பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

Luke  லூக்கா  Λουκᾶν

அதிகாரம் 1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

லூக்கா 10 | Luke 10

Jesus Sends the Seventy-Two (Matthew 9:35–38)

1δὲ Μετὰ ταῦτα ὁ Κύριος ‹καὶ› ἀνέδειξεν ἑβδομήκοντα ‹δύο› ἑτέρους καὶ ἀπέστειλεν αὐτοὺς ἀνὰ δύο ‹δύο› πρὸ αὐτοῦ προσώπου εἰς πᾶσαν πόλιν καὶ τόπον οὗ αὐτὸς ἤμελλεν ἔρχεσθαι

1 இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.
1 After this, the Lord appointed seventy-twoa others and sent them two by two ahead of Him to every town and place He was about to visit.
1 இதற்குப்பின்பு ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு1 பேரை நியமித்து, அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.

1 "எழுபத்திரண்டு" என்னும் சொல் சில கையெழுத்துப் படிகளில் "எழுபது" என உள்ளது.

2δὲ ἔλεγεν πρὸς αὐτούς μὲν Ὁ θερισμὸς πολύς δὲ οἱ ἐργάται ὀλίγοι δεήθητε τοῦ Κυρίου τοῦ θερισμοῦ οὖν ὅπως ἐκβάλῃ ἐργάτας εἰς αὐτοῦ τὸν θερισμὸν

2 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.
2 And He told them, “The harvest is plentiful, but the workers are few. Ask the Lord of the harvest, therefore, to send out workers into His harvest.
2 அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: "அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்.2

3Ὑπάγετε ἰδοὺ ἀποστέλλω ὑμᾶς ὡς ἄρνας ἐν μέσῳ λύκων

3 புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்
3 Go! I am sending you out like lambs among wolves.
3 புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்.3

4βαστάζετε μὴ βαλλάντιον μὴ πήραν μὴ ὑποδήματα καὶ ἀσπάσησθε μηδένα κατὰ τὴν ὁδὸν

4 பணப்பையையும் சாமான் பையையும் பாதரட்சைகளையும் கொண்டுபோகவேண்டாம்; வழியிலே ஒருவரையும் வினவவும் வேண்டாம்.
4 Carry no purse or bag or sandals. Do not greet anyone along the road.
4 பணப்பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.

5δ’ ἣν ἂν οἰκίαν εἰσέλθητε Εἰς πρῶτον λέγετε Εἰρήνη τούτῳ τῷ οἴκῳ

5 ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள்.
5 Whatever house you enter, begin by saying, ‘Peace to this house.’
5 நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், 'இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறுங்கள்.

6καὶ ἐὰν υἱὸς εἰρήνης ᾖ ἐκεῖ ὑμῶν ἡ εἰρήνη ἐπαναπαήσεται ἐπ’ αὐτὸν δὲ εἰ μή¦γε ἀνακάμψει ἐφ’ ὑμᾶς

6 சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்.
6 If a man of peace is there, your peace will rest on him; if not, it will return to you.
6 அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும்.

7δὲ μένετε ἐν τῇ αὐτῇ οἰκίᾳ ἐσθίοντες* καὶ πίνοντες τὰ παρ’ αὐτῶν γὰρ ὁ ἐργάτης ἄξιος τοῦ αὐτοῦ μισθοῦ μὴ μεταβαίνετε ἐξ οἰκίας εἰς οἰκίαν

7 அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான். வீட்டுக்கு வீடு போகாதிருங்கள்.
7 Stay at the same house, eating and drinking whatever you are offered. For the worker is worthy of his wages.b Do not move around from house to house.
7 அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில், வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடுவீடாய்ச் செல்ல வேண்டாம்.4

8Καὶ εἰσέρχησθε εἰς ἣν ἂν πόλιν καὶ δέχωνται ὑμᾶς ἐσθίετε τὰ παρατιθέμενα ὑμῖν

8 ஒரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் புசித்து,
8 If you enter a town and they welcome you, eat whatever is set before you.
8 நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள்.

9καὶ θεραπεύετε τοὺς ἀσθενεῖς ἐν αὐτῇ καὶ λέγετε αὐτοῖς ἡ βασιλεία τοῦ Θεοῦ Ἤγγικεν ἐφ’ ὑμᾶς

9 அவ்விடத்திலுள்ள பிணியாளிகளைச் சொஸ்தமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.
9 Heal the sick who are there and tell them, ‘The kingdom of God is near you.’
9 அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.

