பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

1 Samuel  1 சாமுவேல்  שְׁמוּאֵל א

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23  24   25   26   27   28   29   30   31

1 சாமுவேல் 22 | 1 Samuel 22

David Flees to Adullam and Mizpeh (Psalm 57:1–11; Psalm 142:1–7)

1וַיֵּ֤לֶךְ דָּוִד֙ מִשָּׁ֔ם וַיִּמָּלֵ֖ט אֶל־מְעָרַ֣ת עֲדֻלָּ֑ם וַיִּשְׁמְע֤וּ אֶחָיו֙ וְכָל־בֵּ֣ית אָבִ֔יו וַיֵּרְד֥וּ אֵלָ֖יו שָֽׁמָּה׃

1 தாவீது அவ்விடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான்; அதை, அவன் சகோதரரும் அவன் தகப்பன் வீட்டார் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்துக்குப் போனார்கள்.
1 So David left Gath and took refuge in the cave of Adullam. When his brothers and the rest of his father’s household heard about it, they went down to him there.
1 தாவீது அங்கிருந்து புறப்பட்டு அதுல்லாம் என்ற குகைக்குத் தப்பியோடினார்; அவருடைய சகோதரரும், அவர் தந்தை வீட்டாரும் இதைக் கேள்வியுற்று அங்கு அவரிடம் சென்றனர்.1

1 திபா 57 தலைப்பு; திபா 42 தலைப்பு.

2וַיִּֽתְקַבְּצ֣וּ אֵ֠לָיו כָּל־אִ֨ישׁ מָצ֜וֹק וְכָל־אִ֨ישׁ אֲשֶׁר־ל֤וֹ נֹשֶׁא֙ וְכָל־אִ֣ישׁ מַר־נֶ֔פֶשׁ וַיְהִ֥י עֲלֵיהֶ֖ם לְשָׂ֑ר וַיִּהְי֣וּ עִמּ֔וֹ כְּאַרְבַּ֥ע מֵא֖וֹת אִֽישׁ׃

2 ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடே கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான்; இந்தப் பிரகாரமாக ஏறக்குறைய நானூறுபேர் அவனோடிருந்தார்கள்.
2 And all who were distressed or indebted or discontented rallied around him, and he became their leader. About four hundred men were with him.
2 ஒடுக்கப்பட்டோர், கடன்பட்டோர், சோர்வுற்றோர், யாவரும் அவரிடம் ஒன்று திரண்டனர்; அவர்களுக்கு அவர் தலைவரானார். இவ்வாறு, அவரோடு சுமார் நானூறு பேர் இருந்தனர்.

3וַיֵּ֧לֶךְ דָּוִ֛ד מִשָּׁ֖ם מִצְפֵּ֣ה מוֹאָ֑ב וַיֹּ֣אמֶר ׀ אֶל־מֶ֣לֶךְ מוֹאָ֗ב יֵֽצֵא־נָ֞א אָבִ֤י וְאִמִּי֙ אִתְּכֶ֔ם עַ֚ד אֲשֶׁ֣ר אֵדַ֔ע מַה־יַּֽעֲשֶׂה־לִּ֖י אֱלֹהִֽים׃

3 தாவீது அவ்விடத்தைவிட்டு மோவாபியரைச் சேர்ந்த மிஸ்பேக்குப் போய், மோவாபின் ராஜாவைப் பார்த்து: தேவன் என்னை எப்படி நடத்துவார் என்று நான் அறியுமட்டும், என் தகப்பனும் என் தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயவுசெய்யும் என்று சொல்லி,
3 From there David went to Mizpeh of Moab, where he said to the king of Moab, “Please let my father and mother staya with you until I learn what God will do for me.”
3 தாவீது அங்கிருந்து மோவாபிலுள்ள மிஸ்பேக்குச் சென்று, அங்கே மோவாபு மன்னனைப் பார்த்து, "கடவுள் எனக்கு என்ன செய்யவிருக்கிறார் என்பதை நான் அறியுமட்டும் என் தந்தையும் தாயும் உம்மிடம் தங்கியிருக்க எனக்கு அனுமதி தாரும்," என்று வேண்டினார்.

