பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Leviticus லேவியராகமம் וַיִּקְרָא
லேவியராகமம் 18 | Leviticus 18
Unlawful Sexual Relations (Matthew 5:27–30)
1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
1 Then the LORD said to Moses,
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
2 “Speak to the Israelites and tell them: I am the LORD your God.
2 "நீ இஸ்ரயேல் மக்களுக்குக் கூறவேண்டியது: நான் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
3 நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும்,
3 You must not follow the practices of the land of Egypt, where you used to live, and you must not follow the practices of the land of Canaan, into which I am bringing you. You must not walk in their customs.
3 நீங்கள் குடியிருந்த எகிப்து நாட்டின் வழக்கப்படி செய்ய வேண்டாம்; நான் உங்களை அழைத்துச் செல்லும் கானான் நாட்டின் வழக்கப்படியும் செய்ய வேண்டாம். அவர்கள் முறைமையும் வேண்டாம்.
4 என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
4 You are to practice My judgments and keep My statutes by walking in them. I am the LORD your God.
4 நியமங்களை ஏற்று, என் ஆணைகளுக்குப் பணிந்து நடங்கள், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!
5 ஆகையால் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் கர்த்தர்.
5 Keep My statutes and My judgments, for the man who does these things will live by them.a I am the LORD.
5 எனவே, என் நியமங்களையும் ஆணைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றிற்கேற்பச் செயல்படுவோர் அவற்றால் வாழ்வு பெறுவார். நானே ஆண்டவர்!1
6 ஒருவனும் தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியை நிர்வாணமாக்கும்படி அவளைச் சேரலாகாது; நான் கர்த்தர்.
6 None of you are to approach any close relative to have sexual relations.b I am the LORD.
6 உங்களுள் எவரும் தமக்கு இரத்த உறவாயிருக்கும் எந்தப் பெண்ணோடும் உடலுறவு கொள்ள வேண்டாம்; நானே ஆண்டவர்!
7 உன் தகப்பனையாவது உன் தாயையாவது நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தாயானவள்; அவளை நிர்வாணமாக்கலாகாது.
7 You must not expose the nakedness of your father by having sexual relations with your mother. She is your mother; you must not have sexual relations with her.
7 தந்தையின் வெற்றுடம்பாகிய உன் தாயின் வெற்றுடம்பைப் பாராதே! ஏனெனில், அவள் உன் தாய்; உன் தாயை வெற்றுடம்பாக்காதே!
8 உன் தகப்பனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் தகப்பனுடைய நிர்வாணம்.
8 You must not have sexual relations with your father’s wife; it would dishonor your father.
8 தந்தையின் மற்ற மனைவியரை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவர்கள் உன் தந்தையின் உடல் ஆவர்!2
2 லேவி 20:11; இச 22:30; 27:20.
9 உன் தகப்பனுக்காவது உன் தாய்க்காவது வீட்டிலாகிலும் புறத்திலாகிலும் பிறந்த குமாரத்தியாகிய உன் சகோதரியை நிர்வாணமாக்கலாகாது.
9 You must not have sexual relations with your sister, either your father’s daughter or your mother’s daughter, whether she was born in the same home or elsewhere.
9 தந்தைக்கோ, தாய்க்கோ வீட்டிலோ வெளியிலோ பிறந்த மகளான உன் சகோதரியை வெற்றுடம்பாக்காதே!3
3 லேவி 20:17; இச 27:22.
10 உன் குமாரனுடைய மகளையாவது உன் குமாரத்தியினுடைய மகளையாவது நிர்வாணமாக்கலாகாது அது உன்னுடைய நிர்வாணம்.
10 You must not have sexual relations with your son’s daughter or your daughter’s daughter, for that would shame your family.
10 உன் மகனின் மகளையோ உன் மகளின் மகளையோ வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவர்கள் உன் வெற்றுடம்பு ஆவர்.
11 உன் தகப்பனுடைய மனைவியினிடத்தில் உன் தகப்பனுக்குப் பிறந்த குமாரத்தியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உனக்குச் சகோதரி.
11 You must not have sexual relations with the daughter of your father’s wife, born to your father; she is your sister.
11 உன் தந்தைக்கு அவனுடைய மனைவியிடம் பிறந்த மகளை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உனக்கு சகோதரி.
12 உன் தகப்பனுடைய சகோதரியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தகப்பனுக்கு நெருங்கின இனமானவள்.
12 You must not have sexual relations with your father’s sister; she is your father’s close relative.
12 தந்தையின் சகோதரியை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உன் தந்தையின் உடல்.
13 உன் தாயினுடைய சகோதரியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தாய்க்கு நெருங்கின இனமானவள்.
