பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Ezra  எஸ்றா  עֶזְרָא

அதிகாரம்   1   2   3   4   5   6   7   8   9   10

எஸ்றா 5 | Ezra 5

Temple Rebuilding Resumes (Haggai 1:1–11)

1וְהִתְנַבִּ֞י חַגַּ֣י נביאה וּזְכַרְיָ֤ה בַר־עִדּוֹא֙ נביאיא עַל־יְה֣וּדָיֵ֔א דִּ֥י בִיה֖וּד וּבִירוּשְׁלֶ֑ם בְּשֻׁ֛ם אֱלָ֥הּ יִשְׂרָאֵ֖ל עֲלֵיהֽוֹן׃

1 அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
1 Later, the prophets Haggai and Zechariah son of Iddo prophesied to the Jews in Judah and Jerusalem in the name of the God of Israel, who was over them.
1 அப்பொழுது, இறைவாக்கினர் ஆகாயும், இத்தோ மகன் செக்கரியாவும் — யூதாவிலும் எருசலேமிலும் வாழ்ந்த யூதருக்கு இஸ்ரயேலின் கடவுள் பெயரால் இறைவாக்கு உரைத்தனர்.1

2בֵּאדַ֡יִן קָ֠מוּ זְרֻבָּבֶ֤ל בַּר־שְׁאַלְתִּיאֵל֙ וְיֵשׁ֣וּעַ בַּר־יֽוֹצָדָ֔ק וְשָׁרִ֣יו לְמִבְנֵ֔א בֵּ֥ית אֱלָהָ֖א דִּ֣י בִירֽוּשְׁלֶ֑ם וְעִמְּה֛וֹן נביאיא דִֽי־אֱלָהָ֖א מְסָעֲדִ֥ין לְהֽוֹן׃

2 அப்பொழுது செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும் யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் எழும்பி, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்டத்தொடங்கினார்கள்; அவர்களுக்குத் திடன்சொல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள்.
2 Then Zerubbabel son of Shealtiel and Jeshua son of Jozadaka rose up and began to rebuild the house of God in Jerusalem. And the prophets of God were with them, helping them.
2 அப்போது செயல்தியேல் மகன் செருபாபேலும், யோசதாக்கின் மகன் ஏசுவாவும் முன்வந்து, எருசலேமிலுள்ள கடவுளின் கோவிலை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கினர். கடவுளின் இறைவாக்கினர் அவர்களோடு இருந்து உதவி செய்தனர்.2

3בֵּהּ־זִמְנָא֩ אֲתָ֨א עֲלֵיה֜וֹן תַּ֠תְּנַי פַּחַ֧ת עֲבַֽר־נַהֲרָ֛ה וּשְׁתַ֥ר בּוֹזְנַ֖י וּכְנָוָתְה֑וֹן וְכֵן֙ אָמְרִ֣ין לְהֹ֔ם מַן־שָׂ֨ם לְכֹ֜ם טְעֵ֗ם בַּיְתָ֤א דְנָה֙ לִבְּנֵ֔א וְאֻשַּׁרְנָ֥א דְנָ֖ה לְשַׁכְלָלָֽה׃

3 அக்காலத்திலே நதிக்கு இப்புறத்தில் இருக்கிற நாடுகளுக்கு அதிபதியாகிய தத்னாய் என்பவனும், சேத்தார் பொஸ்னாயும், அவர்கள் வகையராவும் அவர்களிடத்துக்கு வந்து, இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டவன் யார் என்று அவர்களைக் கேட்டார்கள்.
3 At that time Tattenai the governor of the region west of the Euphrates,b Shethar-bozenai, and their associates went to the Jews and asked, “Who authorized you to rebuild this temple and restore this structure?”
3 அக்காலத்தில், பேராற்றின் அக்கரைப்பகுதிக்கு ஆளுநராக இருந்த தத்னாயும், செத்தர்போசனாயும் அவர்களைச் சார்ந்தவர்களும், அவர்களிடம் வந்து, "இக்கோவிலைக் கட்டியெழுப்பவும் இம்மதில்களைக் கட்டி முடிக்கவும் உங்களுக்கு உத்தரவு கொடுத்தது யார்?" என்று வினவினர்.