10δ’ εἰσέλθητε Εἰς ἣν ἂν πόλιν καὶ μὴ δέχωνται ὑμᾶς ἐξελθόντες εἰς αὐτῆς τὰς πλατείας εἴπατε

10 யாதொரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்:
10 But if you enter a town and they do not welcome you, go into the streets and declare,
10 நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று,

11Καὶ τὸν κονιορτὸν ἐκ ὑμῶν τῆς πόλεως τὸν κολληθέντα εἰς ἡμῖν τοὺς πόδας ἀπομασσόμεθα ὑμῖν πλὴν γινώσκετε τοῦτο ὅτι ἡ βασιλεία τοῦ Θεοῦ ἤγγικεν

11 எங்களில் ஒட்டின உங்கள் பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாய்த் துடைத்துப்போடுகிறோம்; ஆயினும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள்.
11 ‘Even the dust of your town that clings to our feet, we wipe off as a testimony against you. Yet be sure of this: The kingdom of God is near.’
11 'எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம். ஆயினும், இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்' எனச் சொல்லுங்கள்.65

12λέγω ὑμῖν ὅτι ἔσται ἀνεκτότερον ἐν ἐκείνῃ τῇ ἡμέρᾳ Σοδόμοις ἢ ἐκείνῃ τῇ πόλει

12 அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் அந்த நாளிலே சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
12 I tell you, it will be more bearable on that day for Sodom than for that town.
12 அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விட கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்.7

Woe to the Unrepentant (Matthew 11:20–24)

13Οὐαί σοι Χοραζίν οὐαί σοι Βηθσαϊδά ὅτι εἰ αἱ δυνάμεις αἱ γενόμεναι ἐν ὑμῖν ἐγενήθησαν ἐν Τύρῳ καὶ Σιδῶνι μετενόησαν πάλαι ἂν καθήμενοι ἐν σάκκῳ καὶ σποδῷ

13 கோராசீன் பட்டணமே, உனக்கு, ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள்.
13 Woe to you, Chorazin! Woe to you, Bethsaida! For if the miracles that were performed in you had been performed in Tyre and Sidon, they would have repented long ago, sitting in sackcloth and ashes.
13 "கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால், அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து, மனம் மாறியிருப்பர்.

14πλὴν ἔσται ἀνεκτότερον Τύρῳ καὶ Σιδῶνι ἐν τῇ κρίσει ἢ ὑμῖν

14 நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும்.
14 But it will be more bearable for Tyre and Sidon at the judgment than for you.
14 எனினும், தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையைவிட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும்.

15καὶ σύ Καφαρναούμ ὑψωθήσῃ ἕως οὐρανοῦ μὴ καταβήσῃ ἕως τοῦ ᾅδου

15 வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி,
15 And you, Capernaum, will you be lifted up to heaven? No, you will be brought down to Hades!
15 கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய்.8

16Ὁ ἀκούων ὑμῶν ἀκούει ἐμοῦ καὶ ὁ ἀθετῶν ὑμᾶς ἀθετεῖ ἐμὲ δὲ ὁ ἀθετῶν ἐμὲ ἀθετεῖ τὸν ἀποστείλαντά με

16 சீஷரை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைபண்ணுகிறான் என்றார்.
16 Whoever listens to you listens to Me; whoever rejects you rejects Me; and whoever rejects Me rejects the One who sent Me.”
16 "உங்களுக்குச் செவி சாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார்; உங்களைப் புறக்கணிப்பவர் என்னைப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்."9

The Joyful Return

17δὲ οἱ ἑβδομήκοντα ‹δύο› Ὑπέστρεψαν μετὰ χαρᾶς λέγοντες Κύριε καὶ τὰ δαιμόνια ὑποτάσσεται ἡμῖν ἐν σου τῷ ὀνόματί

17 பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.
17 The seventy-two returned with joy and said, “Lord, even the demons submit to us in Your name.”
17 பின்னர், எழுபத்திரண்டு10 பேரும் மகிழ்வுடன் திரும்பிவந்து, "ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன" என்றனர்.

10 "எழுபத்திரண்டு" என்னும் சொல் சில கையெழுத்துப் படிகளில் "எழுபது" என உள்ளது.

