பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Psalms சங்கீதம் תְהִלִּים
(ஆசாபின் சங்கீதம்)
சங்கீதம் 82 | Psalms 82
God Presides in the Divine Assembly
A Psalm of Asaph.
1 தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.
1 A Psalm of Asaph. God presides in the divine assembly; He renders judgment among the gods:
1 தெய்வீக சபையில் கடவுள் எழுந்தருளியிருக்கின்றார்; தெய்வங்களிடையே அவர் நீதித்தீர்ப்பு வழங்குகின்றார்.
2 எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச்செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்கள். (சேலா.)
2 “How long will you judge unjustly and show partiality to the wicked? Selah
2 'எவ்வளவு காலம் நீங்கள் நேர்மையற்ற தீர்ப்பு வழங்குவீர்கள்? எவ்வளவு காலம் பொல்லாருக்குச் சலுகை காட்டுவீர்கள்? (சேலா)
3 ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.
3 Defend the cause of the weak and fatherless; uphold the rights of the afflicted and oppressed.
3 எளியோர்க்கும் திக்கற்றவர்க்கும் நீதி வழங்குங்கள்; சிறுமையுற்றோர்க்கும் ஏழைகட்கும் நியாயம் வழங்குங்கள்!
4 பலவீனனையும் எளியவனையும் விடுவித்து துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.
4 Rescue the weak and needy; save them from the hand of the wicked.
4 எளியோரையும் வறியோரையும் விடுவியுங்கள்! பொல்லாரின் பிடியினின்று அவர்களுக்கு விடுதலை அளியுங்கள்!
5 அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.
5 They do not know or understand; they wander in the darkness; all the foundations of the earth are shaken.
5 உங்களுக்கு அறிவுமில்லை; உணர்வுமில்லை; நீங்கள் இருளில் நடக்கின்றீர்கள்; பூவுலகின் அடித்தளங்கள் அனைத்துமே அசைந்துவிட்டன.
6 நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.
6 I have said, ‘You are gods; you are all sons of the Most High.’b
6 'நீங்கள் தெய்வங்கள்; நீங்கள் எல்லாரும் உன்னதரின் புதல்வர்கள்.*
* யோவா 10:34.
7 ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள்.
7 But like mortals you will die, and like rulers you will fall.”
7 ஆயினும், நீங்களும் மனிதர்போன்று மடிவீர்கள்; தலைவர்களுள் ஒருவர் போல வீழ்வீர்கள்' என்றேன்.
8 தேவனே எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே சகல ஜாதிகளையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.
8 Arise, O God, judge the earth, for all the nations are Your inheritance.
8 கடவுளே, உலகில் எழுந்தருளும், அதில் நீதியை நிலைநாட்டும்; ஏனெனில், எல்லா நாட்டினரும் உமக்கே சொந்தம்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
2 a Or How long will you defend the unjust
6 b Cited in John 10:34
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.