பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Psalms  சங்கீதம்  תְהִלִּים

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   அடுத்தது >

(இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்)

சங்கீதம் 21 | Psalms 21

After the Battle (Proverbs 21:1–31)

For the choirmaster. A Psalm of David.

1לַמְנַצֵּ֗חַ מִזְמ֥וֹר לְדָוִֽד׃ יְֽהוָ֗ה בְּעָזְּךָ֥ יִשְׂמַח־מֶ֑לֶךְ וּ֝בִישׁ֥וּעָתְךָ֗ מַה־יגיל מְאֹֽד׃

1 கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்!
1 For the choirmaster. A Psalm of David. O LORD, the king rejoices in Your strength. How greatly he exults in Your salvation!
1 ஆண்டவரே, உமது வல்லமையில் அரசர் பூரிப்படைகின்றார்; நீர் அளித்த வெற்றியில் § எத்துணையோ அவர் அக்களிக்கின்றார்!

2תַּאֲוַ֣ת לִ֭בּוֹ נָתַ֣תָּה לּ֑וֹ וַאֲרֶ֥שֶׁת שְׂ֝פָתָ֗יו בַּל־מָנַ֥עְתָּ סֶּֽלָה׃

2 அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர். (சேலா.)
2 You have granted his heart’s desire and have not withheld the request of his lips. Selah
2 அவர் உள்ளம் விரும்பியதை நீர் அவருக்குத் தந்தருளினீர்; அவர் வாய்விட்டுக் கேட்டதை நீர் மறுக்கவில்லை. (சேலா)

3כִּֽי־תְ֭קַדְּמֶנּוּ בִּרְכ֣וֹת ט֑וֹב תָּשִׁ֥ית לְ֝רֹאשׁ֗וֹ עֲטֶ֣רֶת פָּֽז׃

3 உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர்.
3 For You welcomed him with rich blessings; You placed on his head a crown of pure gold.
3 உண்மையில் நலமிகு கொடைகள் ஏந்தி நீர் அவரை எதிர்கொண்டீர்; § அவர் தலையில் பசும்பொன்முடி சூட்டினீர்.

4חַיִּ֤ים ׀ שָׁאַ֣ל מִ֭מְּךָ נָתַ֣תָּה לּ֑וֹ אֹ֥רֶךְ יָ֝מִ֗ים עוֹלָ֥ם וָעֶֽד׃

4 அவர் உம்மிடத்தில் ஆயுசைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர்.
4 He asked You for life, and You granted it—length of days, forever and ever.
4 அவர் உம்மிடம் வாழ்வுவேண்டி நின்றார்; நீரும் முடிவில்லா நீண்ட ஆயுளை § அவருக்கு அளித்தீர்.

5גָּד֣וֹל כְּ֭בוֹדוֹ בִּישׁוּעָתֶ֑ךָ ה֥וֹד וְ֝הָדָר תְּשַׁוֶּ֥ה עָלָֽיו׃

5 உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாயிருக்கிறது; மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு அருளினீர்.
5 Great is his glory in Your salvation; You bestow on him splendor and majesty.
5 நீர் அவருக்கு வெற்றியளித்ததால் அவரது மாட்சிமை பெரிதாயிற்று; மேன்மையையும் மாண்பையும் அவருக்கு அருளினீர்,

6כִּֽי־תְשִׁיתֵ֣הוּ בְרָכ֣וֹת לָעַ֑ד תְּחַדֵּ֥הוּ בְ֝שִׂמְחָ֗ה אֶת־פָּנֶֽיךָ׃

6 அவரை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.
6 For You grant him blessings forever; You cheer him with joy in Your presence.
6 உண்மையாகவே, எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிகளை அவர் பெற்றுள்ளார்; உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன் கண்டு களிக்கச் செய்தீர்.

7כִּֽי־הַ֭מֶּלֶךְ בֹּטֵ֣חַ בַּיהוָ֑ה וּבְחֶ֥סֶד עֶ֝לְי֗וֹן בַּל־יִמּֽוֹט׃

7 ராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார்: உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார்.
7 For the king trusts in the LORD; through the loving devotion of the Most High, he will not be shaken.
7 ஏனெனில், அரசர் ஆண்டவரில் நம்பிக்கை வைக்கின்றார்; உன்னதரின் பேரன்பினால் அவர் அசைவுறாதிருப்பார்.

