பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

1 Samuel  1 சாமுவேல்  שְׁמוּאֵל א

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23  24   25   26   27   28   29   30   31

1 சாமுவேல் 27 | 1 Samuel 27

David and the Philistines

1וַיֹּ֤אמֶר דָּוִד֙ אֶל־לִבּ֔וֹ עַתָּ֛ה אֶסָּפֶ֥ה יוֹם־אֶחָ֖ד בְּיַד־שָׁא֑וּל אֵֽין־לִ֨י ט֜וֹב כִּ֣י הִמָּלֵ֥ט אִמָּלֵ֣ט ׀ אֶל־אֶ֣רֶץ פְּלִשְׁתִּ֗ים וְנוֹאַ֨שׁ מִמֶּ֤נִּי שָׁאוּל֙ לְבַקְשֵׁ֤נִי עוֹד֙ בְּכָל־גְּב֣וּל יִשְׂרָאֵ֔ל וְנִמְלַטְתִּ֖י מִיָּדֽוֹ׃

1 பின்பு தாவீது: நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின் கையினால் மடிந்துபோவேன்; இனிச் சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகும்படிக்கும், நான் அவன் கைக்கு நீங்கலாயிருக்கும்படிக்கும், நான் பெலிஸ்தரின் தேசத்திற்குப் போய், தப்பித்துக்கொள்வதப்பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான்.
1 David, however, said to himself, “One of these days now I will be swept away by the hand of Saul. There is nothing better for me than to escape to the land of the Philistines. Then Saul will stop searching for me all over Israel, and I will slip out of his hand.”
1 பின்னர், தாவீது, " நான் இங்கே சவுலின் கையில் ஒருநாள் மடிவது திண்ணம்; ஆதலால் பெலிஸ்தியர் நாட்டுக்குச் சென்று தப்பித்துக் கொள்வதைவிட எனக்கு வேறு வழியில்லை; அப்பொழுது தான் இஸ்ரயேலின் எல்லைக்குள் என்னைக் கண்டு பிடிக்கலாமென்ற நம்பிக்கை சவுலுக்கு அற்றுப் போகும்; நானும் அவர் கையிலிருந்து தப்பி விடுவேன்" என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.

2וַיָּ֣קָם דָּוִ֔ד וַיַּעֲבֹ֣ר ה֔וּא וְשֵׁשׁ־מֵא֥וֹת אִ֖ישׁ אֲשֶׁ֣ר עִמּ֑וֹ אֶל־אָכִ֥ישׁ בֶּן־מָע֖וֹךְ מֶ֥לֶךְ גַּֽת׃

2 ஆகையால் தாவீது தன்னோடிருந்த அறுநூறுபேரோடுங்கூட எழுந்திருந்து, மாயோகின் குமாரனாகிய ஆகிஸ் என்னும் காத்தின் ராஜாவினிடத்தில் போய்ச் சேர்ந்தான்.
2 So David set out with his six hundred men and went to Achish son of Maoch,a the king of Gath.
2 பின் தாவீதும் அவருடன் இருந்த அறுநூறு ஆள்களும் புறப்பட்டுச் சென்று மாவோகின் மகனும் காத்து மன்னருமான ஆக்கிசு என்பவரிடம் சேர்ந்தனர்.

3וַיֵּשֶׁב֩ דָּוִ֨ד עִם־אָכִ֥ישׁ בְּגַ֛ת ה֥וּא וַאֲנָשָׁ֖יו אִ֣ישׁ וּבֵית֑וֹ דָּוִד֙ וּשְׁתֵּ֣י נָשָׁ֔יו אֲחִינֹ֙עַם֙ הַיִּזְרְעֵאלִ֔ית וַאֲבִיגַ֥יִל אֵֽשֶׁת־נָבָ֖ל הַֽכַּרְמְלִֽית׃

3 அங்கே தாவீதும், அவன் மனுஷரும், அவரவர் வீட்டாரும், தாவீதோடேகூட அவன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளாகிய அபிகாயிலும், காத்பட்டணத்தில் ஆகீசிடத்தில் தங்கியிருந்தார்கள்.
3 David and his men settled in Gath with Achish. Each man had his family with him, and David had his two wives: Ahinoam of Jezreel and Abigail of Carmel, the widow of Nabal.
3 அங்கே தாவீதும் அவர் தம் ஆள்களும் அவரவர் குடும்பத்தாரும் தாவீதோடு அவருடைய இருமனைவியரான இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமும், நாபாலின் மனைவியும் கர்மேலைச் சார்ந்தவருமான அபிகாயிலும் காத்து நகரில் ஆக்கிசுடன் தங்கினார்.

