பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

John  யோவான்  Ἰωάννην

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

யோவான் 10 | John 10

Jesus the Good Shepherd (Psalm 23:1–6; Ezekiel 34:11–24)

1Ἀμὴν ἀμὴν λέγω ὑμῖν ὁ μὴ εἰσερχόμενος εἰς τὴν αὐλὴν τῶν προβάτων διὰ τῆς θύρας ἀλλὰ ἀναβαίνων ἀλλαχόθεν ἐκεῖνος ἐστὶν κλέπτης καὶ λῃστής

1 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்.
1 “Truly, truly, I tell you, whoever does not enter the sheepfold by the gate, but climbs in some other way, is a thief and a robber.
1 "நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர்.

2δὲ ὁ εἰσερχόμενος διὰ τῆς θύρας ἐστιν ποιμήν τῶν προβάτων

2 வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்.
2 But the one who enters by the gate is the shepherd of the sheep.
2 வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர்.

3ὁ θυρωρὸς ἀνοίγει τούτῳ καὶ τὰ πρόβατα ἀκούει αὐτοῦ τῆς φωνῆς καὶ φωνεῖ τὰ ἴδια πρόβατα κατ’ ὄνομα καὶ ἐξάγει αὐτά

3 வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான்.
3 The gatekeeper opens the gate for him, and the sheep listen for his voice. He calls his own sheep by name and leads them out.
3 அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும். அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார்.

4Ὅταν ἐκβάλῃ πάντα τὰ ἴδια πορεύεται ἔμπροσθεν αὐτῶν καὶ τὰ πρόβατα ἀκολουθεῖ αὐτῷ ὅτι οἴδασιν αὐτοῦ τὴν φωνὴν

4 அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.
4 When he has brought out all his own, he goes on ahead of them, and his sheep follow him because they know his voice.
4 தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின் அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில், அவரது குரல் அவற்றுக்குத் தெரியும்.1

5δὲ οὐ μὴ ἀκολουθήσουσιν ἀλλοτρίῳ ἀλλὰ φεύξονται ἀπ’ αὐτοῦ ὅτι οὐκ οἴδασιν τὴν φωνήν τῶν ἀλλοτρίων

5 அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார்.
5 But they will never follow a stranger; in fact, they will flee from him because they do not recognize his voice.”
5 அறியாத ஒருவரை அவை பின் தொடரா. அவரை விட்டு அவை ஓடிப்போகும். ஏனெனில், அவரது குரல் அவற்றுக்குத் தெரியாது."

6ὁ Ἰησοῦς εἶπεν αὐτοῖς Ταύτην τὴν παροιμίαν δὲ ἐκεῖνοι οὐκ ἔγνωσαν τίνα ἦν ἃ ἐλάλει αὐτοῖς

6 இந்த உவமையை இயேசு அவர்களுடனே சொன்னார்; அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை.
6 Jesus spoke to them using this illustration, but they did not understand what He was telling them.
6 இயேசு அவர்களிடம் உவமையாக இவ்வாறு சொன்னார். ஆனால், அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

7οὖν ὁ Ἰησοῦς Εἶπεν ‹αὐτοῖς› πάλιν Ἀμὴν ἀμὴν λέγω ὑμῖν ὅτι ἐγώ εἰμι ἡ θύρα τῶν προβάτων

7 ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
7 So He said to them again, “Truly, truly, I tell you, I am the gate for the sheep.
7 மீண்டும் இயேசு கூறியது: "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆடுகளுக்கு வாயில் நானே.

8πάντες ὅσοι ἦλθον πρὸ ἐμοῦ εἰσὶν κλέπται καὶ λῃσταί ἀλλ’ τὰ πρόβατα οὐκ ἤκουσαν αὐτῶν

8 எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.
8 All who came before Mea were thieves and robbers, but the sheep did not listen to them.
8 எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே. அவர்களுக்கு ஆடுகள் செவிசாய்க்கவில்லை.