8תִּמְצָ֣א יָ֭דְךָ לְכָל־אֹיְבֶ֑יךָ יְ֝מִֽינְךָ תִּמְצָ֥א שֹׂנְאֶֽיךָ׃

8 உமது கை உமது சத்துருக்களெல்லாரையும் எட்டிப்பிடிக்கும்; உமதுவலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்.
8 Your hand will apprehend all Your enemies; Your right hand will seize those who hate You.
8 உமது கை உம் எதிரிகளையெல்லாம் தேடிப்பிடிக்கும்; உமது வலக்கை உம்மை வெறுப்போரை எட்டிப்பிடிக்கும்.

9תְּשִׁיתֵ֤מוֹ ׀ כְּתַנּ֥וּר אֵשׁ֮ לְעֵ֢ת פָּ֫נֶ֥יךָ יְ֭הוָה בְּאַפּ֣וֹ יְבַלְּעֵ֑ם וְֽתֹאכְלֵ֥ם אֵֽשׁ׃

9 உமது கோபத்தின் காலத்திலே அவர்களை அக்கினிச் சூளையாக்கிப்போடுவீர்; கர்த்தர் தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; அக்கினி அவர்களைப் பட்சிக்கும்.
9 You will place them in a fiery furnace at the time of Your appearing. In His wrath the LORD will engulf them, and the fire will consume them.
9 நீர் காட்சியளிக்கும்பொழுது, அவர்களை நெருப்புச்சூளை ஆக்குவீர்; ஆண்டவர் சினங்கொண்டு அவர்களை அழிப்பார்; நெருப்பு அவர்களை விழுங்கிவிடும்.

10פִּ֭רְיָמוֹ מֵאֶ֣רֶץ תְּאַבֵּ֑ד וְ֝זַרְעָ֗ם מִבְּנֵ֥י אָדָֽם׃

10 அவர்கள் கனியை பூமியிலிராதபடி நீர் அழித்து, அவர்கள் சந்ததியை மனுபுத்திரரிலிராதபடி ஒழியப்பண்ணுவீர்.
10 You will wipe their descendants from the earth, and their offspring from the sons of men.
10 அவர்கள் தலைமுறையைப் பூவுலகினின்று ஒழித்துவிடுவீர்; அவர்கள் வழிமரபை மனு மக்களிடமிருந்து எடுத்துவிடுவீர்.

11כִּי־נָט֣וּ עָלֶ֣יךָ רָעָ֑ה חָֽשְׁב֥וּ מְ֝זִמָּ֗ה בַּל־יוּכָֽלוּ׃

11 அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பொல்லாங்கு நினைத்தார்கள்: தீவினையை எத்தனம்பண்ணினார்கள்; ஒன்றும் வாய்க்காமற்போயிற்று.
11 Though they intend You harm, the schemes they devise will not prevail.
11 உமக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும், சதித்திட்டம் தீட்டினாலும், அவர்களால் வெற்றிபெற இயலாது.

12כִּ֭י תְּשִׁיתֵ֣מוֹ שֶׁ֑כֶם בְּ֝מֵֽיתָרֶ֗יךָ תְּכוֹנֵ֥ן עַל־פְּנֵיהֶֽם׃

12 அவர்களை இலக்காக வைத்து, உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே விடுகிறீர்.
12 For You will put them to flight when Your bow is trained upon them.
12 நீரோ அம்புகளை நாணேற்றி அவர்களது முகத்தில் எய்வீர்; அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்வீர்.

13ר֣וּמָה יְהוָ֣ה בְּעֻזֶּ֑ךָ נָשִׁ֥ירָה וּֽ֝נְזַמְּרָה גְּבוּרָתֶֽךָ׃

13 கர்த்தாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடிக்கீர்த்தனம்பண்ணுவோம்.
13 Be exalted, O LORD, in Your strength; we will sing and praise Your power.
13 ஆண்டவரே, உமது வலிமையோடு எழுந்து வாரும்; நாங்கள் உமது வல்லமையைப் புகழ்ந்து பாடுவோம்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Psalms Chapter 1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   next>

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.