பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Numbers எண்ணாகமம் בְּמִדְבַּר
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36
எண்ணாகமம் 24 | Numbers 24
Balaam’s Third Oracle
1 இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்று பிலேயாம் கண்ட போது, அவன் முந்திச் செய்துவந்தது போல நிமித்தம்பார்க்கப் போகாமல், வனாந்தரத்திற்கு நேராக தன் முகத்தைத் திருப்பி,
1 And when Balaam saw that it pleased the LORD to bless Israel, he did not resort to sorcery as on previous occasions, but he turned his face toward the wilderness.
1 இஸ்ரயேலுக்கு ஆசி கூறுவதே ஆண்டவருக்கு விருப்பம் என்று பிலயாம் கண்டபோது, முன்பு செய்தது போன்று அவர் சகுனம் பார்க்கச் செல்லாமல், தம் முகத்தைப் பாலைநிலத்துக்கு நேரே திருப்பினார்.
2 தன் கண்களை ஏறெடுத்து, இஸ்ரவேல் தன் கோத்திரங்களின்படியே பாளயமிறங்கியிருக்கிறதைப் பார்த்தான்; தேவ ஆவி அவன்மேல் வந்தது.
2 When Balaam looked up and saw Israel encamped tribe by tribe, the Spirit of God came upon him,
2 பிலயாம் ஏறிட்டுப் பார்க்கவே குலம் குலமாகப் பாளையமிறங்கிய இஸ்ரயேலைக் கண்டார். அப்போது கடவுளின் ஆவி அவர் மேல் இறங்கியது.
3 அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
3 and he lifted up an oracle, saying: “This is the prophecy of Balaam son of Beor, the prophecy of a man whose eyes are open,
3 அவர் திருஉரையாகக் கூறியது: "பெகோர் புதல்வன் பிலயாமின் திருமொழி! கண் திறக்கப்பட்டவனின் திருமொழி!
4 தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழ விழும் போது, கண்திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது,
4 the prophecy of one who hears the words of God, who sees a vision from the Almighty,a who bows down with eyes wide open:
4 கடவுளின் வார்த்தைகளைக் கேட்கிறவனின், பேராற்றல் வாய்ந்தவரின் காட்சியைக் கண்டு கீழே விழுந்தும் கண் மூடாதவனின் திருமொழி!
5 யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்!
5 How lovely are your tents, O Jacob, your dwellings, O Israel!
5 யாக்கோபே! உன் கூடாரங்களும் இஸ்ரயேலே! உன் இருப்பிடங்களும் எத்துணை அழகு வாய்ந்தவை!
6 அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப் போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும், கர்த்தர் நாட்டின சந்தனமரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங்களைப்போலவும் இருக்கிறது.
6 They spread out like palm groves,b like gardens beside a stream, like aloes the LORD has planted, like cedars beside the waters.
6 அவை விரிந்து கிடக்கும் பள்ளத்தாக்குகள் போன்றவை; ஆண்டவர் நட்ட அகில் மரங்கள் போன்றவை; நீர் அருகிலுள்ள கேதுரு மரங்கள் போன்றவை.
7 அவர்களுடைய நீர்ச்சால்களிலிருந்து தண்ணீர் பாயும்; அவர்கள் வித்து திரளான தண்ணீர்களில் பரவும்; அவர்களுடைய ராஜா ஆகாகைப் பார்க்கிலும் உயருவான்; அவர்கள் ராஜ்யம் மேன்மையடையும்.
7 Water will flow from his buckets, and his seed will have abundant water. His king will be greater than Agag, and his kingdom will be exalted.
7 அவனுடைய நீர்க்கால்களிலிருந்து தண்ணீர் ஓடும்; அவனது விதை நீர்த்திரளின்மேல் இருக்கும்; அவனுடைய அரசன் ஆகாகைவிடப் பெரியவன்; அவனது அரசு உயர்த்தப்படும்.
8 தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு; அவர்கள் தங்கள் சத்துருக்களாகிய ஜாதிகளைப் பட்சித்து, அவர்கள் எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்கள் அம்புகளாலே எய்வார்கள்.
8 God brought him out of Egypt with strength like a wild ox, to devour hostile nations and crush their bones, to pierce them with arrows.
8 கடவுள் அவனை எகிப்திலிருந்து கொண்டு வருகிறார்; காண்டா மிருகத்தின் கொம்புகள் அவனுக்குண்டு; அவன் தன் எதிரிகளாகிய வேற்று இனத்தவரை விழுங்கிவிடுவான்; அவர்கள் எலும்புகளைத் தூள் தூளாக நொறுக்குவான்; அவர்களைத் தன் அம்புகளால் ஊடுருவக் குத்துவான்;
9 சிங்கம்போலவும் துஷ்ட சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை எழுப்புகிறவன் யார்? உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்றான்.
