பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு
மத் மாற் லூக் யோ அப் ரோ 1கொரி 2கொரி கலா எபே பிலி கொ 1தெ 2தெ 1தீ 2தீ தீத்து பிலெ எபி யா 1பே 2பே 1யோ 2யோ 3யோ யூதா வெளி
John யோவான் Ἰωάννην
யோவான் 7 | John 7
Jesus Teaches at the Feast
1 இவைகளுக்குப் பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினபடியால், அவர் யூதேயாவிலே சஞ்சரிக்க மனதில்லாமல் கலிலேயாவிலே சஞ்சரித்து வந்தார்.
1 After this, Jesus traveled throughout Galilee. He did not want to travel in Judea, because the Jews there were trying to kill Him.
1 இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழிதேடிக் கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை.
2 யூதருடைய கூடாரப்பண்டிகை சமீபமாயிருந்தது.
2 However, the Jewish Feast of Tabernaclesa was near.
2 யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது.1
1 லேவி 23:24; இச 16:13.
3 அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம்.
3 So Jesus’ brothers said to Him, “Leave here and go to Judea, so that Your disciples there may see the works You are doing.
3 இயேசுவின் சகோதரர்கள் அவரை நோக்கி, "நீர் இவ்விடத்தை விட்டு யூதேயா செல்லும். அப்போது உம் சீடர்கள் நீர் புரியும் செயல்களைக் காணமுடியும்.
4 பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள்.
4 For no one who wants to be known publicly acts in secret. Since You are doing these things, show Yourself to the world.”
4 ஏனெனில், பொது வாழ்வில் ஈடுபட விரும்பும் எவரும் மறைவாகச் செயல்புரிவதில்லை. நீர் இவற்றையெல்லாம் செய்வதால் உலகுக்கு உம்மை வெளிப்படுத்தலாமே!" என்றனர்.
5 அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள்.
5 For even His own brothers did not believe in Him.
5 ஏனெனில், அவருடைய சகோதரர்கள்கூட அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.
6 இயேசு அவர்களை நோக்கி: என்வேளை இன்னும் வரவில்லை, உங்கள் வேளையோ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது.
6 Therefore Jesus told them, “Although your time is always at hand, My time has not yet come.
6 இயேசு அவர்களிடம், "எனக்கு ஏற்ற நேரம் இன்னும் வரவில்லை; உங்களுக்கு எந்த நேரமும் ஏற்ற நேரம்தான்.
7 உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சிகொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது.
7 The world cannot hate you, but it hates Me, because I testify that its works are evil.
7 உலகு உங்களை வெறுக்க இயலாது; ஆனால், என்னை வெறுக்கிறது. ஏனெனில், உலகின் செயல்கள் தீயவை என்பதை நான் எடுத்துக்காட்டி வருகிறேன்.
8 நீங்கள் இந்தப் பண்டிகைக்குப் போங்கள்; என் வேளை இன்னும் வராதபடியால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார்.
8 Go up to the feast on your own. I am notb going up to this feast, because My time has not yet come.”
8 நீங்கள் திருவிழாவுக்குப் போங்கள்; நான் வரவில்லை. ஏனெனில், எனக்கு ஏற்ற நேரம் இன்னும் வரவில்லை" என்றார்.
9 இவைகளை அவர்களுடனே சொல்லி, பின்னுங் கலிலேயாவிலே தங்கினார்.
9 Having said this, Jesus remained in Galilee.
9 அவ்வாறு சொன்ன அவர் கலிலேயாவிலேயே தங்கிவிட்டார்.
10 அவருடைய சகோதரர் போனபின்பு, அவர் வெளியரங்கமாய்ப் போகாமல் அந்தரங்கமாய்ப் பண்டிகைக்குப் போனார்.
10 But after His brothers had gone up to the feast, He also went—not publicly, but in secret.
10 தம் சகோதரர்கள் திருவிழாவிற்குப் போனபின் இயேசுவும் சென்றார். ஆனால் ,அவர் வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார்.
11 பண்டிகையிலே யூதர்கள் அவரைத் தேடி: அவர் எங்கேயிருக்கிறார் என்றார்கள்.
11 So the Jews were looking for Him at the feast and asking, “Where is He?”
11 திருவிழாவின்போது, "அவர் எங்கே?" என்று யூதர்கள் இயேசுவைத் தேடினார்கள்.
12 ஜனங்களுக்குள்ளே அவரைக்குறித்து முறுமுறுப்புண்டாயிற்று சிலர்: அவர் நல்லவர் என்றார்கள். வேறுசிலர்: அப்படியல்ல, அவன் ஜனங்களை வஞ்சிக்கிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள்.
