பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Psalms சங்கீதம் תְהִלִּים
< முந்தையது சங்கீதம் 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
சங்கீதம் 148 | Psalms 148
Praise the LORD from the Heavens (Psalm 33:1–22)
1 அல்லேலுூயா, வானங்களில் உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.
1 Hallelujah! Praise the LORD from the heavens; praise Him in the highest places.b
1 அல்லேலூயா! விண்ணுலகில் உள்ளவையே, ஆண்டவரைப் போற்றுங்கள்; உன்னதங்களில் அவரைப் போற்றுங்கள்.
2 அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய சேனைகளே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்.
2 Praise Him, all His angels; praise Him, all His heavenly hosts.
2 அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்; அவருடைய படைகளே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்.
3 சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; பிரகாசமுள்ள சகல நட்சத்திரங்களே அவரைத் துதியுங்கள்.
3 Praise Him, O sun and moon; praise Him, all you shining stars.
3 கதிரவனே, நிலாவே, அவரைப் போற்றுங்கள்; ஒளிவீசும் விண்மீன்களே, அவரைப் போற்றுங்கள்.
4 வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; ஆகாயமண்டலத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.
4 Praise Him, O highest heavens, and you waters above the skies.
4 விண்ணுலக வானங்களே, அவரைப் போற்றுங்கள்; வானங்களின் மேலுள்ள நீர்த்திரளே, அவரைப் போற்றுங்கள்.
5 அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.
5 Let them praise the name of the LORD, for He gave the command and they were created.
5 அவை ஆண்டவரின் பெயரைப் போற்றட்டும்; ஏனெனில், அவரது கட்டளையின்படி எல்லாம் படைக்கப்பட்டன;
6 அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார்.
6 He established them forever and ever; He issued a decree that will never pass away.
6 அவரே அவற்றை என்றென்றும் நிலைபெறச் செய்தார்; மாறாத நியமத்தை அவற்றிற்கு ஏற்படுத்தினார்.
7 பூமியிலுள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; மகா மச்சங்களே, சகல ஆழங்களே,
7 Praise the LORD from the earth, all great sea creatures and ocean depths,
7 மண்ணுலகில் ஆண்டவரைப் போற்றுங்கள்; கடலின் பெரும் நாகங்களே, ஆழ்கடல் பகுதிகளே,
8 அக்கினியே, கல்மழையே, உறைந்தமழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே,
8 lightning and hail, snow and clouds, powerful wind fulfilling His word,
8 நெருப்பே, கல்மழையே, வெண்பனியே, மூடுபனியே, அவரது ஆணையை நிறைவேற்றும் பெருங்காற்றே,
9 மலைகளே, சகல மேடுகளே, கனிமரங்களே, சகல கேதுருக்களே,
9 mountains and all hills, fruit trees and all cedars,
9 மலைகளே, அனைத்துக் குன்றுகளே, கனிதரும் மரங்களே, அனைத்துக் கேதுரு மரங்களே,
10 காட்டுமிருகங்களே, சகல நாட்டுமிருகங்களே ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே.
10 wild animals and all cattle, crawling creatures and flying birds,
10 காட்டு விலங்குகளே, அனைத்துக் கால்நடைகளே, ஊர்ந்து செல்லும் உயிரினங்களே, சிறகுள்ள பறவைகளே,
11 பூமியின் ராஜாக்களே, சகல ஜனங்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளே,
11 kings of the earth and all peoples, princes and all rulers of the earth,
11 உலகின் அரசர்களே, எல்லா மக்களினங்களே, தலைவர்களே, உலகின் ஆட்சியாளர்களே,
12 வாலிபரே கன்னிகைகளே, முதிர்வயதுள்ளவர்களே பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.
12 young men and maidens, old and young together.
12 இளைஞரே, கன்னியரே, முதியோரே மற்றும் சிறியோரே, நீங்கள் எல்லாரும் ஆண்டவரைப் போற்றுங்கள்.
13 அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.
13 Let them praise the name of the LORD, for His name alone is exalted; His splendor is above the earth and the heavens.
13 அவர்கள் ஆண்டவரின் பெயரைப் போற்றுவார்களாக; அவரது பெயர் மட்டுமே உயர்ந்தது; அவரது மாட்சி விண்ணையும் மண்ணையும் கடந்தது.
14 அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும், தம்மைச் சேர்ந்த ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரருக்கும் கொண்டாட்டமாக, தம்முடைய ஜனத்திற்கு ஒரு கொம்பை உயர்த்தினார். அல்லேலுூயா.
14 He has raised up a horn for His people, the praise of all His saints, of Israel, a people near to Him. Hallelujah!
14 அவர் தம் மக்களின் ஆற்றலை உயர்வுறச் செய்தார்; அவருடைய அனைத்து அடியாரும் அவருக்கு நெருங்கிய அன்பார்ந்த மக்களாகிய இஸ்ரயேல் மக்களும் அவரைப் போற்றுவார்கள். அல்லேலூயா!
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a Or Hallelu YAH , meaning Praise the LORD ; also in verse 14
1 b See Matthew 21:9, Mark 11:10, and Luke 19:38.
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.