9ἐγώ εἰμι ἡ θύρα ἐάν τις εἰσέλθῃ δι’ ἐμοῦ σωθήσεται καὶ εἰσελεύσεται καὶ ἐξελεύσεται καὶ εὑρήσει νομὴν

9 நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
9 I am the gate. If anyone enters through Me, he will be saved. He will come in and go out and find pasture.
9 நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர்.2

10ὁ κλέπτης ἔρχεται οὐκ εἰ μὴ ἵνα κλέψῃ καὶ θύσῃ καὶ ἀπολέσῃ ἐγὼ ἦλθον ἵνα ἔχωσιν ζωὴν καὶ ἔχωσιν περισσὸν

10 திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
10 The thief comes only to steal and kill and destroy. I have come that they may have life, and have it in all its fullness.
10 திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால், நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்.3

11Ἐγώ εἰμι ὁ ὁ καλός ποιμὴν ὁ ὁ καλὸς ποιμὴν τίθησιν αὐτοῦ τὴν ψυχὴν ὑπὲρ τῶν προβάτων

11 நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
11 I am the good shepherd. The good shepherd lays down His life for the sheep.
11 நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.4

12καὶ ὁ μισθωτὸς ὢν οὐκ ποιμήν τὰ πρόβατα ἔστιν οὐκ οὗ ἴδια θεωρεῖ τὸν λύκον ἐρχόμενον καὶ ἀφίησιν τὰ πρόβατα καὶ φεύγει καὶ ὁ λύκος ἁρπάζει αὐτὰ καὶ σκορπίζει

12 மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்.
12 The hired hand is not the shepherd, and the sheep are not his own. When he sees the wolf coming, he abandons the sheep and runs away. Then the wolf pounces on them and scatters the flock.
12 "கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில், அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல; ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும்.5

13ὅτι ἐστιν μισθωτός καὶ οὐ μέλει αὐτῷ περὶ τῶν προβάτων

13 கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான்.
13 The man runs away because he is a hired servant and is unconcerned for the sheep.
13 கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை.

14Ἐγώ εἰμι ὁ ὁ καλός ποιμὴν καὶ γινώσκω τὰ ἐμὰ καὶ τὰ ἐμά γινώσκουσί με

14 நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,
14 I am the good shepherd. I know My sheep and My sheep know Me,
14 ❮14-15❯நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்.

15καθὼς ὁ Πατὴρ γινώσκει με κἀγὼ γινώσκω τὸν Πατέρα καὶ τίθημι μου τὴν ψυχήν ὑπὲρ τῶν προβάτων

15 நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.
15 just as the Father knows Me and I know the Father. And I lay down My life for the sheep.

16καὶ ἔχω ἄλλα πρόβατα ἃ ἔστιν οὐκ ἐκ ταύτης τῆς αὐλῆς με δεῖ ἀγαγεῖν κἀκεῖνα καὶ ἀκούσουσιν μου τῆς φωνῆς καὶ γενήσονται* μία ποίμνη εἷς ποιμήν

16 இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.
16 I have other sheep that are not of this fold. I must bring them in as well, and they will listen to My voice. Then there will be one flock and one shepherd.
16 இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும்.7

17Διὰ τοῦτό ὁ Πατὴρ ἀγαπᾷ με ὅτι ἐγὼ τίθημι μου τὴν ψυχήν ἵνα λάβω αὐτήν πάλιν

17 நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.
17 The reason the Father loves Me is that I lay down My life in order to take it up again.
17 தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில், நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன்.

18οὐδεὶς αἴρει* αὐτὴν ἀπ’ ἐμοῦ ἀλλ’ ἐγὼ τίθημι αὐτὴν ἀπ’ ἐμαυτοῦ ἔχω ἐξουσίαν θεῖναι αὐτήν καὶ ἔχω ἐξουσίαν λαβεῖν αὐτήν πάλιν ταύτην τὴν ἐντολὴν ἔλαβον παρὰ μου τοῦ Πατρός

18 ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.
18 No one takes it from Me, but I lay it down of My own accord. I have authority to lay it down and authority to take it up again. This charge I have received from My Father.”
18 என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்."

