பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

1 Samuel  1 சாமுவேல்  שְׁמוּאֵל א

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23  24   25   26   27   28   29   30   31

1 சாமுவேல் 11 | 1 Samuel 11

Saul Defeats the Ammonites

1וַיַּ֗עַל נָחָשׁ֙ הָֽעַמּוֹנִ֔י וַיִּ֖חַן עַל־יָבֵ֣שׁ גִּלְעָ֑ד וַיֹּ֨אמְר֜וּ כָּל־אַנְשֵׁ֤י יָבֵישׁ֙ אֶל־נָחָ֔שׁ כְּרָת־לָ֥נוּ בְרִ֖ית וְנַעַבְדֶֽךָּ׃

1 அக்காலத்தில் நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து, கீலேயாத்திலிருக்கிற யாபேசை முற்றிக்கைபோட்டான்; அப்பொழுது யாபேசின் மனுஷர் எல்லாரும் நாகாசை நோக்கி: எங்களோடே உடன்படிக்கைபண்ணும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள்.
1 Soon Nahash the Ammonite came up and laid siege to Jabesh-gilead. All the men of Jabesh said to him, “Make a treatyb with us, and we will serve you.”
1 அக்காலத்தில் நாகாசு என்னும் அம்மோனியன் வந்து, கிலயாதில் உள்ள யாபோசை முற்றுகையிட்டான். யாபோசிலிருந்து மக்கள் அனைவரும் நாகாசிடம் சென்று, "எங்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளும். நாங்கள் உமக்குப் பணிந்திருப்போம்" என்றனர்.

2וַיֹּ֣אמֶר אֲלֵיהֶ֗ם נָחָשׁ֙ הָעַמּוֹנִ֔י בְּזֹאת֙ אֶכְרֹ֣ת לָכֶ֔ם בִּנְק֥וֹר לָכֶ֖ם כָּל־עֵ֣ין יָמִ֑ין וְשַׂמְתִּ֥יהָ חֶרְפָּ֖ה עַל־כָּל־יִשְׂרָאֵֽל׃

2 அதற்கு அம்மோனியனாகிய நாகாஸ்: நான் உங்கள் ஒவ்வொருவருடைய வலது கண்ணையும் பிடுங்கி, இதினாலே இஸ்ரவேல் எல்லாவற்றின் மேலும் நிந்தைவரப்பண்ணுவதே நான் உங்களோடே பண்ணும் உடன்படிக்கை என்றான்.
2 But Nahash the Ammonite replied, “I will make a treaty with you on one condition, that I may put out everyone’s right eye and bring reproach upon all Israel.”
2 அம்மோனியன் நாகாசு அவர்களை நோக்கி, "நான் உங்களோடு செய்யும் உடன்படிக்கை; உங்களுள் ஒவ்வொருவனின் வலக் கண்ணும் பிடுங்கப்படும். இஸ்ரயேலர் அனைவரையும் அவமானத்திற்கு உள்ளாக்குவேன்" என்றான்.

3וַיֹּאמְר֨וּ אֵלָ֜יו זִקְנֵ֣י יָבֵ֗ישׁ הֶ֤רֶף לָ֙נוּ֙ שִׁבְעַ֣ת יָמִ֔ים וְנִשְׁלְחָה֙ מַלְאָכִ֔ים בְּכֹ֖ל גְּב֣וּל יִשְׂרָאֵ֑ל וְאִם־אֵ֥ין מוֹשִׁ֛יע אֹתָ֖נוּ וְיָצָ֥אנוּ אֵלֶֽיךָ׃

3 அதற்கு யாபேசின் மூப்பர்கள்: நாங்கள் இஸ்ரவேல் நாடெங்கும் ஸ்தானாபதிகளை அனுப்பும்படி, ஏழுநாள் எங்களுக்குத் தவணைகொடும், எங்களை ரட்சிப்பார் இல்லாவிட்டால், அப்பொழுது உம்மிடத்தில் வருவோம் என்றார்கள்.
3 “Hold off for seven days,” replied the elders of Jabesh, “and let us send messengers throughout Israel. If there is no one to save us, we will surrender to you.”
3 யாபேசின் பெரியோர்அவனிடம் கூறியது: "ஏழு நாள்கள் எங்களுக்குத் தவணை தாரும். நாங்கள் இஸ்ரயேல் எல்லை முழுவதும் தூதர்களை அனுப்புவோம். எங்களை மீட்பார் எவரும் இல்லையெனில் நாங்கள் உங்களிடம் சரணடைவோம்."