4וַיַּנְחֵ֕ם אֶת־פְּנֵ֖י מֶ֣לֶךְ מוֹאָ֑ב וַיֵּשְׁב֣וּ עִמּ֔וֹ כָּל־יְמֵ֥י הֱיוֹת־דָּוִ֖ד בַּמְּצוּדָֽה׃

4 அவர்களை மோவாபின் ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு போய்விட்டான்; தாவீது அரணில் இருந்த நாளெல்லாம் அவர்கள் அங்கே அவனோடிருந்தார்கள்.
4 So he left them in the care of the king of Moab, and they stayed with him the whole time David was in the stronghold.
4 பின்பு, அவர் அவர்களை மோவாபு மன்னன் பொறுப்பில் விட்டுச் சென்றார். தாவீது குகையில்* இருந்த நாளெல்லாம் அவர்கள் மன்னனிடம் தங்கியிருந்தனர்.2

2 'அரண்' என்பது எபிரேய பாடம்.

5וַיֹּאמֶר֩ גָּ֨ד הַנָּבִ֜יא אֶל־דָּוִ֗ד לֹ֤א תֵשֵׁב֙ בַּמְּצוּדָ֔ה לֵ֥ךְ וּבָֽאתָ־לְּךָ֖ אֶ֣רֶץ יְהוּדָ֑ה וַיֵּ֣לֶךְ דָּוִ֔ד וַיָּבֹ֖א יַ֥עַר חָֽרֶת׃

5 பின்பு காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்து: நீர் அரணில் இராமல் யூதாதேசத்திற்குப் புறப்பட்டுவாரும் என்றான்; அப்பொழுது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிலே போனான்.
5 Then the prophet Gad said to David, “Do not stay in the stronghold. Depart and go into the land of Judah.” So David left and went to the forest of Hereth.
5 பின்பு, இறைவாக்கினர் காது தாவீதைக் கண்டு, "நீ குகையில் தங்காதே! யூதா நாட்டுக்குப் புறப்பட்டுப்போ!" என்றார். எனவே, தாவீது புறப்பட்டு எரேத்து என்ற காட்டிற்குச் சென்றார்.

Saul Slays the Priests of Nob (Psalm 52:1–9)

6וַיִּשְׁמַ֣ע שָׁא֔וּל כִּ֚י נוֹדַ֣ע דָּוִ֔ד וַאֲנָשִׁ֖ים אֲשֶׁ֣ר אִתּ֑וֹ וְשָׁאוּל֩ יוֹשֵׁ֨ב בַּגִּבְעָ֜ה תַּֽחַת־הָאֶ֤שֶׁל בָּֽרָמָה֙ וַחֲנִית֣וֹ בְיָד֔וֹ וְכָל־עֲבָדָ֖יו נִצָּבִ֥ים עָלָֽיו׃

6 தாவீதும் அவனோடிருந்த மனுஷரும் காணப்பட்ட செய்தியைச் சவுல் கேள்விப்பட்டான்; சவுல் கிபியாவைச் சேர்ந்த ராமாவில் ஒரு தோப்பிலே உட்கார்ந்து, தன்னுடைய ஊழியக்காரர் எல்லாரும் தன்னைச் சூழ்ந்துநிற்க, தன் ஈட்டியைத் தன் கையிலே பிடித்துக்கொண்டிருக்கும் போது,
6 Soon Saul learned that David and his men had been discovered. At that time Saul was in Gibeah, sitting under the tamarisk tree on the hill at Gibeah, with his spear in hand and all his servants standing around him.
6 தாவீதும் அவருடன் இருந்த வீரர்களும் கண்டுபிடிக்கப்பட்டதைச் சவுல் கேள்விப்பட்டார். கிபயாவிலிருந்த மலைமீது தமாரிஸ்கு மரத்தின் கீழ் சவுல் கையில் தன் ஈட்டியை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அவருடைய எல்லா அலுவலர்களும் அவரைச் சூழ்ந்து நின்றனர்.

