பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Psalms சங்கீதம் תְהִלִּים
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 அடுத்தது >
(நெகினோத் என்னும் வாத்தியத்தில் செமினீத் என்னும் இராகத்தால் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)
சங்கீதம் 6 | Psalms 6
Do Not Rebuke Me in Your Anger (Psalm 38:1–22)
For the choirmaster. With stringed instruments, according to Sheminith. a A Psalm of David.
1 கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.
1 For the choirmaster. With stringed instruments, according to Sheminith. A Psalm of David. O LORD, do not rebuke me in Your anger or discipline me in Your wrath.
1 ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு என்னைக் கண்டியாதேயும்; என் மீது கடுஞ்சீற்றங்கொண்டு என்னைத் தண்டியாதேயும்.
2 என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகிறது.
2 Be merciful to me, O LORD, for I am frail; heal me, O LORD, for my bones are in agony.
2 ஆண்டவரே, எனக்கு இரங்கும்; ஏனெனில், நான் தளர்ந்து போனேன்; ஆண்டவரே, என்னைக் குணமாக்கியருளும்; ஏனெனில், என் எலும்புகள் § வலுவிழந்து போயின.
3 என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்.
3 My soul is deeply distressed. How long, O LORD, how long?
3 என் உயிர் ஊசலாடுகின்றது; ஆண்டவரே, இந்நிலை எத்தனை நாள்?
4 திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும்.
4 Turn, O LORD, and deliver my soul; save me because of Your loving devotion.
4 ஆண்டவரே, திரும்பும்; என் உயிரைக் காப்பாற்றும். உமது பேரன்பை முன்னிட்டு என்னை மீட்டருளும்.
5 மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை. பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?
5 For there is no mention of You in death; who can praise You from Sheol?
5 இறந்தபின் உம்மை நினைப்பவர் எவருமில்லை; பாதாளத்தில் உம்மைப் போற்றுபவர் யார்?
6 என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்.
6 I am weary from groaning; all night I flood my bed with weeping and drench my couch with tears.
6 பெருமூச்சினால் இளைத்துப் போனேன்; ஒவ்வோர் இரவும் கண்ணீரில் என் படுக்கை மிதக்கின்றது. என் கட்டில் அழுகையால் நனைகின்றது.
7 துயரத்தினால் என் கண்கள் குழிவிழுந்துபோயிற்று; என் சத்துருக்கள் அனைவர்நிமித்தமும் மங்கிப்போயிற்று.
7 My eyes fail from grief; they grow dim because of all my foes.
7 துயரத்தால் என் கண் வீங்கிப்போயிற்று; என் பகைவர் அனைவரின் காரணமாக அது மங்கிப்போயிற்று.
8 அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.
8 Depart from me, all you workers of iniquity, for the LORD has heard my weeping.
8 தீங்கிழைப்போரே! நீங்கள் அனைவரும் என்னை விட்டு அகன்றுபோங்கள்; ஏனெனில், ஆண்டவர் என் அழுகுரலுக்குச் செவிசாய்த்து விட்டார்.*
* திபா 38:1.
9 கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.
9 The LORD has heard my cry for mercy; the LORD accepts my prayer.
9 ஆண்டவர் என் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்; அவர் என் வேண்டுதலை ஏற்றுக்கொண்டார்.
10 என் பகைஞர் எல்லாரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பிச் சடிதியிலே வெட்கப்படுவார்கள்.
10 All my enemies will be ashamed and dismayed; they will turn back in sudden disgrace.
10 என் எதிரிகள் யாவரும் வெட்கிப் பெரிதும் கலங்கட்டும்; அவர்கள் திடீரென நாணமுற்றுத் திரும்பிச் செல்லட்டும்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a Sheminith is probably a musical term; here and in 1 Chronicles 15:21 and Psalm 12:1.
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.