4וַיָּבֹ֤אוּ הַמַּלְאָכִים֙ גִּבְעַ֣ת שָׁא֔וּל וַיְדַבְּר֥וּ הַדְּבָרִ֖ים בְּאָזְנֵ֣י הָעָ֑ם וַיִּשְׂא֧וּ כָל־הָעָ֛ם אֶת־קוֹלָ֖ם וַיִּבְכּֽוּ׃

4 அந்த ஸ்தானாபதிகள் சவுலின் ஊராகிய கிபியாவிலே வந்து, ஜனங்களின் காதுகேட்க அந்தச் செய்திகளைச் சொன்னார்கள்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் சத்தமிட்டு அழுதார்கள்.
4 When the messengers came to Gibeah of Saul and relayed these words in the hearing of the people, they all wept aloud.
4 தூதர்கள் சவுலின் ஊராகிய கிபயாவுக்கு வந்து மக்கள் செவிபடச் செய்தியை சொல்ல, மக்கள் அனைவரும் குரலெழுப்பி அழுதனர்.

5וְהִנֵּ֣ה שָׁא֗וּל בָּ֣א אַחֲרֵ֤י הַבָּקָר֙ מִן־הַשָּׂדֶ֔ה וַיֹּ֣אמֶר שָׁא֔וּל מַה־לָּעָ֖ם כִּ֣י יִבְכּ֑וּ וַיְסַ֨פְּרוּ־ל֔וֹ אֶת־דִּבְרֵ֖י אַנְשֵׁ֥י יָבֵֽישׁ׃

5 இதோ, சவுல் மாடுகளின் பின்னாலே வயலிலிருந்து வந்து, ஜனங்கள் அழுகிற முகாந்தரம் என்ன என்று கேட்டான்; யாபேசின் மனுஷர் சொல்லிய செய்திகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.
5 Just then Saul was returning from the field, behind his oxen. “What troubles the people?” asked Saul. “Why are they weeping?” And they relayed to him the words of the men from Jabesh.
5 அப்போது சவுல் வயலினின்று மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்தார். "மக்களுக்கு என்ன நேரிட்டது? அவர்கள் ஏன் அழுகிறார்கள்?" என்று சவுல் கேட்டார். யாபேசின் ஆள்கள் சொன்னதை அவரிடம் சொன்னார்கள்.

6וַתִּצְלַ֤ח רֽוּחַ־אֱלֹהִים֙ עַל־שָׁא֔וּל בשמעו אֶת־הַדְּבָרִ֣ים הָאֵ֑לֶּה וַיִּ֥חַר אַפּ֖וֹ מְאֹֽד׃

6 சவுல் இந்தச் செய்திகளைக் கேட்டவுடனே, தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால் அவன் மிகவும் கோபம் மூண்டவனாகி,
6 When Saul heard their words, the Spirit of God rushed upon him, and he burned with great anger.
6 இச்செய்தியை அவர் கேட்டுக் கொண்டிருந்தபோது, கடவுளின் ஆவி அவரை வலிமையுடன் ஆட்கொள்ள, அவரது சினம் கனன்றது.

7וַיִּקַּח֩ צֶ֨מֶד בָּקָ֜ר וַֽיְנַתְּחֵ֗הוּ וַיְשַׁלַּ֞ח בְּכָל־גְּב֣וּל יִשְׂרָאֵל֮ בְּיַ֣ד הַמַּלְאָכִ֣ים ׀ לֵאמֹר֒ אֲשֶׁר֩ אֵינֶ֨נּוּ יֹצֵ֜א אַחֲרֵ֤י שָׁאוּל֙ וְאַחַ֣ר שְׁמוּאֵ֔ל כֹּ֥ה יֵעָשֶׂ֖ה לִבְקָר֑וֹ וַיִּפֹּ֤ל פַּֽחַד־יְהוָה֙ עַל־הָעָ֔ם וַיֵּצְא֖וּ כְּאִ֥ישׁ אֶחָֽד׃

