பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Ezra எஸ்றா עֶזְרָא
எஸ்றா 10 | Ezra 10
Shecaniah’s Encouragement
1 எஸ்றா இப்படி விண்ணப்பம்பண்ணி அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்துக்கு முன்பாக தாழ விழுந்துகிடக்கையில், இஸ்ரவேல் புருஷரும் ஸ்திரீகளும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடிற்று; ஜனங்கள் மிகவும் அழுதார்கள்.
1 While Ezra prayed and made this confession, weeping and falling facedown before the house of God, a very large assembly of Israelites—men, women, and children—gathered around him, and the people wept bitterly as well.
1 இவ்வாறு, எஸ்ரா கடவுளின் இல்லத்தின்முன் விழுந்து மன்றாடி விண்ணப்பித்துக்கொண்டு இருந்தார். அப்பொழுது ஆண், பெண், குழந்தைகள் உள்பட இஸ்ரயேல் மக்களின் பெருங்கூட்டம் அவரைச் சூழ்ந்து கொண்டு கூக்குரலிட்டு அழுதனர்.
2 அப்பொழுது ஏலாமின் புத்திரரில் ஒருவனாகிய யெகியேலின் குமாரன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து ஜனங்களிலுள்ள அந்நியஸ்திரீகளைச் சேர்த்துகொண்டதினால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு.
2 Then Shecaniah son of Jehiel, an Elamite, said to Ezra: “We have been unfaithful to our God by marrying foreign women from the people of the land, yet in spite of this, there is hope for Israel.
2 அப்பொழுது ஏலாமியருள் ஒருவரான எகியேல் மகன் செக்கனியா எஸ்ராவை நோக்கி, "நாங்கள் கடவுளுக்கு எதிராக நேர்மையற்றவர்களாய் நடந்து கொண்டோம். ஏனெனில் இந்நாட்டின் மக்களான வேற்றினப் பெண்களை மணந்தோம். ஆயினும், இஸ்ரயேலுக்கு இன்னும் நம்பிக்கை உண்டு.
3 இப்பொழுதும் அந்த ஸ்திரீகளெல்லாரையும், அவர்களிடத்தில் பிறந்தவர்களையும், என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும், நமது தேவனுடைய கற்பனைக்கு நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனோடே உடன்படிக்கைப் பண்ணக்கடவோம்; நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக,
3 So now let us make a covenant before our God to send away all the foreign wives and their children, according to the counsel of my lord and of those who tremble at the command of our God. Let it be done according to the Law.
3 ஆகவே, என் தலைவரின் அறிவுரைக்கும் கடவுளின் கட்டளைகளுக்கும் அஞ்சி நடப்போரின் விருப்பத்திற்கும் ஏற்ப, அப்பெண்கள் அனைவரையும் அவர்களின் பிள்ளைகளையும் அகற்றி விடுவோம் என்று நம் கடவுளோடு உடன்படிக்கை செய்வோம். திருச்சட்டத்திற்கு ஏற்ப இது செய்யப்படட்டும்.
4 எழுந்திரும்; இந்தக் காரியத்தை நடப்பிக்கிறது உமக்கு அடுத்தது; நாங்களும் உம்மோடேகூட இருப்போம்; நீர் திடன்கொண்டு இதைச் செய்யும் என்றான்.
4 Get up, for this matter is your responsibility, and we will support you. Be strong and take action!”
4 எழுந்திரும்! இது உம் கடமை. நாங்கள் உம்மோடு இருக்கின்றோம். இதை மனஉறுதியுடன் செய்யும்" என்றார்.
5 அப்பொழுது எஸ்றா எழுந்திருந்து, ஆசாரியரிலும் லேவியரிலும் பிரதானமானவர்களும் இஸ்ரவேலனைவரும் இந்த வார்த்தையின்படி செய்யும்படிக்கு, அவர்களை ஆணையிடச்சொன்னான்; அவர்கள் ஆணையிட்டார்கள்.
5 So Ezra got up and made the leading priests, Levites, and all Israel take an oath to do what had been said. And they took the oath.