7וַיֹּ֣אמֶר שָׁא֗וּל לַֽעֲבָדָיו֙ הַנִּצָּבִ֣ים עָלָ֔יו שִׁמְעוּ־נָ֖א בְּנֵ֣י יְמִינִ֑י גַּם־לְכֻלְּכֶ֗ם יִתֵּ֤ן בֶּן־יִשַׁי֙ שָׂד֣וֹת וּכְרָמִ֔ים לְכֻלְּכֶ֣ם יָשִׂ֔ים שָׂרֵ֥י אֲלָפִ֖ים וְשָׂרֵ֥י מֵאֽוֹת׃

7 சவுல் தன்னண்டையில் நிற்கிற தன் ஊழியக்காரரைப் பார்த்து: பென்யமீன் புத்திரரே, கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்களெல்லாருக்கும் வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் கொடுப்பானோ? உங்களெல்லாரையும் ஆயிரத்துக்கு அதிபதிகளும் நூற்றுக்கு அதிபதிகளுமாக வைப்பானோ?
7 Then Saul said to his servants, “Listen, men of Benjamin! Is the son of Jesse giving all of you fields and vineyards and making you commanders of thousands or hundreds?
7 சவுல் தன்னைச் சூழ்ந்து நின்ற பணியாளர்களை நோக்கி, "பென்யமின் புதல்வர்களே! கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்கள் ஒவாவொருவருக்கும் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் கொடுப்பானோ? அவனால் உங்கள் அனைவரையும் ஆயிரவர் தலைவர்களாகவும் நூற்றுவர் தலைவர்களாகவும் ஏற்படுத்த முடியுமா?

8כִּי֩ קְשַׁרְתֶּ֨ם כֻּלְּכֶ֜ם עָלַ֗י וְאֵין־גֹּלֶ֤ה אֶת־אָזְנִי֙ בִּכְרָת־בְּנִ֣י עִם־בֶּן־יִשַׁ֔י וְאֵין־חֹלֶ֥ה מִכֶּ֛ם עָלַ֖י וְגֹלֶ֣ה אֶת־אָזְנִ֑י כִּ֣י הֵקִים֩ בְּנִ֨י אֶת־עַבְדִּ֥י עָלַ֛י לְאֹרֵ֖ב כַּיּ֥וֹם הַזֶּֽה׃

8 நீங்களெல்லாரும் எனக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டது என்ன? ஈசாயின் மகனுடனே என் குமாரன் உடன்படிக்கைபண்ணும்போது, என் செவிக்கு அதை ஒருவனும் வெளிப்படுத்தவில்லை; எனக்காகப் பரிதாபப்பட்டு, என் செவிக்கு அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவனாகிலும் இல்லையா? இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண, என் குமாரன் என் வேலைக்காரனை எனக்கு விரோதமாக எடுத்துவிட்டானே என்றான்.
8 Is that why all of you have conspired against me? Not one of you told me that my own son had made a covenant with the son of Jesse. Not one of you has shown concern for me or revealed to me that my son has stirred up my own servant to lie in wait against me, as is the case today.”
8 பின், எப்படி எனக்கெதிராக நீங்கள் எல்லோரும் சூழ்ச்சி செய்தீர்கள்? ஈசாயின் மகனுடன் என் மகன் உடன்படிக்கை செய்தபோது அதை உங்களில் எவனும் எனக்கு வெளிப்படுத்தவில்லை; என்மேல் மனமிரங்கி அதை எனக்குத் தெரிவிக்க உங்களில் ஒருவனும் முன்வரவில்லையே! இந்நாளில் உள்ளதுபோல் எனக்கெதிராகச் சதிசெய்ய என் பணியாளனையே என் மகன் எனக்கெதிராகத் தூண்டிவிட்டான்" என்றார்.

