பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Psalms சங்கீதம் תְהִלִּים
< முந்தையது சங்கீதம் 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
(இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்)
சங்கீதம் 109 | Psalms 109
The Song of the Slandered
For the choirmaster. A Psalm of David.
1 நான் துதிக்கும் தேவனே, மவுனமாயிராதேயும்.
1 For the choirmaster. A Psalm of David. O God of my praise, be not silent.
1 என் புகழ்ச்சிக்குரிய இறைவா, மௌனமாய் இராதேயும்.
2 துன்மார்க்கனுடைய வாயும், கபட்டுவாயும், எனக்கு விரோதமாய்த் திறந்திருக்கிறது; கள்ள நாவினால் என்னோடே பேசுகிறார்கள்.
2 For wicked and deceitful mouths open against me; they speak against me with lying tongues.
2 தீயோரும் வஞ்சனை செய்வோரும் எனக்கெதிராய்த் தம் வாயைத் திறந்துள்ளனர்; எனக்கெதிராய் அவர்கள் பொய்களைப் பேசியுள்ளனர்.
3 பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு முகாந்தரமில்லாமல் என்னோடே போர்செய்கிறார்கள்.
3 They surround me with hateful words and attack me without cause.
3 பகைவரின் சொற்கள் என்னைச் சூழ்ந்துள்ளன; அவர்கள் காரணமின்றி என்னைத் தாக்குகின்றனர்.
4 என் சிநேகத்துக்குப் பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோ ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறேன்.
4 In return for my love they accuse me, but I am a man of prayer.
4 நான் காட்டிய அன்புக்குக் கைம்மாறாக என்மேல் குற்றம் சாட்டினர்; நானோ அவர்களுக்காக மன்றாடினேன்.
5 நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், என் சிநேகத்துக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள்.
5 They repay me evil for good, and hatred for my love.
5 நன்மைக்குப் பதிலாக அவர்கள் எனக்குத் தீமையே செய்தனர்; அன்புக்குப் பதிலாக அவர்கள் வெறுப்பையே காட்டினர்;
6 அவனுக்கு மேலாகத் துஷ்டனை ஏற்படுத்திவையும், சாத்தான் அவன் வலதுபக்கத்தில் நிற்பானாக.
6 Set over him a wicked man; let an accuser stand at his right hand.
6 அவர்கள் கூறியது: "அவனுக்கு எதிராகத் தீயவனை எழும்பச் செய்யும்! 'குற்றம் சாட்டுவோன்' அவனது வலப்பக்கம் நிற்பானாக!
7 அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகக்கடவன்; அவன் ஜெபம் பாவமாகக்கடவது.
7 When he is tried, let him be found guilty, and may his prayer be regarded as sin.
7 நீதி விசாரணையின்போது அவன் தண்டனை பெறட்டும்! அவன் செய்யும் வேண்டுகோள் குற்றமாகக் கருதப்படுவதாக!
8 அவன் நாட்கள் கொஞ்சமாகக்கடவது; அவன் உத்தியோகத்தை வேறொருவன் பெறக்கடவன்.
8 May his days be few; may another take his position.a
8 அவனது வாழ்நாள் சொற்பமாகட்டும்; அவனது பதவியை வேறோருவன் எடுத்துக் கொள்ளட்டும்!1
1 திப 1:20.
9 அவன் பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவன் மனைவி விதவையுமாகக்கடவர்கள்.
9 May his children be fatherless and his wife a widow.
9 அவனுடைய பிள்ளைகள் தந்தை இழந்தோர் ஆகட்டும்! அவனுடைய மனைவி கைம்பெண் ஆகட்டும்!
10 அவன் பிள்ளைகள் அலைந்துதிரிந்து பிச்சையெடுத்து, தங்கள் பாழான வீடுகளிலிருந்து இரந்துண்ணக்கடவர்கள்.
10 May his children wander as beggars, seeking sustenanceb far from their ruined homes.
10 அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சை எடுக்கட்டும்! பாழான தங்கள் வீடுகளிலிருந்து அவர்கள் விரட்டப்படட்டும்!
11 கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்வானாக; அவன் பிரயாசத்தின் பலனை அந்நியர் பறித்துக்கொள்ளக்கடவர்கள்.
11 May the creditor seize all he owns, and strangers plunder the fruits of his labor.
11 அவனுக்கு உரியவற்றை எல்லாம் கடன் கொடுத்தவன் பறித்துக் கொள்ளட்டும்! அவனது உழைப்பின் பயனை அன்னியர் கொள்ளையடிக்கட்டும்!