19πάλιν ἐγένετο Σχίσμα ἐν τοῖς Ἰουδαίοις διὰ τούτους τοὺς λόγους

19 இந்த வசனங்களினிமித்தம் யூதருக்குள்ளே மறுபடியும் பிரிவினையுண்டாயிற்று.
19 Again there was division among the Jews because of Jesus’ message.
19 இவ்வாறு இயேசு சொன்னதால் யூதரிடையே மீண்டும் பிளவு ஏற்பட்டது.

20δὲ πολλοὶ ἐξ αὐτῶν ἔλεγον ἔχει Δαιμόνιον καὶ μαίνεται τί ἀκούετε αὐτοῦ

20 அவர்களில் அநேகர்: இவன் பிசாசுபிடித்தவன், பயித்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவிகொடுக்கிறீர்கள் என்றார்கள்.
20 Many of them said, “He is demon-possessed and insane. Why would you listen to Him?”
20 அவர்களுள் பலர், "அவனுக்குப் பேய்பிடித்துவிட்டது; பித்துப்பிடித்து அலைகிறான்; ஏன் அவன் பேச்சைக் கேட்கிறீர்கள்?" என்று பேசிக் கொண்டனர்.

21Ἄλλοι ἔλεγον Ταῦτα ἔστιν οὐκ τὰ ῥήματα δαιμονιζομένου μὴ δύναται δαιμόνιον ἀνοῖξαι ὀφθαλμοὺς τυφλῶν

21 வேறே சிலர்: இவைகள் பிசாசுபிடித்தவனுடைய வசனங்களல்லவே. குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள்.
21 But others replied, “These are not the words of a man possessed by a demon. Can a demon open the eyes of the blind?”
21 ஆனால், மற்றவர்கள், "பேய் பிடித்தவனுடைய பேச்சு இப்படியா இருக்கும்? பார்வை அற்றோருக்குப் பேயால் பார்வை அளிக்க இயலுமா?" என்று கேட்டார்கள்.

Jesus at the Feast of Dedication

22τότε τὰ ἐνκαίνια Ἐγένετο ἐν τοῖς Ἱεροσολύμοις ἦν χειμὼν

22 பின்பு எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டைபண்டிகை வந்தது; மாரிகாலமுமாயிருந்தது.
22 At that time the Feast of Dedicationb took place in Jerusalem. It was winter,
22 எருசலேமில் கோவில் அர்ப்பண விழா நடந்துகொண்டிருந்தது. அப்போது குளிர்காலம்.

23καὶ ὁ Ἰησοῦς περιεπάτει ἐν τῷ ἱερῷ ἐν τῇ τοῦ Σολομῶνος στοᾷ

23 இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார்.
23 and Jesus was walking in the temple courts in Solomon’s Colonnade.
23 கோவிலின் சாலமோன் மண்டபத்தில் இயேசு நடந்து கொண்டிருந்தார்.

24οὖν οἱ Ἰουδαῖοι ἐκύκλωσαν αὐτὸν καὶ ἔλεγον αὐτῷ Ἕως πότε αἴρεις ἡμῶν τὴν ψυχὴν εἰ σὺ εἶ ὁ Χριστός εἰπὲ* ἡμῖν παρρησίᾳ

24 அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள்.
24 So the Jews gathered around Him and demanded, “How long will You keep us in suspense? If You are the Christ, tell us plainly.”
24 யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, "இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்" என்று கேட்டார்கள்.

25Εἶπον ὑμῖν ὁ Ἰησοῦς Ἀπεκρίθη αὐτοῖς καὶ οὐ πιστεύετε τὰ ἔργα ἃ ἐγὼ ποιῶ ἐν τῷ τοῦ μου Πατρός ὀνόματι ταῦτα μαρτυρεῖ περὶ ἐμοῦ

25 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது.
25 “I already told you,” Jesus replied, “but you did not believe. The works I do in My Father’s name testify on My behalf.
25 இயேசு மறுமொழியாக, "நான் உங்களிடம் சொன்னேன்; நீங்கள் தான் நம்பவில்லை. என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன.