9וַיַּ֜עַן דֹּאֵ֣ג הָאֲדֹמִ֗י וְה֛וּא נִצָּ֥ב עַל־עַבְדֵֽי־שָׁא֖וּל וַיֹּאמַ֑ר רָאִ֙יתִי֙ אֶת־בֶּן־יִשַׁ֔י בָּ֣א נֹ֔בֶה אֶל־אֲחִימֶ֖לֶךְ בֶּן־אֲחִטֽוּב׃

9 அப்பொழுது சவுலின் ஊழியக்காரரோடே நின்ற ஏதோமியனாகிய தோவேக்கு பிரதியுத்தரமாக: ஈசாயின் மகனை நோபிலிருக்கிற அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கிடத்தில் வரக்கண்டேன்.
9 But Doeg the Edomite, who had stationed himself with Saul’s servants, answered: “I saw the son of Jesse come to Ahimelech son of Ahitub at Nob.
9 அப்பொழுது சவுலின் பணியாளருடன் நின்ற ஏதோமியனாகிய தோயோகு, "நோபில் உள்ள அகித்தூபின் மகன் அகிமெலக்கிடம் ஈசாயின் மகன் தாவீது வருவதை நான் கண்டேன்;

10וַיִּשְׁאַל־לוֹ֙ בַּֽיהוָ֔ה וְצֵידָ֖ה נָ֣תַן ל֑וֹ וְאֵ֗ת חֶ֛רֶב גָּלְיָ֥ת הַפְּלִשְׁתִּ֖י נָ֥תַן לֽוֹ׃

10 இவன் அவனுக்காகக் கர்த்தரிடத்தில் விசாரித்து, அவனுக்கு வழிக்கு போஜனத்தைக் கொடுத்து, பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயத்தையும் அவனுக்குக் கொடுத்தான் என்றான்.
10 Ahimelech inquired of the LORD for him and gave him provisions. He also gave him the sword of Goliath the Philistine.”
10 அகிமெலக்கு அவனுக்காக ஆண்டவரிடம் திருவுளத்தைக் கேட்டறிந்தார். மேலும், அவர் அவனுக்கு வழியுணவும், பெலிஸ்தியன் கோலியாத்தின் வாளும் கொடுத்தார்", என்றான்.3

3 1 சாமு 21:7-9; திபா 52 தலைப்பு.

11וַיִּשְׁלַ֣ח הַמֶּ֡לֶךְ לִקְרֹא֩ אֶת־אֲחִימֶ֨לֶךְ בֶּן־אֲחִיט֜וּב הַכֹּהֵ֗ן וְאֵ֨ת כָּל־בֵּ֥ית אָבִ֛יו הַכֹּהֲנִ֖ים אֲשֶׁ֣ר בְּנֹ֑ב וַיָּבֹ֥אוּ כֻלָּ֖ם אֶל־הַמֶּֽלֶךְ׃

11 அப்பொழுது ராஜா: அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக் என்னும் ஆசாரியனையும், நோபிலிருக்கிற அவன் தகப்பன் வீட்டாராகிய எல்லா ஆசாரியரையும் அழைப்பித்தான்; அவர்களெல்லாரும் ராஜாவினிடத்தில் வந்தார்கள்.
11 Then the king sent messengers to summon Ahimelech the priest, the son of Ahitub, and his father’s whole family, who were priests at Nob. And all of them came to the king.
11 அதைக்கேட்ட அரசர், அகித்தூபின் மகனாகிய குரு அகிமெலக்கையும், நோபிலிருக்கிற அவர் தந்தையின் குடும்பத்துக் குருக்கள் அனைவரையும் வரவழைத்தார். எல்லாரும் அரசரிடம் வந்தனர்.

