பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

Luke  லூக்கா  Λουκᾶν

அதிகாரம் 1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

லூக்கா 2 | Luke 2

The Birth of Jesus (Matthew 1:18–25)

1 δὲ Ἐγένετο ἐν ἐκείναις ταῖς ἡμέραις δόγμα ἐξῆλθεν παρὰ Καίσαρος Αὐγούστου ἀπογράφεσθαι τὴν πᾶσαν οἰκουμένην

1 அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.
1 Now in those days a decree went out from Caesar Augustus that a census should be taken of the whole empire.a
1 அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார்.

2 αὕτη πρώτη ἀπογραφὴ ἐγένετο Κυρηνίου ἡγεμονεύοντος τῆς Συρίας

2 சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.
2 This was the first census to take place whileb Quirinius was governor of Syria.
2 அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது.

3 καὶ πάντες ἐπορεύοντο ἕκαστος εἰς ἑαυτοῦ τὴν πόλιν ἀπογράφεσθαι

3 அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.
3 And everyone went to his own town to register.
3 தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.

4 δὲ Ἰωσὴφ καὶ Ἀνέβη ἀπὸ ἐκ πόλεως Ναζαρὲθ τῆς Γαλιλαίας εἰς τὴν Ἰουδαίαν εἰς πόλιν Δαυὶδ ἥτις καλεῖται Βηθλεέμ διὰ αὐτὸν τὸ εἶναι ἐξ οἴκου καὶ πατριᾶς Δαυίδ

4 அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,
4 So Joseph also went up from Nazareth in Galilee to Judea, to the city of David called Bethlehem, since he was from the house and line of David.
4 தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய,

5 ἀπογράψασθαι σὺν Μαριὰμ τῇ ἐμνηστευμένῃ αὐτῷ οὔσῃ ἐγκύῳ

5 கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனான்.
5 He went there to register with Mary, who was pledged to him in marriage and was expecting a child.
5 கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார்.

6 δὲ Ἐγένετο ἐν αὐτοὺς τῷ εἶναι ἐκεῖ αἱ ἡμέραι ἐπλήσθησαν τοῦ αὐτήν τεκεῖν

6 அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.
6 While they were there, the time came for her Child to be born.
6 அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது.

7 καὶ ἔτεκεν αὐτῆς τὸν πρωτότοκον τὸν υἱὸν καὶ ἐσπαργάνωσεν αὐτὸν καὶ ἀνέκλινεν αὐτὸν ἐν φάτνῃ διότι ἦν οὐκ τόπος αὐτοῖς ἐν τῷ καταλύματι

7 அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.
7 And she gave birth to her firstborn, a Son. She wrapped Him in swaddling cloths and laid Him in a manger, because there was no room for them in the inn.
7 அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே, பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.

The Shepherds and the Angels

8 Καὶ ἦσαν ποιμένες ἀγραυλοῦντες ἐν τῇ τῇ αὐτῇ χώρᾳ καὶ φυλάσσοντες φυλακὰς ἐπὶ αὐτῶν τὴν ποίμνην τῆς νυκτὸς

8 அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
8 And there were shepherds residing in the fields nearby, keeping watch over their flocks by night.
8 அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள்.

9 καὶ ἄγγελος Κυρίου ἐπέστη αὐτοῖς καὶ δόξα Κυρίου περιέλαμψεν αὐτούς καὶ μέγαν φόβον ἐφοβήθησαν

9 அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்திலே வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்.
9 Just then an angel of the Lord stood before them, and the glory of the Lord shone around them, and they were terrified.
9 திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது.

10 καὶ ὁ ἄγγελος εἶπεν αὐτοῖς Μὴ φοβεῖσθε γὰρ ἰδοὺ εὐαγγελίζομαι ὑμῖν μεγάλην χαρὰν ἥτις ἔσται παντὶ τῷ λαῷ

10 தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
10 But the angel said to them, “Do not be afraid! For behold, I bring you good news of great joy that will be for all the people:
10 வானதூதர் அவர்களிடம், "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

11 ὅτι σήμερον ἐν πόλει Δαυίδ Σωτήρ ἐτέχθη ὑμῖν ὅς ἐστιν Χριστὸς Κύριος

11 இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
11 Today in the city of David a Savior has been born to you. He is Christ the Lord!
11 இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.

