பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Ezra எஸ்றா עֶזְרָא
எஸ்றா 2 | Ezra 2
The List of Returning Exiles (Nehemiah 7:4–69)
1 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும்,
1 Now these are the people of the province who came up from the captivity of the exiles carried away to Babylon by Nebuchadnezzar its king. They returned to Jerusalem and Judah, each to his own town,
1 அடிமைத்தனத்திலிருந்தும் நாடு கடத்தப்பட்ட இடத்தினின்றும் திரும்பி வந்த அம் மாநில மக்கள் இவர்களே. அவர்களைப் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர், பாபிலோனுக்கு அடிமைகளாக இட்டுச் சென்றிருந்தான். இவர்களே எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தம் நகர்களுக்கும் திரும்பிச் சென்றவர்கள்.
2 செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களோடேகூட திரும்பிவந்த தேசத்துப் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனமான மனிதரின் தொகையாவது:
2 accompanied by Zerubbabel, Jeshua, Nehemiah, Seraiah, Reelaiah, Mordecai, Bilshan, Mispar, Bigvai, Rehum, and Baanah.a This is the count of the men of Israel:
2 செருபாபேலோடு வந்தவர்கள்; ஏசுவா, நெகேமியா, செராயா, இரகேலயா, மொர்தக்காய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், இரகூம், பானா. இஸ்ரயேல் மக்களுள் ஆண்களின் எண்ணிக்கை;
3 பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.
3 the descendants of Parosh, 2,172;
3 பரோசின் மக்கள் இரண்டாயிரத்து நூற்று எழுப்பத்திரண்டு பேர்.
4 செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.
4 the descendants of Shephatiah, 372;
4 செபத்தியாவின் மக்கள் முந்நூற்று எழுபத்திரண்டு பேர்.
5 ஆராகின் புத்திரர் எழுநூற்று எழுபத்தைந்துபேர்.
5 the descendants of Arah, 775;
5 ஆரகின் மக்கள் எழுநூற்று எழுபத்தைந்து பேர்.
6 யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர்.
6 the descendants of Pahath-moab (through the line of Jeshua and Joab), 2,812;
6 ஏசுவா, யோவாபு இவர்களின் வழிவந்த பகத்து, மோவாபு மக்கள் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டு பேர்.
7 ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
7 the descendants of Elam, 1,254;
7 ஏலாமின் மக்கள் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு பேர்.
8 சத்தூவின் புத்திரர் தொளாயிரத்து நாற்பத்தைந்துபேர்.
8 the descendants of Zattu, 945;
8 சத்தூவின் மக்கள் தொள்ளாயிரத்து நாற்பத்தைந்து பேர்.
9 சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர்.
9 the descendants of Zaccai, 760;
9 சக்காயின் மக்கள் எழுநூற்று அறுபது பேர்.
10 பானியின் புத்திரர் அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.
10 the descendants of Bani,b 642;
10 பானியின் மக்கள் அறுநூற்று நாற்பத்திரண்டு பேர்.
11 பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்துமூன்றுபேர்.
11 the descendants of Bebai, 623;
11 பேபாயின் மக்கள் அறுநூற்று இருபத்து மூன்று பேர்.
12 அஸ்காதின் புத்திரர் ஆயிரத்துஇருநூற்று இருபத்திரண்டுபேர்.
12 the descendants of Azgad, 1,222;
12 அசகாதின் மக்கள் ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டு பேர்.
13 அதோனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தாறுபேர்.
13 the descendants of Adonikam, 666;
13 அதோனிக்காமின் மக்கள் அறுநூற்று அறுபத்தாறு பேர்.
14 பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து ஐம்பத்தாறுபேர்.
14 the descendants of Bigvai, 2,056;
14 பிக்வாயின் மக்கள் இரண்டாயிரத்து ஐம்பத்தாறு பேர்.
15 ஆதீனின் புத்திரர் நானூற்று ஐம்பத்து நான்குபேர்.
15 the descendants of Adin, 454;
15 அதீனின் மக்கள் நானூற்று ஐம்பத்து நான்கு பேர்.