12וַיֹּ֣אמֶר שָׁא֔וּל שְֽׁמַֽע־נָ֖א בֶּן־אֲחִיט֑וּב וַיֹּ֖אמֶר הִנְנִ֥י אֲדֹנִֽי׃

12 அப்பொழுது சவுல்: அகிதூபின் குமாரனே கேள் என்று சொல்ல, அவன்: இதோ, இருக்கிறேன் என் ஆண்டவனே என்றான்.
12 “Listen now, son of Ahitub,” said Saul. “Here I am, my lord,” he replied.
12 அப்பொழுது சவுல், "அகித்தூபின் மகனே கேள்", என அவரும், "இதோ உள்ளேன் என் தலைவரே!" என்றார்.

13וַיֹּ֤אמֶר אלו שָׁא֔וּל לָ֚מָּה קְשַׁרְתֶּ֣ם עָלַ֔י אַתָּ֖ה וּבֶן־יִשָׁ֑י בְּתִתְּךָ֨ ל֜וֹ לֶ֣חֶם וְחֶ֗רֶב וְשָׁא֥וֹל לוֹ֙ בֵּֽאלֹהִ֔ים לָק֥וּם אֵלַ֛י לְאֹרֵ֖ב כַּיּ֥וֹם הַזֶּֽה׃

13 அப்பொழுது சவுல் அவனை நோக்கி: நீயும் ஈசாயின் மகனும் எனக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண அவன் எனக்கு விரோதமாக எழும்பும்படிக்கு, நீ அவனுக்கு அப்பமும் பட்டயமும் கொடுத்து, தேவசந்நிதியில் அவனுக்காக விசாரித்தது என்ன என்றான்.
13 And Saul asked him, “Why have you and the son of Jesse conspired against me? You gave him bread and a sword and inquired of God for him so that he could rise up against me to lie in wait, as he is doing today.”
13 சவுல் அவரிடம், "நீயும் ஈசாயின் மகனும் எனக்கு எதிராக ஏன் சூழ்ச்சி செய்தீர்கள்? இந்நாள் வரை அவன் எனக்கெதிராக கிளர்ச்சி செய்யும்படி ஏன் அவனுக்கு நீ அப்பமும் வாளும் தந்து அவனுக்காக கடவுளின் திருவுளத்தைக் கேட்டறிந்தாய்?" என்று கேட்டார்.

14וַיַּ֧עַן אֲחִימֶ֛לֶךְ אֶת־הַמֶּ֖לֶךְ וַיֹּאמַ֑ר וּמִ֤י בְכָל־עֲבָדֶ֙יךָ֙ כְּדָוִ֣ד נֶאֱמָ֔ן וַחֲתַ֥ן הַמֶּ֛לֶךְ וְסָ֥ר אֶל־מִשְׁמַעְתֶּ֖ךָ וְנִכְבָּ֥ד בְּבֵיתֶֽךָ׃

14 அகிமெலேக் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: உம்முடைய எல்லா ஊழியக்காரரிலும் தாவீதைப்போல, ராஜாவுக்கு மருமகனும், உம்முடைய கட்டளைகளின்படி செய்துவருகிறவனும், உம்முடைய வீட்டிலே கனமுள்ளவனுமாயிருக்கிற உண்மையுள்ளவன் யார்?
14 Ahimelech answered the king, “Who among all your servants is as faithful as David, the king’s son-in-law, the captain of your bodyguard who is honored in your house?
14 அதற்கு அகிமெலக்கு அரசரிடம், "உம் பணியாளர் அனைவரிலும் தாவீதைப் போல் உண்மையுள்ளவன் யார்? அரசராகிய உமக்கு மருமகனும் மெய்காப்பாளர் தலைவனுமாகிய அவன் உம் வீட்டாரிடையே மேன்மை பெற்றவன் அன்றோ?