12 καὶ τοῦτο ‹τὸ› σημεῖον ὑμῖν εὑρήσετε βρέφος ἐσπαργανωμένον καὶ κείμενον ἐν φάτνῃ

12 பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையில் கிடத்தியிருக்கக்காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.
12 And this will be a sign to you: You will find a baby wrapped in swaddling cloths and lying in a manger.”
12 குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்" என்றார்.

13 Καὶ ἐξαίφνης ἐγένετο σὺν τῷ ἀγγέλῳ πλῆθος οὐρανίου στρατιᾶς αἰνούντων τὸν Θεὸν καὶ λεγόντων

13 அந்தணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:
13 And suddenly there appeared with the angel a great multitude of the heavenly host, praising God and saying:
13 ❮13-14❯உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, "உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!" என்று கடவுளைப் புகழ்ந்தது.

14 Δόξα Θεῷ ἐν ὑψίστοις καὶ ἐπὶ γῆς εἰρήνη ἐν ἀνθρώποις εὐδοκίας

14 உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
14 “Glory to God in the highest, and on earth peace to men on whom His favor rests!”

15 Καὶ ἐγένετο ὡς οἱ ἄγγελοι ἀπῆλθον ἀπ’ αὐτῶν εἰς τὸν οὐρανὸν οἱ ποιμένες ἐλάλουν πρὸς ἀλλήλους Διέλθωμεν δὴ ἕως Βηθλεὲμ καὶ ἴδωμεν τοῦτο τὸ ῥῆμα τὸ γεγονὸς ὃ ὁ Κύριος ἐγνώρισεν ἡμῖν

15 தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி,
15 When the angels had left them and gone into heaven, the shepherds said to one another, “Let us go to Bethlehem and see this thing that has happened, which the Lord has made known to us.”
15 வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்பு, இடையர்கள் ஒருவரையொருவர்நோக்கி, "வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்" என்று சொல்லிக்கொண்டு,

16 Καὶ ἦλθαν σπεύσαντες καὶ ἀνεῦραν τε τήν Μαριὰμ καὶ τὸν Ἰωσὴφ καὶ τὸ βρέφος κείμενον ἐν τῇ φάτνῃ

16 தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.
16 So they hurried off and found Mary and Joseph and the Baby, who was lying in the manger.
16 விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்.

17 δὲ ἰδόντες ἐγνώρισαν περὶ τοῦ ῥήματος τοῦ λαληθέντος αὐτοῖς περὶ τούτου τοῦ παιδίου

17 கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.
17 After they had seen the Child, they spread the message they had received about Him.
17 பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள்.

18 καὶ πάντες οἱ ἀκούσαντες ἐθαύμασαν περὶ τῶν ὑπὸ τῶν ποιμένων λαληθέντων πρὸς αὐτούς

18 மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
18 And all who heard it were amazed at what the shepherds said to them.
18 அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர்.

19 δὲ ἡ Μαρία συνετήρει πάντα ταῦτα τὰ ῥήματα συμβάλλουσα* ἐν αὐτῆς τῇ καρδίᾳ

19 மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.
19 But Mary treasured up all these things and pondered them in her heart.
19 ஆனால், மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

20 Καὶ οἱ ποιμένες ὑπέστρεψαν δοξάζοντες καὶ αἰνοῦντες τὸν Θεὸν ἐπὶ πᾶσιν οἷς ἤκουσαν καὶ εἶδον καθὼς ἐλαλήθη πρὸς αὐτούς

20 மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு, கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
20 The shepherds returned, glorifying and praising God for all they had heard and seen, which was just as the angel had told them.
20 இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.

Jesus Presented at the Temple

21 Καὶ ὅτε ὀκτὼ ἡμέραι τοῦ αὐτόν περιτεμεῖν ἐπλήσθησαν καὶ ἐκλήθη Ἰησοῦς αὐτοῦ τὸ ὄνομα τὸ ὑπὸ τοῦ ἀγγέλου κληθὲν πρὸ αὐτὸν τοῦ συλλημφθῆναι ἐν τῇ κοιλίᾳ

21 பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.
21 When the eight days until His circumcision had passed, He was named Jesus, the name the angel had given Him before He had been conceived.
21 குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

22 Καὶ ὅτε αἱ ἡμέραι τοῦ αὐτῶν καθαρισμοῦ κατὰ τὸν νόμον Μωϋσέως ἐπλήσθησαν ἀνήγαγον αὐτὸν εἰς Ἱεροσόλυμα παραστῆσαι τῷ Κυρίῳ

22 மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே அவர்களுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபோது,
22 And when the time of purification according to the Law of Moses was complete, His parents brought Him to Jerusalem to present Him to the Lord
22 மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.