16 எசேக்கியாவின் சந்ததியான அதேரின் புத்திரர் தொண்ணூற்றெட்டுப்பேர்.
16 the descendants of Ater (through Hezekiah), 98;
16 எசேக்கியாவின் வழிவந்த ஆற்றேரின் மக்கள் தொண்ணூற்றெட்டுப் பேர்.
17 பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துமூன்றுபேர்.
17 the descendants of Bezai, 323;
17 பேசாயின் மக்கள் முந்நூற்று இருபத்து மூன்று பேர்.
18 யோரோகின் புத்திரர் நூற்றுப்பன்னிரண்டுபேர்.
18 the descendants of Jorah,c 112;
18 யோராவின் மக்கள் நூற்றுப் பன்னிரண்டு பேர்.
19 ஆசூமின் புத்திரர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
19 the descendants of Hashum, 223;
19 ஆசுமின் மக்கள் இருநூற்று இருபத்து மூன்று பேர்.
20 கிபாரின் புத்திரர் தொண்ணூற்றைந்துபேர்.
20 the descendants of Gibbar,d 95;
20 கிப்பாரின் மக்கள் தொண்ணூற்றைந்து பேர்.
21 பெத்லகேமின் புத்திரர் நூற்றிருபத்துமுன்றுபேர்.
21 the mene of Bethlehem, 123;
21 பெத்லகேமின் மக்கள் நூற்று இருபத்து மூன்று பேர்.
22 நெத்தோபாவின் மனிதர் ஐம்பத்தாறுபேர்.
22 the men of Netophah, 56;
22 நெற்றோபாவின் ஆண்கள் ஐம்பத்தாறு பேர்.
23 ஆனதோத்தின் மனிதர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.
23 the men of Anathoth, 128;
23 அனாதோதின் ஆண்கள் நூற்று இருபத்தெட்டுப் பேர்.
24 அஸ்மாவேத்தின் புத்திரர் நாற்பத்திரண்டுபேர்.
24 the descendants of Azmaveth,f 42;
24 அஸ்மாவேத்தின் மக்கள் நாற்பத்திரண்டு பேர்.
25 கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் புத்திரர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.
25 the men of Kiriath-jearim,g Chephirah, and Beeroth, 743;
25 கிரியத்து ஆரிம், கெபீரா, பெயரோத்து மக்கள் எழுநூற்று நாற்பத்து மூன்று பேர்.
26 ராமா, காபா என்பவைகளின் புத்திரர் அறுநூற்று இருபத்தொருபேர்.
26 the men of Ramah and Geba, 621;
26 இராமா, கேபா மக்கள் அறுநூற்று இருபத்தொருபேர்.
27 மிக்மாசின் மனிதர் நூற்றிருபத்திரண்டுபேர்.
27 the men of Michmash, 122;
27 மிக்மாசின் ஆண்கள் நூற்றுஇருபத்திரண்டு பேர்.
28 பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
28 the men of Bethel and Ai, 223;
28 பெத்தேலிலும், ஆயிலும் உள்ள ஆண்கள் இருநூற்று இருபத்து மூன்று பேர்.
29 நேபோவின் புத்திரர் ஐம்பத்திரண்டுபேர்.
29 the descendants of Nebo, 52;
29 நெபோவின் மக்கள் ஐம்பத்திரண்டு பேர்.
30 மக்பீஷின் புத்திரர் நூற்றைம்பத்தாறுபேர்.
30 the descendants of Magbish, 156;
30 மக்பீசின் மக்கள் நூற்றைம்பத்தாறு பேர்.
31 மற்ற ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
31 the descendants of the other Elam,h 1,254;
31 மற்றொரு ஏலாமின் மக்கள் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு பேர்.
32 ஆரீமின் புத்திரர் முந்நூற்று இருபதுபேர்.
32 the descendants of Harim, 320;
32 ஆரிமின் மக்கள் முந்நூற்றிருபது பேர்.
33 லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் புத்திரர் எழுநூற்று இருபத்தைந்துபேர்.