15הַיּ֧וֹם הַחִלֹּ֛תִי לשאול־ל֥וֹ בֵאלֹהִ֖ים חָלִ֣ילָה לִּ֑י אַל־יָשֵׂם֩ הַמֶּ֨לֶךְ בְּעַבְדּ֤וֹ דָבָר֙ בְּכָל־בֵּ֣ית אָבִ֔י כִּ֠י לֹֽא־יָדַ֤ע עַבְדְּךָ֙ בְּכָל־זֹ֔את דָּבָ֥ר קָטֹ֖ן א֥וֹ גָדֽוֹל׃

15 இன்றையதினம் அவனுக்காக தேவசந்நிதியில் விசாரிக்கத் தொடங்கினேனோ? அது எனக்குத் தூரமாயிருப்பதாக; ராஜா தம்முடைய அடியானாகிய என்மேலாகிலும் என் தகப்பன் வீட்டாரில் எவன்மேலாகிலும் குற்றம் சுமத்தவேண்டாம்; உம்முடைய அடியான் இவைகளிலெல்லாம் ஒரு சிறிய காரியமாகிலும் பெரிய காரியமாகிலும் அறிந்திருந்ததில்லை என்றான்.
15 Was that day the first time I inquired of God for him? Far be it from me! Let not the king accuse your servant or any of my father’s household, for your servant knew nothing of this whole affair—not in part or in whole.”
15 அவனுக்காக நான் கடவுளின் திருவுளத்தைக் கேட்பது இன்று தான் முதல்தடவையா? இல்லை. அரசர் தம் பணியாளர் மேலும் என் தந்தை வீட்டார் எவர் மேலும் குற்றம் சுமத்த வேண்டாம்; ஏனெனில், உம் பணியாளனாகிய எனக்கு இக்காரியம் குறித்து எதுவும் தெரியாது" என்று பதிலளித்தார்.

16וַיֹּ֣אמֶר הַמֶּ֔לֶךְ מ֥וֹת תָּמ֖וּת אֲחִימֶ֑לֶךְ אַתָּ֖ה וְכָל־בֵּ֥ית אָבִֽיךָ׃

16 ராஜாவோ: அகிமெலேக்கே, நீயும் உன் தகப்பன் வீட்டார் அனைவரும் சாகவே சாகவேண்டும் என்றான்.
16 But the king replied, “You will surely die, Ahimelech, you and all your father’s house!”
16 அரசர் அவரிடம் "அகிமெலக்கு, நீயும் உம் தந்தை வீட்டாரும் கண்டிப்பாகச் சாக வேண்டும்" என்றார்.

17וַיֹּ֣אמֶר הַמֶּ֡לֶךְ לָרָצִים֩ הַנִּצָּבִ֨ים עָלָ֜יו סֹ֥בּוּ וְהָמִ֣יתוּ ׀ כֹּהֲנֵ֣י יְהוָ֗ה כִּ֤י גַם־יָדָם֙ עִם־דָּוִ֔ד וְכִ֤י יָֽדְעוּ֙ כִּֽי־בֹרֵ֣חַ ה֔וּא וְלֹ֥א גָל֖וּ אֶת־אזנו וְלֹֽא־אָב֞וּ עַבְדֵ֤י הַמֶּ֙לֶךְ֙ לִשְׁלֹ֣חַ אֶת־יָדָ֔ם לִפְגֹ֖עַ בְּכֹהֲנֵ֥י יְהוָֽה׃

