பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Psalms சங்கீதம் תְהִלִּים
< முந்தையது சங்கீதம் 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
(இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்)
சங்கீதம் 140 | Psalms 140
Rescue Me from Evil Men
For the choirmaster. A Psalm of David.
1 கர்த்தாவே, பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்.
1 For the choirmaster. A Psalm of David. Rescue me, O LORD, from evil men. Protect me from men of violence,
1 ஆண்டவரே! தீயோரிடமிருந்து என்னை விடுவியும்; வன்செயல் செய்வோரிடமிருந்து என்னைப் பாதுகாத்தருளும்.
2 அவர்கள் தங்கள் இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள்.
2 who devise evil in their hearts and stir up war all day long.
2 அவர்கள் தம் மனத்தில் தீயனவற்றை திட்டமிடுகின்றனர்; நாள்தோறும் சச்சரவுகளைக் கிளப்பி விடுகின்றனர்.
3 சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவை கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின்விஷம் இருக்கிறது. (சேலா.)
3 They sharpen their tongues like snakes; the venom of vipers is on their lips.a Selah
3 அவர்கள் பாம்பெனத் தம் நாவைக் கூர்மையாக்கிக்கொள்கின்றனர்; அவர்களது உதட்டில் உள்ளது விரியன் பாம்பின் நஞ்சே! (சேலா)*
* உரோ 3:13.
4 கர்த்தாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி கொடியவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்; அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள்.
4 Guard me, O LORD, from the hands of the wicked. Keep me safe from men of violence who scheme to make me stumble.
4 ஆண்டவரே! தீயோரின் கையினின்று என்னைக் காத்தருளும்; கொடுமை செய்வோரிடமிருந்து என்னைப் பாதுகாத்தருளும்; அவர்கள் என் காலை வாரிவிடப் பார்க்கின்றார்கள்.
5 அகங்காரிகள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாய்க் வைக்கிறார்கள்; வழியோரத்தில் வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை விரிக்கிறார்கள். (சேலா.)
5 The proud hide a snare for me; the cords of their net are spread along the path, and lures are set out for me. Selah
5 செருக்குற்றோர் எனக்கெனக் கண்ணியை மறைவாக வைக்கின்றனர்; தம் கயிறுகளால் எனக்கு சுருக்கு வைக்கின்றனர்; (சேலா)
6 நான் கர்த்தரை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்; கர்த்தாவே, என் விண்ணப்பங்களின் சத்தத்துக்குச் செவிகொடும்.
6 I say to the LORD, “You are my God.” Hear, O LORD, my cry for help.
6 நானோ ஆண்டவரை நோக்கி இவ்வாறு வேண்டினேன்; நீரே என் இறைவன்! ஆண்டவரே! உம் இரக்கத்திற்காக நான் எழுப்பும் குரலுக்குச் செவிசாயும்.
7 ஆண்டவராகிய கர்த்தாவே, இரட்சிப்பின் பலனே, யுத்தநாளில் என் தலையை மூடினீர்.
7 O GOD the Lord, the strength of my salvation, You shield my head in the day of battle.
7 என் தலைவராகிய ஆண்டவரே! எனக்கு விடுதலை வழங்கும் வல்லவரே! போர் நடந்த நாளில் என் தலையை மறைத்துக் காத்தீர்!
8 கர்த்தாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் சித்தியாதபடி செய்யும்; அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேறவொட்டாதேயும். (சேலா.)
8 Grant not, O LORD, the desires of the wicked; do not promote their evil plans, lest they be exalted. Selah
8 ஆண்டவரே! தீயோரின் விருப்பங்களை நிறைவேற்றாதேயும்; அவர்களின் சூழ்ச்சிகளை வெற்றி பெறவிடாதேயும். இல்லையெனில், அவர்கள் ஆணவம் கொள்வார்கள். (சேலா)
9 என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக.
9 May the heads of those who surround me be covered in the trouble their lips have caused.
9 என்னைச் சூழ்பவர்கள் செருக்குடன் நடக்கின்றார்கள்; அவர்கள் செய்வதாகப் பேசும் தீமை அவர்கள்மேலே விழுவதாக!
10 நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக; அக்கினியிலும், அவர்கள் எழுந்திருக்கக் கூடாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக.
10 May burning coals fall on them; may they be thrown into the fire, into the miry pits, never to rise again.
10 நெருப்புத் தழல் அவர்கள்மேல் விழுவதாக! மீளவும் எழாதபடி படுகுழியில் தள்ளப்படுவார்களாக!
11 பொல்லாத நாவுள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனுஷனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்.
11 May no slanderer be established in the land; may calamity hunt down the man of violence.
11 புறங்கூறும் நாவுடையோர் உலகில் நிலைத்து வாழாதிருப்பராக! வன்செயல் செய்வாரைத் தீமை விரட்டி வேட்டையாடுவதாக!
12 சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பாரென்று அறிவேன்.
12 I know that the LORD upholds justice for the poor and defends the cause of the needy.
12 ஏழைகளின் நீதிக்காக ஆண்டவர் வழக்காடுவார் எனவும் எளியவர்களுக்கு நீதி வழங்குவார் எனவும் அறிவேன்.
13 நீதிமான்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம்பண்ணுவார்கள்.
13 Surely the righteous will praise Your name; the upright will dwell in Your presence.
13 மெய்யாகவே, நீதிமான்கள் உமது பெயருக்கு நன்றி செலுத்துவார்கள்; நேர்மையுள்ளோர் உம் திருமுன் வாழ்வர்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
3 a Cited in Romans 3:13
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.