5 "எஸ்ரா எழுந்து, குருக்களின் தலைவர்களையும், லேவியர்களையும், எல்லா இஸ்ரயேல் மக்களையும் இவ்வாறு வாக்குறுதி அளிக்கச் செய்தார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.
The People’s Confession of Sin
6 அதின்பின்பு எஸ்றா தேவனுடைய ஆலயத்துக்கு முன்னிருந்து எழுந்து, எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் அறைக்குள் பிரவேசித்தான்; அங்கே வந்தபோது, அவன் சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் துக்கித்துக்கொண்டிருந்தான்.
6 Then Ezra withdrew from before the house of God and walked to the chamber of Jehohanan son of Eliashib. And while he stayeda there, he ate no food and drank no water, because he was mourning over the unfaithfulness of the exiles.
6 பின்பு, எஸ்ரா கடவுளது இல்லத்தின் முகப்பினின்று எழுந்தார்; எலியாசிபின் மகனான யோகனானின் அறையினுள் சென்றார். அங்கே உணவு உண்ணாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருந்தார். ஏனெனில் அடிமைத்தனத்திலிருந்து திரும்பிவந்தவர்களின் நேர்மையின்மையின் பொருட்டுப் புலம்பி அழுது கொண்டிருந்தார்.
7 அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாரும் எருசலேமிலே வந்து கூடவேண்டும் என்றும்,
7 And a proclamation was issued throughout Judah and Jerusalem that all the exiles should gather at Jerusalem.
7 அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த மக்கள் அனைவரும் எருசலேமில் கூடவேண்டுமென்றும்,
8 மூன்றுநாளைக்குள்ளே பிரபுக்கள் மூப்பர்களுடைய ஆலோசனையின்படியே எவனாகிலும் வராதேபோனால், அவனுடைய பொருளெல்லாம் ஜப்திசெய்யப்பட்டு, சிறையிருப்பிலிருந்து வந்த சபைக்கு அவன் புறம்பாக்கப்படுவான் என்றும் யூதாவிலும் எருசலேமிலும் விளம்பரம்பண்ணினார்கள்.
8 Whoever failed to appear within three days would forfeit all his property, according to the counsel of the leaders and elders, and would himself be expelled from the assembly of the exiles.
8 அவர்களுள் எவராவது மூன்று நாள்களுக்குள் வராமல் இருந்தால், மக்கள் தலைவர்கள் பெரியோர் ஆகியோரின் அறிவரைப்படி, அவனுடைய உடைமைகள் பறிமுதல் செய்யப்படவேண்டும் என்றும் அடிமைத்தனத்திலிருந்து வந்தவர்களின் கூட்டத்திலிருந்து அவர்கள் விலக்கி வைக்கப்படவேண்டும் என்றும் யூதாவிலும் எருசலேமிலும் அறிவிக்கப்பட்டது.
9 அப்படியே யூதா பென்யமீன் புத்திரத்தார் எல்லாரும் மூன்றுநாளைக்குள் எருசலேமிலே கூடினார்கள்; அது ஒன்பதாம் மாதம் இருபதாந் தேதியாயிருந்தது; ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.
9 So within the three days, all the men of Judah and Benjamin assembled in Jerusalem, and on the twentieth day of the ninth month, all the people sat in the square at the house of God, trembling regarding this matter and because of the heavy rain.
9 எனவே, யூதா, பென்யமின் குலத்தார் அனைவரும் எருசலேமில் மூன்று நாள்களுக்குள் அதாவது, ஒன்பதாம் மாதம், இருபதாம் நாளன்று ஒன்று கூட்டப்பட்டனர். மக்கள் அனைவரும் மேற்குறிப்பிட்டதன் காரணமாகவும், மழையின் காரணமாகவும் கடவுளது இல்லத்தின் வளாகத்தில் நடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தனர்.
10 அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்து அவர்களை நோக்கி: நீங்கள் இஸ்ரவேலின்மேலிருக்கிற குற்றத்தை அதிகரிக்கப்பண்ண மறு ஜாதியான ஸ்திரீகளை விவாகம்பண்ணினதினால் பாவஞ்செய்தீர்கள்.