7 ஓரிணைமாட்டைப் பிடித்து, துண்டித்து, அந்த ஸ்தானாபதிகள் கையிலே கொடுத்து, இஸ்ரவேலின் நாடுகளுக்கெல்லாம் அனுப்பி: சவுலின் பின்னாலேயும், சாமுவேலின் பின்னாலேயும் புறப்படாதவன் எவனோ, அவனுடைய மாடுகளுக்கு இப்படிச் செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான்; அப்பொழுது கர்த்தரால் உண்டான பயங்கரம் ஜனத்தின்மேல் வந்ததினால், ஒருமனப்பட்டுப் புறப்பட்டு வந்தார்கள்.
7 He took a pair of oxen, cut them into pieces, and sent them by messengers throughout the land of Israel, proclaiming, “This is what will be done to the oxen of anyone who does not march behind Saul and Samuel.” Then the terror of the LORD fell upon the people, and they turned out as one man.
7 அவர் ஒரு சோடி மாடுகளை பிடித்து, துண்டுகளாக வெட்டி, அவற்றை தூதர்கள் வழியாக இஸ்ரயேல் எல்லை முழுவதும் அனுப்பி, சவுலின் பின்னும் சாமுவேலின் பின்னும் வராதவனின் மாடுகளுக்கு இவ்வாறு நேரிடும் என்று சொல்லியனுப்பினார். அப்போது ஆண்டவர் பற்றிய அச்சம் மக்களை ஆட் கொண்டது. அவர்கள் ஒன்றுதிரண்டு வந்தார்கள்.

8וַֽיִּפְקְדֵ֖ם בְּבָ֑זֶק וַיִּהְי֤וּ בְנֵֽי־יִשְׂרָאֵל֙ שְׁלֹ֣שׁ מֵא֣וֹת אֶ֔לֶף וְאִ֥ישׁ יְהוּדָ֖ה שְׁלֹשִׁ֥ים אָֽלֶף׃

8 அவர்களைப் பேசேக்கிலே இலக்கம் பார்த்தான்; இஸ்ரவேல் புத்திரரில் மூன்றுலட்சம்பேரும், யூதா மனுஷரில் முப்பதினாயிரம்பேரும் இருந்தார்கள்.
8 And when Saul numbered them at Bezek, there were 300,000 Israelites and 30,000c men of Judah.
8 அவர் அவர்களைப் பெசேக்கில் கணக்கெடுத்தபோது இஸ்ரயேலின் மக்கள் மூன்று இலட்சம் பேரும் யூதாவினர் முப்பதாயிரம் பேரும் இருந்தனர்.

9וַיֹּאמְר֞וּ לַמַּלְאָכִ֣ים הַבָּאִ֗ים כֹּ֤ה תֹֽאמְרוּן֙ לְאִישׁ֙ יָבֵ֣ישׁ גִּלְעָ֔ד מָחָ֛ר תִּהְיֶֽה־לָכֶ֥ם תְּשׁוּעָ֖ה בחם הַשָּׁ֑מֶשׁ וַיָּבֹ֣אוּ הַמַּלְאָכִ֗ים וַיַּגִּ֛ידוּ לְאַנְשֵׁ֥י יָבֵ֖ישׁ וַיִּשְׂמָֽחוּ׃

9 வந்த ஸ்தானாபதிகளை அவர்கள் நோக்கி: நாளைக்கு வெயில் ஏறுகிறதற்கு முன்னே உங்களுக்கு ரட்சிப்புக் கிடைக்கும் என்று கீலேயாத்திலிருக்கிற யாபேசின் மனுஷருக்குச் சொல்லுங்கள் என்றார்கள்; ஸ்தானாபதிகள் வந்து யாபேசின் மனுஷரிடத்தில் அதை அறிவித்தார்கள்; அதற்கு அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்.
9 So they said to the messengers who had come, “Tell the men of Jabesh-gilead: ‘Deliverance will be yours tomorrow by the time the sun is hot.’” And when the messengers relayed this to the men of Jabesh, they rejoiced.
9 வந்திருந்த தூதர்களிடம், "நாளை வெயில் ஏறும்முன் உங்களுக்கு மீட்பு கிடைக்கும் என்று கிலயாதிலுள்ள யாபேசின் மக்களுக்குத் தெரிவியுங்கள்" என்று அறிவிக்கப்பட்டது. தூதரும் அவ்வாறே யாபேசின் மக்களிடம் சொல்ல, அவர்கள் மகிழ்ச்சியுற்றனர்.

