பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Psalms  சங்கீதம்  תְהִלִּים

< முந்தையது   சங்கீதம்  107   108   109   110   111   112   113   114   115   116   117   118   119   120   121   122   123   124   125   126   127   128   129   130   131   132   133   134   135   136   137   138   139   140   141   142   143   144   145   146   147   148   149   150 

(தாவீதின் சங்கீதம்)

சங்கீதம் 143 | Psalms 143

I Stretch Out My Hands to You

A Psalm of David.

1מִזְמ֗וֹר לְדָ֫וִ֥ד יְהוָ֤ה ׀ שְׁמַ֬ע תְּפִלָּתִ֗י הַאֲזִ֥ינָה אֶל־תַּחֲנוּנַ֑י בֶּאֱמֻנָתְךָ֥ עֲ֝נֵ֗נִי בְּצִדְקָתֶֽךָ׃

1 கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும், என் விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்தரவு அருளிச்செய்யும்.
1 A Psalm of David. O LORD, hear my prayer. In Your faithfulness, give ear to my plea; in Your righteousness, answer me.
1 ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்; நீர் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பதால், உமது இரக்கத்திற்காக நான் எழுப்பும் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; உமது நீதியின்படி எனக்குப் பதில் தாரும்.

2וְאַל־תָּב֣וֹא בְ֭מִשְׁפָּט אֶת־עַבְדֶּ֑ךָ כִּ֤י לֹֽא־יִצְדַּ֖ק לְפָנֶ֣יךָ כָל־חָֽי׃

2 ஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் அல்லாததினாலே அடியேனை நியாயந்தீர்க்கப் பிரவேசியாதேயும்.
2 Do not bring Your servant into judgment, for no one alive is righteous before You.
2 தண்டனைத் தீர்ப்புக்கு உம் அடியானை இழுக்காதேயும்; ஏனெனில், உயிர் வாழ்வோர் எவரும் உமது திருமுன் நீதிமான் இல்லை.*

3כִּ֥י רָ֘דַ֤ף אוֹיֵ֨ב ׀ נַפְשִׁ֗י דִּכָּ֣א לָ֭אָרֶץ חַיָּתִ֑י הוֹשִׁיבַ֥נִי בְ֝מַחֲשַׁכִּ֗ים כְּמֵתֵ֥י עוֹלָֽם׃

3 சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, என் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்குமுன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான்.
3 For the enemy has pursued my soul, crushing my life to the ground, making me dwell in darkness like those long since dead.
3 எதிரி என்னைத் துரத்தினான்; என்னைத் தரையிலிட்டு நசுக்கினான்; என்றோ இறந்தொழிந்தவர்களைப்போல் என்னை இருட்டில் கிடக்கச் செய்தான்.

4וַתִּתְעַטֵּ֣ף עָלַ֣י רוּחִ֑י בְּ֝תוֹכִ֗י יִשְׁתּוֹמֵ֥ם לִבִּֽי׃

4 என் ஆவி என்னில் தியங்குகிறது; என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.
4 My spirit grows faint within me; my heart is dismayed inside me.
4 எனவே, என்னுள்ளே என் மனம் ஒடுங்கிப் போயிற்று; என் உள்ளம் எனக்குள் சோர்ந்து போயிற்று.

5זָ֘כַ֤רְתִּי יָמִ֨ים ׀ מִקֶּ֗דֶם הָגִ֥יתִי בְכָל־פָּעֳלֶ֑ךָ בְּֽמַעֲשֵׂ֖ה יָדֶ֣יךָ אֲשׂוֹחֵֽחַ׃

5 பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்.
5 I remember the days of old; I meditate on all Your works; I consider the work of Your hands.
5 பண்டைய நாள்களை நான் நினைத்துக் கொள்கின்றேன்; உம் செயல்கள் அனைத்தையும் குறித்துச் சிந்தனை செய்கின்றேன்; உம் கைவினைகளைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கின்றேன்.

6פֵּרַ֣שְׂתִּי יָדַ֣י אֵלֶ֑יךָ נַפְשִׁ֓י ׀ כְּאֶֽרֶץ־עֲיֵפָ֖ה לְךָ֣ סֶֽלָה׃

6 என் கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. (சேலா.)
6 I stretch out my hands to You; my soul thirsts for You like a parched land. Selah
6 உம்மை நோக்கி என் கைகளை உயர்த்துகின்றேன்; வறண்ட நிலம் நீருக்காகத் தவிப்பது போல் என் உயிர் உமக்காகத் தவிக்கின்றது. (சேலா)

7מַ֘הֵ֤ר עֲנֵ֨נִי ׀ יְהוָה֮ כָּלְתָ֢ה ר֫וּחִ֥י אַל־תַּסְתֵּ֣ר פָּנֶ֣יךָ מִמֶּ֑נִּי וְ֝נִמְשַׁ֗לְתִּי עִם־יֹ֥רְדֵי בֽוֹר׃