23 καθὼς γέγραπται ἐν νόμῳ Κυρίου ὅτι Πᾶν διανοῖγον μήτραν ἄρσεν κληθήσεται ἅγιον τῷ Κυρίῳ

23 முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும்,
23 (as it is written in the Law of the Lord: “Every firstborn male shall be consecrated to the Lord”c ),
23 ஏனெனில், "ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்" என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.

24 καὶ τοῦ δοῦναι θυσίαν κατὰ τὸ εἰρημένον ἐν τῷ νόμῳ Κυρίου Ζεῦγος τρυγόνων ἢ δύο νοσσοὺς περιστερῶν

24 கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்.
24 and to offer the sacrifice specified in the Law of the Lord: “A pair of turtledoves or two young pigeons.”d
24 அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.

The Prophecy of Simeon

25 Καὶ ἰδοὺ ἦν ἄνθρωπος ἐν Ἰερουσαλὴμ ᾧ ὄνομα Συμεών καὶ οὗτος ὁ ἄνθρωπος δίκαιος καὶ εὐλαβής προσδεχόμενος παράκλησιν τοῦ Ἰσραήλ καὶ Ἅγιον Πνεῦμα ἦν ἐπ’ αὐτόν

25 அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல் வரக்காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார்.
25 Now there was a man in Jerusalem named Simeon, who was righteous and devout. He was waiting for the consolation of Israel, and the Holy Spirit was upon him.
25 அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்.

26 καὶ τοῦ τοῦ Ἁγίου Πνεύματος ἦν κεχρηματισμένον αὐτῷ ὑπὸ μὴ ἰδεῖν θάνατον πρὶν ἢ ἂν ἴδῃ τὸν Κυρίου Χριστὸν

26 கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.
26 The Holy Spirit had revealed to him that he would not see death before he had seen the Lord’s Christ.
26 "ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை" என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.

27 καὶ ἐν τῷ Πνεύματι ἦλθεν εἰς τὸ ἱερόν καὶ ἐν τῷ τοὺς γονεῖς εἰσαγαγεῖν τὸ παιδίον Ἰησοῦν τοῦ αὐτοὺς ποιῆσαι περὶ αὐτοῦ κατὰ τὸ εἰθισμένον τοῦ νόμου

27 அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாணமுறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டுவருகையில்,
27 Led by the Spirit, he went into the temple courts.e And when the parents brought in the child Jesus to do for Him what was customary under the Law,
27 அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்க, பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது.

28 καὶ αὐτὸς ἐδέξατο αὐτὸ εἰς τὰς ἀγκάλας καὶ εὐλόγησεν τὸν Θεὸν καὶ εἶπεν

28 அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு தேவனை ஸ்தோத்திரித்து:
28 Simeon took Him in his arms and blessed God, saying:
28 சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,

29 Νῦν Δέσποτα κατὰ σου τὸ ῥῆμά ἀπολύεις σου τὸν δοῦλόν ἐν εἰρήνῃ

29 ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;
29 “Sovereign Lord, as You have promised, You now dismiss Your servant in peace.
29 "ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன்போகச் செய்கிறீர்.12

30 ὅτι μου οἱ ὀφθαλμοί εἶδον σου τὸ σωτήριόν

30 புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
30 For my eyes have seen Your salvation,
30 ❮30-31❯ஏனெனில், மக்கள் அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ளஉமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.

31 ὃ ἡτοίμασας κατὰ πρόσωπον πάντων τῶν λαῶν

31 தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின
31 which You have prepared in the sight of all people,

32 φῶς εἰς ἀποκάλυψιν ἐθνῶν καὶ δόξαν σου λαοῦ Ἰσραήλ

32 உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
32 a light for revelation to the Gentiles, and for glory to Your people Israel.”
32 இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை" என்றார்.

33 Καὶ αὐτοῦ ὁ πατὴρ καὶ ἡ μήτηρ ἦν θαυμάζοντες ἐπὶ τοῖς λαλουμένοις περὶ αὐτοῦ

33 அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
33 The Child’s father and mother were amazed at what was spoken about Him.
33 குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர்.