12 Many in the crowds were whispering about Him. Some said, “He is a good man.” But others replied, “No, He deceives the people.”
12 மக்கள் கூடியிருந்த இடங்களிலெல்லாம் இயேசுவைப்பற்றிக் காதோடு காதாய்ப் பலவாறு பேசிக் கொண்டனர். சிலர், "அவர் நல்லவர்" என்றனர். வேறு சிலர், "இல்லை, அவர் மக்கள் கூட்டத்தை ஏமாற்றுகிறார்" என்றனர்.
13 ஆனாலும் யூதருக்குப் பயந்திருந்ததினாலே, ஒருவனும் அவரைக் குறித்துத் தாராளமாய்ப் பேசவில்லை.
13 Yet no one would speak publicly about Him for fear of the Jews.
13 ஆனால், யூதர்களுக்கு அஞ்சியதால் எவரும் அவரைப் பற்றி வெளிப்படையாகப் பேசவில்லை.
14 பாதிப் பண்டிகையானபோது, இயேசு தேவாலயத்துக்குப்போய், உபதேசம்பண்ணினார்.
14 About halfway through the feast, Jesus went up to the temple courtsc and began to teach.
14 பாதித் திருவிழா நேரத்தில் இயேசு கோவிலுக்குச் சென்று கற்பிக்கத் தொடங்கினார்.
15 அப்பொழுது யூதர்கள்: இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள்.
15 The Jews were amazed and asked, “How did this man attain such learning without having studied?”
15 "படிப்பற்ற இவருக்கு இத்துணை அறிவு எப்படி வந்தது?" என்று யூதர்கள் வியப்புற்றார்கள்.
16 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது.
16 “My teaching is not My own,” Jesus replied. “It comes from Him who sent Me.
16 இயேசு மறுமொழியாக, "நான் கொடுக்கும் போதனை என்னுடையது அல்ல; அது என்னை அனுப்பியவருடையது.
17 அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.
17 If anyone desires to do His will, he will know whether My teaching is from God or whether I speak on My own.
17 அவருடைய திருவுளத்தின்படி நடக்க விரும்புவோர் இப்போதனை கடவுளிடமிருந்து வருகிறதா? அல்லது அதனை நானாகக் கொடுக்கிறேனா என்பதை அறிந்து கொள்வர்.
18 சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுய மகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.
18 He who speaks on his own authority seeks his own glory, but He who seeks the glory of the One who sent Him is a man of truth; in Him there is no falsehood.
18 தாமாகப் பேசுபவர் தமக்கே பெருமை தேடிக்கொள்கிறார். தம்மை அனுப்பியவருடைய பெருமையைத் தேடுபவர் உண்மையுள்ளவர்; அவரிடத்தில் பொய்ம்மை இல்லை.
19 மோசே நியாயப்பிரமாணத்தை உங்களுக்குக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் அந்த நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறதில்லை; நீங்கள் ஏன் என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள் என்றார்.
19 Has not Moses given you the law? Yet not one of you keeps it. Why are you trying to kill Me?”
19 "மோசே உங்களுக்குத் திருச்சட்டத்தைக் கொடுத்தார் அல்லவா? எனினும் உங்களுள் யாரும் அச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை. இப்போது என்னையும் கொல்லப்பார்க்கிறீர்களே!" என்றார்.
20 ஜனங்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நீ பிசாசுபிடித்தவன்; உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள்.
20 “You have a demon,” the crowd replied. “Who is trying to kill You?”
20 மக்கள் மறுமொழியாக, "யார் உன்னைக் கொல்லப் பார்க்கிறார்? உனக்குப் பேய் பிடித்திருக்கிறது" என்றனர்.
21 இயேசு அவர்களை நோக்கி ஒரே கிரியையைச் செய்தேன், அதைக்குறித்து எல்லாரும் ஆச்சரியப்படுகிறீர்கள்.
21 Jesus answered them, “I did one miracle, and you are all amazed.
21 இயேசு அவர்களைப் பார்த்து, "ஓய்வுநாளில் நான் செய்த ஒரே ஒரு செயலைப் பற்றி நீங்கள் அனைவரும் வியப்புறுகிறீர்கள்.
22 விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், பிதாக்களால் உண்டாயிற்று; பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்; நீங்கள் ஓய்வுநாளிலும் மனுஷனை விருத்தசேதனம்பண்ணுகிறீர்கள்.
22 But because Moses gave you circumcision, you circumcise a boy on the Sabbath (not that it is from Moses, but from the patriarchs.)
