பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Zechariah சகரியா זְכַרְיָה
சகரியா 14 | Zechariah 14
The Destroyers of Jerusalem Destroyed
1 இதோ, கர்த்தருடைய நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும்.
1 Behold, a day of the LORD is coming when your plunder will be divided in your presence.
1 இதோ! ஆண்டவரின் நாள் வருகின்றது, அப்போது உன்னிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பொருள்கள் உன் கண்ணெதிரே பங்கிடப்படும்.
2 எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை.
2 For I will gather all the nations for battle against Jerusalem, and the city will be captured, the houses looted, and the women ravished. Half of the city will go into exile, but the rest of the people will not be removed from the city.
2 எருசலேமுக்கு எதிராகப் போர்தொடுக்கும்படி நான் வேற்றினத்தார் அனைவரையும் ஒன்று கூட்டப்போகிறேன்; நகர் பிடிபடும்; வீடுகள் கொள்ளையிடப்படும்; பெண்கள் மானபங்கப்படுத்தப்படுவார்கள்; நகர் மக்களுள் பாதிப்பேர் அடிமைகளாய் நாடு கடத்தப்படுவார்கள்; ஆனால், எஞ்சியுள்ள மக்களோ, நகரிலிருந்து துரத்தப்படமாட்டார்கள்.
3 கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார்.
3 Then the LORD will go out to fight against those nations, as He fights in the day of battle.
3 பின்பு, ஆண்டவர் கிளம்பிச்சென்று, முன்னாளில் செய்ததுபோல் அந்த வேற்றினத்தாருக்கு எதிராகப் போர்புரிவார்.
4 அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.
4 On that day His feet will stand on the Mount of Olives, east of Jerusalem, and the Mount of Olives will be split in two from east to west, forming a great valley, with half the mountain moving to the north and half to the south.
4 அந்நாளில் அவருடைய காலடிகள் எருசலேமுக்குக் கிழக்கே உள்ள ஒலிவமலையின் மேல் நிற்கும்; அப்போது ஒலிவமலை கிழக்குமேற்காய்ச் செல்லும் மிகப்பெரும் பள்ளத்தாக்கு ஒன்றில் இரண்டாகப் பிரிக்கப்படும். ஆகவே, அம்மலையின் ஒரு பகுதி வடக்கு நோக்கியும் மற்றொரு பகுதி தெற்கு நோக்கியும் விலகிநிற்கும்.
5 அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீர் எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.
5 You will flee by My mountain valley, for it will extend to Azal. You will flee as you fled from the earthquake in the days of Uzziah king of Judah. Then the LORD my God will come, and all the holy ones with Him.a
5 அப்போது, நீங்கள் என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய்த் தப்பியோடுவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆட்சால் வரை பரவியிருக்கும்; நீங்களோ யூதாவின் அரசன் உசியாவின் காலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது தப்பியோடியதுபோல் ஓடிப்போவீர்கள்; அப்போது உங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம் புனிதர்கள் அனைவரோடும் வருவார்.
6 அந்நாளில் வெளிச்சம் இல்லாமல், ஒருவேளை பிரகாசமும் ஒருவேளை மப்புமாயிருக்கும்.
6 On that day there will be no light, no cold or frost.
6 அந்நாளில் வெப்பமோ குளிரோ உறைபனியோ இராது.
7 ஒருநாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்.
7 It will be a day known only to the LORD, without day or night; but when evening comes, there will be light.
7 அது ஒரே பகலாயிருக்கும், அதன் வரவை ஆண்டவர் மட்டுமே அறிவார். பகலுக்குப்பின் இரவு வராது. மாலை வேளையிலும் ஒளிபடரும்.
8 அந்நாளிலே ஜீவத்தண்ணீர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டு, பாதி கிழக்குச் சமுத்திரத்துக்கும், பாதி மேற்குச் சமுத்திரத்துக்கும் போய், மாரிகாலத்துக்கும் கோடைகாலத்துக்கும் இருக்கும்.
8 And on that day living water will flow out from Jerusalem, half of it toward the Eastern Seab and the other half toward the Western Sea,c in summer and winter alike.
8 அந்நாளில் வற்றாத நீரூற்று ஒன்று எருசலேமிலிருந்து தோன்றி ஓடும்; அதன் ஒரு பாதி கீழ்க்கடலிலும் மறு பாதி மேற்கடலிலும் சென்று கலக்கும். கோடைக்காலத்திலும் குளிர்காலத்திலும் அது ஓடிக்கொண்டேயிருக்கும்.1
9 அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.
9 On that day the LORD will become King over all the earth—the LORD alone, and His name alone.
9 ஆண்டவர் உலகம் அனைத்திற்கும் அரசராய்த் திகழ்வார். அந்நாளில் ஆண்டவர் ஒருவர் மட்டுமே இருப்பார்; அவர் திருப்பெயர் ஒன்று மட்டுமே இருக்கும்.