10 Then Ezra the priest stood up and said to them, “You have been unfaithful by marrying foreign women, adding to the guilt of Israel.
10 குரு எஸ்ரா எழுந்து அவர்களைப் பார்த்துக் கூறியது: "நீங்கள் வேற்றினப் பெண்களை மணந்ததால் நேர்மையற்றவர்களாகி, இஸ்ரயேலின் பாவத்தைப் பெருகச் செய்துள்ளீர்கள்.
11 இப்பொழுதும் நீங்கள் உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய பிரியத்தின்படியே செய்து, தேசத்தின் ஜனங்களையும், மறுஜாதியான ஸ்திரீகளையும் விட்டு விலகுங்கள் என்றான்.
11 Now, therefore, make a confession to the LORD, the God of your fathers, and do His will. Separate yourselves from the people of the land and from your foreign wives.”
11 எனவே, இப்பொழுது உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரின் திருமுன் மன்றாடுங்கள்; அவர் திருவுளப்படி நடங்கள்; இந்நாட்டில் வாழும் மக்களிடமிருந்தும், வேற்றினப் பெண்களிடமிருந்தும் விலகி இருங்கள்".
12 அப்பொழுது சபையார் யாவரும் மகா சத்தத்தோடே பிரதியுத்தரமாக: ஆம், நீர் சொன்ன வார்த்தைகளின்படியே செய்யவேண்டியதுதான்.
12 And the whole assembly responded in a loud voice: “Truly we must do as you say!
12 அப்பொழுது குழுமியிருந்த அனைவரும் உரத்த குரலில் கூறியது: "நீர் சொல்வதே சரி! உமது வார்த்தையின்படியே நாங்கள் செய்வோம்.
13 ஆனாலும் ஜனங்கள் திரளாயிருக்கிறார்கள், இது மாரிகாலமுமாயிருக்கிறது, இங்கே வெளியிலே நிற்க எங்களாலே கூடாது; இது ஒருநாள் இரண்டுநாள் வேலையல்ல; இந்தக் காரியத்திலே கட்டளை மீறினவர்களாகிய நாங்கள் அநேகர்.
13 But there are many people here, and it is the rainy season. We are not able to stay out in the open. Nor is this the work of one or two days, for we have transgressed greatly in this matter.
13 ஆயினும் இதனை ஓரிரு நாள்களில் செய்ய இயலாது; ஏனெனில் மக்கள் மிகுதியாக உள்ளனர். இது மாரிக்காலமாக இருப்பதால், வெளியே நிற்க முடியவில்லை. மேலும், இக்காரியத்தில் எங்களுள் பாவம் செய்தோர் பலர்.
14 ஆகையால் இதற்குச் சபையெங்கும் எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரராக வைக்கப்படவேண்டும் இந்தக் காயத்தினிமித்தம் நம்முடைய தேவனுக்கு இருக்கிற உக்கிரகோபம் எங்களை விட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரக்கடவர்கள் என்றார்கள்.
14 Let our leaders represent the whole assembly. Then let everyone in our towns who has married a foreign woman come at an appointed time, together with the elders and judges of each town, until the fierce anger of our God in this matter is turned away from us.”
14 எனவே, எல்லா மக்களின் சார்பில் தலைவர்கள் இதன் காரணமாக மூண்ட நம் கடவுளின் கோபக்கனல் நம்மைவிட்டு விலகும்வரை தங்கியிருக்கட்டும், நம் நகர்களில் வாழும் வேற்றினப் பெண்களை மணந்தவர்கள் அனைவரும் குறித்த காலத்தில் வரட்டும்; அவர்களோடு ஒவ்வொரு நகரத்தின் பெரியோர்களும், அதன் நீதிபதிகளும் வரட்டும்."
15 ஆசகேலின் குமாரன் யோனத்தானும், திக்காவின் குமாரன் யக்சியாவுமாத்திரம் அதை விசாரிக்கும்படிக்கு வைக்கப்பட்டார்கள்; மெசுல்லாமும், சப்பேதா என்னும் லேவியனும் அவர்களுக்கு உதவியாயிருந்தார்கள்.