33 the men of Lod, Hadid, and Ono, 725;
33 லோது, ஆதிது, ஒனோ ஆகியோரின் மக்கள் எழுநூற்றிருபத்தைந்து பேர்.
34 எரிகோவின் புத்திரர் முந்நூற்றுநாற்பத்தைந்துபேர்.
34 the men of Jericho, 345;
34 எரிகோவின் மக்கள் முந்நூற்று நாற்பதைந்து பேர்.
35 சேனாகின் புத்திரர் மூவாயிரத்துஅறுநூற்று முப்பதுபேர்.
35 and the descendants of Senaah, 3,630.
35 செனா மக்கள் மூவாயிரத்து அறுநூற்று முப்பது பேர்.
36 ஆசாரியரானவர்கள் யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.
36 The priests: The descendants of Jedaiah (through the house of Jeshua), 973;
36 குருக்கள்: யோசுவாவின் வீட்டாரான எதாயாவின் மக்கள் தொள்ளாயிரத்து எழுபத்து மூன்று பேர்.
37 இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.
37 the descendants of Immer, 1,052;
37 இம்மேரின் மக்கள் ஆயிரத்து ஐம்பத்திரண்டு பேர்.
38 பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்துஇருநூற்று நாற்பத்தேழுபேர்.
38 the descendants of Pashhur, 1,247;
38 பஸ்கூரின் மக்கள் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழு பேர்.
39 ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப்பதினேழுபேர்.
39 and the descendants of Harim, 1,017.
39 ஆரிமின் மக்கள் ஆயிரத்துப் பதினேழு பேர்.
40 லேவியரானவர்கள்: ஒதாயாவின் சந்ததியான யெசுவா கத்மியேல் என்பவர்களின் புத்திரர் எழுபத்து நான்குபேர்.
40 The Levites: the descendants of Jeshua and Kadmiel (through the line of Hodaviahi), 74.
40 லேவியர்கள்: ஓதவியாவின் வழிவந்த யேசுவா கத்மியேலின் மக்கள் எழுபத்து நான்கு பேர்.
41 பாடகர்களானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.
41 The singers: the descendants of Asaph, 128.
41 பாடகர்கள்: ஆசாபு மக்கள் நூற்று இருபத்தெட்டுப் பேர்.
42 வாசல் காவலாளரின் புத்திரரானவர்கள்: சல்லுூமின் புத்திரரும், அதேரின் புத்திரரும், தல்மோனின் புத்திரரும், அக்கூபின் புத்திரரும், அதிதாவின் புத்திரரும், சோபாயின் புத்திரருமானவர்களெல்லாரும் நூற்றுமுப்பத்தொன்பதுபேர்.
42 The gatekeepers: the descendants of Shallum, the descendants of Ater, the descendants of Talmon, the descendants of Akkub, the descendants of Hatita, and the descendants of Shobai, 139 in all.
42 வாயிற்காவலரின் வழிவந்த சல்லூம், ஆற்றேர், தல்மோன், அக்கூபு, அத்தித்தா, சோபாய் ஆகியவரின் மக்களனைவரும் நூற்று முப்பத்தொன்பது பேர்.
43 நிதனீமியரானவர்கள்: சீகாவின் புத்திரர், அசுபாவின் புத்திரர், தபா கோத்தின் புத்திரர்,
43 The temple servants:j the descendants of Ziha, the descendants of Hasupha, the descendants of Tabbaoth,
43 கோவில் ஊழியர்கள்: சிகாபின் மக்கள், அசுபாவின் மக்கள், தபாயோத்தின் மக்கள்.
