பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Psalms சங்கீதம் תְהִלִּים
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 அடுத்தது >
(தாவீதின் சங்கீதம்)
சங்கீதம் 35 | Psalms 35
Contend with My Opponents, O LORD
Of David.
1 கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும்.
1 Of David. Contend with my opponents, O LORD; fight against those who fight against me.
1 ஆண்டவரே, எனக்கெதிராய் வழக்காடுவோருடன் வழக்காடும்; என்மீது போர் தொடுப்போரோடு போர் புரியும்.
2 நீர் கேடகத்தையும் பரிசையையும் பிடித்து, எனக்கு ஒத்தாசையாக எழுந்து நில்லும்.
2 Take up Your shield and buckler; arise and come to my aid.
2 கேடயமும் படைக்கலமும் எடுத்துவாரும்; எனக்குத் துணை செய்ய எழுந்து வாரும்.
3 என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்துநின்று, ஈட்டியையோங்கி அவர்களை மறித்து: நான் உன் இரட்சிப்பு என்று என் ஆத்துமாவுக்குச் சொல்லும்.
3 Draw the spear and javelin against my pursuers; say to my soul: “I am your salvation.”
3 என்னைத் துரத்திவரும் எதிரிகளைத் தடுத்து நிறுத்தும்; ஈட்டியையும் வேலையும் கையிலெடும்; 'நானே உன் மீட்பர்' என்று என் உள்ளத்திற்குச் சொல்லும்.
4 என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக; எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள் நாணமடைவார்களாக.
4 May those who seek my life be disgraced and put to shame; may those who plan to harm me be driven back and confounded.
4 என் உயிரைக் குடிக்கத் தேடுவோர்; மானக்கேடுற்று இழிவடையட்டும்; எனக்குத் தீங்கிழைக்க நினைப்போர், புறமுதுகிட்டு ஓடட்டும்.
5 அவர்கள் காற்றுமுகத்தில் பறக்கும் பதரைப்போலாவார்களாக; கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்துவானாக.
5 May they be like chaff in the wind, as the angel of the LORD drives them away.
5 ஆண்டவரின் தூதர் அவர்களை விரட்டியடிக்க, காற்றில் பறக்கும் பதர்போல அவர்கள் சிதறட்டும்.
6 அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாயிருப்பதாக; கர்த்தருடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக.
6 May their path be dark and slick, as the angel of the LORD pursues.
6 ஆண்டவரின் தூதர் அவர்களைத் துரத்திட, அவர்கள் வழி இருளும் சறுக்கலும் ஆகட்டும்.
7 முகாந்தரமில்லாமல் எனக்காகத் தங்கள் வலையைக் குழியில் ஒளித்து வைத்தார்கள்; முகாந்தரமில்லாமல் என் ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள்.
7 For without cause they laid their net for me; without reason they dug a pit for my soul.
7 ஏனெனில், காரணமின்றி எனக்குக் கண்ணி வைத்தனர்; காரணமின்றி எனக்குக் குழிதோண்டினர்.
8 அவன் நினையாத அழிவு அவனுக்கு வரவும், அவன் மறைவாய் வைத்த வலை அவனையே பிடிக்கவுங்கடவது; அவனே அந்தக் குழியில் விழுந்து அழிவானாக.
8 May ruin befall them by surprise; may the net they hid ensnare them; may they fall into the hazard they created.
8 அவர்களுக்கு அழிவு எதிர்பாராமல் வரட்டும்; அவர்களுக்கு வைத்த கண்ணியில் அவர்களே சிக்கக்கொள்ளட்டும்; அவர்கள் தோண்டிய குழியில் § அவர்களே விழட்டும்.
9 என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்.
9 Then my soul will rejoice in the LORD and exult in His salvation.
9 என் உள்ளம் ஆண்டவரை முன்னிட்டுக் களிகூரும்; அவர் அளிக்கும் மீட்பில் அகமகிழும்.
10 சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கொப்பானவர் யார் கர்த்தாவே, என்று என் எலும்புகளெல்லாம் சொல்லும்.
10 All my bones will exclaim, “Who is like You, O LORD, who delivers the afflicted from the aggressor, the poor and needy from the robber?”
10 ‟ஆண்டவரே, உமக்கு நிகரானவர் யார்? எளியோரை வலியோரின் கையினின்றும் எளியோரையும் வறியோரையும் கொள்ளையடிப்போர் கையினின்றும் விடுவிப்பவர் நீரே" என்று என் எலும்புகள் எல்லாம் சொல்லும்.
11 கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள்.