15 (Only Jonathan son of Asahel and Jahzeiah son of Tikvah, supported by Meshullam and Shabbethai the Levite, opposed this plan.)
15 அசாவேலின் மகனான யோனத்தானும், திக்வாவின் மகன் யாகிசியாவுமே இதை எதிர்த்து நின்றனர். மெசுல்லாமும் லேவியரான சபத்தாயும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தனர்.
16 சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் இந்தப்பிரகாரம் செய்தார்கள்; ஆசாரியனாகிய; எஸ்றாவும், தங்கள் பிதாக்களுடைய குடும்பத்தின்படியே பேர்பேராக அழைக்கப்பட்ட பிதாவம்சங்களின் தலைவர் அனைவரும் இந்தக் காரியத்தை விசாரிக்கும்படி பத்தாம் மாதம் முதல்தேதியிலே தனித்து உட்கார்ந்து,
16 So the exiles did as proposed. Ezra the priest selected men who were family heads, each of them identified by name, to represent their families. On the first day of the tenth month they launched the investigation,
16 அடிமைத்தனத்தலிருந்து திரும்பி வந்திருந்தோர் அவ்வாறே செய்தனர். குரு எஸ்ராவும் மக்கள் தலைவர்களும் அவர்களின் மூதாதையரின் வழிமரபின்படியும், ஒவ்வொருவரின் பெயர் வரிசைப்படியும், பத்தாம் மாதம் முதல் நாள் இதைப்பற்றி விசாரணை செய்ய அமர்ந்தனர்.
17 அந்நியஜாதியான ஸ்திரீகளைக்கொண்டவர்கள் எல்லாருடைய காரியத்தையும் முதலாம் மாதம் முதல்தேதியிலே விசாரித்து முடித்தார்கள்.
17 and by the first day of the first month they had dealt with all the men who had married foreign women.
17 முதல் மாதம் முதல் நாளிலே வேற்றினப் பெண்களை மணந்தவர்கள் அனைவரையும் விசாரித்து முடித்தனர்.
Those Guilty of Intermarriage
18 ஆசாரிய புத்திரரில் மறுஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டர்கள் யாரென்றால்: யோதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரரிலும் அவன் சகோதரரிலும், மாசெயா எலியேசர், யாரீப்கெதலியா என்பவர்கள்.
18 Among the descendants of the priests who had married foreign women were found these descendants of Jeshua son of Jozadakb and his brothers: Maaseiah, Eliezer, Jarib, and Gedaliah.
18 குருக்களின் மரபில் வேற்றினப் பெண்களை மணந்தவர்களாகக் கண்டு பிடிக்கப்பட்டவர்கள்: ஏசுவா வழிமரபில் யோசதாக்கின் மகனான ஏசுவா, அவர் சகோதரரின் வழிமரபில், மாசேயா, எலியேசர், யாரிபு, கெதலியா ஆகியோர்.
19 இவர்கள் எங்கள் ஸ்திரீகளைத் தள்ளிவிடுவோம் என்று கையடித்துக்கொடுத்து; தாங்கள் குற்றவாளிகளானபடியினால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள்.
19 They pledged to send their wives away, and for their guilt they presented a ram from the flock as a guilt offering.
19 அவர்கள் தம் மனைவியரை அனுப்பி விட வாக்களித்தனர்; தங்கள் குற்றநீக்கப் பலியாக ஒரு கிடாயைச் செலுத்தினர்.
20 இம்மேரின் புத்திரரில் அனானியும், செருபதியாவும்,
20 From the descendants of Immer: Hanani and Zebadiah.
20 இம்மேயின் வழிமரபில், அனானி, செபதியா ஆகியோர்.
21 ஆரீமின் புத்திரரில் மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும்;
21 From the descendants of Harim: Maaseiah, Elijah, Shemaiah, Jehiel, and Uzziah.
21 ஆரிம் வழிமரபில் மாசேயா, எலியா, செமாயா, எகியேல், உசியா ஆகியோர்.