10וַֽיֹּאמְרוּ֙ אַנְשֵׁ֣י יָבֵ֔ישׁ מָחָ֖ר נֵצֵ֣א אֲלֵיכֶ֑ם וַעֲשִׂיתֶ֣ם לָּ֔נוּ כְּכָל־הַטּ֖וֹב בְּעֵינֵיכֶֽם׃

10 பின்பு யாபேசின் மனுஷர்: நாளைக்கு உங்களிடத்தில் வருவோம், அப்பொழுது உங்கள் இஷ்டப்படியெல்லாம் எங்களுக்குச் செய்யுங்கள் என்றார்கள்.
10 Then the men of Jabesh said to Nahash, “Tomorrow we will come out, and you can do with us whatever seems good to you.”
10 ஆகவே, யாபோசின் ஆட்கள் "நாளை நாங்கள் உம்மிடம் சரணடைவோம். உம் விருப்பப்படியே எங்களுக்குச் செய்யும்" என்றனர்.

11וַיְהִ֣י מִֽמָּחֳרָ֗ת וַיָּ֨שֶׂם שָׁא֣וּל אֶת־הָעָם֮ שְׁלֹשָׁ֣ה רָאשִׁים֒ וַיָּבֹ֤אוּ בְתוֹךְ־הַֽמַּחֲנֶה֙ בְּאַשְׁמֹ֣רֶת הַבֹּ֔קֶר וַיַּכּ֥וּ אֶת־עַמּ֖וֹן עַד־חֹ֣ם הַיּ֑וֹם וַיְהִ֤י הַנִּשְׁאָרִים֙ וַיָּפֻ֔צוּ וְלֹ֥א נִשְׁאֲרוּ־בָ֖ם שְׁנַ֥יִם יָֽחַד׃

11 மறுநாளிலே சவுல் ஜனங்களை மூன்று படையாக வகுத்து, கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் பாளயத்திற்குள் வந்து வெயில் ஏறும்வரைக்கும் அம்மோனியரை முறிய அடித்தான்; தப்பினவர்களில் இரண்டுபேராகிலும் சேர்ந்து ஓடிப்போகாதபடி எல்லாரும் சிதறிப் போனார்கள்.
11 The next day Saul organized the troops into three divisions, and during the morning watch they invaded the camp of the Ammonites and slaughtered them, until the hottest part of the day. And the survivors were so scattered that no two of them were left together.
11 மறுநாள் சவுல் மக்களை மூன்று படைகளாகப் பிரித்தார். கீழ்வானம் வெளுத்தபோதே அவர்கள் பாளையத்தினுள் வந்து, வெயில் ஏறுவதற்குள் அம்மோனியரை வெட்டி வீழ்த்தினர். இருவர் கூட இணையாதபடி எஞ்சி இருந்தவர்கள் சிதறடிக்கப்பட்டார்கள்.

Saul Confirmed as King

12וַיֹּ֤אמֶר הָעָם֙ אֶל־שְׁמוּאֵ֔ל מִ֣י הָאֹמֵ֔ר שָׁא֖וּל יִמְלֹ֣ךְ עָלֵ֑ינוּ תְּנ֥וּ הָאֲנָשִׁ֖ים וּנְמִיתֵֽם׃

12 அப்பொழுது ஜனங்கள் சாமுவேலை நோக்கி: சவுலா நமக்கு ராஜாவாயிருக்கப்போகிறவன் என்று சொன்னவர்கள் யார்? அந்த மனுஷரை நாங்கள் கொன்று போடும்படிக்கு ஒப்புக்கொடுங்கள் என்றார்கள்.
12 Then the people said to Samuel, “Who said that Saul should not reign over us? Bring those men here so we can kill them!”
12 பிறகு, மக்கள் சாமுவேலை நோக்கி, "சவுலா எங்களை ஆள்வது? என்று கேட்டவர்களை கொண்டு வாருங்கள். அவர்களைக் கொன்று போடுவோம்" என்றனர்.

