பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Psalms சங்கீதம் תְהִלִּים
< முந்தையது சங்கீதம் 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
(தாவீதின் சங்கீதம்)
சங்கீதம் 144 | Psalms 144
Blessed Be the LORD, My Rock
Of David.
1 என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
1 Of David. Blessed be the LORD, my Rock, who trains my hands for war, my fingers for battle.
1 என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! போரிட என் கைகளுக்குப் பயிற்சி அளிப்பவர் அவரே! போர்புரிய என் விரல்களைப் பழக்குபவரும் அவரே!
2 அவர் என் தயாபரரும், என் கோட்டையும், என் உயர்ந்த அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என் கேடகமும், நான் நம்பினவரும், என் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாயிருக்கிறார்.
2 He is my steadfast love and my fortress, my stronghold and my deliverer. He is my shield, in whom I take refuge, who subdues peoplesa under me.
2 என் கற்பாறையும்* கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே! என் கேடயமும் புகலிடமும் அவரே! மக்களினத்தாரை எனக்குக் கீழ்ப்படுத்துபவர் அவரே!1
1 'பேரன்பும்' என்றும் பொருள்படும்.
3 கர்த்தாவே, மனுஷனை நீர் கவனிக்கிறதற்கும், மனுபுத்திரனை நீர் எண்ணுகிதற்கும், அவன் எம்மாத்திரம்?
3 O LORD, what is man, that You regard him, the son of man that You think of him?
3 ஆண்டவரே! மனிதரை நீர் கவனிக்க அவர்கள் யார்? மானிடரை நீர் கருத்தில் கொள்ள அவர்கள் யார்?2
2 யோபு 7:17-18; திபா 8:4.
4 மனுஷன் மாயைக்கு ஒப்பாயிருக்கிறான்; அவன் நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானம்.
4 Man is like a breath; his days are like a passing shadow.
4 மனிதர் சிறுமூச்சுக்கு ஒப்பானவர்; அவர்களின் வாழ்நாள்கள் மறையும் நிழலுக்கு நிகரானவை.
5 கர்த்தாவே, நீர் உமது வானங்களைத் தாழ்த்தி இறங்கி, பர்வதங்கள் புகையும்படி அவைகளைத் தொடும்.
5 Part Your heavens, O LORD, and come down; touch the mountains, that they may smoke.
5 ஆண்டவரே! உம் வான்வெளியை வளைத்து இறங்கிவாரும்; மலைகளைத் தொடும்; அவை புகை கக்கும்.
6 மின்னல்களை வரவிட்டுச் சத்துருக்களைச் சிதறடியும், உமது அம்புகளை எய்து அவர்களைக் கலங்கடியும்.
6 Flash forth Your lightning and scatter them; shoot Your arrows and rout them.
6 மின்னலை மின்னச் செய்து, அவர்களைச் சிதறடியும்; உம் அம்புகளை எய்து, அவர்களைக் கலங்கடியும்.
7 உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டி, ஜலப்பிரவாகத்துக்கு என்னை விலக்கி இரட்சியும்.
7 Reach down from on high; set me free and rescue me from the deep waters, from the grasp of foreigners,
7 வானின்று உமது கையை நீட்டி எனக்கு விடுதலை வழங்கும்; பெருவெள்ளம் போல் எழும் வேற்றினத்தார் கையினின்று என்னை விடுவித்தருளும்.
8 மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்.
8 whose mouths speak falsehood, whose right hands are deceitful.
8 அவர்களது வாய் பேசுவது பொய்! அவர்களது வலக்கை வஞ்சமிகு வலக்கை!
9 கர்த்தாவே, நான் உமக்குப் புதுபாட்டைப் பாடுவேன்; தம்புரினாலும் பத்துநரம்பு வீணையினாலும் உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
9 I will sing to You a new song, O God; on a harp of ten strings I will make music to You—
9 இறைவா, நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்; பதின் நரம்பு வீணையால் உமக்குப் புகழ் பாடுவேன்.
10 நீரே ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து, உமதடியானாகிய தாவீதைப் பொல்லாத பட்டயத்திற்குத் தப்புவிக்கிறவர்.
10 to Him who gives victory to kings, who frees His servant David from the deadly sword.
10 அரசர்களுக்கு வெற்றி அளிப்பவர் நீரே! உம் ஊழியர் தாவீதைக் கொடிய வாளினின்று தப்புவித்தவரும் நீரே!
11 மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்.
11 Set me free and rescue me from the grasp of foreigners, whose mouths speak falsehood, whose right hands are deceitful.
11 எனக்கு விடுதலை வழங்கும்; வேற்றினத்தார் கையினின்று என்னை விடுவித்தருளும்; அவர்களது வாய் பேசுவது பொய்! அவர்களது வலக்கை வஞ்சமிகு வலக்கை!
12 அப்பொழுது எங்கள் குமாரர் இளமையில் ஓங்கிவளருகிற விருட்சங்களைப்போலவும், எங்கள் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனைக் கற்களைப்போலவும் இருப்பார்கள்.
12 Then our sons will be like plants nurtured in their youth, our daughters like corner pillars carved to adorn a palace.
12 எம் புதல்வர்கள் இளமையில் செழித்து வளரும் செடிகள்போல் இருப்பார்களாக! எம் புதல்வியர் அரண்மனைக்கு அழகூட்டும் செதுக்கிய சிலைகள்போல் இருப்பார்களாக!
13 எங்கள் களஞ்சியங்கள் சகலவித வஸ்துக்களையும் கொடுக்கத்தக்கதாய் நிரம்பியிருக்கும்; எங்கள் கிராமங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரம் பதினாயிரமாய்ப் பலுகும்.
13 Our storehouses will be full, supplying all manner of produce; our flocks will bring forth thousands, tens of thousands in our fields.
13 எம் களஞ்சியங்கள் நிறைந்திருப்பனவாக! வகைவகையான தானியங்களால் நிறைந்திருப்பனவாக! எங்கள் வயல்களில் ஆடுகள் ஆயிரம், பல்லாயிரம் மடங்கு பலுகட்டும்!
14 எங்கள் எருதுகள் பலத்தவைகளாயிருக்கும்; சத்துரு உட்புகுதலும் குடியோடிப்போகுதலும் இராது ; எங்கள் வீதிகளில் கூக்குரலும் உண்டாகாது.
14 Our oxen will bear great loads.b There will be no breach in the walls, no going into captivity, and no cry of lament in our streets.
14 எங்கள் மாடுகள் சுமைசுமப்பனவாக! எவ்விதச் சிதைவோ இழப்போ இல்லாதிருக்கட்டும்! எங்கள் தெருக்களில் அழுகுரல் இல்லாதிருக்கட்டும்.
15 இவ்விதமான சீரைப்பெற்றஜனம் பாக்கியமுள்ளது; கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது.
15 Blessed are the people of whom this is so; blessed are the people whose God is the LORD.
15 இவற்றை உண்மையாகவே அடையும் மக்கள் பேறுபெற்றோர்! ஆண்டவரைத் தம் கடவுளாகக் கொண்ட மக்கள் பேறுபெற்றோர்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
2 a Many Hebrew manuscripts, DSS, Syriac; most Hebrew manuscripts subdues my people
14 b Or Our chieftains will be firmly established
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.