பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு
மத் மாற் லூக் யோ அப் ரோ 1கொரி 2கொரி கலா எபே பிலி கொ 1தெ 2தெ 1தீ 2தீ தீத்து பிலெ எபி யா 1பே 2பே 1யோ 2யோ 3யோ யூதா வெளி
2 Corinthians 2 கொரிந்தியர் Κορινθίους β´
2 கொரிந்தியர் 13 | 2 Corinthians 13
Examine Yourselves
1 இந்த மூன்றாந்தரம் நான் உங்களிடத்திற்கு வருகிறேன்; சகல காரியங்களும் இரண்டுமூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும்.
1 This is the third time I am coming to you. “Every matter must be established by the testimony of two or three witnesses.”a
1 இதோடு மூன்றாம் முறையாக நான் உங்களிடம் வருகிறேன். இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தாலே அனைத்துக் குற்றமும் உறுதி செய்யப்பட வேண்டும்.
2 நான் இரண்டாந்தரம் உங்களிடத்திலிருந்தபோது சொன்னதுபோல, இப்பொழுது தூரமாயிருந்தும் உங்களிடத்திலிருக்கிறவனாக, நான் மறுபடியும் வந்தால் தப்பவிடமாட்டேனென்று முன்பு பாவஞ்செய்தவர்களுக்கும் மற்ற எல்லாருக்கும் முன்னறிவித்து எழுதுகிறேன்.
2 I already warned you the second time I was with you. So now in my absence I warn those who sinned earlier and everyone else: If I return, I will not spare anyone,
2 முன்பு, பாவம் செய்தோரையும் மற்ற எல்லாரையும் கூட நான் ஏற்கெனவே எச்சரித்தது போலவே மீண்டும் எச்சரிக்கிறேன். இரண்டாம் முறை நான் உங்களிடம் வந்தபோது செய்தது போலவே இப்போதும் நான் இங்கிருந்தே எச்சரிக்கிறேன். நான் மீண்டும் அங்கு வரும்போது அவர்களை நான் எளிதாக விட்டுவிடப் போவதில்லை.
3 கிறிஸ்து எனக்குள்ளே பேசுகிறாரென்பதற்கு அத்தாட்சி தேடுகிறீர்களே; அவர் உங்களிடமாய்ப் பலவீனரல்ல, உங்களிடத்தில் வல்லவராயிருக்கிறார்.
3 since you are demanding proof that Christ is speaking through me. He is not weak in dealing with you, but is powerful among you.
3 கிறிஸ்து என் மூலமாகப் பேசுகிறார் என்பதை மெய்ப்பித்துக்காட்ட வேண்டும் என்கிறீர்கள் அல்லவா? கிறிஸ்து உங்களிடையே என்னைப் போல வலுவற்றவராக இல்லை; மாறாக அவர் வல்லமையோடு செயல்படுகிறார்.
4 ஏனெனில் அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்; அப்படி நாங்களும் அவருக்குள் பலவீனராயிருந்தும், உங்களிடமாய் விளங்கிய தேவனுடைய வல்லமையினால் அவருடனேகூடப் பிழைத்திருப்போம்.
4 For He was indeed crucified in weakness, yet He lives by God’s power. And though we are weak in Him, yet by God’s power we will live with Him to serve you.
4 ஏனென்றால், அவர் வலுவற்றவராய்ச் சிலுவையில் அறையப்பட்டார். ஆனால், கடவுளின் வல்லமையினால் அவர் உயிர் வாழ்கிறார். அவருடைய வலுவின்மையில் பங்கு பெறும் நாங்களும் உங்கள் பொருட்டு கடவுளின் வல்லமையால் அவரோடு வாழ்வோம்.
5 நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறிகிறீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்.
5 Examine yourselves to see whether you are in the faith; test yourselves. Can’t you see for yourselves that Jesus Christ is in you—unless you actually fail the test?
5 நீங்கள் நம்பிக்கையில் நிலைத்திருக்கிறீர்களா என உங்களையே சோதித்துப் பாருங்கள். உங்கள் நடத்தையைச் சீர்தூக்கிப் பாருங்கள். இயேசு கிறிஸ்து உங்களுள் செயலாற்றுகிறார் என உணராமலா இருக்கிறீர்கள்? நீங்கள் சீர்தூக்கிப் பார்த்தீர்கள் என்றால் அதை உணர்வீர்கள்.
6 நாங்களோ பரீட்சைக்கு நில்லாதவர்களல்லவென்பதை அறிவீர்களென்று நம்புகிறேன்.
