பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Genesis ஆதியாகமம் בְּרֵאשִׁית
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
ஆதியாகமம் 49 | Genesis 49
Jacob Blesses His Sons
1 யாக்கோபு தன் குமாரரை அழைத்து: நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை அறிவிப்பேன்.
1 Then Jacob called for his sons and said, “Gather around so that I can tell you what will happen to you in the days to come:
1 யாக்கோபு தம் புதல்வர்களை வரவழைத்துக் கூறியது: என்னைச் சுற்றி நில்லுங்கள். வரவிருக்கும் நாள்களில் உங்களுக்கு நிகழவிருப்பதை நான் அறிவிக்கப் போகிறேன்.
2 யாக்கோபின் குமாரரே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள்.
2 Come together and listen, O sons of Jacob; listen to your father Israel.
2 கூடிவந்து உற்றுக்கேளுங்கள்; யாக்கோபின் புதல்வர்களே! உங்கள் தந்தையாகிய இஸ்ரயேலுக்குச் செவிகொடுங்கள்.
3 ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன்.
3 Reuben, you are my firstborn, my might, and the beginning of my strength, excelling in honor, excelling in power.
3 ரூபன்! நீயே என் தலைமகன்; என் ஆற்றல் நீயே; என் ஆண்மையின் முதற்கனி நீயே; மாண்பிலும் வலிமையிலும் முதன்மை பெற வேண்டியவனும் நீயே!
4 தண்ணீரைப்போலத் தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்; உன் தகப்பனுடைய மஞ்சத்தின்மேல் ஏறினாய்; நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்; என் படுக்கையின்மேல் ஏறினானே.
4 Uncontrolled as the waters, you will no longer excel, because you went up to your father’s bed, onto my couch, and defiled it.
4 ஆனால், நீரைப்போல் நிலையற்றவனாய், முதன்மையைப் பெறமாட்டாய் . ஏனெனில் உன் தந்தையின் மஞ்சத்தில் ஏறினாய்; ஆம், என் படுக்கையைத் தீட்டுப்படுத்தினாய்.
5 சிமியோனும், லேவியும் ஏக சகோதரர்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள்.
5 Simeon and Levi are brothers; their swords are weapons of violence.
5 சிமியோன், லேவி இருவரும் உண்மையில் உடன் பிறப்புகளே! அவர்களுடைய வாள்கள் வன்முறையின் கருவிகள்!
6 என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே: அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு புருஷனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை நிர்மூலமாக்கினார்களே.
6 May I never enter their council; may I never join their assembly. For they kill men in their anger, and hamstring oxen on a whim.
6 மனமே, அவர்களது மன்றத்தினுள் நுழையாதிரு! மாண்பே, அவர்களது அவையினுள் அமராதிரு! ஏனெனில் கோப வெறி கொண்டு அவர்கள் மனிதர்களைக் கொன்று குவித்தார்கள். வீம்புக்கென்று அவர்கள் எருதுகளை வெட்டி வதைத்தார்கள்.
7 உக்கிரமான அவர்கள் கோபமும் கொடுமையான அவர்கள் மூர்க்கமும் சபிக்கப்படக்கடவது; யாக்கோபிலே அவர்களைப் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும் பண்ணுவேன்.
7 Cursed be their anger, for it is strong, and their wrath, for it is cruel! I will disperse them in Jacob and scatter them in Israel.
7 அவர்களது கடுமையான சினம் சபிக்கப்படும். அவர்களது கொடுமையான கோபம் சபிக்கப்படும். அவர்களை யாக்கோபினின்று பிரிந்து போகச் செய்வேன். அவர்களை இஸ்ரயேலினின்று சிதறடிப்பேன்.
8 யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள்.
8 Judah, your brothers shall praise you. Your hand shall be on the necks of your enemies; your father’s sons shall bow down to you.
8 யூதா! உன் உடன்பிறந்தோர் உன்னைப் புகழ்வர். உன் கை உன் எதிரிகளின் கழுத்தில் இருக்கும். உன் தந்தையின் புதல்வர் உன்னை வணங்குவர்.
9 யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்துகொண்டு ஏறிப்போனாய்: என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான்: அவனை எழுப்புகிறவன் யார்?
9 Judah is a young lion—my son, you return from the prey. Like a lion he crouches and lies down; like a lioness, who dares to rouse him?