18δὲ Εἶπεν αὐτοῖς Ἐθεώρουν τὸν Σατανᾶν πεσόντα ὡς ἀστραπὴν ἐκ τοῦ οὐρανοῦ

18 அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.
18 So He told them, “I saw Satan fall like lightning from heaven.
18 அதற்கு அவர், "வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன்.

19ἰδοὺ δέδωκα ὑμῖν τὴν ἐξουσίαν τοῦ πατεῖν ἐπάνω ὄφεων καὶ σκορπίων καὶ ἐπὶ πᾶσαν τὴν δύναμιν τοῦ ἐχθροῦ καὶ οὐδὲν οὐ μὴ ἀδικήσῃ* ὑμᾶς

19 இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.
19 Behold, I have given you authority to tread on snakes and scorpions, and over all the power of the enemy. Nothing will harm you.
19 பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது.11

20πλὴν μὴ χαίρετε ἐν τούτῳ ὅτι τὰ πνεύματα ὑποτάσσεται ὑμῖν δὲ χαίρετε ὅτι ὑμῶν τὰ ὀνόματα ἐνγέγραπται ἐν τοῖς οὐρανοῖς

20 ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.
20 Nevertheless, do not rejoice that the spirits submit to you, but rejoice that your names are written in heaven.”
20 ஆயினும், தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பதுபற்றி மகிழவேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்" என்றார்.

Jesus’ Prayer of Thanksgiving (Matthew 11:25–30)

21Ἐν αὐτῇ τῇ ὥρᾳ ἠγαλλιάσατο [ἐν] τῷ τῷ Ἁγίῳ Πνεύματι καὶ εἶπεν Ἐξομολογοῦμαί σοι Πάτερ Κύριε τοῦ οὐρανοῦ καὶ τῆς γῆς ὅτι ἀπέκρυψας ταῦτα ἀπὸ σοφῶν καὶ συνετῶν καὶ ἀπεκάλυψας αὐτὰ νηπίοις ναί ὁ Πατήρ ὅτι οὕτως ἐγένετο εὐδοκία ἔμπροσθέν σου

21 அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.
21 At that time Jesus rejoiced in the Holy Spirit and declared, “I praise You, Father, Lord of heaven and earth, because You have hidden these things from the wise and learned, and revealed them to little children. Yes, Father, for this was well-pleasing in Your sight.
21 அந்நேரத்தில் இயேசு தூய ஆவியால் பேருவகையடைந்து, "தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில், ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்" என்றார்.

22Πάντα παρεδόθη μοι ὑπὸ μου τοῦ Πατρός καὶ οὐδεὶς γινώσκει τίς ὁ Υἱὸς ἐστιν εἰ μὴ ὁ Πατήρ καὶ τίς ὁ Πατὴρ ἐστιν εἰ μὴ ὁ Υἱὸς καὶ ᾧ ἐὰν ὁ Υἱὸς βούληται ἀποκαλύψαι

22 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுந்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார்.
22 All things have been entrusted to Me by My Father. No one knows who the Son is except the Father, and no one knows who the Father is except the Son and those to whom the Son chooses to reveal Him.”
22 "என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்" என்று கூறினார்.12

23Καὶ στραφεὶς πρὸς τοὺς μαθητὰς εἶπεν κατ’ ἰδίαν Μακάριοι οἱ ὀφθαλμοὶ οἱ βλέποντες ἃ βλέπετε

23 பின்பு, தமது சீஷரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணுங் கண்கள் பாக்கியமுள்ளவைகள்.
23 Then Jesus turned to the disciples and said privately, “Blessed are the eyes that see what you see.
23 பின்பு, அவர் தம் சீடர் பக்கம் திரும்பி அவர்களிடம் தனியாக, "நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர்.

24γὰρ λέγω ὑμῖν ὅτι πολλοὶ προφῆται καὶ βασιλεῖς ἠθέλησαν ἰδεῖν ἃ ὑμεῖς βλέπετε καὶ οὐκ εἶδαν καὶ ἀκοῦσαι ἃ ἀκούετε καὶ οὐκ ἤκουσαν

24 அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
24 For I tell you that many prophets and kings desired to see what you see but did not see it, and to hear what you hear but did not hear it.”
24 ஏனெனில், பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பினார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால், அவர்கள் கேட்கவில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்று கூறினார்.

