பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Psalms  சங்கீதம்  תְהִלִּים

< முந்தையது   சங்கீதம்  107   108   109   110   111   112   113   114   115   116   117   118   119   120   121   122   123   124   125   126   127   128   129   130   131   132   133   134   135   136   137   138   139   140   141   142   143   144   145   146   147   148   149   150 

(ஆரோகண சங்கீதம்)

சங்கீதம் 129 | Psalms 129

The Cords of the Wicked

A song of ascents.

1שִׁ֗יר הַֽמַּ֫עֲל֥וֹת רַ֭בַּת צְרָר֣וּנִי מִנְּעוּרַ֑י יֹֽאמַר־נָ֝א יִשְׂרָאֵֽל׃

1 என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கினார்கள்.
1 A song of ascents. Many a time they have persecuted me from my youth—let Israel now declare—
1 ‟என் இளமை முதற்கொண்டே என்னைப் பெரிதும் துன்புறுத்தினார்கள்" – இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக!

2רַ֭בַּת צְרָר֣וּנִי מִנְּעוּרָ֑י גַּ֝ם לֹא־יָ֥כְלוּ לִֽי׃

2 என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற்போனார்கள்.
2 many a time they have persecuted me from my youth, but they have not prevailed against me.
2 ‟என் இளமை முதற்கொண்டே என்னைப் பெரிதும் துன்புறுத்தினார்கள்; எனினும், அவர்கள் என்மீது வெற்றி பெறவில்லை.

3עַל־גַּ֭בִּי חָרְשׁ֣וּ חֹרְשִׁ֑ים הֶ֝אֱרִ֗יכוּ למענותם

3 உழுகிறவர்கள் என் முதுகின்மேல் உழுது தங்கள் படைச்சால்களை நீளமாக்கினார்கள்.
3 The plowmen plowed over my back; they made their furrows long.
3 உழவர் என் முதுகின்மீது உழுது நீண்ட படைச்சால்களை உண்டாக்கினர்."

4יְהוָ֥ה צַדִּ֑יק קִ֝צֵּ֗ץ עֲב֣וֹת רְשָׁעִֽים׃

4 கர்த்தரோ நீதியுள்ளவர்; துன்மார்க்கருடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
4 The LORD is righteous; He has cut me from the cords of the wicked.
4 ஆண்டவர் நீதியுள்ளவர்; எனவே, பொல்லார் கட்டிய கயிறுகளை அவர் அறுத்தெறிந்தார்.

5יֵ֭בֹשׁוּ וְיִסֹּ֣גוּ אָח֑וֹר כֹּ֝֗ל שֹׂנְאֵ֥י צִיּֽוֹן׃

5 சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கிப் பின்னிட்டுத் திரும்பக்கடவர்கள்.
5 May all who hate Zion be turned back in shame.
5 சீயோனைப் பகைக்கும் அனைவரும் அவமானப்பட்டுப் புறமுதுகிடுவராக!

6יִ֭הְיוּ כַּחֲצִ֣יר גַּגּ֑וֹת שֶׁקַּדְמַ֖ת שָׁלַ֣ף יָבֵֽשׁ׃

6 வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்களாக; அது வளருமுன் உலர்ந்துபோம்.
6 May they be like grass on the rooftops, which withers before it can grow,
6 கூரைமேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்; வளருமுன் அது உலர்ந்துபோகும்.

7שֶׁלֹּ֤א מִלֵּ֖א כַפּ֥וֹ קוֹצֵ֗ר וְחִצְנ֥וֹ מְעַמֵּֽר׃

7 அறுக்கிறவன் அதினால் தன் கையையும், அரிகளைக் கட்டுகிறவன் தன் மடியையும் நிரப்புவதில்லை.
7 unable to fill the hands of the reaper, or the arms of the binder of sheaves.
7 அதை அறுப்போரின் கைக்கு, ஒரு பிடி கூடக் கிடைக்காது; அரிகளைச் சேர்த்தால் ஒரு சுமைகூடத் தேறாது.

8וְלֹ֤א אָֽמְר֨וּ ׀ הָעֹבְרִ֗ים בִּרְכַּֽת־יְהוָ֥ה אֲלֵיכֶ֑ם בֵּרַ֥כְנוּ אֶ֝תְכֶ֗ם בְּשֵׁ֣ם יְהוָֽה׃

8 கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாவதாக; கர்த்தரின் நாமத்தினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர் சொல்வதுமில்லை.
8 May none who pass by say to them, “The blessing of the LORD be on you; we bless you in the name of the LORD.”
8 வழிப்போக்கரும் அவர்களைப் பார்த்து, 'ஆண்டவர் உங்களுக்கு ஆசி வழங்குவாராக!' என்றோ 'ஆண்டவரின் பெயரால் ஆசி வழங்குகிறோம்' என்றோ சொல்லார்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Psalms Chapter   <previous   107   108   109   110   111   112   113   114   115   116   117   118   119   120   121   122   123   124   125   126   127   128   129   130   131   132   133   134   135   136   137   138   139   140   141   142   143   144   145   146   147   148   149   150  

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.