44 கேரோசின் புத்திரர், சீயாகாவின் புத்திரர், பாதோனின் புத்திரர்,
44 the descendants of Keros, the descendants of Siaha,k the descendants of Padon,
44 கேரோசின் மக்கள், சீயகாவின் மக்கள், பாதோனின் மக்கள்,
45 லெபானாகின் புத்திரர், அகாபாவின் புத்திரர், அக்கூபின் புத்திரர்,
45 the descendants of Lebanah, the descendants of Hagabah, the descendants of Akkub,
45 இலபனாவின் மக்கள், அகாபாவின் மக்கள், அக்கூபின் மக்கள்,
46 ஆகாபின் புத்திரர், சல்மாயின் புத்திரர், ஆனானின் புத்திரர்,
46 the descendants of Hagab, the descendants of Shalmai,l the descendants of Hanan,
46 காகாபின் மக்கள், சம்லாயின் மக்கள், அனானின் மக்கள்,
47 கித்தேலின் புத்திரர், காகாரின் புத்திரர், ராயாகின் புத்திரர்,
47 the descendants of Giddel, the descendants of Gahar, the descendants of Reaiah,
47 கிதேலின் மக்கள், ககாரின் மக்கள், இரயாயாவின் மக்கள்,
48 ரேத்சினின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், காசாமின் புத்திரர்,
48 the descendants of Rezin, the descendants of Nekoda, the descendants of Gazzam,
48 இரத்சீனின் மக்கள், நெக்கோதாவின் மக்கள், கசாம் மக்கள்,
49 ஊசாவின் புத்திரர், பாயோகின் புத்திரர், பேசாயின் புத்திரர்,
49 the descendants of Uzza, the descendants of Paseah, the descendants of Besai,
49 ஊசாவின் மக்கள், பர்சயாகின் மக்கள், பேசாயின் மக்கள்,
50 அஸ்னாவின் புத்திரர், மெயூனீமின் புத்திரர், நெபுசீமின் புத்திரர்,
50 the descendants of Asnah, the descendants of Meunim, the descendants of Nephusim,m
50 அஸ்னாவின் மக்கள், மெய்யோனிம் மக்கள், நெபிசிம் மக்கள்,
51 பக்பூக்கின் புத்திரர், அகுபாவின்புத்திரர், அர்கூரின் புத்திரர்,
51 the descendants of Bakbuk, the descendants of Hakupha, the descendants of Harhur,
51 பக்பூக்கின் மக்கள், அகுப்பாவின் மக்கள், அர்கூரின் மக்கள்,
52 பஸ்லுூதின் புத்திரர், மெகிதாவின் புத்திரர், அர்ஷாவின் புத்திரர்,
52 the descendants of Bazluth,n the descendants of Mehida, the descendants of Harsha,
52 பட்கலூத்தின் மக்கள், மெகிதாவின் மக்கள், அர்சாவின் மக்கள்,
53 பர்கோசின் புத்திரர், சிசெராவின் புத்திரர், தாமாவின் புத்திரர்,
53 the descendants of Barkos, the descendants of Sisera, the descendants of Temah,
53 பர்கோசின் மக்கள், சீசராவின் மக்கள், தேமாவின் மக்கள்,
54 நெத்சியாவின் புத்திரர், அதிபாவின் புத்திரருமே.
54 the descendants of Neziah, and the descendants of Hatipha.
54 நெட்சியாகின் மக்கள், அத்திபாவின் மக்களுமே!
55 சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெருதாவின் புத்திரர்,
55 The descendants of the servants of Solomon: the descendants of Sotai, the descendants of Sophereth, the descendants of Peruda,o
55 சாலமோன் ஊழியரின் மக்கள்:
56 யாலாகின் புத்திரர், தர்கோனின்புத்திரர், கித்தேலின் புத்திரர்,
56 the descendants of Jaala, the descendants of Darkon, the descendants of Giddel,
56 சோற்றாயின் மக்கள், அசோபரேத்தின் மக்கள், பெருதாவின் மக்கள், யாலாவின் மக்கள், தர்கோனின் மக்கள், கிதேலின் மக்கள்,
57 செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், செபாயிமிலுள்ள பொகெரேத்தின் புத்திரர், ஆமியின்புத்திரருமே.
57 the descendants of Shephatiah, the descendants of Hattil, the descendants of Pochereth-hazzebaim, and the descendants of Ami.p
57 செபற்றியாவின் மக்கள், அற்றலின் மக்கள், சபாயிம் வழிவந்த போக்கரேத்தின் மக்கள், ஆமியின் மக்கள்.
