை ஒப்புக்கொடுப்பார்; அப்பொழுது அவருடைய சகோதரரில் மீதியானவர்கள் இஸ்ரவேல் புத்திரரோடுங்கூடத் திரும்புவார்கள்.
3 Therefore Israel will be abandoned until she who is in labor has given birth; then the rest of His brothers will return to the children of Israel.
3 ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்; அதன் பின்னர் அவருடைய இனத்தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள்.
4 அவர் நின்றுகொண்டு, கர்த்தருடைய பலத்தோடும் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் மகத்துவத்தோடும் மேய்ப்பார்; ஆகையால் அவர்கள் நிலைத்திருப்பார்கள்; அவர் இனிப் பூமியின் எல்லைகள் பரியந்தமும் மகிமைப்படுவார்.
4 He will stand and shepherd His flock in the strength of the LORD, in the majestic name of the LORD His God. And they will dwell securely, for then His greatness will extend to the ends of the earth.
4 அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள்வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்;
5 இவரே சமாதான காரணர்; அசீரியன் நம்முடைய தேசத்திலே வரும்போதும், நம்முடைய அரண்மனைகளை மிதிக்கும்போதும், ஏழு மேய்ப்பரையும் மனுஷரில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவேன்.
5 And He will be our peacec when Assyria invades our land and tramples our citadels. We will raise against it seven shepherds, even eight leaders of men.
5 அவரே அமைதியை அருள்வார்.அசீரியர் நம் நாட்டிற்குள் படையெடுத்து வரும்போதும், நம் அரண்களை அழித்தொழிக்கும்போதும் அவர்களுக்கு எதிராக மேய்ப்பர் எழுவரையும் மக்கள் தலைவர் எண்மரையும் நாம் கிளர்ந்தெழச் செய்வோம்.
6 இவர்கள் அசீரியா தேசத்தையும், நிம்ரோதின் தேசத்தையும், அதினுடைய வாசல்களுக்கு உட்புறமாகப் பட்டயத்திற்கு இரையாக்குவார்கள்; அசீரியன் நம்முடைய தேசத்தில் வரும்போதும், நம்முடைய எல்லைகளை மிதிக்கும்போதும் அவனுக்கு நம்மைத் தப்புவிப்பார்.
6 And they will rule the land of Assyria with the sword, and the land of Nimrod with the blade drawn. So He will deliver us when Assyria invades our land and marches into our borders.
6 அவர்கள் அசீரியா நாடு முழுவதையும் நிம்ரோது நாட்டை அதன் நுழைவாயில்கள் வரையிலும் தங்கள் வாளுக்கு இரையாக்குவார்கள்; அசீரியர் நம் நாட்டிற்குள் படையெடுத்து வரும் போதும், நம் எல்லைகளைக் கடந்து வரும்போதும், நம்மை அவர்களிடமிருந்து விடுவிப்பார்கள்.2
2 தொநூ 10:8-11.
The Remnant of Jacob (Micah 2:12–13)
7 யாக்கோபிலே மீதியானவர்கள் கர்த்தராலே வருகிற பனியைப்போலவும், மனுஷனுக்குக் காத்திராமலும், மனுபுத்திரருக்குத் தாமதியாமலும், பூண்டுகள்மேல் வருகிற மழைகளைப்போலவும், அநேக ஜனங்களின் நடுவிலே இருப்பார்கள்.
7 Then the remnant of Jacob will be in the midst of many peoples like dew from the LORD, like showers on the grass, which do not wait for man or linger for mankind.
7 அப்போது யாக்கோபில் எஞ்சியிருப்போர் ஆண்டவரிடமிருந்து வரும் பனியைப் போலவும் மனிதருக்காகக் காத்திராமலும் மானிடர்க்காகத் தாமதிக்காமலும், புல்மேல் பெய்கின்ற மழைத்துளிகள் போலவும், பல மக்களினங்களிடையே இருப்பார்கள்.
8 யாக்கோபிலே மீதியானவர்கள், சிங்கம் காட்டுமிருகங்களுக்குள்ளே இருக்கிறதற்குச் சமானமாகவும் கடந்துபோய் மிதித்துத் தப்புவிப்பாரில்லாமல் பீறிப்போடுகிற பாலசிங்கம் ஆட்டுமந்தைகளுக்குள்ளே இருக்கிறதற்குச் சமானமாகவும் ஜாதிகளுக்குள் அநேக ஜனங்களின் நடுவிலே இருப்பார்கள்.