9 He crouches, he lies down like a lion; like a lioness, who dares to rouse him? Blessed are those who bless you and cursed are those who curse you.”
9 அவன் துயில் கொண்டான்; சிங்கம் போன்றும் பெண் சிங்கம் போன்றும் படுத்துக்கொண்டான்; அவனை எழுப்பி விடுவோன் யார்? உனக்கு ஆசி கூறுவோன் ஆசி பெறுவான்; எனவே உன்னைச் சபிப்போன் சாபமடைவான்!"*
Balak Dismisses Balaam
10 அப்பொழுது பாலாக் பிலேயாமின் மேல் கோபம் மூண்டவனாகி, கையோடே கைதட்டி, பிலேயாமை நோக்கி: என் சத்துருக்களைச் சபிக்க உன்னை அழைத்தனுப்பினேன். நீயோ இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய்.
10 Then Balak’s anger burned against Balaam, and he struck his hands together and said to Balaam, “I summoned you to curse my enemies, but behold, you have persisted in blessing them these three times.
10 எனவே,பிலயாம் மீது பாலாக்கு கடும் சினம் கொண்டு தன் கைகளைத் தட்டி பிலயாமிடம், "என் எதிரிகளைச் சபிக்கவே நான் உம்மை அழைத்தேன்; ஆனால், நீர் இம்மூன்று முறையும் அவர்களுக்கு ஆசி கூறியுள்ளீர்;
11 ஆகையால் உன் இடத்துக்கு ஓடிப்போ; உன்னை மிகவும் கனம்பண்ணுவேன் என்றேன்; நீ கனமடையாதபடிக்குக் கர்த்தர் தடுத்தார் என்றான்.
11 Therefore, flee at once to your home! I said I would richly reward you, but instead the LORD has denied your reward.”
11 எனவே, உடனே உம் இடத்துக்கு ஓடிவிடும்; "உமக்கு உறுதியாக மரியாதை செய்வேன்" என்று சொல்லியிருந்தேன்; ஆண்டவரோ நீர் மரியாதை பெறாதபடி தடுத்துவிட்டார்" என்றான்.
12 அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: பாலாக் எனக்கு தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், நான் என் மனதாய் நன்மையாகிலும் தீமையாகிலும் செய்கிறதற்குக் கர்த்தரின் கட்டளையை மீறக் கூடாது; கர்த்தர் சொல்வதையே சொல்வேன் என்று,
12 Balaam answered Balak, “Did I not already tell the messengers you sent me
12 பிலயாம் பாலாக்குக்கு மறுமொழியாகக் கூறியது: "நீர் என்னிடம் அனுப்பிய உம் தூதரிடம் நான் சொல்லவில்லையா?
13 நீர் என்னிடத்திற்கு அனுப்பின ஸ்தானாபதிகளிடத்தில் நான் சொல்லவில்லையா?
13 that even if Balak were to give me his house full of silver and gold, I could not do anything of my own accord, good or bad, to go beyond the command of the LORD? I will speak whatever the LORD says.
13 பாலாக்கு வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும் ஆண்டவரின் வார்த்தையை மீறிச் சென்று என் விருப்பப்படி நன்மையோ தீமையோ செய்ய இயலாது; ஆண்டவர் பேசுவதையே நான் பேசுவேன் என்று சொல்லவில்லையா?"
14 இதோ, நான் என் ஜனத்தாரிடத்திற்குப் போகிறேன்; பிற்காலத்திலே இந்த ஜனங்கள் உம்முடைய ஜனங்களுக்குச் செய்வது இன்னதென்று உமக்குத் தெரிவிப்பேன் வாரும் என்று சொல்லி,
14 Now I am going back to my people, but come, let me warn you what this people will do to your people in the days to come.”
14 இப்போது நான் என் மக்களிடம் போகிறேன்; வாரும், பிற்காலத்தில் இம்மக்கள் உம் மக்களுக்கு என்ன செய்வார்கள் என்று உமக்குத் தெரிவிப்பேன்" என்றார்.
Balaam’s Fourth Oracle
15 அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரன் பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
15 Then Balaam lifted up an oracle, saying, “This is the prophecy of Balaam son of Beor, the prophecy of a man whose eyes are open,
15 அவர் திரு உரையாகக் கூறியது: "பெகோரின் புதல்வன் பிலயாமின் திருமொழி! கண் திறக்கப்பட்டவனின் திருமொழி!
16 தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதமானவர் அளித்த அறிவை அறிந்து, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழவிழும்போது, கண்திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது;
16 the prophecy of one who hears the words of God, who has knowledge from the Most High, who sees a vision from the Almighty, who bows down with eyes wide open:
16 கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதர் அளித்த அறிவைப் பெற்று பேராற்றலுடையவரின் காட்சி கண்டு கீழே வீழ்ந்தும் கண் மூடப்படாதவனின் திருமொழி!