22 மோசே கொடுத்த விருத்தசேதனச் சட்டப்படி, நீங்களே ஓய்வுநாளில் விருத்தசேதனம் செய்கிறீர்கள்! — உண்மையில் விருத்தசேதனம் மோசேயிடமிருந்து வந்தது அல்ல; அது நம் மூதாதையர் காலத்திலிருந்தே உள்ளது —2
2 லேவி 12:3; தொநூ 17:10; திப 7:8.
23 மோசேயின் நியாயப்பிரமாணம் மீறப்படாதபடிக்கு ஓய்வுநாளில் மனுஷன் விருத்தசேதனம் பெறலாமென்றால், நான் ஓய்வுநாளில் ஒரு மனுஷனை முழுவதும் சுகமாக்கினதினாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா?
23 If a boy can be circumcised on the Sabbath so that the law of Moses will not be broken, why are you angry with Me for making the whole man well on the Sabbath?
23 ஒருவர் ஓய்வு நாளில் விருத்தசேதனம் செய்தாலும் ஓய்வு நாள் சட்டம் மீறப்படுவதில்லையானால், அதே ஓய்வுநாளில் நான் முழு மனிதனையும் நலமாக்கியதற்காக நீங்கள் சினம் கொள்வதேன்?3
24 தோற்றத்தின்படி தீர்ப்பு செய்யாமல், நீதியின்படி தீர்ப்புசெய்யுங்கள் என்றார்.
24 Stop judging by outward appearances, and start judging justly.”
24 வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பளியாதீர்கள். நீதியோடு தீர்ப்பளியுங்கள்" என்றார்.4
4 செக் 7:9.
Is Jesus the Christ?
25 அப்பொழுது எருசலேம் நகரத்தாரில் சிலர் இவனையல்லவா கொலைசெய்யத்தேடுகிறார்கள்?
25 Then some of the people of Jerusalem began to say, “Isn’t this the man they are trying to kill?
25 எருசலேம் நகரத்தவர் சிலர், "இவரைத்தானே கொல்லத் தேடுகிறார்கள்?
26 இதோ இவன் தாராளமாய்ப் பேசுகிறானே, ஒருவரும் இவனுக்கு ஒன்றும் சொல்லுகிறதில்லையே, மெய்யாய் இவன் கிறிஸ்துதான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்திருக்கிறார்களோ?
26 Yet here He is, speaking publicly, and they are not saying anything to Him. Have the rulers truly recognized that this is the Christ?
26 இதோ! இங்கே இவர் வெளிப்படையாய்ப் பேசிக்கொண்டிருக்கிறாரே! யாரும் இவரிடம் எதுவும் சொல்லவில்லையே! ஒருவேளை இவரே மெசியா என்று தலைவர்கள் உண்மையாகவே உணர்ந்துகொண்டார்களோ?
27 இவன் இன்ன இடத்திலிருந்து வந்தவனென்று நாம் அறிந்திருக்கிறோம்; கிறிஸ்து வரும்போதோ, அவர் இன்ன இடத்திலிருந்து வருகிறவரென்று ஒருவனும் அறியமாட்டானே என்றார்கள்.
27 But we know where this man is from. When the Christ comes, no one will know where He is from.”
27 ஆனால், மெசியா எங்கிருந்து வருவார் என்பது யாருக்கும் தெரியாமல் அல்லவா இருக்கும்! இவர் எங்கிருந்து வருகிறார் என்பது நமக்குத் தெரியுமே" என்று பேசிக் கொண்டனர்.5
5 எபி 7:3.
28 அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என்சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர். அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்.
28 Then Jesus, still teaching in the temple courts, cried out, “You know Me, and you know where I am from. I have not come of My own accord, but He who sent Me is true. You do not know Him,
28 ஆகவே, கோவிலில் கற்பித்துக் கொண்டிருந்தபோது இயேசு உரத்த குரலில், "நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன் என்பவை உங்களுக்குத் தெரியும். ஆயினும், நானாக வரவில்லை. என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத் தெரியாது.
29 நான் அவரால் வந்திருக்கிறபடியினாலும், அவர் என்னை அனுப்பியிருக்கிறபடியினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார்.
29 but I know Him, because I am from Him and He sent Me.”
29 எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே" என்றார்.
30 அப்பொழுது அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை.
30 So they tried to seize Him, but no one laid a hand on Him, because His hour had not yet come.
30 இதைக் கேட்ட அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும், அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை.
31 ஜனங்களில் அநேகர் அவரை விசுவாசித்து கிறிஸ்து வரும்போது, இவர் செய்கிற அற்புதங்களைப்பார்க்கிலும் அதிகம் செய்வாரோ என்றார்கள்.