The Parable of the Good Samaritan

25Καὶ ἰδοὺ τις νομικός ἀνέστη ἐκπειράζων αὐτὸν Διδάσκαλε λέγων τί ποιήσας κληρονομήσω αἰώνιον ζωὴν

25 அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
25 One day an expert in the law stood up to test Him. “Teacher,” he asked, “what must I do to inherit eternal life?”
25 திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், "போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.

26τί γέγραπται Ἐν τῷ νόμῳ δὲ Ὁ εἶπεν πρὸς αὐτόν πῶς ἀναγινώσκεις

26 அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார்.
26 “What is written in the Law?” Jesus replied. “How do you read it?”
26 அதற்கு இயேசு, "திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?" என்று அவரிடம் கேட்டார்.

27δὲ Ὁ ἀποκριθεὶς εἶπεν Ἀγαπήσεις Κύριον σου τὸν Θεόν ἐξ ὅλης σου τῆς καρδίας καὶ ἐν ὅλῃ σου τῇ ψυχῇ καὶ ἐν ὅλῃ σου τῇ ἰσχύϊ καὶ ἐν ὅλῃ σου τῇ διανοίᾳ καὶ σου Τὸν πλησίον ὡς σεαυτόν

27 அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழுஆத்துமாவோடும், உன் முழுப்பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.
27 He answered, “‘Love the Lord your God with all your heart and with all your soul and with all your strength and with all your mind’c and ‘Love your neighbor as yourself.’”d
27 அவர் மறுமொழியாக, 'உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக' என்று எழுதியுள்ளது" என்றார்.13

28ἀπεκρίθης Ὀρθῶς δὲ Εἶπεν αὐτῷ ποίει τοῦτο καὶ ζήσῃ

28 அவர் அவனை நேரக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.
28 “You have answered correctly,” Jesus said. “Do this and you will live.”
28 இயேசு, "சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்" என்றார்.1514

29δὲ Ὁ θέλων δικαιῶσαι ἑαυτὸν εἶπεν πρὸς τὸν Ἰησοῦν Καὶ τίς ἐστίν μου πλησίον

29 அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன் யார் என்று கேட்டான்.
29 But wanting to justify himself, he asked Jesus, “And who is my neighbor?”
29 அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்று இயேசுவிடம் கேட்டார்.

30ὁ Ἰησοῦς Ὑπολαβὼν ‹δὲ› εἶπεν τις Ἄνθρωπός κατέβαινεν ἀπὸ Ἰερουσαλὴμ εἰς Ἰεριχὼ καὶ περιέπεσεν λῃσταῖς οἳ καὶ ἐκδύσαντες καὶ ἐπιθέντες πληγὰς αὐτὸν ἀπῆλθον ἀφέντες ἡμιθανῆ

30 இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.
30 Jesus took up this question and said, “A man was going down from Jerusalem to Jericho when he fell into the hands of robbers. They stripped him, beat him, and went away, leaving him half dead.
30 அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: "ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள்.

31δὲ Κατὰ συγκυρίαν τις ἱερεύς κατέβαινεν ἐν ἐκείνῃ τῇ ὁδῷ καὶ ἰδὼν αὐτὸν ἀντιπαρῆλθεν

31 அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக்கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
31 Now by chance a priest was going down the same road, but when he saw him, he passed by on the other side.
31 குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார்.

32δὲ Ὁμοίως Λευίτης καὶ [γενόμενος] ἐλθὼν κατὰ τὸν τόπον καὶ ἰδὼν ἀντιπαρῆλθεν

32 அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
32 So too, when a Levite came to that spot and saw him, he passed by on the other side.
32 அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார்.

33δέ τις Σαμαρίτης ὁδεύων ἦλθεν κατ’ αὐτὸν καὶ ἰδὼν ἐσπλαγχνίσθη

33 பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி,
33 But when a Samaritan on a journey came upon him, he looked at him and had compassion.
33 ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார்.

34καὶ προσελθὼν κατέδησεν αὐτοῦ τὰ τραύματα ἐπιχέων ἔλαιον καὶ οἶνον δὲ ἐπιβιβάσας αὐτὸν ἐπὶ ἴδιον τὸ κτῆνος ἤγαγεν αὐτὸν εἰς πανδοχεῖον καὶ ἐπεμελήθη αὐτοῦ

34 கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.
34 He went to him and bandaged his wounds, pouring on oil and wine. Then he put him on his own animal, brought him to an inn, and took care of him.
34 அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார்.