4וַיֻּגַּ֣ד לְשָׁא֔וּל כִּֽי־בָרַ֥ח דָּוִ֖ד גַּ֑ת וְלֹֽא־יוסף ע֖וֹד לְבַקְשֽׁוֹ׃

4 தாவீது காத்பட்டணத்திற்கு ஓடிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் அப்புறம் அவனைத் தேடவில்லை.
4 And when Saul learned that David had fled to Gath, he no longer searched for him.
4 தாவீது காத்து நகருக்கு ஓடிவிட்டார் என்று சவுலுக்கு அறிவித்தனர். அதன் பின் அவர் அவரைத் தேடிச்செல்லவில்லை.

5וַיֹּ֨אמֶר דָּוִ֜ד אֶל־אָכִ֗ישׁ אִם־נָא֩ מָצָ֨אתִי חֵ֤ן בְּעֵינֶ֙יךָ֙ יִתְּנוּ־לִ֣י מָק֗וֹם בְּאַחַ֛ת עָרֵ֥י הַשָּׂדֶ֖ה וְאֵ֣שְׁבָה שָּׁ֑ם וְלָ֨מָּה יֵשֵׁ֧ב עַבְדְּךָ֛ בְּעִ֥יר הַמַּמְלָכָ֖ה עִמָּֽךְ׃

5 தாவீது ஆகீசை நோக்கி: உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமானால், நான் வாசம்பண்ணும்படி நாட்டிலுள்ள ஊர்களிலே ஒன்றில் எனக்கு இடந்தாரும்; உம்முடைய அடியான் உம்மோடேகூட ராஜதானி பட்டணத்திலே வாசமாயிருப்பானேன் என்றான்.
5 Then David said to Achish, “If I have found favor in your eyes, let me be assigned a place in one of the outlying towns, so I can live there. For why should your servant live in the royal city with you?”
5 தாவீது ஆக்கிசை நோக்கி, "என் மேல் உமக்கு இரக்கம் இருந்தால் நான் குடியிருக்க நாட்டுப் புற ஊர்கள் ஒன்றில் எனக்கு இடம் தாரும்; உம் அடியான் உம்மோடு தலைநகரில் ஏன் வாழ வேண்டும்?" என்றார்.

6וַיִּתֶּן־ל֥וֹ אָכִ֛ישׁ בַּיּ֥וֹם הַה֖וּא אֶת־צִֽקְלָ֑ג לָכֵ֞ן הָיְתָ֤ה צִֽקְלַג֙ לְמַלְכֵ֣י יְהוּדָ֔ה עַ֖ד הַיּ֥וֹם הַזֶּֽה׃

6 அப்பொழுது ஆகீஸ்: அன்றைய தினம் சிக்லாகை அவனுக்குக் கொடுத்தான்; அதினிமித்தம் சிக்லாக் இந்நாள் வரைக்கும் யூதாவின் ராஜாக்களைச் சேர்ந்திருக்கிறது.
6 That day Achish gave him Ziklag, and to this day it still belongs to the kings of Judah.
6 ஆதலால், அன்று ஆக்கிசு அவருக்குச் சிக்லாகைக் கொடுத்தார்; அதனால் இந்நாள் வரை சிக்லாகு யூதா அரசருக்கு உரியதாய் இருக்கிறது.