34 καὶ Συμεὼν εὐλόγησεν αὐτοὺς καὶ εἶπεν πρὸς αὐτοῦ τὴν μητέρα Μαριὰμ Ἰδοὺ οὗτος κεῖται εἰς ἀνάστασιν καὶ πτῶσιν πολλῶν ἐν τῷ Ἰσραὴλ καὶ εἰς σημεῖον ἀντιλεγόμενον

34 பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
34 Then Simeon blessed them and said to His mother Mary: “Behold, this Child is appointed to cause the rise and fall of many in Israel, and to be a sign that will be spoken against,
34 சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, "இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்.3

35 ὅπως διαλογισμοί ἐκ πολλῶν καρδιῶν ἂν ἀποκαλυφθῶσιν καὶ ῥομφαία διελεύσεται σοῦ αὐτῆς τὴν ψυχὴν δὲ

35 உன் ஆத்துமாவையும் ஒரு பட்டையம் உருவிப்போகும் என்றான்.
35 so that the thoughts of many hearts will be revealed—and a sword will pierce your soul as well.”
35 இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" என்றார்.

The Prophecy of Anna

36 ἦν Καὶ προφῆτις Ἅννα θυγάτηρ Φανουήλ ἐκ φυλῆς Ἀσήρ αὕτη προβεβηκυῖα πολλαῖς ἐν ἡμέραις ζήσασα μετὰ ἀνδρὸς ἀπὸ αὐτῆς τῆς παρθενίας ἑπτὰ ἔτη

36 ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள்.
36 There was also a prophetess named Anna, the daughter of Phanuel, of the tribe of Asher, who was well along in years. She had been married for seven years,
36 ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்;

37 καὶ αὐτὴ χήρα ἕως ὀγδοήκοντα τεσσάρων ἐτῶν ἣ οὐκ ἀφίστατο τοῦ ἱεροῦ λατρεύουσα νύκτα καὶ ἡμέραν νηστείαις καὶ δεήσεσιν

37 ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்.
37 and then was a widow to the age of eighty-four.f She never left the temple, but worshiped night and day, fasting and praying.
37 அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார்.

38 καὶ ἐπιστᾶσα τῇ ὥρᾳ αὐτῇ ἀνθωμολογεῖτο τῷ Θεῷ καὶ ἐλάλει περὶ αὐτοῦ πᾶσιν τοῖς προσδεχομένοις λύτρωσιν Ἰερουσαλήμ

38 அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாக காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினாள்.
38 Coming forward at that moment, she gave thanks to God and spoke about the Child to all who were waiting for the redemption of Jerusalem.
38 அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.

The Return to Nazareth (Matthew 2:19–23)

39 Καὶ ὡς ἐτέλεσαν πάντα τὰ κατὰ τὸν νόμον Κυρίου ἐπέστρεψαν εἰς τὴν Γαλιλαίαν εἰς ἑαυτῶν πόλιν Ναζαρέθ

39 கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்து முடித்தபின்பு, கலிலேயா நாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள்.
39 When Jesus’ parents had done everything required by the Law of the Lord, they returned to Galilee, to their own town of Nazareth.
39 ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள்.

40 δὲ Τὸ παιδίον ηὔξανεν καὶ ἐκραταιοῦτο πληρούμενον σοφίᾳ καὶ χάρις Θεοῦ ἦν ἐπ’ αὐτό

40 பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.
40 And the Child grew and became strong.g He was filled with wisdom, and the grace of God was upon Him.
40 குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.

The Boy Jesus at the Temple

41 Καὶ κατ’ ἔτος αὐτοῦ οἱ γονεῖς ἐπορεύοντο εἰς Ἰερουσαλὴμ τῇ ἑορτῇ τοῦ πάσχα

41 அவருடைய தாய் தகப்பன்மார் வருஷந்தோறும் பஸ்கா பண்டிகையில் எருசலேமுக்குப் போவார்கள்.
41 Every year His parents went to Jerusalem for the Feast of the Passover.
41 ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்;4

42 Καὶ ὅτε ἐγένετο δώδεκα ἐτῶν αὐτῶν ἀναβαινόντων κατὰ τὸ ἔθος τῆς ἑορτῆς

42 அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகைமுறைமையின்படி எருசலேமுக்குப்போய்,
42 And when He was twelve years old, they went up according to the custom of the Feast.
42 இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர்.