17 பின்பு ராஜா தன்னண்டையிலே நிற்கிற சேவகரை நோக்கி: நீங்கள் போய், கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லுங்கள்; அவர்கள் கையும் தாவீதோடே இருக்கிறது; அவன் ஓடிப்போகிறதை அவர்கள் அறிந்திருந்தும், அதை எனக்கு வெளிப்படுத்தவில்லை என்றான்; ராஜாவின் வேலைக்காரரோ, கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லத் தங்கள் கைகளை நீட்ட சம்மதிக்கவில்லை.
17 Then the king ordered the guards at his side, “Turn and kill the priests of the LORD, because they too sided with David. For they knew he was fleeing, but they did not tell me.” But the king’s servants would not lift a hand to strike the priests of the LORD.
17 அரசர் தம்மைச் சூழ்ந்து நின்ற காவலர்களிடம், "நீங்கள் சென்று ஆண்டவரின் குருக்களை கொன்று விடுங்கள்; ஏனெனில், அவர்கள் தாவீது ஓடிப்போனதை அறிந்தும் எனக்குத் தெரிவிக்கவில்லை" என்றார். ஆனால், அரசனின் பணியாளர் ஆண்டவரின் குருக்களை கொல்ல முன்வரவில்லை.

18וַיֹּ֤אמֶר הַמֶּ֙לֶךְ֙ לדויג סֹ֣ב אַתָּ֔ה וּפְגַ֖ע בַּכֹּהֲנִ֑ים וַיִּסֹּ֞ב דויג הָאֲדֹמִ֗י וַיִּפְגַּע־הוּא֙ בַּכֹּ֣הֲנִ֔ים וַיָּ֣מֶת ׀ בַּיּ֣וֹם הַה֗וּא שְׁמֹנִ֤ים וַחֲמִשָּׁה֙ אִ֔ישׁ נֹשֵׂ֖א אֵפ֥וֹד בָּֽד׃

18 அப்பொழுது ராஜா தோவேக்கை நோக்கி: நீ போய் ஆசாரியர்களைக் கொன்றுபோடு என்றான்; ஏதோமியனாகிய தோவேக்கு ஆசாரியர்கள்மேல் விழுந்து, சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருக்கும் எண்பத்தைந்துபேரை அன்றையதினம் கொன்றான்.
18 So the king ordered Doeg, “You turn and strike down the priests!” And Doeg the Edomite turned and struck down the priests himself. On that day he killed eighty-five men who wore the linen ephod.
18 அப்பொழுது அரசர் தோயேகிடம், "நீ சென்று தாவீதுக்கு உடன்பட்ட குருக்களை வீழ்த்து", என்று கட்டளையிட்டார். உடனே ஏதோமியன் தோயேகு சென்று குருக்களை வெட்டி வீழ்த்தினான். அன்றுமட்டும் அவன் நார்பட்டு ஏபோது அணிந்திருந்த எண்பத்தைந்து பேரைக் கொன்றான்.

19וְאֵ֨ת נֹ֤ב עִיר־הַכֹּֽהֲנִים֙ הִכָּ֣ה לְפִי־חֶ֔רֶב מֵאִישׁ֙ וְעַד־אִשָּׁ֔ה מֵעוֹלֵ֖ל וְעַד־יוֹנֵ֑ק וְשׁ֧וֹר וַחֲמ֛וֹר וָשֶׂ֖ה לְפִי־חָֽרֶב׃

19 ஆசாரியர்களின் பட்டணமாகிய நோபிலுமுள்ள புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டான்.
19 He also put to the sword Nob, the city of the priests, with its men and women, children and infants, oxen, donkeys, and sheep.
19 மேலும், அவன் குருக்கள் நகராகிய நோபில் ஆண், பெண், சிறுவர், பாலகர், ஆடுமாடுகள், கழுதைகள் ஆகியவற்றையும் வாளுக்கு இரையாக்கினான்.