4אֱדַ֥יִן כְּנֵ֖מָא אֲמַ֣רְנָא לְּהֹ֑ם מַן־אִנּוּן֙ שְׁמָהָ֣ת גֻּבְרַיָּ֔א דִּֽי־דְנָ֥ה בִנְיָנָ֖א בָּנַֽיִן׃

4 அப்பொழுது அதற்கு ஏற்ற உத்தரவையும், இந்த மாளிகையைக் கட்டுகிற மனிதரின் நாமங்களையும் அவர்களுக்குச் சொன்னோம்.
4 They also asked,c “What are the names of the men who are constructing this building?”
4 மேலும் அவர்கள், "இக்கட்டடத்தைக் கட்டுவோர் யார், யார்?" என்று வினவினர்.

5וְעֵ֣ין אֱלָהֲהֹ֗ם הֲוָת֙ עַל־שָׂבֵ֣י יְהוּדָיֵ֔א וְלָא־בַטִּ֣לוּ הִמּ֔וֹ עַד־טַעְמָ֖א לְדָרְיָ֣וֶשׁ יְהָ֑ךְ וֶאֱדַ֛יִן יְתִיב֥וּן נִשְׁתְּוָנָ֖א עַל־דְּנָֽה׃

5 ஆனாலும் இந்தச் செய்தி தரியுவினிடத்திற்குப் போய் எட்டுகிறவரைக்கும் இவர்கள் யூதருடைய மூப்பரின் வேலையைத் தடுக்காதபடிக்கு, அவர்களுடைய தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது; அப்பொழுது இதைக்குறித்து அவர்கள் சொன்ன மறுமொழியைக் கடிதத்தில் எழுதியனுப்பினார்கள்.
5 But the eye of their God was on the elders of the Jews, so that they were not stopped until a report was sent to Darius and written instructions about this matter were returned.
5 கடவுளின் கருணைக் கண் யூத மூப்பர்கள் மேல் இருந்ததால் இச்செய்தி தாரியுவைச் சென்றடையும்வரை அவர்களால் தடுத்து நிறுத்த இயலவில்லை. எனவே அவர்கள் தாரியுவுக்கு இதைப்பற்றி ஒரு மடல் அனுப்பினார்கள்.

Tattenai’s Letter to Darius

6פַּרְשֶׁ֣גֶן אִ֠גַּרְתָּא דִּֽי־שְׁלַ֞ח תַּתְּנַ֣י ׀ פַּחַ֣ת עֲבַֽר־נַהֲרָ֗ה וּשְׁתַ֤ר בּוֹזְנַי֙ וּכְנָ֣וָתֵ֔הּ אֲפַ֨רְסְכָיֵ֔א דִּ֖י בַּעֲבַ֣ר נַהֲרָ֑ה עַל־דָּרְיָ֖וֶשׁ מַלְכָּֽא׃

6 நதிக்கு இப்புறத்திலிருக்கிற தத்னாய் என்னும் தேசாதிபதியும், சேத்தார் பொஸ்னாயும், நதிக்கு இப்புறத்திலிருக்கிற அப்பற்சாகியரான அவன் வகையராவும், ராஜாவாகிய தரியுவுக்கு எழுதியனுப்பின கடிதத்தின் நகலாவது:
6 This is the text of the letter that Tattenai the governor of the region west of the Euphrates, Shethar-bozenai, and their associates, the officials in the region, sent to King Darius.
6 பேராற்றின் அக்கரைப் பகுதிக்கு ஆளுநனாக இருந்த தத்னாயும் செத்தர்போசனாயும் அவனைச் சார்ந்தவர்களும் பேராற்றின் அக்கரைப் பகுதிக்கு அதிகாரியானவர்களும் மடலின் நகல் ஒன்றை மன்னர் தாரியுவுக்கு அனுப்பினர்.