11 Hostile witnesses come forward; they make charges I know nothing about.
11 பொய்ச்சான்று சொல்வோர் எனக்கெதிராய் எழுகின்றனர்; எனக்குத் தெரியாதவற்றைப் பற்றி என்னிடம் வினவுகின்றனர்.
12 நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமைசெய்கிறார்கள்; என் ஆத்துமா திக்கற்றுப்போகப் பார்க்கிறார்கள்.
12 They repay me evil for good, to the bereavement of my soul.
12 நான் அவர்களுக்கு நன்மையே செய்தேன்; அவர்களோ, அதற்குப் பதிலாக எனக்குத் தீங்கிழைத்தனர். என் நெஞ்சைத் துயரில் ஆழத்தினர்.
13 அவர்கள் வியாதியாயிருந்தபோது இரட்டு என் உடுப்பாயிருந்தது; நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரப்படுத்தினேன்; என் ஜெபமும் என் மடியிலே திரும்பவந்தது.
13 Yet when they were ill, I put on sackcloth; I humbled myself with fasting, but my prayers returned unanswered.b
13 நானோ, அவர்கள் நோயுற்றிருந்தபோது, சாக்கு உடுத்திக் கொண்டேன்; நோன்பிருந்து என்னை வருத்திக் கொண்டேன்; முகம் குப்புற வீழ்ந்து மன்றாடினேன்.
14 நான் அவனை என் சிநேகிதனாகவும் சகோதரனாகவும் பாவித்து நடந்துகொண்டேன்; தாய்க்காகத் துக்கிக்கிறவனைப்போல் துக்கவஸ்திரம் தரித்துத் தலைகவிழ்ந்து நடந்தேன்.
14 I paced about as for my friend or brother; I was bowed down with grief, like one mourning for his mother.
14 நண்பர்போலும் உடன்பிறந்தோர் போலும் அவர்களுக்காய் மன்றாடினேன்; தாய்க்காகத் துக்கம் கொண்டாடுவோரைப்போல வாட்டமுற்றுத் துயரத்தோடு நடமாடினேன்.
15 ஆனாலும் எனக்கு ஆபத்துண்டானபோது அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; நீசரும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, ஓயாமல் என்னை நிந்தித்தார்கள்.
15 But when I stumbled, they assembled in glee; they gathered together against me. Assailants I did not know slandered me without ceasing.
15 நான் தடுக்கி விழுந்தபோது அவர்கள் ஒன்றுகூடி மகிழ்ந்தனர்; எனக்கெதிராய் ஒன்று சேர்ந்தனர்; யாதொன்றும் அறியாத என்னைச் சின்னாபின்னமாக்கி ஓயாது பழித்துரைத்தனர்.
16 அப்பத்திற்காக இச்சகம்பேசுகிற பரியாசக்காரரோடே சேர்ந்துகொண்டு என்பேரில் பற்கடிக்கிறார்கள்.
16 Like godless jesters at a feast,c they gnashed their teeth at me.
16 இறைப்பற்று இல்லாரோடு சேர்ந்து அவர்கள் என்னை இகழ்ந்தனர்; எள்ளி நகையாடினர்; என்னைப் பார்த்துப் பற்களை நறநறவென்று கடித்தனர்.
17 ஆண்டவரே, எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? என் ஆத்துமாவை அழிவுக்கும், எனக்கு அருமையானதைச் சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும்.
17 How long, O Lord, will You look on? Rescue my soul from their ravages, my precious life from these lions.
17 என் தலைவரே, இன்னும் எத்தனை நாள் இதைப் பார்த்துக் கொண்டிருப்பீர்?; என் உயிரை அவர்களது தாக்குதலினின்றும் என் ஆருயிரைச் சிங்கக் குட்டிகளினின்றும் மீட்டருளும்.
18 மகா சபையிலே உம்மைத் துதிப்பேன், திரளான ஜனங்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன்.
18 Then I will give You thanks in the great assembly; I will praise You among many people.
18 மாபெரும் சபையில் உமக்கு நன்றி செலுத்துவேன்; திரளான மக்களிடையே உம்மைப் புகழ்வேன்.
19 வீணாய் எனக்குச் சத்துருக்களானவர்கள் என்னிமித்தம் சந்தோஷியாமலும், முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக.
19 Let not my enemies gloat over me without cause, nor those who hate me without reason wink in malice.d
19 வஞ்சகரான என் எதிரிகள் என்னைப் பார்த்துக் களிக்க இடமளியாதீர்; காரணமின்றி என்னை வெறுப்போர் கண்சாடை காட்டி இகழவிடாதீர்.*
* திபா 69:4; யோவா 16:25.