20וַיִּמָּלֵ֣ט בֵּן־אֶחָ֗ד לַאֲחִימֶ֙לֶךְ֙ בֶּן־אֲחִט֔וּב וּשְׁמ֖וֹ אֶבְיָתָ֑ר וַיִּבְרַ֖ח אַחֲרֵ֥י דָוִֽד׃

20 அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கின் குமாரரில் அபியத்தார் என்னும் பேருள்ள ஒருவன் தப்பி, தாவீது இருக்கும் புறமாக ஓடிப்போய்,
20 But one of the sons of Ahimelech son of Ahitub escaped. His name was Abiathar, and he fled to David.
20 ஆனால், அகித்தூபின் மகனான அகிமெலக்கின் புதல்வர்களில் ஒருவரான அபியத்தார் தப்பியோடித் தாவீதை அடைந்தார்.

21וַיַּגֵּ֥ד אֶבְיָתָ֖ר לְדָוִ֑ד כִּ֚י הָרַ֣ג שָׁא֔וּל אֵ֖ת כֹּהֲנֵ֥י יְהוָֽה׃

21 சவுல் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொன்றுபோட்ட செய்தியை தாவீதுக்கு அறிவித்தான்.
21 And Abiathar told David that Saul had killed the priests of the LORD.
21 ஆண்டவரின் குருக்களைச் சவுல் கொன்றுவிட்டார் என்று அபியத்தார் தாவீதிடம் கூறினார்.

22וַיֹּ֨אמֶר דָּוִ֜ד לְאֶבְיָתָ֗ר יָדַ֜עְתִּי בַּיּ֤וֹם הַהוּא֙ כִּֽי־שָׁם֙ דויג הָאֲדֹמִ֔י כִּֽי־הַגֵּ֥ד יַגִּ֖יד לְשָׁא֑וּל אָנֹכִ֣י סַבֹּ֔תִי בְּכָל־נֶ֖פֶשׁ בֵּ֥ית אָבִֽיךָ׃

22 அப்பொழுது தாவீது அபியத்தாரைப் பார்த்து: ஏதோமியனாகிய தோவேக்கு அங்கே இருந்தபடியினாலே, அவன் எவ்விதத்திலும் சவுலுக்கு அதை அறிவிப்பான் என்று அன்றையதினமே அறிந்திருந்தேன்; உன் தகப்பன் வீட்டாராகிய எல்லாருடைய மரணத்துக்கும் காரணம் நானே.
22 Then David said to Abiathar, “I knew that Doeg the Edomite was there that day, and that he was sure to tell Saul. I myself am responsible for the lives of everyone in your father’s house.
22 தாவீது அபியத்தாரிடம், "ஏதோமியன் தோயேகு அங்கு இருந்ததால், அவன் கண்டிப்பாகச் சவுலிடம் அறிவிப்பான் என்பதை அன்றே அறிந்திருந்தேன்; உன் தந்தை வீட்டார் அனைவரும் இறப்பதற்கு நானே காரணம்!

23שְׁבָ֤ה אִתִּי֙ אַל־תִּירָ֔א כִּ֛י אֲשֶׁר־יְבַקֵּ֥שׁ אֶת־נַפְשִׁ֖י יְבַקֵּ֣שׁ אֶת־נַפְשֶׁ֑ךָ כִּֽי־מִשְׁמֶ֥רֶת אַתָּ֖ה עִמָּדִֽי׃

23 நீ என்னிடத்தில் இரு, பயப்படவேண்டாம்; என் பிராணனையும் வாங்கத்தேடுகிறவனே உன் பிராணனையும் வாங்கத்தேடுகிறான்; நீ என் ஆதரவிலே இரு என்றான்.
23 Stay with me; do not be afraid, for he who seeks your life is seeking mine as well. You will be safe with me.”
23 என்னோடு தங்கு! அஞ்சாதே! என் உயிரைப் பறிக்கத் தேடுகிறவன்தான் உன் உயிரையும் பறிக்கத் தேடுவான்; ஆனால், என்னோடு நீ இருந்தால் பாதுகாப்புடன் நீ இருப்பாய்" என்றார்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

1 Samuel Chapter   1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23  24   25   26   27   28   29   30   31

Footnotes:
3 a Syriac and Vulgate; Hebrew go forth

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.