8 Then the remnant of Jacob will be among the nations, in the midst of many peoples, like a lion among the beasts of the forest, like a young lion among flocks of sheep, which tramples and tears as it passes through, with no one to rescue them.
8 மேலும், யாக்கோபிலே எஞ்சியிருப்போர் காட்டு விலங்குகளிடையே இருக்கும் சிங்கம் போலவும், ஆட்டு மந்தைக்குள் நுழைந்து யாரும் விடுவிக்க இயலாத நிலையில் அவற்றை மிதித்துத் துண்டு துண்டாய்க் கிழித்துப் போடும் சிங்கக் குட்டி போலவும், பல மக்களினங்களிடையே இருப்பார்கள்.
9 உன்னுடைய கை உன் விரோதிகளின்மேல் உயரும்; உன் சத்துருக்களெல்லாரும் சங்கரிக்கப்படுவார்கள்.
9 Your hand will be lifted over your foes, and all your enemies will be cut off.
9 உனது கை உன்னுடைய பகைவர்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; உன்னுடைய எதிரிகள் அனைவரும் அழிந்தொழிவார்கள்.
10 அந்நாளிலே நான் உன் குதிரைகளை உன் நடுவில் இராதபடிக்குச் சங்கரித்து, உன் இரதங்களை அழித்து,
10 “In that day,” declares the LORD, “I will remove your horses from among you and wreck your chariots.
10 அந்நாளில், "நான் உன்னிடமுள்ள உன் குதிரைகளை வெட்டி வீழ்த்துவேன்; உன் தேர்ப்படையை அழித்தொழிப்பேன்" என்கிறார் ஆண்டவர்.
11 உன் தேசத்துப் பட்டணங்களைச் சங்கரித்து, உன் அரண்களையெல்லாம் நிர்மூலமாக்கி,
11 I will remove the cities of your land and tear down all your strongholds.
11 "உன் நாட்டிலுள்ள நகர்களைத் தகர்த்தெறிவேன்; உன் அரண்கள் அனைத்தையும் தரைமட்டமாக்குவேன்.
12 சூனிய வித்தைகள் உன் கையில் இராதபடிக்கு அகற்றுவேன்; நாள் பார்க்கிறவர்கள் உன்னிடத்தில் இல்லாமற்போவார்கள்;
12 I will cut the sorceries from your hand, and you will have no fortune-tellers.
12 உன்னுடைய மாயவித்தைக்காரர்களை ஒழித்துக்கட்டுவேன்; குறிசொல்லுவோர் உன்னிடம் இல்லாதொழிவர்.
13 உன் சுரூபங்களையும் உன் சிலைகளையும் உன் நடுவில் இராதபடிக்கு நிர்மூலமாக்குவேன்; உன் கையின் கிரியையை நீ இனிப் பணிந்துகொள்ளாய்.
13 I will also cut off the carved images and sacred pillars from among you, so that you will no longer bow down to the work of your own hands.
13 நீ செய்து வைத்திருக்கும் சிலைகளையும் படிமங்களையும் உடைத்தெறிவேன்; உன் கைவினைப் பொருள்கள்முன் இனி நீ தலைவணங்கி நிற்கமாட்டாய்.
14 நான் உன் விக்கிரகத்தோப்புகளை உன் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கி, உன் பட்டணங்களை அழித்து,
14 I will root out the Asherah poles from your midst and demolish your cities.
14 நீ நிறுத்தியிருக்கும் கம்பங்களைப் பிடுங்கி எறிவேன்; உன் நகரங்களை அழித்தொழிப்பேன்.
15 செவிகொடாத புறஜாதிகளிடத்திலே கோபத்தோடும் உக்கிரத்தோடும் நீதியைச் சரிக்கட்டுவேன் என்றார்.
15 I will take vengeance in anger and wrath upon the nations that have not obeyed Me.”
15 எனக்குச் செவி கொடாத வேற்றினத்தார்மேல் சினத்துடனும் கடும் சீற்றத்துடனும் பழிதீர்த்துக் கொள்வேன்."
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
2 a Or thousands
2 b Cited in Matthew 2:6
5 c Or their peace
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.