26ἀλλὰ ὅτι ἐστὲ οὐκ ἐκ τῶν ἐμῶν τῶν προβάτων ὑμεῖς οὐ πιστεύετε

26 ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்.
26 But because you are not My sheep, you refuse to believe.
26 ஆனால், நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள். ஏனெனில், நீங்கள் என் மந்தையை சேர்ந்தவர்கள் அல்ல.8

27τὰ ἐμὰ τὰ πρόβατα ἀκούουσιν μου τῆς φωνῆς κἀγὼ γινώσκω αὐτά καὶ ἀκολουθοῦσίν μοι

27 என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.
27 My sheep listen to My voice; I know them, and they follow Me.
27 என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.

28κἀγὼ δίδωμι αὐτοῖς αἰώνιον ζωὴν καὶ οὐ μὴ ἀπόλωνται εἰς τὸν αἰῶνα καὶ οὐχ τις ἁρπάσει αὐτὰ ἐκ μου τῆς χειρός

28 நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.
28 I give them eternal life, and they will never perish. No one can snatch them out of My hand.
28 நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார்.

29μου ὁ Πατήρ ὃ δέδωκέν μοι ἐστιν μεῖζόν πάντων καὶ οὐδεὶς δύναται ἁρπάζειν ἐκ τῆς τοῦ Πατρός χειρὸς

29 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
29 My Father who has given them to Me is greater than all. No one can snatch them out of My Father’s hand.
29 அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது.910

9 " என் தந்தை எனக்களித்தது அனைத்திலும் பெரிது. அதை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது" எனவும் இவ்வசனத்தை மொழிபெயர்க்கலாம்.

10 இச 32:39; எசா 43:13.

30ἐγὼ καὶ ὁ Πατὴρ ἐσμεν ἕν

30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
30 I and the Father are one.”
30 நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்" என்றார்.

31‹οὖν› οἱ Ἰουδαῖοι πάλιν Ἐβάστασαν λίθους ἵνα λιθάσωσιν αὐτόν

31 அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள்.
31 At this, the Jews again picked up stones to stone Him.
31 அவர்மேல் எறிய யூதர்கள் மீண்டும் கற்களை எடுத்தனர்.

32ὁ Ἰησοῦς ἀπεκρίθη αὐτοῖς «ἔδειξα ὑμῖν» Πολλὰ καλὰ ἔργα ἐκ τοῦ Πατρός διὰ ποῖον ἔργον αὐτῶν λιθάζετε ἐμὲ

32 இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.
32 But Jesus responded, “I have shown you many good works from the Father. For which of these do you stone Me?”
32 இயேசு அவர்களைப் பார்த்து, "தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள் முன் செய்து காட்டியிருக்கிறேன். அவற்றுள் எச்செயலுக்காக என்மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்?" என்று கேட்டார்.

33οὐ λιθάζομέν σε Περὶ καλοῦ ἔργου Ἀπεκρίθησαν οἱ Ἰουδαῖοι αὐτῷ ἀλλὰ περὶ βλασφημίας καὶ ὅτι σὺ ὢν ἄνθρωπος ποιεῖς σεαυτὸν Θεόν

33 யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி இவ்விதமாக தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.
33 “We are not stoning You for any good work,” said the Jews, “but for blasphemy, because You, who are a man, declare Yourself to be God.”
33 யூதர்கள் மறுமொழியாக, "நற்செயல்களுக்காக அல்ல, இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில், மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்" என்றார்கள்.11

34ὁ Ἰησοῦς Ἀπεκρίθη αὐτοῖς ἔστιν Οὐκ γεγραμμένον ἐν ὑμῶν τῷ νόμῳ ὅτι Ἐγὼ εἶπα ἐστε Θεοί

34 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா?
34 Jesus replied, “Is it not written in your Law: ‘I have said you are gods’?d
34 இயேசு அவர்களைப் பார்த்து, "'நீங்கள் தெய்வங்கள் என நான் கூறினேன்' என்று உங்கள் மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா?12

35εἰ εἶπεν ἐκείνους θεοὺς πρὸς οὓς ὁ λόγος τοῦ Θεοῦ ἐγένετο καὶ ἡ γραφή οὐ δύναται λυθῆναι

35 தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,
35 If he called them gods to whom the word of God came—and the Scripture cannot be broken—
35 கடவுளுடைய வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது.13

36ὃν ὁ Πατὴρ ἡγίασεν καὶ ἀπέστειλεν εἰς τὸν κόσμον ὅτι ὑμεῖς λέγετε Βλασφημεῖς ὅτι εἶπον εἰμι Υἱὸς τοῦ Θεοῦ

36 பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?
36 then what about the One whom the Father sanctified and sent into the world? How then can you accuse Me of blasphemy for stating that I am the Son of God?
36 அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை 'இறை மகன்' என்று சொல்லிக் கொண்டதற்காக 'இறைவனைப் பழித்துரைக்கிறாய்' என நீங்கள் எப்படிச் சொல்லலாம்?