20 அவர்கள் சமாதானமாய்ப் பேசாமல், தேசத்திலே அமைதலாயிருக்கிறவர்களுக்கு விரோதமாய் வஞ்சகமான காரியங்களைக் கருதுகிறார்கள்.
20 For they do not speak peace, but they devise deceitful schemes against those who live quietly in the land.
20 ஏனெனில், அவர்களது பேச்சு சமாதானத்தைப் பற்றியதன்று; நாட்டில் அமைதியை நாடுவோர்க்கு எதிராக அவர்கள் வஞ்சகமாய்ச் § சூழ்ச்சி செய்கின்றனர்.
21 எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாய்த் திறந்து, ஆ ஆ, ஆ ஆ, எங்கள் கண் கண்டது என்கிறார்கள்.
21 They gape at me and say, “Aha, aha! Our eyes have seen!”
21 எனக்கெதிராக அவர்கள் வாய் திறந்து, 'ஆ! ஆ! நாங்களே எங்கள் கண்ணால் கண்டோம்' என்கின்றனர்.
22 கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாயிராதேயும்; ஆண்டவரே எனக்குத் தூரமாகாதேயும்.
22 O LORD, You have seen it; be not silent. O Lord, be not far from me.
22 ஆண்டவரே, நீர் இதைக் கண்டும் மௌனமாய் இராதீர்; என் தலைவரே, என்னைவிட்டுத் தொலையில் போய்விடாதீர்.
23 என் தேவனே, என் ஆண்டவரே எனக்கு நியாயஞ்செய்யவும் என் வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும்.
23 Awake and rise to my defense, to my cause, my God and my Lord!
23 என் கடவுளே, கிளர்ந்தெழும்! என் தலைவரே, விழித்தெழுந்து என் வழக்குக்கு நீதி கிடைக்கச் செய்யும்.
24 என் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நீதியின்படி என்னை நியாயம்விசாரியும், என்னைக்குறித்து அவர்களை மகிழவொட்டாதிரும்.
24 Vindicate me by Your righteousness, O LORD my God, and do not let them gloat over me.
24 என் கடவுளாகிய ஆண்டவரே, உமது நீதிக்கேற்ப என் நேர்மையை நிலைநாட்டும்! அவர்கள் என்னைப் பார்த்துக் களிக்க இடமளியாதேயும்!
25 அவர்கள் தங்கள் இருதயத்திலே: ஆ ஆ, இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும், அவனை விழுங்கிவிட்டோம் என்று பேசாதபடிக்கும் செய்யும்.
25 Let them not say in their hearts, “Aha, just what we wanted!” Let them not say, “We have swallowed him up!”
25 அவர்கள் தங்கள் உள்ளத்தில் 'ஆம், நாம் விரும்பினது இதுவே' எனச் சொல்லாதபடி பாரும்! 'அவனை விழுங்கிவிட்டோம்' எனப் பேசிக்கொள்ளாதபடி பாரும்!
26 எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷிக்கிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, எனக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் இலச்சையாலும் மூடப்படக்கடவர்கள்.
26 May those who gloat in my distress be ashamed and confounded; may those who exalt themselves over me be clothed in shame and reproach.
26 எனக்கு நேரிட்ட தீங்கைப் பார்த்து மகிழ்ச்சி அடைவோர் எல்லாரும் கலக்கமுறட்டும்! என்னைவிடத் தம்மைச் சிறந்தோராய்க் கருதுவோர்க்கு வெட்கமும் மானக்கேடும் மேலாடை ஆகட்டும்!
27 என் நீதிவிளங்க விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழ்ந்து, தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமையுண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள்.
27 May those who favor my vindication shout for joy and gladness; may they always say, “Exalted be the LORD who delights in His servant’s well-being.”
27 என் நேர்மை நிலைநாட்டப்படுவதை விரும்புவார் ஆரவாரத்துடன் அக்களிக்கட்டும்; 'ஆண்டவர் எத்துணைப் பெரியவர்! அவர் தம் அடியாரின் நல்வாழ்வைக் காண விரும்புவோர்' என்று எப்பொழுதும் சொல்லட்டும்.
28 என் நாவு உமது நீதியையும், நாள்முழுதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.
28 Then my tongue will proclaim Your righteousness and Your praises all day long.
28 அப்பொழுது, என் நா உம் நீதியை எடுத்துரைத்து, நாள் முழுதும் உம் புகழ் பாடும்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
3 a Or and close the way
13 b Literally returned to my bosom
16 c Or Like a godless circle of mockers,
19 d See John 15:25.
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.