7פִּתְגָמָ֖א שְׁלַ֣חוּ עֲל֑וֹהִי וְכִדְנָה֙ כְּתִ֣יב בְּגַוֵּ֔הּ לְדָרְיָ֥וֶשׁ מַלְכָּ֖א שְׁלָמָ֥א כֹֽלָּא׃

7 ராஜாவாகிய தரியுவுக்குச் சகல சமாதானமும் உண்டாவதாக.
7 The report they sent him read as follows: To King Darius: All peace.
7 அவருக்கு அனுப்பிய கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது பின்வருமாறு: "மன்னர் தாரியுவுக்கு எல்லா நலமும் உரித்தாகுக!

8יְדִ֣יעַ ׀ לֶהֱוֵ֣א לְמַלְכָּ֗א דִּֽי־אֲזַ֜לְנָא לִיה֤וּד מְדִֽינְתָּא֙ לְבֵית֙ אֱלָהָ֣א רַבָּ֔א וְה֤וּא מִתְבְּנֵא֙ אֶ֣בֶן גְּלָ֔ל וְאָ֖ע מִתְּשָׂ֣ם בְּכֻתְלַיָּ֑א וַעֲבִ֥ידְתָּא דָ֛ךְ אָסְפַּ֥רְנָא מִתְעַבְדָ֖א וּמַצְלַ֥ח בְּיֶדְהֹֽם׃

8 நாங்கள் யூதர் சீமையிலுள்ள மகா தேவனுடைய ஆலயத்துக்குப்போனோம்; அது பெருங்கற்களால் கட்டப்படுகிறது; மதில்களின்மேல் உத்திரங்கள் பாய்ச்சப்பட்டு, அந்த வேலை துரிசாய் நடந்து, அவர்களுக்குக் கைகூடிவருகிறதென்பது ராஜாவுக்குத் தெரியலாவதாக.
8 Let it be known to the king that we went into the province of Judah, to the house of the great God. The people are rebuilding it with large stones, and placing timbers in the walls. This work is being carried out diligently and is prospering in their hands.
8 மன்னர் அறியவேண்டியது; யூதா மாநிலத்திலுள்ள மாபெரும் கடவுளின் கோவிலுக்குச் சென்றிருந்தோம்; பெரும் கற்களால் அது கட்டப்பட்டு வருகிறது. சுவரில் மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவ்வேலை நுணுக்கமாகவும் விரைவாகவும் செய்யப்பட்டு வருகின்றது.

9אֱדַ֗יִן שְׁאֵ֙לְנָא֙ לְשָׂבַיָּ֣א אִלֵּ֔ךְ כְּנֵ֖מָא אֲמַ֣רְנָא לְּהֹ֑ם מַן־שָׂ֨ם לְכֹ֜ם טְעֵ֗ם בַּיְתָ֤א דְנָה֙ לְמִבְנְיָ֔ה וְאֻשַּׁרְנָ֥א דְנָ֖ה לְשַׁכְלָלָֽה׃

9 அப்பொழுது நாங்கள் அவர்கள் மூப்பர்களை நோக்கி: இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டது யார் என்று கேட்டோம்.
9 So we questioned the elders and asked, “Who authorized you to rebuild this temple and restore this structure?”
9 எனவே அம் மூப்பர்களை நோக்கி, 'இக்கோவிலைக் கட்டவும், இச்சுவர்களைக் கட்டி முடிக்கவும் உத்தரவு கொடுத்தது யார்?' என்றோம்.

10וְאַ֧ף שְׁמָהָתְהֹ֛ם שְׁאֵ֥לְנָא לְּהֹ֖ם לְהוֹדָעוּתָ֑ךְ דִּ֛י נִכְתֻּ֥ב שֻׁם־גֻּבְרַיָּ֖א דִּ֥י בְרָאשֵׁיהֹֽם׃

10 இதுவுமல்லாமல், அவர்களுக்குள்ளே தலைவரான மனிதர் இன்னாரென்று எழுதி அறியப்படுத்தும்படி அவர்கள் நாமங்கள் என்னவென்றும் கேட்டோம்.
10 We also asked for their names, so that we could write down the names of their leadersd for your information.
10 அவர்கள் தலைவர்கள் யார், யார் என்பதை உமக்கு எழுதி அறிவிக்க அவர்களின் பெயர்களைக் கேட்டோம்.