9 யூதா! நீ ஒரு சிங்கக்குட்டி, என் மகனே, இரை கவர்ந்து வந்துள்ளாய்! ஆண் சிங்கமென, பெண் சிங்கமென, அவன் கால் மடக்கிப் படுப்பான்; அவன் துயில் கலைக்கத் துணிந்தவன் எவன்?1
10 சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.
10 The scepter will not depart from Judah, nor the staff from between his feet,c until Shilohd comes and the allegiance of the nations is his.
10 அரசுரிமை உடையவர் வரும்வரையில் மக்களினங்கள் அவருக்குப் பணிந்திடும் வரையில், யூதாவைவிட்டுச் செங்கோல் நீங்காது; அவன் மரபை விட்டுக் கொற்றம் மறையாது.
11 அவன் தன் கழுதைக் குட்டியைத் திராட்சச்செடியிலும் தன் கோளிகைக் கழுதைகளின் குட்டியை நற்குல திராட்சைச் செடியிலும் கட்டுவான்; திராட்சரசத்திலே தன் வஸ்திரத்தையும், திராட்சப் பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் தோய்ப்பான்.
11 He ties his donkey to the vine, his colt to the choicest branch. He washes his garments in wine, his robes in the blood of grapes.
11 அவன் திராட்சைக் செடியில் தன் கழுதையையும், செழுமையான திராட்சைக் கொடியில் தன் கழுதைக் குட்டியையும் கட்டுவான். திராட்சை இரசத்தில் தன் உடையையும் திராட்சைச் சாற்றில் தன் மேலாடையையும் தோய்த்திடுவான்.
12 அவன் கண்கள் திராட்சரசத்தினால் சிவப்பாயும், அவன் பற்கள் பாலினால் வெண்மையாயும் இருக்கும்.
12 His eyes are darker than wine, and his teeth are whiter than milk.
12 அவன் கண்கள் திராட்சை இரசத்தினும் ஒளியுள்ளவை; அவன் பற்கள் பாலினும் வெண்மையானவை.
13 செபுலோன் கடல்துறை அருகே குடியிருப்பான்; அவன் கப்பல் துறைமுகமாய் இருப்பான்; அவன் எல்லை சீதோன் வரைக்கும் இருக்கும்.
13 Zebulun shall dwell by the seashore and become a harbor for ships; his border shall extend to Sidon.
13 செபுலோன், கடற்கரையில் வாழ்ந்திடுவான்; அவன் கப்பல் துறையில் இருந்திடுவான்; அவனது எல்லை சீதோன் வரை பரவியிருக்கும்.
14 இசக்கார் இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை.
14 Issachar is a strong donkey, lying down between the sheepfolds.e
14 இசக்கார், இரு பொதியின் நடுவே படுத்திருக்கும் வலிமைமிகு கழுதை போன்றவன்.
15 அவன், இளைப்பாறுதல் நல்லது என்றும் நாடு வசதியானது என்றும் கண்டு, சுமக்கிறதற்குத் தன் தோளைச் சாய்த்து, பகுதிகட்டுகிறவனானான்.
15 He saw that his resting place was good and that his land was pleasant, so he bent his shoulder to the burden and submitted to labor as a servant.
15 அவன் இளைப்பாறும் இடம் நல்லதென்றும் நாடு மிக வசதியானதென்றும் காண்பான்; எனவே சுமை தூக்கத் தோள் சாய்ப்பான். அடிமை வேலைக்கு இணங்கிடுவான்.
16 தாண் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாகி, தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பான்.
16 Dan shall provide justice for his peoplef as one of the tribes of Israel.
16 தாண், இஸ்ரயேலின் குலங்களில் ஒன்றாக, தன் மக்களுக்கு நீதி வழங்குவான்.
17 தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற சர்ப்பத்தைப் போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான்.
17 He will be a snake by the road, a viper in the path that bites the horse’s heels so that its rider tumbles backward.
17 தாண், வழியில் கிடக்கும் பாம்பு ஆவான்; அவன் பாதையில் தென்படும் நாகம் போல, குதிரைமேல் இருப்பவன் மல்லாந்து விழும்படி அதன் குதிங்காலைக் கடித்திடுவான்.
18 கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்குக் காத்திருக்கிறேன்.
18 I await Your salvation, O LORD.
18 ஆண்டவரே! உமது மீட்பிற்காகக் காத்திருக்கிறேன்.