10 தேசமெல்லாம் கேபாதொடங்கி எருசலேமுக்குத் தெற்கே இருக்கிற ரிம்மோன்வரைக்கும் சமபூமியாகத் திருத்தப்படும்; எருசலேமோ உயர்ந்ததாகி, தன் ஸ்தானத்திலே பென்யமீன் வாசல்தொடங்கி முதல்வாசலென்கிற ஸ்தலமட்டும் கோடிவாசல் வரைக்கும், அனானெயேல் கோபுரம் துவக்கி ராஜாவின் திராட்ச ஆலைகள்மட்டும் குடியேற்றப்பட்டிருக்கும்.
10 All the land from Geba to Rimmon south of Jerusalem will be turned into a plain, but Jerusalem will be raised up and will remain in her place, from the Benjamin Gate to the site of the First Gate to the Corner Gate, and from the Tower of Hananel to the royal winepresses.
10 கேபாவிலிருந்து எருசலேமுக்குத் தெற்கில் உள்ள ரிம்மோன்வரை உள்ள நாடு முழுவதும் சமவெளியாக்கப்படும்; எருசலேமோ தான் இருந்த இடத்திலேயே ஓங்கி உயர்ந்து பென்யமின் வாயிலிலிருந்து முன்னைய வாயில் இருந்த இடமான மூலைவாயில் வரையிலும், அனனியேல் காவல் மாடத்திலிருந்து அரசனுடைய திராட்சை ஆலைகள் வரையிலும் மக்கள் குடியேற்றத்தால் நிறைந்திருக்கும்.
11 அதிலே ஜனங்கள் வாசம்பண்ணுவார்கள்; இனிச் சங்கரிப்பில்லாமல் எருசலேம் சுகமாய்த் தங்கியிருக்கும்.
11 People will live there, and never again will there be an utter destruction. So Jerusalem will dwell securely.
11 அங்கே மக்கள் குடியிருப்பார்கள். இனி அவர்கள் சாபத்திற்கு ஆளாக மாட்டார்கள். எருசலேம் அச்சமின்றி வாழும்.2
2 திவெ 22:3.
12 எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணின எல்லா ஜனங்களையும் கர்த்தர் வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலூன்றி நிற்கையிலும் அவர்களுடைய சதை அழிந்துபோகும்; அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும்; அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும்.
12 And this will be the plague with which the LORD strikes all the peoples who have warred against Jerusalem: Their flesh will rot while they stand on their feet, their eyes will rot in their sockets, and their tongues will rot in their mouths.
12 எருசலேமுக்கு எதிராகப் போர்தொடுத்த எல்லா மக்களினங்களையும் வதைக்கும் பொருட்டு ஆண்டவர் அனுப்பும் கொள்ளை நோய் இதுவே. அவர்கள் நடமாடிக் கொண்டிருக்கும்போதே ஒவ்வொருவனது சதையும் அழுகிப்போகும். அவர்களுடைய கண்கள் தம் குழிகளிலேயே அழுகிப்போகும். நாக்குகளும் வாய்க்குள்ளேயே அழுகி விடும்.
13 அந்நாளிலே கர்த்தரால் பெரிய கலக்கம் அவர்களுக்குள் உண்டாகும்; அவனவன் தன் தன் அயலானின் கையைப் பிடிப்பான்; அவனவனுடைய கை அவனவன் அயலானுடைய கைக்கு விரோதமாக எழும்பும்.
13 On that day a great panic from the LORD will come upon them, so that each will seize the hand of another, and the hand of one will rise against the other.
13 அந்நாளில் ஆண்டவர் அவர்களுக்கிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவார்; அப்போது அவர்கள் ஒவ்வொருவரும், அடுத்திருப்பார்மேல் கைவைப்பர்; அடுத்திருப்பாருக்கு எதிராகக் கையை ஓங்குவர்.
14 யூதாவும் எருசலேமிலே யுத்தம்பண்ணும்; அப்பொழுது சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளுடைய ஆஸ்தியாகிய பொன்னும் வெள்ளியும் வஸ்திரங்களும் மகா திரளாகக் கூட்டப்படும்.
14 Judah will also fight at Jerusalem, and the wealth of all the surrounding nations will be collected—gold, silver, and apparel in great abundance.
14 யூதாவும்கூட எருசலேமுக்கு எதிராகப் போர்தொடுக்கும்; அப்போது சுற்றிலுமுள்ள வேற்றினத்தாரின் செல்வங்களாகிய பொன், வெள்ளி, ஆடைகள் பெருமளவில் திரட்டப்படும்.
15 அந்தப் பாளையங்களில் இருக்கும் குதிரைகள் கோவேறு கழுதைகள் ஒட்டகங்கள் கழுதைகள் முதலான எல்லா மிருகஜீவன்களுக்கும் வரும் வாதையும், அந்த வாதையைப் போலவே இருக்கும்.