31 Many in the crowd, however, believed in Him and said, “When the Christ comes, will He perform more signs than this man?”
31 கூட்டத்திலிருந்த பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். அவர்கள், "மெசியா வரும்போது இவர் செய்வதைவிடவா மிகுதியான அரும் அடையாளங்களைச் செய்யப் போகிறார்?" என்று பேசிக்கொண்டார்கள்.
32 ஜனங்கள் அவரைக் குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டுவரும்படிக்குப் பரிசேயரும் பிரதான ஆசாரியரும் சேவகரை அனுப்பினார்கள்.
32 When the Pharisees heard the crowd whispering these things about Jesus, they and the chief priests sent officers to arrest Him.
32 இயேசுவைப்பற்றி மக்கள் இவ்வாறெல்லாம் காதோடு காதாய்ப் பேசுவதைப் பரிசேயர் கேள்விப்பட்டனர். எனவே, அவர்களும் தலைமைக் குருக்களும் அவரைப் பிடித்து வரும்படி காவலர்களை அனுப்பினார்கள்.
33 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: இன்னுங் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருந்து, பின்பு என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன்.
33 So Jesus said, “I am with you only a little while longer, and then I am going to the One who sent Me.
33 எனவே இயேசு, "இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன்; பின்னர் என்னை அனுப்பியவரிடம் செல்வேன்.
34 நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள்; நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரவுங்கூடாது என்றார்.
34 You will look for Me, but you will not find Me; and where I am, you cannot come.”
34 நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனால், காணமாட்டீர்கள். நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வரவும் இயலாது" என்றார்.6
35 அப்பொழுது யூதர்கள்: இவரை நாம் காணாதபடிக்கு எங்கே போவார், கிரேக்கருக்குள்ளே சிதறியிருக்கிறவர்களிடத்திற்குப் போய், கிரேக்கருக்கு உபதேசம்பண்ணுவாரோ?
35 At this, the Jews said to one another, “Where does He intend to go that we will not find Him? Will He go where the Jews are dispersed among the Greeks,d and teach the Greeks?
35 இதை கேட்ட யூதர்கள், "நாம் காணமுடியாதவாறு இவர் எங்கே செல்லப்போகிறார்? ஒரு வேளை கிரேக்கரிடையே சிதறி வாழ்வோரிடம் சென்று கிரேக்கருக்கு கற்றுக்கொடுக்கப் போகிறாரோ?
36 நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள் என்றும், நான் இருக்கும் இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்றும், இவர் சொன்ன வார்த்தையின் கருத்து என்னவென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
36 What does He mean by saying, ‘You will look for Me, but you will not find Me,’ and, ‘Where I am, you cannot come’?”
36 'நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனால், காணமாட்டீர்கள். நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வரவும் இயலாது' என்றாரே! இதன் பொருள் என்ன?" என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
Living Water
37 பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.
37 On the last and greatest day of the feast, Jesus stood up and called out in a loud voice, “If anyone is thirsty, let him come to Me and drink.
37 திருவிழாவின் இறுதியான பெருநாளில் இயேசு எழுந்து நின்று உரத்த குரலில், "யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும்.
38 வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
38 Whoever believes in Me, as the Scripture has said: ‘Streams of living water will flow from within him.’”
38 மறைநூல் கூறுவது போல் அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்" என்றார்.7
7 நீமொ 18:4; எசா 55:1,3.
39 தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச்சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை.
39 He was speaking about the Spirit, whom those who believed in Him were later to receive. For the Spirit had not yet been given,e because Jesus had not yet been glorified.
39 தம்மிடம் நம்பிக்கை கொண்டிருப்போர் பெறப்போகும் தூய ஆவியைக்குறித்தே அவர் இவ்வாறு சொன்னார். தூய ஆவி இன்னும் அருளப்படவில்லை. ஏனெனில், இயேசு மாட்சிப்படுத்தப்படவில்லை.
Division over Jesus
40 ஜனங்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள்.
40 On hearing these words, some of the people said, “This is truly the Prophet.”
40 கூட்டத்தில் சிலர் இவ்வார்த்தைகளைக் கேட்டு, "வரவேண்டிய இறைவாக்கினர் உண்மையில் இவரே" என்றனர்.
41 வேறுசிலர்: இவர் கிறிஸ்து என்றார்கள். வேறுசிலர்: கிறிஸ்து கலிலேயாவிவிருந்தா வருவார்?