17 அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்.
17 I see him, but not now; I behold him, but not near. A star will come forth from Jacob, and a scepter will arise from Israel. He will crush the skullsc of Moab and strike down all the sons of Sheth.
17 நான் அவரைக் காண்பேன்; ஆனால், இப்போதன்று; நான் அவரைப் பார்ப்பேன்; ஆனால் அண்மையிலன்று; யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்! இஸ்ரயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும்! அது மோவாபின் நெற்றிப் பிறையை நசுக்கும்; சேத்தின் புதல்வர் அனைவரையும் அழித்துவிடும்.
18 ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன் சத்துருக்களுக்குச் சுதந்தரமாகும்; இஸ்ரவேல் பராக்கிரமஞ்செய்யும்.
18 Edom will become a possession, as will Seir, his enemy; but Israel will perform with valor.
18 அவன் எதிரியான ஏதோம் பாழாகி விடும்; சேயிரும் கைப்பற்றப்படும்; இஸ்ரயேலோ வலிமையுடன் செயல்படும்.
19 யாக்கோபிலிருந்து தோன்றும் ஒருவர் ஆளுகை செய்வார்; பட்டணங்களில் மீதியானவர்களை அழிப்பார் என்றான்.
19 A ruler will come from Jacob and destroy the survivors of the city.”
19 யாக்கோபு ஆளுகை செய்வான்; நகர்களில் எஞ்சியிருப்போர் அழிக்கப்படுவர்."
Balaam’s Final Three Oracles
20 மேலும், அவன் அமலேக்கைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: அமலேக்கு முந்தியெழும்பினவன்; ஆனாலும் அவன் முடிவிலே முற்றிலும் நாசமடைவான் என்றான்.
20 Then Balaam saw Amalek and lifted up an oracle, saying: “Amalek was first among the nations, but his end is destruction.”
20 பின் அவர் அமலேக்கைப் பார்த்துத் திருவுரையாகக் கூறியது: "வேற்றினங்களில் முதன்மை யானவன் அமலேக்கு; இறுதியில் அவன் அழிந்துபோவான்."
21 அன்றியும் அவன் கேனியனைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: உன் வாசஸ்தலம் அரணிப்பானது; உன் கூட்டைக் கன்மலையில் கட்டினாய்.
21 Next he saw the Kenites and lifted up an oracle, saying: “Your dwelling place is secure, and your nest is set in a cliff.
21 அடுத்துக் கேனியனை நோக்கித் திருவுரையாக் கூறியது: "உன் வாழ்விடம் உறுதியானது; உன் கூடு பாறையில் அமைந்துள்ளது;
22 ஆகிலும் கேனியன் அழிந்துபோவான்; அசூர் உன்னைச் சிறைபிடித்துக் கொண்டுபோக எத்தனைநாள் செல்லும் என்றான்.
22 Yet Kain will be destroyed when Asshurd takes you captive.”
22 ஆயினும், கேனியன் பாழாய்ப் போவான்; அசீரியர் உன்னைச் சிறைப் பிடித்துச் செல்ல எவ்வளவு காலந்தான் ஆகும்?"
23 பின்னும் அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: ஐயோ, தேவன் இதைச் செய்யும்போது யார் பிழைப்பான்;
23 Once more Balaam lifted up an oracle, saying: “Ah, who can live unless God has ordained it?
23 பின்னும் அவர் திருவுரையாகக் கூறியது: அந்தோ, கடவுள் இதனைச் செய்யும்போது எவன்தான் பிழைப்பான்?
24 சித்தீமின் கரைதுறையிலிருந்து கப்பல்கள் வந்து, அசூரைச் சிறுமைப் படுத்தி, ஏபேரையும் வருத்தப்படுத்தும்; அவனும் முற்றிலும் அழிந்துபோவான் என்றான்.
24 Ships will come from the coasts of Cyprus;e they will subdue Asshur and Eber, but they too will perish forever.”
24 கித்திம் தன் கப்பல்களால் அசீரியாவையும் ஏபேரையும் துன்புறுத்துவான்"
25 பின்பு பிலேயாம் எழுந்து புறப்பட்டு, தன் இடத்திற்குத் திரும்பினான்; பாலாகும் தன் வழியே போனான்.
25 Then Balaam arose and returned to his homeland, and Balak also went on his way.
25 பின்பு, பிலயாம் எழுந்து தம் இடத்துக்குத் திரும்பினார்; பாலாக்கும் தன்வழியே சென்றான்!
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
4 a Hebrew Shaddai ; also in verse 16
6 b Or like valleys
17 c SP foreheads ; Hebrew corners (of the head) ; LXX princes
22 d Or Assyria ; also in verse 24
24 e Hebrew Kittim
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.