பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Leviticus லேவியராகமம் וַיִּקְרָא
லேவியராகமம் 12 | Leviticus 12
Purification after Childbirth
1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
1 Then the LORD said to Moses,
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒரு ஸ்திரீ கர்ப்பவதியாகி ஆண்பிள்ளையைப் பெற்றால், அவள் சூதகஸ்திரீ விலக்கமாயிருக்கும் நாட்களுக்குச் சரியாக ஏழுநாள் தீட்டாயிருப்பாள்.
2 “Say to the Israelites, ‘A woman who becomes pregnant and gives birth to a son will be unclean for seven days, as she is during the days of her menstruation.
2 இஸ்ரயேல் மக்களுக்கு நீ சொல்லவேண்டியது: ஒருபெண், கருத்தரித்து ஆண் குழந்தை பெற்றால் ஏழு நாள் விலக்கு நாள்களில் இருப்பதுபோலவே, தீட்டுப்பட்டிருப்பாள்.
3 எட்டாம் நாளிலே அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படக்கடவது.
3 And on the eighth day the flesh of the boy’s foreskin is to be circumcised.
3 எட்டாம் நாளன்று அதற்கு விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும்.1
1 தொநூ 17:12; லூக் 2:21.
4 பின்பு அவள் முப்பத்துமூன்றுநாள் தன் உதிரச் சுத்திகரிப்பு நிலையிலே இருந்து, சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறுமளவும் பரிசுத்தமான யாதொரு வஸ்துவைத் தொடவும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் வரவுங் கூடாது.
4 The woman shall continue in purification from her bleeding for thirty-three days. She must not touch anything sacred or go into the sanctuary until the days of her purification are complete.
4 தொடர்ந்து வரும் முப்பதி மூன்று நாள்கள், அவள் தன் உதிரத்தீட்டு நாள்கள் முடியும்வரை தூயதான எந்தப் பொருளையும் தொடலாகாது; தூயதலத்திற்குள் வரலாகாது.
5 பெண்பிள்ளையைப் பெற்றாளாகில், அவள், இரண்டு வாரம் சூதகஸ்திரீயைப்போலத் தீட்டாயிருந்து, பின்பு அறுபத்தாறுநாள் உதிரச் சுத்திகரிப்பு நிலையிலே இருக்கக்கடவள்.
5 If, however, she gives birth to a daughter, the woman will be unclean for two weeks as she is during her menstruation. Then she must continue in purification from her bleeding for sixty-six days.
5 அவள் பெண் குழந்தை பெற்றால், இரண்டு வாரம் விலக்கு நாள்களில் இருப்பது போலவே, தீட்டாயிருப்பாள். பின்னர், அறுபத்தாறு நாள் தன் உதிரத் தீட்டில் இருப்பாள்.
6 அவள் ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபின்பு, அவள் ஒரு வயதான ஆட்டுக்குட்டியை சர்வாங்க தகனபலியாகவும், ஒரு புறாக்குஞ்சையாவது காட்டுப்புறாவையாவது பாவநிவாரண பலியாகவும், ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவரக்கடவள்.
6 When the days of her purification are complete, whether for a son or for a daughter, she is to bring to the priest at the entrance to the Tent of Meeting a year-old lamb for a burnt offering and a young pigeon or a turtledove for a sin offering.
6 குழந்தை பெற்றவள் அது ஆணாக இருப்பினும் பெண்ணாக இருப்பினும் தூய்மையடையும் காலக்கெடுவிற்குப் பின்னர், ஓராண்டு நிறைவுற்ற செம்மறி ஒன்றை எரிபலியாகவும், புறாக்குஞ்சு அல்லது காட்டுப் புறா ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும் குருவிடம் சந்திப்புக்கூடார நுழைவாயிலுக்குக் கொண்டுவர வேண்டும்.
7 அதை அவன் கர்த்தருடைய சந்நிதியில் பலியிட்டு, அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்வானாக; அப்பொழுது அவள் தன் உதிர ஊறலின் தீட்டு நீங்கிச் சுத்தமாவாள். இது ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றவளைக்குறித்த பிரமாணம்.
7 And the priest will present them before the LORD and make atonement for her; and she shall be ceremonially cleansed from her flow of blood. This is the law for a woman giving birth, whether to a male or to a female.
7 அதனை அவர் ஆண்டவர் திருமுன் கொண்டுவந்து அவளுக்குக் கறைநீக்கம் செய்வார். அவள் தன் உதிர ஊறல் தீட்டிலிருந்து தூய்மையாவாள். இது ஆண் அல்லது பெண் குழந்தை பெற்றவருக்கு விதிக்கப்படும் சட்டம்.
8 ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவளுக்குச் சக்தியில்லாதிருந்தால், இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் மற்றொன்றைப் பாவநிவாரணபலியாகவும் கொண்டுவரக்கடவள்; அதினால் ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவள் சுத்தமாவாள் என்று சொல் என்றார்.
8 But if she cannot afford a lamb, she shall bring two turtledoves or two young pigeons,a one for a burnt offering and the other for a sin offering. Then the priest will make atonement for her, and she will be clean.’”
8 ஆட்டுக்குட்டி கொண்டுவர வசதி இல்லாதவள், இரண்டு காட்டுப் புறாக்களையோ, இரண்டு புறாக் குஞ்சுகளையோ கொண்டு வந்து, ஒன்றை எரிபலியாகவும், மற்றதைப் பாவம்போக்கும் பலியாகவும் படைத்து, அவற்றால் குரு அவளுக்குக் கறைநீக்கம் செய்வார்; அப்போது அவள் தூய்மையாவாள்.2
2 லூக் 2:24.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
8 a Cited in Luke 2:24
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.