41 Others declared, “This is the Christ.” But still others asked, “How can the Christ come from Galilee?
41 வேறு சிலர், "மெசியா இவரே" என்றனர். மற்றும் சிலர், "கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்?
42 தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள்.
42 Doesn’t the Scripture say that the Christ will come from the line of David and from Bethlehem, the village where David lived?”f
42 தாவீதின் மரபிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகிறது?" என்றனர்.8
8 மீக் 5:2.
43 இவ்விதமாக அவரைக்குறித்து ஜனங்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று.
43 So there was division in the crowd because of Jesus.
43 இப்படி அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது.
44 அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க மனதாயிருந்தார்கள்; ஆகிலும் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை.
44 Some of them wanted to seize Him, but no one laid a hand on Him.
44 சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால், யாரும் அவரைத் தொடவில்லை.
The Unbelief of the Jewish Leaders
45 பின்பு அந்தச் சேவகர் பிரதான ஆசாரியரிடத்திற்கும் பரிசேயரிடத்திற்கும் திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களை நோக்கி: நீங்கள் அவனை ஏன் கொண்டுவரவில்லை என்று கேட்டார்கள்.
45 Then the officers returned to the chief priests and Pharisees, who asked them, “Why didn’t you bring Him in?”
45 தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள் அவர்களிடம் திரும்பி வந்தார்கள். அவர்கள் காவலர்களிடம், "ஏன் அவனைப் பிடித்துக்கொண்டு வரவில்லை?" என்று கேட்டார்கள்.
46 சேவகர் பிரதியுத்தரமாக: அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள்.
46 “Never has anyone spoken like this man!” the officers answered.
46 காவலர் மறுமொழியாக, "அவரைப் போல எவரும் என்றுமே பேசியதில்லை" என்றனர்.
47 அப்பொழுது பரிசேயர் நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா?
47 “Have you also been deceived?” replied the Pharisees.
47 பரிசேயர் அவர்களைப் பார்த்து, "நீங்களும் ஏமாந்து போனீர்களோ?
48 அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டா?
48 “Have any of the rulers or Pharisees believed in Him?
48 தலைவர்களிலாவது பரிசேயர்களிலாவது அவனை நம்புவோர் யாராவது உண்டா?
49 வேதத்தை அறியாதவர்களாகியை இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்.
49 But this crowd that does not know the law, they are under a curse.”
49 இம்மக்கள் கூட்டத்துக்குத் திருச்சட்டம் தெரியாது. இவர்கள் சபிக்கப்பட்டவர்கள்" என்றனர்.
50 இராத்திரியிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களிலொருவனுமாகிய நிக்கொதேமு என்பவன் அவர்களை நோக்கி:
50 Nicodemus, who had gone to Jesus earlier and who himself was one of them, asked,
50 அங்கிருந்த பரிசேயருள் ஒருவர் நிக்கதேம். அவரே முன்பு ஒரு நாள் இயேசுவிடம் வந்தவர். அவர் அவர்களிடம்,9
51 ஒரு மனுஷன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனை ஆக்கினைக்குட்படுத்தலாமென்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான்.
51 “Does our law convict a man without first hearing from him to determine what he has done?”
51 "ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?" என்று கேட்டார்.10
10 இச 17:4.
52 அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்துபாரும் என்றார்கள்.
52 “Aren’t you also from Galilee?” they replied. “Look into it, and you will see that no prophet comes out of Galilee.”g
52 அவர்கள் மறுமொழியாக, "நீரும் கலிலேயரா என்ன? மறைநூலைத் துருவி ஆய்ந்து பாரும். அப்போது கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை என்பதை அறிந்துகொள்வீர்" என்றார்கள்.
53 பின்பு அவரவர் தங்கள் தங்கள் வீட்டுக்குப் போனார்கள்.
53 Then each went to his own home.
53 11[அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்.]
11 :11 - அடைப்புக்குறிக்குள் உள்ள இவ்வசனங்கள் பல முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படவில்லை.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
2 a That is, Sukkot, the autumn feast of pilgrimage to Jerusalem; also translated as the Feast of Booths or the Feast of Shelters and originally called the Feast of Ingathering (see Exodus 23:16 and Exodus 34:22).
8 b NE, WH, BYZ, and TR I am not yet
14 c Literally the temple ; also in verse 28
35 d Literally Will He go to the Diaspora among the Greeks ; the Jewish people living outside the land of Israel since the Babylonian exile were referred to as the Diaspora .
39 e Literally the Spirit was not yet ; BYZ and TR the Holy Spirit was not yet
42 f See Micah 5:2.
52 g Some early manuscripts do not include John 7:53 through John 8:11.
Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.