22 பஸ்கூரின் புத்திரரில் எலியோனாய், மாசெயா இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா என்பவர்களும்;
22 From the descendants of Pashhur: Elioenai, Maaseiah, Ishmael, Nethanel, Jozabad, and Elasah.
22 பஸ்கூர் வழிமரபில் எலியேனாய், மாசேயா, இஸ்மயேல், நத்தனியேல், யோசபாது, எலாசா ஆகியோர்.
23 லேவியரில் யோசபாத், சிமேயி, கெலிதா என்னும் பேருமுள்ள கெலாயா, பெத்தகீயா, யூதா, எலியேசர் என்பவர்களும்;
23 Among the Levites: Jozabad, Shimei, Kelaiah (that is, Kelita), Pethahiah, Judah, and Eliezer.
23 லேவியரில், யோசபாது, சிமயி, கெலித்தா என்ற கேலாயா, பெத்தகியா, யூதா, எலியேசர் ஆகியோர்.
24 பாடகரில் எலியாசிபும், வாசல்காவலாளரில் சல்லூம், தேலேம், ஊரி என்பவர்களும்;
24 From the singers: Eliashib. From the gatekeepers: Shallum, Telem, and Uri.
24 பாடகரில் எலியாகிபு; வாயிற்காவலரில், சல்லூம், தேலம், ஊரி, ஆகியோர்.
25 மற்ற இஸ்ரவேலருக்குள்ளே பாரோஷின் புத்திரரில் ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா என்பவர்களும்;
25 And among the other Israelites, from the descendants of Parosh: Ramiah, Izziah, Malchijah, Mijamin, Eleazar, Malchijah,c and Benaiah.
25 மற்ற இஸ்ரயேலருள் பாரோகின் வழிமரபில் இரமியா, இசியா, மல்கியா, மிய்யாமின், எலியாசர், மல்கியா, பெனாயா ஆகியோர்.
26 ஏலாமின் புத்திரரில் மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா என்பவர்களும்;
26 From the descendants of Elam: Mattaniah, Zechariah, Jehiel, Abdi, Jeremoth, and Elijah.
26 ஏலாம் வழிமரபில், மத்தானியா, செக்கரியா, எகியேல், அப்தி, ஏரேமோத்து, எலியா ஆகியோர்.
27 சத்துவின் புத்திரரில் எலியோனாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத் அசிசா என்பவர்களும்;
27 From the descendants of Zattu: Elioenai, Eliashib, Mattaniah, Jeremoth, Zabad, and Aziza.
27 சத்தூ வழிமரபில், எலியேனாய், எலியாகிபு, மத்தனியா, எலிமோது, சாபாது, அசிசா ஆகியோர்.
28 பெபாயின் புத்திரரில் யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி என்பவர்களும்;
28 From the descendants of Bebai: Jehohanan, Hananiah, Zabbai, and Athlai.
28 பேபாய் வழிமரபில் யோகனான், அனனியா, சபாய், அத்லாய் ஆகியோர்.
29 பானியின் புத்திரரில் மெசுல்லாம், மல்லுக், அதாயா, யாசுப், செயால் ராமோத் என்பவர்களும்;
29 From the descendants of Bani: Meshullam, Malluch, Adaiah, Jashub, Sheal, and Jeremoth.
29 பானி வழிமரபில், மெசுல்லாம், மல்லூக்கு, அதாயா, யாசூபு, செயால், எரேமேத்து ஆகியோர்.
30 பாகாத்மோவாபின் புத்திரரில் அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூயி, மனாசே என்பவர்களும்;
30 From the descendants of Pahath-moab: Adna, Chelal, Benaiah, Maaseiah, Mattaniah, Bezalel, Binnui, and Manasseh.
30 பாகாத்மோவாபு வழிமரபில், அத்னா, கெலால், பெனாயா, மாசேயா, மத்தனியா, பெசலேல், பின்னூய், மனாசே ஆகியோர்.