7 கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும், என் ஆவி தொய்ந்துபோகிது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறையாதேயும்.
7 Answer me quickly, O LORD; my spirit fails. Do not hide Your face from me, or I will be like those who descend to the Pit.
7 ஆண்டவரே! விரைவாக எனக்குச் செவிசாய்த்தருளும்; ஏனெனில், என் உள்ளம் உடைந்துவிட்டது; என்னிடமிருந்து உம் முகத்தை மறைத்துக் கொள்ளாதேயும்; இல்லையெனில், படுகுழி செல்வோருள் ஒருவராகிவிடுவேன்.

8הַשְׁמִ֘יעֵ֤נִי בַבֹּ֨קֶר ׀ חַסְדֶּךָ֮ כִּֽי־בְךָ֢ בָ֫טָ֥חְתִּי הוֹדִיעֵ֗נִי דֶּֽרֶךְ־ז֥וּ אֵלֵ֑ךְ כִּֽי־אֵ֝לֶיךָ נָשָׂ֥אתִי נַפְשִֽׁי׃

8 அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
8 Let me hear Your loving devotion in the morning, for I have put my trust in You. Teach me the way I should walk, for to You I lift up my soul.
8 உமது பேரன்பை நான் வைகறையில் கண்டடையச் செய்யும்; ஏனெனில், உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; நான் நடக்க வேண்டிய அந்த வழியை எனக்குக் காட்டியருளும்; ஏனெனில், உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.

9הַצִּילֵ֖נִי מֵאֹיְבַ֥י ׀ יְהוָ֗ה אֵלֶ֥יךָ כִסִּֽתִי׃

9 கர்த்தாவே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன்.
9 Deliver me from my enemies, O LORD; I flee to You for refuge.a
9 ஆண்டவரே! என் எதிரிகளிடமிருந்து என்னை விடுவித்தருளும்; நான் உம்மிடம் தஞ்சம் புகுந்துள்ளேன்.

10לַמְּדֵ֤נִי ׀ לַֽעֲשׂ֣וֹת רְצוֹנֶךָ֮ כִּֽי־אַתָּ֢ה אֱל֫וֹהָ֥י רוּחֲךָ֥ טוֹבָ֑ה תַּ֝נְחֵ֗נִי בְּאֶ֣רֶץ מִישֽׁוֹר׃

10 உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும் நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.
10 Teach me to do Your will, for You are my God. May Your good Spirit lead me on level ground.
10 உம் திருவுளத்தை நிறைவேற்ற எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் கடவுள்; உமது நலமிகு ஆவி என்னைச் செம்மையான வழியில் நடத்துவதாக!

11לְמַֽעַן־שִׁמְךָ֣ יְהוָ֣ה תְּחַיֵּ֑נִי בְּצִדְקָתְךָ֓ ׀ תּוֹצִ֖יא מִצָּרָ֣ה נַפְשִֽׁי׃

11 கர்த்தாவே, உம்முடைய நாமத்தினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; உம்முடைய நீதியின்படி என் ஆத்துமாவை இடுக்கத்திற்கு நீங்கலாக்கிவிடும்.
11 For the sake of Your name, O LORD, revive me. In Your righteousness, bring my soul out of trouble.
11 ஆண்டவரே! உமது பெயரின் பொருட்டு என் உயிரைக் காத்தருளும்! உமது நீதியின் பொருட்டு என்னை நெருக்கடியினின்று விடுவித்தருளும்.

12וּֽבְחַסְדְּךָ֮ תַּצְמִ֢ית אֹ֫יְבָ֥י וְֽ֭הַאֲבַדְתָּ כָּל־צֹרֲרֵ֣י נַפְשִׁ֑י כִּ֝֗י אֲנִ֣י עַבְדֶּֽךָ׃

12 உம்முடைய கிருபையின்படி என் சத்துருக்களை அழித்து, என் ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்காரம்பண்ணும்; நான் உமது அடியேன்.
12 And in Your loving devotion, cut off my enemies. Destroy all who afflict me, for I am Your servant.
12 உமது பேரன்பை முன்னிட்டு என் பகைவரை அழித்துவிடும்; என் பகைவர் அனைவரையும் ஒழித்துவிடும்; ஏனெனில், நான் உமக்கே அடிமை!


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Psalms Chapter   <previous   107   108   109   110   111   112   113   114   115   116   117   118   119   120   121   122   123   124   125   126   127   128   129   130   131   132   133   134   135   136   137   138   139   140   141   142   143   144   145   146   147   148   149   150  

Footnotes:
9 a LXX and one Hebrew manuscript; most Hebrew manuscripts in You I take cover

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.