12 அவனுக்கு ஒருவரும் இரக்கங் காண்பியாமலும், அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவுசெய்யாமலும் போவார்களாக.
12 May there be no one to extend kindness to him, and no one to favor his fatherless children.
12 அவனுக்கு இரக்கங்காட்ட ஒருவனும் இல்லாதிருக்கட்டும்! தந்தையை இழந்த, அவனுடைய பிள்ளைகள்மேல் யாரும் இரங்காதிருக்கட்டும்!
13 அவன் சந்ததியார் நிர்மூலமாகக்கடவர்கள், இரண்டாந்தலைமுறையில் அவர்கள் பேர் அற்றுப்போவதாக.
13 May his descendants be cut off; may their name be blotted out from the next generation.
13 அவன் வழி மரபு அடியோடு அழியட்டும்! அடுத்த தலைமுறைக்கு அவர்களுடைய பெயர் இல்லாது போகட்டும்!
14 அவன் பிதாக்களின் அக்கிரமம் கர்த்தருக்கு முன்பாக நினைக்கப்படக்கடவது, அவன் தாயின் பாவம் நீங்காமலிருப்பதாக.
14 May the iniquity of his fathers be remembered before the LORD, and the sin of his mother never be blotted out.
14 அவனுடைய மூதாதையரின் குற்றத்தை ஆண்டவர் நினைவில் கொள்ளட்டும்! அவனுடைய தாய் செய்த பாவத்தை அவர் மன்னியாது இருக்கட்டும்!
15 அவைகள் நித்தமும் கர்த்தருக்கு முன்பாக இருக்கக்கடவது; அவர்கள் பேர் பூமியிலிராமல் நிர்மூலமாவதாக.
15 May their sins always remain before the LORD, that He may cut off their memory from the earth.
15 அவை என்றும் ஆண்டவர் திருமுன்னே இருக்கட்டும்! அவனது நினைவை பூவுலகினின்று அடியோடு அவர் அகற்றட்டும்!
16 அவன் தயைசெய்ய நினையாமல், சிறுமையும் எளிமையுமானவனைத் துன்பப்படுத்தி மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே.
16 For he never thought to show kindness, but pursued the poor and needy and brokenhearted, even to their death.
16 ஏனெனில், அவன் இரக்கம் காட்ட நினைக்கவில்லை; எளியோரையும் வறியோரையும் கொடுமைப்படுத்தினான்; நெஞ்சம் நொறுங்குண்டோரைக் கொலைசெய்யத் தேடினான்.
17 சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போம்.
17 The cursing that he loved, may it fall on him; the blessing in which he refused to delight, may it be far from him.
17 சபிப்பதையே அவன் விரும்பினான்; விரும்பிய அதுவே அவன்மீது விழட்டும்! ஆசி வழங்குவதை அவன் விரும்பவில்லை; ஆகவே அது அவனைவிட்டுத் தொலைவில் செல்லட்டும்!
18 சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான்; அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.
18 The cursing that he wore like a coat, may it soak into his body like water, and into his bones like oil.
18 சாபமே அவன் அணிந்த ஆடை; தண்ணீரென அவன் உடலையும் எண்ணெயென அவன் எலும்புகளையும் அது நனைக்கட்டும்!
19 அது அவன் மூடிக்கொள்ளுகிற வஸ்திரமாகவும், நித்தமும் கட்டிக்கொள்ளுகிற கச்சையாகவும் இருப்பதாக.
19 May it be like a robe wrapped about him, like a belt tied forever around him.
19 அது அவனைப் போர்த்தும் ஆடைபோல் இருக்கட்டும்! நாள்தோறும் அவன் கட்டும் கச்சைபோல் இருக்கட்டும்!
20 இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், என் ஆத்துமாவுக்கு விரோதமாய்த் தீங்கு பேசுகிறவர்களுக்கும் கர்த்தரால் வரும் பலன்.
20 May this be the LORD’s reward to my accusers, to those who speak evil against me.
20 என்னைக் குற்றம் சாட்டுவோருக்கும், எனக்கு எதிராகத் தீயன பேசுவோருக்கும் ஆண்டவர் அளிக்கும் கைம்மாறாக அது இருப்பதாக!
21 ஆண்டவராகிய கர்த்தாவே, நீர் உமது நாமத்தினிமித்தம் என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால், என்னை விடுவித்தருளும்.