19 காத் என்பவன்மேல் ராணுவக்கூட்டம் பாய்ந்துவிழும்; அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்துவிழுவான்.
19 Gad will be attacked by raiders, but he will attack their heels.
19 காத்து, கொள்ளைக் கூட்டத்தின் தாக்குதலுக்கு உள்ளாவான். அவனும் அவர்களைத் துரத்தித் தாக்கிடுவான்.
20 ஆசேருடைய ஆகாரம் கொழுமையாயிருக்கும்; ராஜாக்களுக்கு வேண்டிய ருசிவர்க்கங்களை அவன் தருவான்.
20 Asher’s food will be rich; he shall provide royal delicacies.
20 ஆசேரின் நிலம் ஊட்ட மிக்க உணவளிக்கும். மன்னனும் விரும்பும் உணவை அவன் அளித்திடுவான்.
21 நப்தலி விடுதலைபெற்ற பெண்மான்; இன்பமான வசனங்களை வசனிப்பான்.
21 Naphtali is a doe set free that bears beautiful fawns.h
21 நப்தலி, அழகிய மான்குட்டிகளை ஈனும் கட்டவிழ்ந்த பெண்மான் ஆவான்.
22 யோசேப்பு கனிதரும் செடி: அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி: அதின் கொடிகள் சுவரின்மேல் படரும்.
22 Joseph is a fruitful vine—a fruitful vine by a spring, whose branches scale the wall.i
22 யோசேப்பு, கனிதரும் கொடி ஆவான்; நீரூற்றருகில் மதில்மேல் படரும் கொடிபோல் கனி தருவான்.
23 வில்வீரர் அவனை மனமடிவாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள்.
23 The archers attacked him with bitterness; they aimed at him in hostility.
23 அவனுக்கு வில்லில் வல்லார் தொல்லை கொடுத்தார்; அவன்மீது அம்பெய்தார்; அவனிடம் பகை வளர்த்தார்.
24 ஆனாலும், அவனுடைய வில் உறுதியாய் நின்றது; அவன் புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கரங்களால் பலத்தன; இதினால் அவன் மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையும் ஆனான்.
24 Yet he steadied his bow, and his strong arms were tempered by the hands of the Mighty One of Jacob, in the name of the Shepherd, the Rock of Israel,
24 ஆனால், அவனது வில் உறுதியாய் நின்றது; அவனுடைய புயங்கள் துடிப்புடன் இயங்கின; ஏனெனில், யாக்கோபின் வலியவர் கைகொடுத்தார். இஸ்ரயேலின் பாறையே ஆயராய் இருந்தார்.
25 உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று, அவர் உனக்குத் துணையாயிருப்பார்: சர்வ வல்லவராலே அப்படியாயிற்று, அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார்.
25 by the God of your father who helps you, and by the Almightyj who blesses you, with blessings of the heavens above, with blessings of the depths below, with blessings of the breasts and womb.
25 உன் தந்தையின் இறைவனே உனக்குத் துணையிருப்பார்; எல்லாம் வல்லவரே உனக்கு ஆசி வழங்குவார்; மேலே வானத்தினின்று வரும் ஆசியாலும் கீழே ஆழத்தினின்று வரும் ஆசியாலும் கொங்கைகளுக்கும் கருப்பைகளுக்கும் உரிய ஆசியாலும் அவர் உனக்கு ஆசி வழங்குவார்.
26 உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள் என் பிதாக்களுடைய ஆசீர்வாதங்களுக்கு மேற்பட்டதாயிருந்து, நித்திய பர்வதங்களின் முடிவுமட்டும் எட்டுகின்றன; அவைகள் யோசேப்புடைய சிரசின்மேலும், தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக.
26 The blessings of your father have surpassed the blessings of the ancient mountainsk and the bounty of the everlasting hills. May they rest on the head of Joseph, on the brow of the prince of his brothers.
26 உன் தந்தையின் ஆசிகள், பழம் பெரும் மலைகளின் ஆசியிலும், என்றுமுள குன்றுகளின் வள்ளன்மையிலும், வலியவை; இவை அனைத்தும் யோசேப்பின் மீது இறங்கிடுக! தன் சகோதரரின் இளவரசனாய்த் திகழ்வோனின் நெற்றியில் அவை துலங்கிடுக!