11וּכְנֵ֥מָא פִתְגָמָ֖א הֲתִיב֣וּנָא לְמֵמַ֑ר אֲנַ֣חְנָא הִמּ֡וֹ עַבְדוֹהִי֩ דִֽי־אֱלָ֨הּ שְׁמַיָּ֜א וְאַרְעָ֗א וּבָנַ֤יִן בַּיְתָא֙ דִּֽי־הֲוָ֨א בְנֵ֜ה מִקַּדְמַ֤ת דְּנָה֙ שְׁנִ֣ין שַׂגִּיאָ֔ן וּמֶ֤לֶךְ לְיִשְׂרָאֵל֙ רַ֔ב בְּנָ֖הִי וְשַׁכְלְלֵֽהּ׃

11 அவர்கள் எங்களுக்குப் பிரதியுத்தரமாக, நாங்கள் பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் தேவனாயிருக்கிறவருக்கு அடியாராயிருந்து, இஸ்ரவேலின் பெரிய ராஜா ஒருவன் அநேக வருஷங்களுக்குமுன்னே கட்டித்தீர்த்த இந்த ஆலயத்தை நாங்கள் மறுபடியும் கட்டுகிறோம்.
11 And this is the answer they returned: “We are servants of the God of heaven and earth, and we are rebuilding the temple that was built many years ago, which a great king of Israel built and completed.
11 அவர்கள் எங்களுக்குச் சொன்ன மறுமொழியாவது; 'விண்ணுக்கும் மண்ணுக்கும் கடவுளானவரின் ஊழியர்கள் நாங்கள். பல ஆண்டுகளுக்குமுன் இஸ்ரயேலின் பேரரசர் ஒருவர் கட்டிய கோவிலைத் தான் மீண்டும் கட்டியெழுப்புகிறோம்.

12לָהֵ֗ן מִן־דִּ֨י הַרְגִּ֤זוּ אֲבָהֳתַ֙נָא֙ לֶאֱלָ֣הּ שְׁמַיָּ֔א יְהַ֣ב הִמּ֔וֹ בְּיַ֛ד נְבוּכַדְנֶצַּ֥ר מֶֽלֶךְ־בָּבֶ֖ל כסדיא וּבַיְתָ֤ה דְנָה֙ סַתְרֵ֔הּ וְעַמָּ֖ה הַגְלִ֥י לְבָבֶֽל׃

12 எங்கள் பிதாக்கள் பரலோகத்தின் தேவனுக்குக் கோபமூட்டினபடியினால், அவர் இவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் கல்தேயன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் இந்த ஆலயத்தை நிர்மூலமாக்கி, ஜனத்தைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.
12 But since our fathers angered the God of heaven, He delivered them into the hand of Nebuchadnezzar king of Babylon, the Chaldean who destroyed this temple and carried away the people to Babylon.
12 எம் முன்னோர் விண்ணகக் கடவுளுக்குச் சினமூட்டியதால், அவர் பாபிலோனின் மன்னனும் கல்தேயனுமான நெபுகத்னேசரின் கையில் அவர்களையும், இக்கோவிலையும் ஒப்புவித்தார். அவன் இக்கோவிலை அழித்தான். மக்களை பாபிலோனுக்கு நாடு கடத்தினான்.3

13בְּרַם֙ בִּשְׁנַ֣ת חֲדָ֔ה לְכ֥וֹרֶשׁ מַלְכָּ֖א דִּ֣י בָבֶ֑ל כּ֤וֹרֶשׁ מַלְכָּא֙ שָׂ֣ם טְעֵ֔ם בֵּית־אֱלָהָ֥א דְנָ֖ה לִבְּנֵֽא׃