7וַֽיְהִי֙ מִסְפַּ֣ר הַיָּמִ֔ים אֲשֶׁר־יָשַׁ֥ב דָּוִ֖ד בִּשְׂדֵ֣ה פְלִשְׁתִּ֑ים יָמִ֖ים וְאַרְבָּעָ֥ה חֳדָשִֽׁים׃

7 தாவீது பெலிஸ்தரின் நாட்டிலே ஒரு வருஷமும் நாலு மாதமும் குடியிருந்தான்.
7 And the time that David lived in Philistine territory amounted to a year and four months.
7 தாவீது பெலிஸ்திய எல்லைக்குள் ஓர் ஆண்டும் நான்கு மாதங்களும் குடியிருந்தார்.

8וַיַּ֤עַל דָּוִד֙ וֽ͏ַאֲנָשָׁ֔יו וַֽיִּפְשְׁט֛וּ אֶל־הַגְּשׁוּרִ֥י והגרזי וְהָעֲמָלֵקִ֑י כִּ֣י הֵ֜נָּה יֹשְׁב֤וֹת הָאָ֙רֶץ֙ אֲשֶׁ֣ר מֵֽעוֹלָ֔ם בּוֹאֲךָ֥ שׁ֖וּרָה וְעַד־אֶ֥רֶץ מִצְרָֽיִם׃

8 அங்கேயிருந்து தாவீதும் அவன் மனுஷரும் கெசூரியர்மேலும் கெஸ்ரியர் மேலும் அமலேக்கியர்மேலும் படையெடுத்துப்போனார்கள்; சூருக்குப் போகிற எல்லைதுவக்கி எகிப்துதேசமட்டும் இருக்கிற நாட்டிலே பூர்வகாலம் துவக்கிக் குடியிருந்தவர்கள் இவர்களே.
8 Now David and his men went up and raided the Geshurites, the Girzites, and the Amalekites. (From ancient times these people had inhabited the land extending to Shur and Egypt.)
8 பின்னர், தாவீதும் அவர் தம் ஆள்களும் புறப்பட்டுக் கெசூரியர், கிர்சியர், அமலேக்கியர் ஆகியோரைக் கொள்ளையடித்துச் சென்றனர். ஏனெனில், சூர் தொடங்கி எகிப்து நாடுவரை உள்ள நிலப்பகுதியில் பண்டைக்காலந்தொட்டு இவர்கள் குடியிருந்தனர்.

9וְהִכָּ֤ה דָוִד֙ אֶת־הָאָ֔רֶץ וְלֹ֥א יְחַיֶּ֖ה אִ֣ישׁ וְאִשָּׁ֑ה וְלָקַח֩ צֹ֨אן וּבָקָ֜ר וַחֲמֹרִ֤ים וּגְמַלִּים֙ וּבְגָדִ֔ים וַיָּ֖שָׁב וַיָּבֹ֥א אֶל־אָכִֽישׁ׃

9 தாவீது அந்த நாட்டைக் கொள்ளையடிக்கிறபோது, புருஷர்களையும் ஸ்திரீகளையும் உயிரோடே வைக்காமல், ஆடு மாடுகளையும் கழுதைகளையும் ஒட்டகங்களையும் வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டு, ஆகீசிடத்துக்குத் திரும்பிவருவான்.
9 Whenever David attacked a territory, he did not leave a man or woman alive, but he took the flocks and herds, the donkeys, camels, and clothing. Then he would return to Achish,
9 தாவீது அந்நாட்டைத் தாக்கியபோது ஆண் பெண் எவரையும் உயிரோடு விட்டுவைக்கவில்லை; ஆனால், ஆடு மாடுகள், கழுதைகள், எருதுகள், ஒட்டகங்கள், ஆடைகள் ஆகியவற்றைக் கைப்பற்றிக கொண்டு ஆக்கிசிடம் திரும்பிவந்தார்.