27 பென்யமீன் பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையைப் பட்சிப்பான், மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான் என்றான்.
27 Benjamin is a ravenous wolf; in the morning he devours the prey, in the evening he divides the plunder.”
27 பென்யமின், பீறிக்கிழிக்கும் ஓநாய்க்கு ஒப்பானவன்; காலையில் வேட்டையாடிய இரையை அவன் விழுங்குவான்; மாலையில், கொள்ளைப் பொருளைப் பங்கிட்டுக் கொள்வான்".
28 இவர்கள் எல்லாரும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்; அவர்களுடைய தகப்பன் அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களுக்குச் சொன்னது இதுதான்; அவனவனுக்குரிய ஆசீர்வாதம் சொல்லி அவனவனை ஆசீர்வதித்தான்.
28 These are the tribes of Israel, twelve in all, and this was what their father said to them. He blessed them, and he blessed each one with a suitable blessing.
28 இவர்கள் அனைவரும் இஸ்ரயேலின் பன்னிரு குலத்தார் ஆவர். இவற்றை மொழிந்து இவர்களின் தந்தை இவர்கள் ஒவ்வொருவருக்கும் உரிய ஆசியை அளித்து வாழ்த்துரை வழங்கினார்.
The Death of Jacob
29 பின்னும் அவன் அவர்களை நோக்கி: நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப்படப்போகிறேன்; ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டு;
29 Then Jacob instructed them, “I am about to be gathered to my people. Bury me with my fathers in the cave in the field of Ephron the Hittite.
29 மேலும், அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: "இதோ நான் என் இனத்தவரோடு சேர்க்கப்படவிருக்கிறேன். என்னை என் தந்தையருடன் இத்தியனான எப்ரோனின் நிலத்திலுள்ள குகையில் அடக்கம் செய்யுங்கள்.
30 அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா என்னப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாயிருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனாகிய எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார்.
30 The cave is in the field of Machpelah near Mamre, in the land of Canaan. This is the field Abraham purchased from Ephron the Hittite as a burial site.
30 அது கானான் நாட்டில் மம்ரே பகுதிக்கு அருகேயுள்ள மக்பேலாவின் நிலத்தில் அமைந்துள்ளது. ஆபிரகாம் இத்தியனான எப்ரோனிடமிருந்து அந்த நிலத்தைக் கல்லறை நிலத்திற்கென விலைக்கு வாங்கினார்.2
2 தொநூ 23:3-20.
31 அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம்பண்ணினேன்.
31 There Abraham and his wife Sarah are buried, there Isaac and his wife Rebekah are buried, and there I buried Leah.
31 அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவி சாராவையும் அடக்கம் செய்தனர்; அங்கு ஈசாக்கையும் அவர் மனைவி ரெபேக்காவையும் அடக்கம் செய்தனர். அங்கே தான் நானும் லேயாவை அடக்கம் செய்துள்ளேன்.3
3 தொநூ 25:9-10; 35:29.
32 அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்டது என்றான்.
32 The field and the cave that is in it were purchased from the Hittites.”
32 அந்நிலமும் அக்கல்லறையும் இத்தியரிடமிருந்து விலைக்கு வாங்கப்பெற்றவை."
33 யாக்கோபு தன் குமாரருக்குக் கட்டளையிட்டு முடிந்தபின்பு, அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் மடக்கிக்கொண்டு ஜீவித்துப்போய், தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.
33 When Jacob had finished instructing his sons, he pulled his feet into the bed and breathed his last, and he was gathered to his people.
33 யாக்கோபு தம் புதல்வர்களுக்குக் கட்டளைகளை வழங்கி முடித்தபின், தம் கால்களைப் படுக்கையினுள் மடக்கிக்கொண்டு உயிர் நீத்து, தம் இனத்தாருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.4
4 திப 7:15.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
5 a Or dwelling places
8 b Judah sounds like the Hebrew for praise .
10 c Or from his descendants
10 d Or until the one to whom tribute belongs
14 e Or saddlebags or hearths
16 f Or Dan shall judge his people ; Dan means He has judged or He has vindicated .
19 g Gad sounds like the Hebrew for raid and also for band of raiders .
21 h Or gives beautiful words or bears fawns of the fold
22 i Or Joseph is a wild donkey, a wild donkey by a spring, with his wild colts beside the wall
25 j Hebrew Shaddai
26 k Or of my ancestors
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.