பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Psalms சங்கீதம் תְהִלִּים
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 அடுத்தது >
(நினைவுகூருதலுக்காகத் தாவீது பாடின லியாஸ்கர் என்னும் சங்கீதம்)
சங்கீதம் 38 | Psalms 38
Do Not Rebuke Me in Your Anger (Psalm 6:1–10)
A Psalm of David, for remembrance.
1 கர்த்தாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும்; உம்முடைய உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும்.
1 A Psalm of David, for remembrance. O LORD, do not rebuke me in Your anger or discipline me in Your wrath.
1 ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு என்னைக் கண்டியாதேயும்; என் மீது சீற்றம்கொண்டு என்னைத் தண்டியாதேயும்;
2 உம்முடைய அம்புகள் எனக்குள்ளே தைத்திருக்கிறது; உமது கை என்னை இருத்துகிறது.
2 For Your arrows have pierced me deeply, and Your hand has pressed down on me.
2 ஏனெனில், உம் அம்புகள் என்னுள் பாய்ந்திருக்கின்றன; உமது கை என்னை அழுத்திக் கொண்டிருக்கின்றது.
3 உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை.
3 There is no soundness in my body because of Your anger; there is no rest in my bones because of my sin.
3 நீர் கடுஞ்சினங்கொண்டதால் என் உடலில் நலமே இல்லை; என் பாவத்தால் என் எலும்புகளில் வலுவே இல்லை.
4 என் அக்கிரமங்கள் என் தலைக்குமேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக் கூடாத பாரமாயிற்று.
4 For my iniquities have overwhelmed me; they are a burden too heavy to bear.
4 என் குற்றங்கள் தலைக்குமேல் போய்விட்டன; தாங்கவொண்ணாச் சுமைபோல அவை என்னை வெகுவாய் § அழுத்துகின்றன.
5 என் மதிகேட்டினிமித்தம் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
5 My wounds are foul and festering because of my sinful folly.
5 என் புண்கள் அழுகி நாற்றமெடுக்கின்றன; என் மதிகேடுதான் இதற்கெல்லாம் காரணம்.
6 நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள்முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.
6 I am bent and brought low; all day long I go about mourning.
6 நான் மிகவும் ஒடுங்கிப்போனேன்; நாளெல்லாம் துயருற்றுத் திரிகின்றேன்.
7 என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது, என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை.
7 For my loins are full of burning pain, and no soundness remains in my body.
7 என் குடல் முற்றிலும் வெந்து போயிற்று; என் உடலில் சற்றேனும் நலம் இல்லை.
8 நான் பெலனற்றுப்போய், மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன்.
8 I am numb and badly crushed; I groan in anguish of heart.
8 நான் வலுவற்றுப் போனேன்; முற்றிலும் நொறுங்கிப்போனேன்; என் உள்ளக் கொதிப்பினால் கதறுகின்றேன்.
9 ஆண்டவரே, என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை.
9 O Lord, my every desire is before You; my groaning is not hidden from You.
9 என் தலைவரே, என் பெருமூச்செல்லாம் உமக்குத் தெரியும்; என் வேதனைக் குரல் உமக்கு மறைவாயில்லை.
10 என் உள்ளம் குழம்பி அலைகிறது; என் பெலன் என்னை விட்டு விலகி, என் கண்களின் ஒளி முதலாய் இல்லாமற்போயிற்று.
10 My heart pounds, my strength fails, and even the light of my eyes has faded.
10 என் உள்ளம் வேதனையால் துடிக்கின்றது; என் வலிமை என்னைவிட்டு அகன்றது; என் கண்களும்கூட ஒளி இழந்தன.
11 என் சிநேகிதரும் என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.
11 My beloved and friends shun my disease, and my kinsmen stand at a distance.
11 என் நண்பர்களும் தோழர்களும் நான் படும் வாதை கண்டு விலகி நிற்கின்றனர்; என் உறவினரும் என்னைவிட்டு ஒதுங்கி நிற்கின்றனர்.