15 And a similar plague will strike the horses and mules, camels and donkeys, and all the animals in those camps.
15 அவர்களுக்குக் கொள்ளைநோய் வந்தது போலவே அவர்களுடைய பாளையங்களில் இருக்கும் குதிரைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் முதலிய எல்லா விலங்குகளுக்கும் கொள்ளைநோய் வரும்.
All Nations Will Worship the King (Leviticus 23:33–44; Nehemiah 8:13–18)
16 பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள்.
16 Then all the survivors from the nations that came against Jerusalem will go up year after year to worship the King, the LORD of Hosts, and to celebrate the Feast of Tabernacles.d
16 பின்பு எருசலேமுக்கு எதிராக எழும்பிய வேற்றினத்தாரில் எஞ்சியிருக்கும் அனைவரும் படைகளின் ஆண்டவராகிய அரசரைத் தொழவும் கூடாரத் திருவிழாவைக் கொண்டாடவும் ஆண்டுதோறும் அங்கே போவர்.3
17 அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை.
17 And should any of the families of the earth not go up to Jerusalem to worship the King, the LORD of Hosts, then the rain will not fall on them.
17 உலகின் இனத்தார் எவரேனும் படைகளின் ஆண்டவராகிய அரசரைத் தொழ எருசலேமுக்குப் போகவில்லை என்றால் அவர்கள் நாட்டில் மழை பெய்யாது.
18 மழை வருஷிக்காத எகிப்தின் வம்சம் வராமலும் சேராமலும்போனால், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராதஜாதிகளைக் கர்த்தர் வாதிக்கும் வாதையே அவர்கள்மேலும் வரும்.
18 And if the people of Egypt will not go up and enter in, then the rain will not fall on them; this will be the plague with which the LORD strikes the nations who do not go up to celebrate the Feast of Tabernacles.
18 எகிப்து நாட்டினர் அவரை வழிபட வரவில்லையாயின் அவர்களுக்கும் மழை இல்லாமற் போகும். கூடாரத் திருவிழாவைக் கொண்டாட வராத மக்களினங்களை வதைத்த அதே கொள்ளைநோய் அவர்களையும் வதைக்கும்.
19 இது எகிப்தியருடைய பாவத்துக்கும் கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல ஜாதிகளுடைய பாவத்துக்கும் வரும் ஆக்கினை.
19 This will be the punishment of Egypt and of all the nations that do not go up to celebrate the Feast of Tabernacles.
19 இது எகிப்தின் பாவத்திற்கும் கூடாரத் திருவிழாவைக் கொண்டாட வராத மற்றெல்லா வேற்றினத்தாரின் பாவத்திற்கும் கிடைக்கும் பயன்.
20 அந்நாளிலே குதிரைகளின் மணிகளிலே கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் விலாசம் எழுதியிருக்கும்; கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பானைகள் பலிபீடத்துக்கு முன்பாக இருக்கிற பாத்திரங்களைப் போலிருக்கும்.
20 On that day, HOLY TO THE LORDe will be inscribed on the bells of the horses, and the cooking pots in the house of the LORD will be like the sprinkling bowls before the altar.
20 அந்நாளில் குதிரைகளின் கழுத்திலுள்ள மணிகளில் 'ஆண்டவருக்கென அர்ப்பணிக்கப்பட்டவை' என்று எழுதப்பட்டிருக்கும். ஆண்டவரின் கோவிலில் இருக்கும் பானைகள் பலிபீடத்தின் முன்னிருக்கும் கிண்ணங்களைப் போலிருக்கும்.
21 அப்பொழுது எருசலேமிலும் யூதாவிலுமுள்ள எல்லாப் பானைகளும் சேனைகளின் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; பலியிடுகிற யாவரும் வந்து அவைகளில் எடுத்து, அவைகளில் சமைப்பார்கள்; அந்நாள்முதல் சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலே யாதொரு கானானியனும் இருப்பதில்லை.
21 Indeed, every pot in Jerusalem and Judah will be holy to the LORD of Hosts, and all who sacrifice will come and take some pots and cook in them. And on that day there will no longer be a Canaanitef in the house of the LORD of Hosts.
21 யூதாவிலும் எருசலேமிலும் உள்ள ஒவ்வொரு பானையும் படைகளின் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டதாய் இருக்கும்; பலி செலுத்துவோர் எல்லாரும் பலி இறைச்சியைச் சமைப்பதற்காக அவற்றை எடுக்க முன்வருவார்கள். மேலும், அந்நாள் முதல் படைகளின் ஆண்டவரது கோவிலில் வணிகர் எவரும் இருக்கமாட்டார்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
5 a LXX; Hebrew with You
8 b That is, the Dead Sea
8 c That is, the Mediterranean Sea, also called the Great Sea
16 d That is, Sukkot, the autumn feast of pilgrimage to Jerusalem; also translated as the Feast of Booths or the Feast of Shelters and originally called the Feast of Ingathering (see Exodus 23:16 and Exodus 34:22).
20 e That is, the LORD
21 f Or merchant
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.