58 நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் எல்லாரும் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
58 The temple servants and descendants of the servants of Solomon numbered 392 in all.
58 கோவில் ஊழியர்களும் சாலமோன் ஊழியரின் மக்களுமாக மொத்தம் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டு பேர்.
59 தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:
59 The following came up from Tel-melah, Tel-harsha, Cherub, Addan,q and Immer, but could not prove that their families were descended from Israel:
59 மற்றும், தெல்மெலகு, தெல்லர்சா, கெருபு, அதான், இம்மேர் என்ற ஊர்களிலிருந்து புறப்பட்டு வந்தவர்களும், தங்கள் மூதாதையரின் குடும்பத்தையும், வழிமரபையும், தாங்கள் இஸ்ரயேலைச் சார்ந்தவர்களா என்பதையும் நிருபிக்க அறியாதவர்கள் இவர்களே;
60 தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர் ஆக அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.
60 the descendants of Delaiah, the descendants of Tobiah, and the descendants of Nekoda, 652 in all.
60 தெலாயாவின் மக்களும், தோபியாவின் மக்களும், நெக்கோதாவின் மக்களும் சேர்ந்து அறுநூற்று ஐம்பத்திரண்டு பேர்.
61 ஆசாரியரின் புத்திரரில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சில்லாயின் புத்திரரே.
61 And from among the priests: the descendants of Hobaiah, the descendants of Hakkoz, and the descendants of Barzillai (who had married a daughter of Barzillai the Gileadite and was called by their name).
61 மற்றும், குருக்களின் புதல்வர்கள்; அபய்யாவின் மக்கள், அக்கோசின் மக்கள், கிலயாதைச் சார்ந்த பர்சில்லாயின் புதல்வியருள் ஒருத்தியை மனைவியாகக் கொண்டதால் அவர்தம் பெயரைத் தாங்கிய பர்சில்லாயின் மக்கள்.
62 இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரியஊழியத்திற்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
62 These men searched for their family records, but they could not find them and so were excluded from the priesthood as unclean.
62 இவர்கள் தங்கள் பெயர்ப் பதிவைத் தலைமுறை அட்டவணையில் தேடியும் காணாததால் தீட்டுப்பட்டவர்கள் எனக் கருதப்பட்டு குருத்துவப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்கள்.
63 ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், இவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
63 The governor ordered them not to eat the most holy things until there was a priest to consult the Urim and Thummim.r
63 அவர்கள் தூய்மையிலும் தூய்மையான பொருள்களை ஊரிம், தும்மிமைக் காட்டுவதற்கு ஒரு குரு வரும்வரை உண்ணக்கூடாது என்று ஆளுநர் அவர்களிடம் கூறினார்.1
1 27:21.
64 சபையார் எல்லாரும் ஏகத்திற்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.
64 The whole assembly numbered 42,360,
64 மக்கள் சபையின் மொத்த எண்ணிக்கை நாற்பத்து இரண்டாயிரத்து முந்நூற்று அறுபது.
65 அவர்களைத்தவிர ஏழாயிரத்துமுந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும் வேலைக்காரிகளும், இருநூறு பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
65 in addition to their 7,337 menservants and maidservants, as well as their 200 male and female singers.
65 அவர்களைத் தவிர அவர்களின் ஆண், பெண், ஊழியர்களின் எண்ணிக்கை, ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழு. மேலும் அவர்களுடன் இருநூறு பாடகர்களும், பாடகிகளும் இருந்தனர்.
66 அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்களுடைய கோவேறு கழுதைகள் இருநூற்றுநாற்பத்தைந்து,
66 They had 736 horses, 245 mules,
66 அவர்களின் குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு; கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து.
67 அவர்களுடைய ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.
67 435 camels, and 6,720 donkeys.
67 ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து; கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.
Offerings by the Exiles (Exodus 38:21–31; Nehemiah 7:70–73)
68 வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்துக்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்காக மன உறசாகமாய்க் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.