13 You must not have sexual relations with your mother’s sister, for she is your mother’s close relative.
13 தாயின் சகோதரியை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உன் தாயின் உடல்.
14 உன் தகப்பனுடைய சகோதரனை நிர்வாணமாக்கலாகாது; அவன் மனைவியைச் சேராயாக; அவள் உன் தகப்பனுடைய சகோதரி.
14 You must not dishonor your father’s brother by approaching his wife to have sexual relations with her; she is your aunt.
14 தந்தையின் சகோதரனை வெற்றுடம்பாக்காதே! அவன் மனைவியோடு உடலுறவு கொள்ள வேண்டாம்; ஏனெனில், அவள் உன் சிற்றன்னை.4
15 உன் மருமகளை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் குமாரனுக்கு மனைவி, அவளை நிர்வாணமாக்கலாகாது.
15 You must not have sexual relations with your daughter-in-law. She is your son’s wife; you are not to have sexual relations with her.
15 மருமகளை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உன் மகனின் மனைவி; அவளை வெற்றுடம்பாக்காதே!5
5 லேவி 20:12.
16 உன் சகோதரனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் சகோதரனுடைய நிர்வாணம்.
16 You must not have sexual relations with your brother’s wife; that would shame your brother.
16 சகோதரனின் மனைவியை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உன் சகோதரனின் வெற்றுடம்பு.6
6 லேவி 20:21.
17 ஒரு ஸ்திரீயையும் அவள் மகளையும் நிர்வாணமாக்கலாகாது; அவளுடைய குமாரரின் மகளையும் அவளுடைய குமாரத்தியின் மகளையும் நிர்வாணமாக்கும்படி விவாகம்பண்ணலாகாது; இவர்கள் அவளுக்கு நெருங்கின இனமானவர்கள்; அது முறைகேடு.
17 You must not have sexual relations with both a woman and her daughter. You are not to marry her son’s daughter or her daughter’s daughter and have sexual relations with her. They are close relatives; it is depraved.
17 ஒரு பெண்ணையும் அவள் மகளையும் வெற்றுடம்பாக்காதே! அவள் மகனின் மகளையோ அவள் மகளின் மகளையோ மணம் புரியாதே. இவர்கள் அவளின் நெருங்கிய இரத்த உறவினர். அது முறைகேடு7
7 லேவி 20:14; இச 27:23.
18 உன் மனைவி உயிரோடிருக்கையில், அவளுக்கு உபத்திரவமாக அவள் சகோதரியையும் நிர்வாணமாக்கும்பொருட்டு அவளை விவாகம்பண்ணலாகாது.
18 You must not take your wife’s sister as a rival wife and have sexual relations with her while your wife is still alive.
18 மனைவி உயிருடனிருக்க, அவளுக்குச் சகக் கிழத்தியாக, அவள் சகோதரியை மணம் புரிந்து உடலுறவு கொள்ளாதே!
19 ஸ்திரீயானவள் சூதகத்தால் விலக்கத்திலிருக்கையில், அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே.
19 You must not approach a woman to have sexual relations with her during her menstrual period.
19 மனைவி மாதவிலக்கில் இருக்கும்போது, அவளை வெற்றுடம்பாக்காதே!8
8 லேவி 20:18.
20 பிறனுடைய மனைவியோடே சேரும்படி சயனித்து, அவளால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளவேண்டாம்.
20 You must not lie carnally with your neighbor’s wife and thus defile yourself with her.
20 உனக்கு அடுத்திருப்பவனின் மனைவியுடன் இன்பக்கலவி கொண்டு உன்னைத் தீட்டாக்கிக் கொள்ளாதே.9
9 லேவி 20:10.
21 நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி இடங்கொடாதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் கர்த்தர்.
21 You must not give any of your children to be sacrificedc to Molech, for you must not profane the name of your God. I am the LORD.
21 உன்பிள்ளைகளுள் யாரையேனும் மோலெக்கிற்கு எரிபலியாக்கி, உன் கடவுளின் திருப்பெயரை இழிவு படுத்தாதே. நானே ஆண்டவர்!10
10 லேவி 20:1-5.
22 பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணவேண்டாம்; அது அருவருப்பானது.
22 You must not lie with a man as with a woman; that is an abomination.
22 பெண்ணுடன் பாலுறவு கொள்வதுபோல் ஆணோடு கொள்ளாதே! அது அருவருப்பு.11
11 லேவி 20:13.