43 καὶ τὰς ἡμέρας τελειωσάντων ἐν αὐτοὺς τῷ ὑποστρέφειν ὁ παῖς Ἰησοῦς ὑπέμεινεν ἐν Ἰερουσαλήμ καὶ αὐτοῦ οἱ γονεῖς οὐκ ἔγνωσαν

43 பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பி வருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது.
43 When those days were over and they were returning home, the boy Jesus remained behind in Jerusalem, but His parents were unaware He had stayed.
43 விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது;

44 δὲ νομίσαντες αὐτὸν εἶναι ἐν τῇ συνοδίᾳ ἦλθον ὁδὸν ἡμέρας καὶ ἀνεζήτουν αὐτὸν ἐν τοῖς συγγενεῦσιν καὶ τοῖς γνωστοῖς

44 அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின்முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள்.
44 Assuming He was in their company, they traveled on for a day before they began to look for Him among their relatives and friends.
44 பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்;

45 καὶ μὴ εὑρόντες ὑπέστρεψαν εἰς Ἰερουσαλὴμ ἀναζητοῦντες αὐτόν

45 காணாததினாலே அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள்.
45 When they could not find Him, they returned to Jerusalem to search for Him.
45 அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.

46 Καὶ ἐγένετο μετὰ τρεῖς ἡμέρας εὗρον αὐτὸν ἐν τῷ ἱερῷ καθεζόμενον ἐν μέσῳ τῶν διδασκάλων καὶ ἀκούοντα αὐτῶν καὶ ἐπερωτῶντα αὐτούς

46 மூன்று நாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்.
46 Finally, after three days they found Him in the temple courts, sitting among the teachers, listening to them and asking them questions.
46 மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார்.

47 δὲ πάντες οἱ ἀκούοντες αὐτοῦ ἐξίσταντο ἐπὶ αὐτοῦ τῇ συνέσει καὶ ταῖς ἀποκρίσεσιν

47 அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள்.
47 And all who heard Him were astounded at His understanding and His answers.
47 அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர்.

48 Καὶ ἰδόντες αὐτὸν ἐξεπλάγησαν Τέκνον τί ἐποίησας οὕτως ἡμῖν αὐτοῦ ἡ μήτηρ καὶ εἶπεν πρὸς αὐτὸν ἰδοὺ σου ὁ πατήρ κἀγὼ ἐζητοῦμέν* ὀδυνώμενοι σε

48 தாய் தகப்பன்மாரும் அவரைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச்செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள்.
48 When His parents saw Him, they were astonished. “Child, why have You done this to us?” His mother asked. “Your father and I have been anxiously searching for You.”
48 அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, "மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே" என்றார்.5

49 Τί ὅτι ἐζητεῖτέ με Καὶ εἶπεν πρὸς αὐτούς οὐκ ᾔδειτε ὅτι με δεῖ εἶναί ἐν μου τοῦ Πατρός τοῖς

49 அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று நீங்கள் அறியீர்களா என்றார்.
49 “Why were you looking for Me?” He asked. “Did you not know that I had to be in My Father’s house?”h
49 அவர் அவர்களிடம் "நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்றார்.6

6 "தந்தையின்...வேண்டும்" என்னும் சொற்றொடரை "தந்தையின் இல்லத்தில் இருக்க வேண்டும்" எனவும் மொழிபெயர்க்கலாம்.

50 καὶ αὐτοὶ οὐ συνῆκαν τὸ ῥῆμα ὃ ἐλάλησεν αὐτοῖς

50 தங்களுக்கு அவர் சொன்ன வார்த்தையை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை.
50 But they did not understand the statement He was making to them.
50 அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

51 Καὶ κατέβη εἰς Ναζαρὲθ μετ’ αὐτῶν καὶ ἦλθεν καὶ ἦν ὑποτασσόμενος αὐτοῖς καὶ αὐτοῦ ἡ μήτηρ διετήρει πάντα τὰ ‹ταῦτα› ῥήματα ἐν αὐτῆς τῇ καρδίᾳ

51 பின்பு, அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.
51 Then He went down to Nazareth with them and was obedient to them. But His mother treasured up all these things in her heart.
51 பின்பு, அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.7

52 Καὶ Ἰησοῦς προέκοπτεν ἐν τῇ σοφίᾳ καὶ ἡλικίᾳ καὶ χάριτι παρὰ Θεῷ καὶ ἀνθρώποις

52 இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.
52 And Jesus grew in wisdom and stature, and in favor with God and man.
52 இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.8


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Luke Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
1 a Or of the whole land  or of the whole world 
2 b Or This was the census before 
23 c Exodus 13:2
24 d Leviticus 12:8
27 e Literally the temple ; also in verse 46
37 f Or was a widow for eighty-four years 
40 g BYZ and TR became strong in spirit 
49 h Or I had to be about My Father’s business 

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.