31 ஆரீமின் புத்திரரில் எலியேசர், இஷியா மல்கியா, செமாயா, ஷிமியோன்,
31 From the descendants of Harim: Eliezer, Isshijah, Malchijah, Shemaiah, Shimeon,
31 ஆரிம் வழிமரபில், எலியேசர், இசிய்யா, மல்கியா, செமாயா, சிமியோன்,
32 பென்யமீன், மல்லுூக், செமரியா என்பவர்களும்;
32 Benjamin, Malluch, and Shemariah.
32 பென்யமின், மல்லூக்கு, செமரியா ஆகியோர்.
33 ஆசூமின் புத்திரரில் மத்னாயி, மத்தத்தா, சாபாத், எலிபெலேத், எரெமாயி, மனாசே, சிமெயி என்பவர்களும்;
33 From the descendants of Hashum: Mattenai, Mattattah, Zabad, Eliphelet, Jeremai, Manasseh, and Shimei.
33 ஆசூம் வழிமரபில், மத்தனாய், மத்தாத்தா, சாபது, எலிப்பலேற்று, எரேமாய், மனாசே, சிமயி ஆகியோர்.
34 பானியின் புத்திரரில் மாதாயி, அம்ராம், ஊவேல்,
34 From the descendants of Bani: Maadai, Amram, Uel,
34 பானி வழிமரபில், மாகதாய், அம்ராம், ஊவேல்,
35 பெனாயா, பெதியா, கெல்லுூ,
35 Benaiah, Bedeiah, Cheluhi,
35 பெனாயா, பேதயா, கெலூகி,
36 வனியா மெராமோத், எலெயாசீப்,
36 Vaniah, Meremoth, Eliashib,
36 வானியா, மெரேமோத்து, எலியாசிபு,
37 மத்தனியா, மதனாய், யாசாய்,
37 Mattaniah, Mattenai, and Jaasu.
37 மத்தனியா, மத்தனாய், யகசு ஆகியோர்.
38 பானி, பின்னூயி, சிமெயி,
38 From the descendants of Binnui: Shimei,d
38 பின்னூய் வழிமரபில், சிமயி,
39 செலேமியா, நாத்தான், அதாயா,
39 Shelemiah, Nathan, Adaiah,
39 செலேமியா, நாத்தான், அதாயா,
40 மக்நாத்பாயி, சாசாயி, சாராயி,
40 Machnadebai, Shashai, Sharai,
40 மாக்னதபாய், சசாய், சாராய்,
41 அசரெயேல், செலேமியா, செமரியா,
41 Azarel, Shelemiah, Shemariah,
41 அசரியேல், செலேமியா, செமரியா,
42 சல்லுூம், அமரியா, யோசேப் என்பவர்களும்;
42 Shallum, Amariah, and Joseph.
42 சல்லூம், அமரியா, யோசேப்பு ஆகியோர்.
43 நேபோவின் புத்திரரில் ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோவேல், பெனாயா என்பவர்களுமே.
43 And from the descendants of Nebo: Jeiel, Mattithiah, Zabad, Zebina, Jaddai, Joel, and Benaiah.
43 நெபோ வழிமரபில், எயியேல், மத்தித்தியா, சாபது, செபினா, யாதாய், யோவேல், பெனாயா ஆகியோர்.
44 இவர்கள் எல்லாரும் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்டவர்கள், இவர்களில் சிலர் கொண்டிருந்த ஸ்திரீகளிடத்தில் பிள்ளைகளைப் பெற்றிருந்தார்கள்.
44 All these men had married foreign women, and some of them had children by these wives.e
44 வேற்றினப் பெண்களை மணந்திருந்த இவர்கள் அனைவரும் இப்பெண்களையும் அவர்களிடமிருந்து பிறந்த பிள்ளைகளையும் விலக்கிவிட்டனர்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
6 a Or went
18 b Jozadak is a variant of Jehozadak ; see 1 Chronicles 6:14.
25 c Hebrew; LXX Hashabiah
38 d See LXX; Hebrew And Bani, and Binnui, (and) Shimei,
44 e Or and they sent them away with their children
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.