35Καὶ ἐπὶ τὴν αὔριον ἐκβαλὼν «δύο δηνάρια» ἔδωκεν τῷ πανδοχεῖ Ἐπιμελήθητι αὐτοῦ καὶ εἶπεν καὶ ἐν ἐγὼ τῷ ἐπανέρχεσθαί με ἀποδώσω σοι ὅ τι ἂν προσδαπανήσῃς

35 மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.
35 The next day he took out two denariie and gave them to the innkeeper. ‘Take care of him,’ he said, ‘and on my return I will repay you for any additional expense.’
35 மறுநாள் இருதெனாரியத்தை16 எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, 'இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்' என்றார்.

16 காண்க: 7:41இன் அடிக்குறிப்பு.

36Τίς τούτων τῶν τριῶν σοι δοκεῖ γεγονέναι πλησίον τοῦ ἐμπεσόντος εἰς τοὺς λῃστάς

36 இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான் உனக்கு எப்படித்தோன்றுகிறது என்றார்.
36 Which of these three do you think was a neighbor to the man who fell into the hands of robbers?”
36 "கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?" என்று இயேசு கேட்டார்.

37Ὁ ποιήσας μετ’ αὐτοῦ τὸ ἔλεος δὲ Ὁ εἶπεν δὲ ὁ Ἰησοῦς Εἶπεν αὐτῷ Πορεύου καὶ σὺ ποίει ὁμοίως

37 அதற்கு அவன்: அவனுக்கு இரக்கஞ்செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றார்.
37 “The one who showed him mercy,” replied the expert in the law. Then Jesus told him, “Go and do likewise.”
37 அதற்கு திருச்சட்ட அறிஞர், "அவருக்கு இரக்கம் காட்டியவரே" என்றார். இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார்.

Martha and Mary

38δὲ Ἐν αὐτοὺς τῷ πορεύεσθαι αὐτὸς εἰσῆλθεν εἰς τινά κώμην δέ τις γυνὴ ὀνόματι Μάρθα ὑπεδέξατο αὐτὸν 〈εἰς τὴν οἰκίαν〉

38 பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும்பேர் கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன்வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.
38 As they traveled along, Jesus entered a village where a woman named Martha welcomed Him into her home.
38 அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா.

39τῇδε καὶ ἦν ἀδελφὴ καλουμένη Μαριάμ ἣ καὶ παρακαθεσθεῖσα πρὸς τοὺς τοῦ Κυρίου πόδας ἤκουεν αὐτοῦ τὸν λόγον

39 அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
39 She had a sister named Mary, who sat at the Lord’s feet listening to His message.
39 அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.17

40δὲ ἡ Μάρθα περιεσπᾶτο περὶ πολλὴν διακονίαν δὲ ἐπιστᾶσα εἶπεν Κύριε οὐ μέλει σοι ὅτι μου ἡ ἀδελφή κατέλειπεν με διακονεῖν μόνην οὖν εἰπὲ* αὐτῇ ἵνα συναντιλάβηται μοι

40 மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.
40 But Martha was distracted by all the preparations to be made. She came to Jesus and said, “Lord, do You not care that my sister has left me to serve alone? Tell her to help me!”
40 ஆனால், மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, "ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்" என்றார்.

41Μάρθα Μάρθα δὲ ὁ Κύριος Ἀποκριθεὶς εἶπεν αὐτῇ μεριμνᾷς καὶ θορυβάζῃ περὶ πολλά

41 இயேசு அவளுக்குப் பிரதியுத்தமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
41 “Martha, Martha,” the Lord replied, “you are worried and upset about many things.
41 ஆண்டவர் அவரைப் பார்த்து, "மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

42δέ ἢ ἑνός ὀλίγων ἐστιν χρεία γὰρ Μαριὰμ ἐξελέξατο τὴν ἀγαθὴν μερίδα ἥτις οὐκ ἀφαιρεθήσεται αὐτῆς

42 தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.
42 But only one thing is necessary. Mary has chosen the good portion, and it will not be taken away from her.”
42 ஆனால், தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது" என்றார்


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Luke Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
1 a NE, BYZ, and TR seventy ; also in verse 17
7 b See Leviticus 19:13 and Deuteronomy 24:14–15; cited in 1 Timothy 5:18.
27 c Deuteronomy 6:5
27 d Leviticus 19:18
35 e A denarius was customarily a day’s wage for a laborer; see Matthew 20:2.

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.