23 யாதொரு மிருகத்தோடும் நீ புணர்ச்சி செய்து, அதினாலே உன்னைத் தீட்டுப்படுத்தவேண்டாம்; ஸ்திரீயானவள் மிருகத்தோடே புணரும்படி அதற்கு முன்பாக நிற்கலாகாது; அது அருவருப்பான தாறுமாறு.
23 You must not lie carnally with any animal, thus defiling yourself with it; a woman must not stand before an animal to mate with it; that is a perversion.
23 எந்த விலங்கோடும் பாலுறவு கொண்டு உன்னைத் தீட்டாக்கிக் கொள்ளாதே! எந்தப் பெண்ணும் விலங்கோடு பாலுறவு கொள்ள வேண்டாம். அது முறைகேடான அருவருப்பு.12
12 விப 22:19; லேவி 20:15-16; இச 17:21.
24 இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள்; நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற ஜாதிகள் இவைகளெல்லாவற்றினாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள்; தேசமும் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
24 Do not defile yourselves by any of these practices, for by all these things the nations I am driving out before you have defiled themselves.
24 இவற்றில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டாக்கிக் கொள்ள வேண்டாம். ஏனெனில், நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட வேற்றினத்தவர். இவற்றால் தீட்டானதால் நாடே தீட்டாகிவிட்டது.
25 ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன்; தேசம் தன் குடிகளைக் கக்கிப்போடும்.
25 Even the land has become defiled, so I am punishing it for its sin, and the land will vomit out its inhabitants.
25 இவ்வாறு, நாடு தீட்டுப்பட்டதால் நான் அதன் குற்றங்களுக்காகத் தண்டனை வழங்கினேன். நாடும் அவர்களை வெளியே கக்கியது.
26 இந்த அருவருப்புகளையெல்லாம் உங்களுக்குமுன் இருந்த அந்தத் தேசத்தின் மனிதர் செய்ததினாலே தேசம் தீட்டாயிற்று.
26 But you are to keep My statutes and ordinances, and you must not commit any of these abominations—neither your native-born nor the foreigner who lives among you.
26 நீங்கள் என் கட்டளைகளையும் நியமனங்களையும் கடைப்பிடியுங்கள். குடிமக்களாயினும் உங்களோடு தங்கும் அந்நியராயினும் இந்த அருவருப்புகளில் ஒன்றையும் செய்ய வேண்டாம்.
27 இப்பொழுது உங்களுக்கு முன் இருந்த ஜாதிகளைத் தேசம் கக்கிப்போட்டதுபோல, நீங்கள் அதைத் தீட்டுப்படுத்தும்போது அது உங்களையும் கக்கிப்போடாதபடிக்கு,
27 For the men who were in the land before you committed all these abominations, and the land has become defiled.
27 ஏனெனில், இந்த அருவருப்பானவற்றை உங்கள் முன் அந்த நாடுகளில் இருந்தவர்கள் செய்ததனால் நாடு தீட்டாயிற்று.
28 நீங்கள் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொண்டு, தேசத்திலே பிறந்தவனானாலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியனானாலும் இந்த அருவருப்புக்களில் ஒன்றையும் செய்யவேண்டாம்.
28 So if you defile the land, it will vomit you out as it spewed out the nations before you.
28 உங்களுக்குமுன் இருந்தோரை நாடு வெளியே கக்கிவிட்டது போல, நீங்கள் தீட்டாக்கினால் கக்கப்படுவீர்கள்.
29 இப்படிப்பட்ட அருவருப்பானவைகளில் யாதொன்றை யாராவது செய்தால், செய்த அந்த ஆத்துமாக்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவார்கள்.
29 Therefore anyone who commits any of these abominations must be cut off from among his people.
29 ஏனெனில்,யாராவது இவ்வகை அருவருப்புகளில் எதையேனும் செய்தால் அவன் தன் இனத்தில் இராதபடி அழிந்து போவான்.
30 ஆகையால் உங்களுக்குமுன் செய்யப்பட்ட அருவருப்பான முறைமைகளில் யாதொன்றை நீங்கள் செய்து, அவைகளால் உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாதபடிக்கு என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
30 You must keep My charge not to practice any of the abominable customs that were practiced before you, so that you do not defile yourselves by them. I am the LORD your God.”
30 எனவே, உங்கள் முன்னோர் இத்தகைய அருவருப்புகளைச் செய்ததுபோல, நீங்களும் செய்து, அவற்றால் தீட்டுப்படாதபடி, என் கட்டளைகளைக் கடைப்பிடியுங்கள். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
5 a Cited in Romans 10:5 and Galatians 3:12; see also Ezekiel 20:11, 13, and 21.
6 b Literally to uncover (their) nakedness ; here and throughout this chapter
21 c Hebrew to make them pass through (the fire)
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.