10וַיֹּ֣אמֶר אָכִ֔ישׁ אַל־פְּשַׁטְתֶּ֖ם הַיּ֑וֹם וַיֹּ֣אמֶר דָּוִ֗ד עַל־נֶ֤גֶב יְהוּדָה֙ וְעַל־נֶ֣גֶב הַיַּרְחְמְאֵלִ֔י וְאֶל־נֶ֖גֶב הַקֵּינִֽי׃

10 இன்று எத்திசையில் போய்க் கொள்ளையடித்தீர்கள் என்று ஆகீஸ் கேட்கும்போது, தாவீது: யூதாவுடைய தென் திசையிலும் யெராமியேலருடைய தென் திசையிலும் கேனியருடைய தென் திசையிலும் என்பான்.
10 who would ask him, “What have you raided today?” And David would reply, “The Negev of Judah,” or “The Negev of Jerahmeel,” or “The Negev of the Kenites.”
10 ஆக்கிசு அவரிடம், "இன்று யாரை நீர் கொள்ளையடித்தீர்?" என்று கேட்க, தாவீது மறுமொழியாக, "யூதாவின் தென் பகுதியில்", அல்லது "எரகுமவேலரின் தென்பகுதியில்," அல்லது "கேனியரின் தென்பகுதியியல் கொள்ளையடித்தேன்" என்பார்.

11וְאִ֨ישׁ וְאִשָּׁ֜ה לֹֽא־יְחַיֶּ֣ה דָוִ֗ד לְהָבִ֥יא גַת֙ לֵאמֹ֔ר פֶּן־יַגִּ֥דוּ עָלֵ֖ינוּ לֵאמֹ֑ר כֹּֽה־עָשָׂ֤ה דָוִד֙ וְכֹ֣ה מִשְׁפָּט֔וֹ כָּל־הַ֨יָּמִ֔ים אֲשֶׁ֥ר יָשַׁ֖ב בִּשְׂדֵ֥ה פְלִשְׁתִּֽים׃

11 இன்ன இன்னபடி தாவீது செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கத்தக்க ஒருவரையும் தாவீது காத்பட்டணத்திற்குக் கொண்டு வராதபடிக்கு, ஒரு புருஷனையாகிலும் ஸ்திரீயையாகிலும் உயிரோடே வைக்காதிருப்பான்; அவன் பெலிஸ்தரின் நாட்டுப் புறத்திலே குடியிருக்கிற நாளெல்லாம் இவ்வண்ணம் செய்துகொண்டுவந்தான்.
11 David did not leave a man or woman alive to be brought to Gath, for he said, “Otherwise they will report us, saying, ‘This is what David did.’” And this was David’s custom the whole time he lived in Philistine territory.
11 தாவீது ஆண் பெண் எவரையும் உயிரோடு விட்டுவைப்பதில்லை; ஏனெனில், "அவர்கள் யாராவது காத்துக்குச் செய்தி கொண்டுவந்தால், 'இவ்வாறெல்லாம் தாவீது எங்களுக்குச் செய்தான்' என்று மன்னரிடம் தம்மைப் பற்றித் தெரிவித்துவிடுவார்கள்"என்று தாவீது நினைத்தார். அவர் பெலிஸ்தியர் நாட்டில் குடியிருந்த காலமெல்லாம் இதுவே அவரது வழக்கமாய் இருந்தது.

12וַיַּאֲמֵ֥ן אָכִ֖ישׁ בְּדָוִ֣ד לֵאמֹ֑ר הַבְאֵ֤שׁ הִבְאִישׁ֙ בְּעַמּ֣וֹ בְיִשְׂרָאֵ֔ל וְהָ֥יָה לִ֖י לְעֶ֥בֶד עוֹלָֽם׃

12 ஆகீஸ் தாவீதை நம்பி: அவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய ஜனங்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான்; என்றைக்கும் அவன் என் ஊழியக்காரனாயிருப்பான் என்பான்.
12 So Achish trusted David, thinking, “Since he has made himself an utter stench to his people Israel, he will be my servant forever.”
12 ஆக்கிசு தாவீதின் மேல் நம்பிக்கை வைத்தார்; ஏனெனில், அவர் 'இஸ்ரயேலராகிய தம் மக்களின் முழு வெறுப்புக்கு ஆளாகியுள்ளதால், அவர் என்றும் என் பணியாளராய் இருப்பார்' என்று நினைத்தார்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

1 Samuel Chapter   1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23  24   25   26   27   28   29   30   31

Footnotes:
2 a Maoch  is a variant of Maacah ; see 1 Kings 2:39.

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.