12 என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குப் பொல்லாங்கு தேடுகிறவர்கள் கேடானவைகளைப்பேசி, நாள்முழுதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள்.
12 Those who seek my life lay snares; those who wish me harm speak destruction, plotting deceit all day long.
12 என் உயிரைப் பறிக்கத்தேடுவோர் எனக்குக் கண்ணி வைக்கின்றனர்; எனக்குத் தீங்கிழைக்கத் துணிந்தோர் என் அழிவைப் பற்றிப் பேசுகின்றனர்; எப்போதும் எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்கின்றனர்.
13 நானோ செவிடனைப்போலக் கேளாதவனாகவும், ஊமையனைப்போல வாய்திறவாதவனாகவும் இருக்கிறேன்.
13 But like a deaf man, I do not hear; and like a mute man, I do not open my mouth.
13 நானோ செவிடர்போல் காது கேளாமலும் ஊமைபோல் வாய் திறவாமலும் § இருக்கின்றேன்.
14 காதுகேளாதவனும், தன் வாயில் மறு உத்தரவுகளில்லாதவனுமாயிருக்கிற மனுஷனைப்போலானேன்.
14 I am like a man who cannot hear, whose mouth offers no reply.
14 உண்மையாகவே, நான் செவிப்புலனற்ற மனிதர் போலும் மறுப்புரை கூறாத நாவினர் போலும் ஆனேன்;
15 கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறு உத்தரவு அருளினீர்.
15 I wait for You, O LORD; You will answer, O Lord my God.
15 ஏனெனில் ஆண்டவரே, நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்; என் தலைவராகிய கடவுளே, செவிசாய்த்தருளும்.
16 அவர்கள் என்னிமித்தம் சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச்சொன்னேன்; என் கால் தவறும்போது என்மேல் பெருமைபாராட்டுவார்களே.
16 For I said, “Let them not gloat over me—those who taunt me when my foot slips.”
16 'அவர்கள் என்னைப் பார்த்துக் களிக்க விடாதேயும்; என் கால் தடுமாறினால் அவர்கள் பெருமை கொள்வர்' என்று சொன்னேன்.
17 நான் தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறேன்; என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறது.
17 For I am ready to fall, and my pain is ever with me.
17 நான் தடுமாறிவிழும் நிலையில் இருக்கின்றேன்; நான் எப்போதும் வேதனையில் உள்ளேன்.
18 என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்தினிமித்தம் விசாரப்படுகிறேன்.
18 Yes, I confess my iniquity; I am troubled by my sin.
18 என் குற்றத்தை நான் அறிக்கையிடுகின்றேன்; என் பாவத்தின் பொருட்டு நான் அஞ்சுகின்றேன்.
19 என் சத்துருக்கள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்; முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள்.
19 Many are my enemies without cause, and many hate me without reason.b
19 காரணமின்றி என்னைப் பகைப்போர் வலுவாய் உள்ளனர்; வீணாக என்னை வெறுப்போர் பலராய் உள்ளனர்;
20 நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள்.
20 Those who repay my good with evil attack me for pursuing the good.
20 நன்மைக்குப் பதிலாக அவர்கள் எனக்குத் தீமை செய்கின்றனர்; நன்மையே நாடும் என்னைப் பகைக்கின்றனர்;
21 கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்; என் தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்.
21 Do not forsake me, O LORD; be not far from me, O my God.
21 ஆண்டவரே! என்னைக் கைவிடாதேயும்; என் கடவுளே! என்னைவிட்டு அகன்றுவிடாதேயும்.
22 என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்.
22 Come quickly to help me, O Lord my Savior.
22 என் தலைவரே! மீட்பரே! எனக்குத் துணைசெய்ய விரைந்து வாரும்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
19 a One DSS manuscript; MT My enemies are vigorous and strong
19 b See John 15:25
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.