13וַיֹּ֣אמֶר שָׁא֔וּל לֹֽא־יוּמַ֥ת אִ֖ישׁ בַּיּ֣וֹם הַזֶּ֑ה כִּ֥י הַיּ֛וֹם עָשָֽׂה־יְהוָ֥ה תְּשׁוּעָ֖ה בְּיִשְׂרָאֵֽל׃

13 அதற்குச் சவுல்: இன்றையதினம் ஒருவரும் கொல்லப்படலாகாது; இன்று கர்த்தர் இஸ்ரவேலுக்கு இரட்சிப்பை அருளினார் என்றான்.
13 But Saul ordered, “No one shall be put to death this day, for today the LORD has worked salvation in Israel.”
13 ஆனால், சவுல், "இன்று யாரையும் கொல்லக் கூடாது. ஏனெனில், ஆண்டவர் இஸ்ரயேலுக்கு மீட்பு அளித்துள்ளார்" என்றார்.

14וַיֹּ֤אמֶר שְׁמוּאֵל֙ אֶל־הָעָ֔ם לְכ֖וּ וְנֵלְכָ֣ה הַגִּלְגָּ֑ל וּנְחַדֵּ֥שׁ שָׁ֖ם הַמְּלוּכָֽה׃

14 அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: நாம் கில்காலுக்குப் போய், அங்கே ராஜ்யபாரத்தை ஸ்திரப்படுத்துவோம் வாருங்கள் என்றான்.
14 Then Samuel said to the people, “Come, let us go to Gilgal and renew the kingship there.”
14 சாமுவேல் மக்களை நோக்கி, "வாருங்கள் கில்காலுக்குச் சென்று, அங்கே அரசாட்சியை உறுதிப்படுத்துவோம்." என்றார்.

15וַיֵּלְכ֨וּ כָל־הָעָ֜ם הַגִּלְגָּ֗ל וַיַּמְלִכוּ֩ שָׁ֨ם אֶת־שָׁא֜וּל לִפְנֵ֤י יְהוָה֙ בַּגִּלְגָּ֔ל וַיִּזְבְּחוּ־שָׁ֛ם זְבָחִ֥ים שְׁלָמִ֖ים לִפְנֵ֣י יְהוָ֑ה וַיִּשְׂמַ֨ח שָׁ֥ם שָׁא֛וּל וְכָל־אַנְשֵׁ֥י יִשְׂרָאֵ֖ל עַד־מְאֹֽד׃

15 அப்படியே ஜனங்கள் எல்லாரும் கில்காலுக்குப் போய், அவ்விடத்திலே கர்த்தருடைய சந்நிதியில் சவுலை ராஜாவாக ஏற்படுத்தி, அங்கே கர்த்தருடைய சந்நிதியில் சமாதானபலிகளைச் செலுத்தி, அங்கே சவுலும் இஸ்ரவேல் மனுஷர் யாவரும் மிகவும் சந்தோஷங்கொண்டாடினார்கள்.
15 So all the people went to Gilgal and confirmed Saul as king in the presence of the LORD. There they sacrificed peace offerings before the LORD, and Saul and all the Israelites rejoiced greatly.
15 மக்கள் அனைவரும் கில்காலுக்குச் சென்று, அங்கே ஆண்டவர் திருமுன் சவுலை அரசராக்கி, நல்லுறவுப் பலிகளைச் செலுத்தினார்கள். சவுலும் இஸ்ரயேலும் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

1 Samuel Chapter   1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23  24   25   26   27   28   29   30   31

Footnotes:
1 a DSS and LXX About a month later Nahash
1 b Forms of the Hebrew berit  are translated in most passages as covenant .
8 c DSS and LXX 70,000

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.