6 And I hope you will realize that we have not failed the test.
6 நாங்கள் எங்கள் தகுதியை மெய்ப்பித்துக் காட்டியுள்ளோம் என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்னும் எதிர்நோக்குடன் இருக்கிறேன்.
7 மேலும் நீங்கள் ஒரு பொல்லாங்கும் செய்யாதிருக்கும்படியாக, தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணுகிறேன். நாங்கள் பரீட்சைக்கு நின்றவர்களென்று காணப்படும்பொருட்டல்ல, நாங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்கள்போலிருந்தாலும், நீங்கள் நலமானதைச் செய்யும்பொருட்டே விண்ணப்பம் பண்ணுகிறேன்.
7 Now we pray to God that you will not do anything wrong—not that we will appear to have stood the test, but that you will do what is right, even if we appear to have failed.
7 நீங்கள் தீமை எதுவும் செய்யாதிருக்க உங்களுக்காக நாங்கள் கடவுளிடம் வேண்டுகிறோம். எங்கள் தகைமையை எடுத்துக்காட்ட நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் தகைமையற்றவர்களாகக் காணப்பட்டாலும் நீங்கள் நன்மையையே செய்யவேண்டும் என்பதே எங்கள் வேண்டல்.
8 சத்தியத்திற்கு விரோதமாக நாங்கள் ஒன்றுஞ்செய்யக்கூடாமல், சத்தியத்திற்கு அநுகூலமாகவே செய்யக்கூடும்.
8 For we cannot do anything against the truth, but only for the truth.
8 ஏனெனில், உண்மைக்கு எதிராக நாங்கள் எதுவும் செய்ய இயலாது. உண்மையின் பொருட்டே அனைத்தையும் செய்கிறோம்.
9 நாங்கள் பலவீனரும் நீங்கள் பலமுள்ளவர்களுமாயிருக்கையில், சந்தோஷப்படுகிறோம்; நீங்கள் நற்சீர்பொருந்தும்படிக்கும் விண்ணப்பம்பண்ணுகிறோம்.
9 In fact, we rejoice when we are weak but you are strong, and our prayer is for your perfection.
9 நாங்கள் வலுவற்றவர்களாயிருப்பினும் நீங்கள் வல்லமையுடையவர்களாய் இருப்பது எங்களுக்கும் மகிழ்ச்சியே! நீங்கள் நிறைவடைய வேண்டும் என்றே நாங்கள் இறைவனிடம் வேண்டுகிறோம்.
10 ஆனதால் இடித்துப்போடவல்ல, ஊன்றக் கட்டவே கர்த்தர் எனக்குக் கொடுத்த அதிகாரத்தின்படி, நான் உங்களிடத்தில் வந்திருக்கும்போது, கண்டிதம்பண்ணாதபடிக்கு, நான் தூரமாயிருந்து இவைகளை எழுதுகிறேன்.
10 This is why I write these things while absent, so that when I am present I will not need to be severe in my use of the authority that the Lord gave me for building you up, not for tearing you down.
10 நான் இங்கிருந்தே இதையெல்லாம் எழுதுகிறேன். ஏனெனில், நான் உங்களிடம் வரும்போது என் அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்களிடம் கண்டிப்பாய் நடந்துகொள்ள விரும்பவில்லை. உங்கள் அழிவுக்காக அல்ல, உங்கள் வளர்ச்சிக்காகவே ஆண்டவர் இந்த அதிகாரத்தை எனக்கு அளித்துள்ளார்.
Benediction and Farewell
11 கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள்; ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்.
11 Finally, brothers, rejoice! Aim for perfect harmony, encourage one another,b be of one mind, live in peace. And the God of love and peace will be with you.
11 சகோதர சகோதரிகளே, இறுதியாக நான் உங்களுக்குச் சொல்வது; மகிழ்ச்சியாயிருங்கள்; உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள்; என் அறிவுரைக்குச் செவி சாயுங்கள்; மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.
12 ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.
12 Greet one another with a holy kiss.
12 தூயமுத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள். இங்குள்ள இறைமக்கள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.
13 பரிசுத்தவான்களெல்லாரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
13 All the saints send you greetings.
13 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
14 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
14 The grace of the Lord Jesus Christ, and the love of God, and the fellowship of the Holy Spirit be with all of you.c
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a Deuteronomy 19:15
11 b Or listen to my appeal
14 c Texts vary in verse numbering for the last three verses of this chapter. BYZ ends with Amen .
Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.