13 ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்திலே, கோரேஸ் ராஜாவானவர் தேவனுடைய இந்த ஆலயத்தைக் கட்டும்படி கட்டளையிட்டார்.
13 In his first year, however, Cyrus king of Babylon issued a decree to rebuild this house of God.
13 ஆனால் பாபிலோன் மன்னர் சைரசு தம் முதலாம் ஆட்சி ஆண்டில் கடவுளின் இக்கோவிலைக் கட்ட ஆணையிட்டார்.4

14וְ֠אַף מָאנַיָּ֣א דִֽי־בֵית־אֱלָהָא֮ דִּ֣י דַהֲבָ֣ה וְכַסְפָּא֒ דִּ֣י נְבוּכַדְנֶצַּ֗ר הַנְפֵּק֙ מִן־הֵֽיכְלָא֙ דִּ֣י בִֽירוּשְׁלֶ֔ם וְהֵיבֵ֣ל הִמּ֔וֹ לְהֵיכְלָ֖א דִּ֣י בָבֶ֑ל הַנְפֵּ֨ק הִמּ֜וֹ כּ֣וֹרֶשׁ מַלְכָּ֗א מִן־הֵֽיכְלָא֙ דִּ֣י בָבֶ֔ל וִיהִ֙יבוּ֙ לְשֵׁשְׁבַּצַּ֣ר שְׁמֵ֔הּ דִּ֥י פֶחָ֖ה שָׂמֵֽהּ׃

14 நேபுகாத்நேச்சார் எருசலேமிருந்த தேவாலயத்திலிருந்து எடுத்து, பாபிலோன் கோவிலில் கொண்டுபோய் வைத்திருந்த தேவனுடைய ஆலயத்தின் பொன் வெள்ளிப் பணிமுட்டுகளையும் ராஜாவாகிய கோரேஸ் பாபிலோன் கோவிலிலிருந்து எடுத்து, அவர் தேசாதிபதியாக நியமித்த செஸ்பாத்சாரென்னும் நாமமுள்ளவனிடத்தில் அவைகளை ஒப்புவித்து,
14 He also removed from the templee of Babylon the gold and silver articles belonging to the house of God, which Nebuchadnezzar had taken and carried there from the temple in Jerusalem. King Cyrus gave these articles to a man named Sheshbazzar, whom he appointed governor
14 மேலும் நெபுகத்னேசர் எருசலேமிலுள்ள கோவிலிருந்து பாபிலோன் கோவிலுக்குக் கொண்டு வந்த திருக்கோவில் பொன், வெள்ளிப் பாத்திரங்களை மன்னர் சைரசு பாபிலோன் கோவிலிருந்து எடுத்தார். ஆளுநராகத் தாம் நியமித்த சேஸ்பட்சர் என்பவரிடம் ஒப்படைத்தார்.

15וַאֲמַר־לֵ֓הּ ׀ אלה מָֽאנַיָּ֔א שֵׂ֚א אֵֽזֶל־אֲחֵ֣ת הִמּ֔וֹ בְּהֵיכְלָ֖א דִּ֣י בִירוּשְׁלֶ֑ם וּבֵ֥ית אֱלָהָ֖א יִתְבְּנֵ֥א עַל־אַתְרֵֽהּ׃

15 அவன் நோக்கி: நீ இந்தப் பணிமுட்டுகளை எடுத்து, எருசலேமிலிருக்கிற தேவாலயத்துக்குக் கொண்டுபோ; தேவனுடைய ஆலயம் அதின் ஸ்தானத்திலே கட்டப்படவேண்டும் என்றார்.
15 and instructed, ‘Take these articles, put them in the temple in Jerusalem, and let the house of God be rebuilt on its original site.’
15 மன்னர் அவரிடம் "இப்பாத்திரங்களை எடுத்துக்கொண்டு போய் எருசலேம் கோவிலில் வை. கடவுளின் கோவில் அது இருந்த இடத்திலேயே கட்டப்படட்டும்" என்றார்.