21 But You, O GOD, the Lord, deal kindly with me for the sake of Your name; deliver me by the goodness of Your loving devotion.
21 ஆனால், என் தலைவராகிய கடவுளே! உமது பெயரை முன்னிட்டு என் சார்பாகச் செயல்படும்! உமது பேரன்பின் இனிமைபொருட்டு என்னை மீட்டருளும்!
22 நான் சிறுமையும் எளிமையுமானவன், என் இருதயம் எனக்குள் குத்துண்டிருக்கிறது.
22 For I am poor and needy; my heart is wounded within me.
22 நானோ எளியவன்; வறியவன்; என் இதயம் என்னுள் புண்பட்டுள்ளது.
23 சாயும் நிழலைப்போல் அகன்றுபோனேன்; வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன்.
23 I am fading away like a lengthening shadow; I am shaken off like a locust.
23 மாலைநேர நிழலைப்போல் நான் மறைந்து போகின்றேன்; வெட்டுக் கிளியைப் போல நான் காற்றில் அடித்துச் செல்லப்படுகின்றேன்.
24 உபவாசத்தினால் என் முழங்கால்கள் தளர்ச்சியடைகிறது; என் மாம்சம் புஷ்டியற்று உலர்ந்து போகிறது.
24 My knees are weak from fasting, and my body grows lean and gaunt.
24 நோன்பினால் என் முழங்கால்கள் தளர்வுறுகின்றன; என் உடல் வலிமை இழந்து மெலிந்து போகின்றது.
25 நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து தங்கள் தலையைத் துலுக்குகிறார்கள்.
25 I am an object of scorn to my accusers; when they see me, they shake their heads.
25 நானோ அவர்களது பழிச்சொல்லுக்கு உள்ளானேன்; என்னைப் பார்க்கின்றோர் தலையை ஆட்டுகின்றனர்.2
2 மத் 27:39; மாற் 15:29.
26 என் தேவனாகிய கர்த்தாவே, எனக்குச் சகாயம்பண்ணும்; உமது கிருபையின்படி என்னை இரட்சியும்.
26 Help me, O LORD my God; save me according to Your loving devotion.
26 ஆண்டவரே! என் கடவுளே! எனக்கு உதவியருளும்! உமது பேரன்பிற்கேற்ப மீட்டருளும்!
27 இது உமது கரம் என்றும், கர்த்தாவே, தேவரீர் இதைச் செய்தீர் என்றும் அவர்கள் அறிவார்களாக.
27 Let them know that this is Your hand, that You, O LORD, have done it.
27 இது உம் ஆற்றலால் நிகழ்ந்தது என அவர்கள் அறியட்டும்! ஆண்டவரே! இதைச் செய்தவர் நீரே என அவர்கள் உணரட்டும்.
28 அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக, உமது அடியானோ மகிழக்கடவன்.
28 Though they curse, You will bless. When they rise up, they will be put to shame, but Your servant will rejoice.
28 அவர்கள் என்னைச் சபித்தாலும், நீர் எனக்கு ஆசி வழங்கும்! எனக்கு எதிராக எழுவோர் இழிவுறட்டும்! உம் ஊழியனாகிய நான் அகமகிழ்வேன்.
29 என் விரோதிகள் இலச்சையால் மூடப்பட்டு, தங்கள் வெட்கத்தைச் சால்வையைப்போல் தரித்துக்கொள்ளக்கடவர்கள்.
29 May my accusers be clothed with disgrace; may they wear their shame like a robe.
29 என்னைக் குற்றஞ்சாட்டுவோர்க்கு மானக்கேடு மேலாடை ஆகட்டும்! அவர்களின் வெட்கம் அவர்களுக்கு மேலங்கி ஆகட்டும்!
30 கர்த்தரை நான் என் வாயில் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.
30 With my mouth I will thank the LORD profusely; I will praise Him in the presence of many.
30 என் நாவினால் ஆண்டவரைப் பெரிதும் போற்றிடுவேன்; பெரும் கூட்டத்திடையே அவரைப் புகழ்ந்திடுவேன்.
31 ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார்.
31 For He stands at the right hand of the needy one, to save him from the condemners of his soul.
31 ஏனெனில், வறியோரின் வலப்பக்கம் அவர் நிற்கின்றார்; தண்டனைத் தீர்ப்பிடுவோரிடமிருந்து அவர்களது உயிரைக் காக்க நிற்கின்றார்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
8 a Cited in Acts 1:20
10 b Hebrew; LXX may they be driven
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.