37Εἰ οὐ ποιῶ τὰ ἔργα τοῦ μου Πατρός μὴ πιστεύετέ μοι

37 என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை.
37 If I am not doing the works of My Father, then do not believe Me.
37 நான் என் தந்தைக்குரிய செயல்களைச் செய்யவில்லை என்றால் நீங்கள் என்னை நம்ப வேண்டாம்.

38δὲ εἰ ποιῶ κἂν μὴ πιστεύητε ἐμοὶ πιστεύετε τοῖς ἔργοις ἵνα γνῶτε καὶ γινώσκητε ὅτι ὁ Πατὴρ ἐν ἐμοὶ κἀγὼ ἐν τῷ Πατρί

38 செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்.
38 But if I am doing them, even though you do not believe Me, believe the works themselves, so that you may know and understand that the Father is in Me, and I am in the Father.”
38 ஆனால், நான் அவற்றைச் செய்தால், என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்; அதன்மூலம் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்" என்றார்.14

39οὖν Ἐζήτουν πάλιν πιάσαι αὐτὸν καὶ ἐξῆλθεν ἐκ αὐτῶν τῆς χειρὸς

39 இதினிமித்தம் அவர்கள் மறுபடியும் அவரைப் பிடிக்க தேடினார்கள், அவரோ அவர்கள் கைக்குத் தப்பி,
39 At this, they tried again to seize Him, but He escaped their grasp.
39 இதைக் கேட்டு அவர்கள் அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆனால், அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார்.15

John’s Testimony Confirmed

40Καὶ ἀπῆλθεν πάλιν πέραν τοῦ Ἰορδάνου εἰς τὸν τόπον ὅπου Ἰωάννης ἦν τὸ πρῶτον βαπτίζων καὶ ἔμεινεν* ἐκεῖ

40 யோர்தானுக்கு அக்கரையிலே முன்னே யோவான் ஞானஸ்நானங்கொடுத்துக்கொண்டிருந்த இடத்துக்குத் திரும்பிப்போய், அங்கே தங்கினார்.
40 Then Jesus went back across the Jordan to the place where John had first been baptizing, and He stayed there.
40 யோர்தானுக்கு அப்பால் யோவான் முதலில் திருமுழுக்குக் கொடுத்துவந்த இடத்திற்கு இயேசு மீண்டும் சென்று அங்குத் தங்கினார்.16

41καὶ πολλοὶ ἦλθον πρὸς αὐτὸν καὶ ἔλεγον ὅτι μὲν Ἰωάννης οὐδέν ἐποίησεν σημεῖον δὲ πάντα ὅσα Ἰωάννης εἶπεν περὶ τούτου ἦν ἀληθῆ

41 அநேகர் அவரிடத்தில் வந்து: யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை; ஆகிலும் இவரைக்குறித்து யோவான் சொன்னதெல்லாம் மெய்யாயிருக்கிறது என்றார்கள்.
41 Many came to Him and said, “Although John never performed a sign, everything he said about this man was true.”
41 பலர் அவரிடம் வந்தனர். அவர்கள், "யோவான் அரும் அடையாளம் எதையும் செய்யவில்லை; ஆனால், அவர் இவரைப்பற்றிச் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று" எனப் பேசிக்கொண்டனர்.

42καὶ πολλοὶ ἐκεῖ ἐπίστευσαν εἰς αὐτὸν

42 அவ்விடத்திலே அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
42 And many in that place believed in Jesus.
42 அங்கே பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

John Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

Footnotes:
8 a BYZ All who came
22 b That is, Hanukkah, the historic celebration of the Maccabean Revolt and rededication of the temple
23 c Literally the temple
34 d Psalm 82:6

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.