16אֱדַ֙יִן֙ שֵׁשְׁבַּצַּ֣ר דֵּ֔ךְ אֲתָ֗א יְהַ֧ב אֻשַּׁיָּ֛א דִּי־בֵ֥ית אֱלָהָ֖א דִּ֣י בִירוּשְׁלֶ֑ם וּמִן־אֱדַ֧יִן וְעַד־כְּעַ֛ן מִתְבְּנֵ֖א וְלָ֥א שְׁלִֽם׃

16 அப்பொழுது அந்தச் செஸ்பாத்சார் வந்து, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் அஸ்திபாரத்தைப்போட்டான்; அந்நாள்முதல் இதுவரைக்கும் அது கட்டப்பட்டுவருகிறது; அது இன்னும் முடியவில்லை என்றார்கள்.
16 So this Sheshbazzar came and laid the foundation of the house of God in Jerusalem, and from that time until now it has been under construction, but it has not yet been completed.”
16 எனவே சேஸ்பட்சர் திரும்பி வந்து எருசலேமில் கடவுளின் கோவிலுக்கு அடித்தளம் இட்டார். அதனால் அன்று முதல் இன்று வரை இது கட்டப்பட்டு வருகின்றது. ஆனால் அது முடிவு பெறவில்லை.

17וּכְעַ֞ן הֵ֧ן עַל־מַלְכָּ֣א טָ֗ב יִ֠תְבַּקַּר בְּבֵ֨ית גִּנְזַיָּ֜א דִּי־מַלְכָּ֣א תַמָּה֮ דִּ֣י בְּבָבֶל֒ הֵ֣ן אִיתַ֗י דִּֽי־מִן־כּ֤וֹרֶשׁ מַלְכָּא֙ שִׂ֣ים טְעֵ֔ם לְמִבְנֵ֛א בֵּית־אֱלָהָ֥א דֵ֖ךְ בִּירוּשְׁלֶ֑ם וּרְע֥וּת מַלְכָּ֛א עַל־דְּנָ֖ה יִשְׁלַ֥ח עֲלֶֽינָא׃

17 இப்பொழுதும் ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்ட ராஜாவாகிய கோரேஸ் கட்டளையிட்டதுண்டோ என்று பாபிலோனில் இருக்கிற ராஜாவின் கஜானாவிலே ஆராய்ந்துபார்க்கவும், இந்த விஷயத்தில் ராஜாவினுடைய சித்தம் இன்னதென்று எங்களுக்கு எழுதியனுப்பவும் உத்தரவாகவேண்டும் என்று எழுதியனுப்பினார்கள்.
17 Now, therefore, if it pleases the king, let a search be made of the royal archives in Babylon to see if King Cyrus did indeed issue a decree to rebuild the house of God in Jerusalem. Then let the king send us his decision in this matter.
17 ஆகவே, இப்பொழுது மன்னர் விரும்பினால், பாபிலோனில் உள்ள தமது கருவூலத்தில் தேடிப்பார்க்கட்டும். எருசலேமில் கடவுளுக்குக் கோவில் கட்டச் சைரசு மன்னர் கட்டளை கொடுத்திருக்கின்றாரா என்பதை அறியட்டும். இதைக் குறித்து மன்னர் தம் விருப்பத்தை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டுகின்றோம்'."


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Ezra Chapter   1   2   3   4   5   6   7   8   9   10

Gen   Exo   Lev   Num   Deut   Josh   Judg   Ruth   1Sam   2Sam   1Kgs   2Kgs   1Chr   2Chr   Ezra   Neh   Esth   Job   Pslm   Prov
Ecc   Song   Isa   Jer   Lam   Eze   Dan   Hos   Joel   Amos   Obad   Jnh   Mic   Nah   Hab   Zeph   Hag   Zech   Mal

Footnotes:
2Jozadak  is a variant of Jehozadak ; see 1 Chronicles 6:14.
3 b Aramaic the governor beyond the River ; also in verse 6
4 c LXX and Syriac; Aramaic Then we told them,
10 d Aramaic the names of the men at their heads
14 e Or palace

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.