68 When they arrived at the house of the LORD in Jerusalem, some of the heads of the families gave freewill offerings to rebuild the house of God on its original site.
68 குலத் தலைவர்களில் சிலர் எருசலேமில் உள்ள ஆண்டவரின் இல்லத்திற்கு வந்து, கடவுளின் கோவிலை அதே இடத்தில் கட்டி எழுப்பத் தன்னார்வக் காணிக்கை ஒப்புக் கொடுத்தனர்.
69 அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாக திருப்பணிப் பொக்கிஷத்திற்கு அறுபத்தோராயிரம் தங்கக்காசையம், ஐயாயிரம் இராத்தல் வெள்ளியையும் நூறு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.
69 According to their ability, they gave to the treasury for this work 61,000 darics of gold,s 5,000 minas of silver,t and 100 priestly garments.
69 அவர்கள் ஒவ்வொருவரும் தம் வசதிக்கேற்ப, ஐநூறு கிலோகிராம் பொன்னும், மூவாயிரத்து நானூற்று இருபத்தைந்து கிலோகிராம்* வெள்ளியும், நூறு குருத்துவ ஆடைகளும் கொடுத்தார்கள்.23
2 'அறுபத்தோராயிரம் திராக்மா' என்பது எபிரேய பாடம்.
3 'ஐயாயிரம் மினா' என்பது எபிரேய பாடம்.
70 ஆசாரியரும், லேவியரும், ஜனங்களில் சிலரும், பாடகரும், வாசல் காவலாளரும், நிதனீமியரும், தங்கள்தங்கள் பட்டணங்களிலும், இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் தங்கள் பட்டணங்களிலும் குடியேறினார்கள்.
70 So the priests, the Levites, the singers, the gatekeepers, and the temple servants, along with some of the people, settled in their own towns; and the rest of the Israelitesu settled in their towns.
70 குருக்கள், லேவியர், வேறு சிலர், பாடகர், வாயிற்காப்பாளர், கோவில் ஊழியர் ஆகியோர் தம் நகர்களிலும், எல்லா இஸ்ரயேலருள் ஏனையோரும் தம் நகர்களிலும் குடியேறியிருந்தார்கள்.4
4 1 குறி 9:2; நெகே 11:3.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
2 a Parallel text at Nehemiah 7:7 accompanied by Zerubbabel, Jeshua, Nehemiah, Azariah, Raamiah, Nahamani, Mordecai, Bilshan, Mispereth, Bigvai, Nehum, and Baanah
10 b Bani is a variant of Binnui ; see Nehemiah 7:15.
18 c Jorah is a variant of Hariph ; see Nehemiah 7:24.
20 d Gibbar is a variant of Gibeon ; see Nehemiah 7:25.
21 e Literally the sons ; here and in verses 25, 26, 33, and 34
24 f Azmaveth is a variant of Beth-azmaveth ; see Nehemiah 7:28.
25 g LXX (see also Nehemiah 7:29); Hebrew Kiriath-arim
31 h Or of West Elam
40 i Hodaviah is a variant of Hodevah ; see Nehemiah 7:43.
43 j Hebrew The Nethinim ; also in verses 58 and 70
44 k Siaha is a variant of Sia ; see Nehemiah 7:47.
46 l Alternate MT reading (see also Nehemiah 7:48); the other alternate reads Shamlai
50 m Nephusim is a variant of Nephushesim ; see Nehemiah 7:52.
52 n Bazluth is a variant of Bazlith ; see Nehemiah 7:54.
55 o Peruda is a variant of Perida ; see Nehemiah 7:57.
57 p Ami is a variant of Amon ; see Nehemiah 7:59.
59 q Addan is a variant of Addon ; see Nehemiah 7:61.
63 r Literally Lights and Perfections
69 s Or 61,000 gold drachmas ; that is, approximately 1,129.7 pounds or 512.4 kilograms of gold coins
69 t 5,000 minas is approximately 3.14 tons or 2.85 metric tons of silver.
70 u Or all Israel
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.