பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Psalms சங்கீதம் תְהִלִּים
< முந்தையது சங்கீதம் 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
சங்கீதம் 147 | Psalms 147
It Is Good to Sing Praises
1 கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது.
1 Hallelujah! How good it is to sing praises to our God, how pleasant and lovely to praise Him!
1 அல்லேலூயா! நம்முடைய கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது; அவரைப் புகழ்வது இனிமையானது; அதுவே ஏற்புடையது.
2 கர்த்தர் எருசலேமைக் கட்டுகிறார்; துரத்துண்ட இஸ்ரவேலரைக் கூட்டிச்சேர்க்கிறார்.
2 The LORD builds up Jerusalem; He gathers the exiles of Israel.
2 ஆண்டவர் எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புகின்றார்; நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக் கூட்டிச் சேர்க்கின்றார்;
3 இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
3 He heals the brokenhearted and binds up their wounds.
3 உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்; அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார்.
4 அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்.
4 He determines the number of the stars; He calls them each by name.
4 விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி, அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றார்.
5 நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது.
5 Great is our Lord, and mighty in power; His understanding has no limit.
5 நம் தலைவர் மாண்புமிக்கவர்; மிகுந்த வல்லமையுள்ளவர்; அவர்தம் நுண்ணறிவு அளவிடற்கு அரியது.
6 கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார்.
6 The LORD sustains the humble, but casts the wicked to the ground.
6 ஆண்டவர் எளியோர்க்கு ஆதரவளிக்கின்றார்; பொல்லாரையோ தரைமட்டும் தாழ்த்துகின்றார்.
7 கர்த்தரைத் துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் கீர்த்தனம் பண்ணுங்கள்.
7 Sing to the LORD with thanksgiving; make music on the harp to our God,
7 ஆண்டவருக்கு நன்றி செலுத்திப் பாடுங்கள்; நம் கடவுளை யாழ்கொண்டு புகழ்ந்து பாடுங்கள்.
8 அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார்.
8 who covers the sky with clouds, who prepares rain for the earth, who makes grass to grow on the hills.
8 அவர் வானத்தை மேகங்களால் மறைக்கின்றார்; பூவுலகின்மீது மழையைப் பொழிகின்றார்; மலைகளில் புல்லை முளைக்கச் செய்கின்றார்.
9 அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.
9 He provides food for the animals, and for the young ravens when they call.
9 கால்நடைகளுக்கும் கரையும் காக்கைக் குஞ்சுகளுக்கும், அவர் இரை கொடுக்கின்றார்.
10 அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார்.
10 He does not delight in the strength of the horse; He takes no pleasure in the legpower of the man.
10 குதிரையின் வலிமையில் அவர் மகிழ்ச்சி காண்பதில்லை; வீரனின் கால்வலிமையையும் அவர் விரும்புவதில்லை.
11 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.
11 The LORD is pleased with those who fear Him, who hope in His loving devotion.
11 தமக்கு அஞ்சி நடந்து தம் பேரன்புக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரிடம் அவர் மகிழ்ச்சி கொள்கின்றார்.
12 எருசலேமே கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே என் தேவனைத் துதி.
12 Exalt the LORD, O Jerusalem; praise your God, O Zion!
12 எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!
13 அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.
13 For He strengthens the bars of your gates and blesses the children within you.
13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார்.
14 அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
14 He makes peace at your borders; He fills you with the finest wheat.
14 அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்.
15 அவர் தமது வார்த்தையைப் பூமியில் அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது.
15 He sends forth His command to the earth; His word runs swiftly.
15 அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது.
16 பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல் உறைந்த பனியைத் தூவுகிறார்.
16 He spreads the snow like wool; He scatters the frost like ashes;
16 அவர் வெண்கம்பளிபோல் பனியைப் பொழிகின்றார்; சாம்பலைப்போல் உறைபனியைத் தூவுகின்றார்;
17 அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார், அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?
17 He casts forth His hail like pebbles.b Who can withstand His icy blast?
17 பனிக்கட்டியைத் துகள்துகளாக விழச் செய்கின்றார்; அவர் வரவிடும் குளிரைத் தாங்கக் கூடியவர் யார்?
18 அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய தண்ணீர்கள் ஓடும்.
18 He sends forth His word and melts them; He unleashes His winds, and the waters flow.
18 அவர் தம் கட்டளையால் அவற்றை உருகச் செய்கின்றார்; தம் காற்றை வீசச் செய்ய, நீர் ஓடத் தொடங்குகின்றது.
19 யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.
19 He declares His word to Jacob, His statutes and judgments to Israel.
19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.
20 அவர் வேறே எந்த ஜாதிக்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய நியாயங்களை அறியாமற்போகிறார்கள். அல்லேலுூயா.
20 He has done this for no other nation; they do not know His judgments.c Hallelujah!
20 அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது; அல்லேலூயா!
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a Or Hallelu YAH , meaning Praise the LORD ; also in verse 20
17 b Or like crumbs or like morsels
20 c MT; DSS and LXX He has not made known to them His judgments
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.