பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

John  யோவான்  Ἰωάννην

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

யோவான் 16 | John 16

Persecution Foretold (Acts 23:12–22)

1λελάληκα ὑμῖν Ταῦτα ἵνα μὴ σκανδαλισθῆτε

1 நீங்கள் இடறலடையாதபடிக்கு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
1 “I have told you these things so that you will not fall away.
1 "நீங்கள் நம்பிக்கை இழந்துவிடாதிருக்க இவற்றையெல்லாம் உங்களிடம் சொன்னேன்.

2ποιήσουσιν ὑμᾶς ἀποσυναγώγους ἀλλ’ ὥρα ἔρχεται ἵνα πᾶς ὁ ἀποκτείνας ὑμᾶς δόξῃ προσφέρειν λατρείαν τῷ Θεῷ

2 அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்.
2 They will put you out of the synagogues. In fact, a time is coming when anyone who kills you will think he is offering a service to God.
2 உங்களைத் தொழுகைக்கூடத்திலிருந்து விலக்கி வைப்பார்கள். உங்களைக் கொல்லுவோர் கடவுளுக்குத் திருப்பணி செய்வதாக எண்ணும் காலமும் வருகிறது.1

3καὶ ποιήσουσιν ταῦτα ὅτι ἔγνωσαν οὐκ τὸν Πατέρα οὐδὲ ἐμέ

3 அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள்.
3 They will do these things because they have not known the Father or Me.
3 தந்தையையும் என்னையும் அவர்கள் அறியாமல் இருப்பதால்தான் இவ்வாறு செய்வார்கள்.

4ἀλλὰ λελάληκα ὑμῖν ταῦτα ἵνα ὅταν αὐτῶν ἡ ὥρα ἔλθῃ μνημονεύητε ὅτι ἐγὼ εἶπον ὑμῖν αὐτῶν δὲ οὐκ εἶπον ὑμῖν ταῦτα ἐξ ἀρχῆς ὅτι ἤμην μεθ’ ὑμῶν

4 அந்தக் காலம் வரும்போது நான் இவைகளை உங்களுக்குச் சொன்னேனென்று நீங்கள் நினைக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்; நான் உங்களுடனேகூட இருந்தபடியினால் ஆரம்பத்திலே இவைகளை உங்களுக்குச் சொல்லவில்லை.
4 But I have told you these things so that when their hour comes, you will remember that I told you about them. I did not tell you these things from the beginning, because I was with you.
4 இவை நிகழும் நேரம் வரும்போது நான் உங்களுக்கு இவை பற்றி முன்பே சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இதற்காகவே இவற்றை உங்களிடம் கூறினேன்.""தொடக்கத்திலேயே நான் இவற்றை உங்களிடம் சொல்லவில்லை; ஏனெனில், நான் உங்களோடு இருந்தேன்.

The Promise of the Holy Spirit (John 14:15–26)

5Νῦν δὲ ὑπάγω πρὸς τὸν πέμψαντά με καὶ οὐδεὶς ἐξ ὑμῶν ἐρωτᾷ με Ποῦ ὑπάγεις

5 இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன்; எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை.
5 Now, however, I am going to Him who sent Me; yet none of you asks Me, ‘Where are You going?’
5 இப்போது என்னை அனுப்பியவரிடம் போகிறேன்; ஆனால், உங்களுள் எவரும் 'நீர் எங்கே போகிறீர்?' என்று என்னிடம் கேட்காமலேயே

6ἀλλ’ ὑμῶν τὴν καρδίαν πεπλήρωκεν ἡ λύπη ὅτι λελάληκα ὑμῖν ταῦτα

6 ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது.
6 Instead, your hearts are filled with sorrow because I have told you these things.
6 நான் சொன்னவற்றைக் குறித்து துயரத்தில் மூழ்கியுள்ளீர்கள்.

7ἀλλ’ ἐγὼ λέγω ὑμῖν τὴν ἀλήθειαν συμφέρει ὑμῖν ἵνα ἐγὼ ἀπέλθω γὰρ ἐὰν μὴ ἀπέλθω ὁ Παράκλητος οὐ μὴ ἔλθῃ πρὸς ὑμᾶς δὲ ἐὰν πορευθῶ πέμψω αὐτὸν πρὸς ὑμᾶς

7 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.
7 But I tell you the truth, it is for your benefit that I am going away. Unless I go away, the Advocatea will not come to you; but if I go, I will send Him to you.
7 நான் உங்களிடம் சொல்வது உண்மையே. நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்.

8Καὶ ἐλθὼν ἐκεῖνος ἐλέγξει τὸν κόσμον περὶ ἁμαρτίας καὶ περὶ δικαιοσύνης καὶ περὶ κρίσεως

8 அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
8 And when He comes, He will convict the world in regard to sin and righteousness and judgment:
8 அவர் வந்து பாவம், நீதி, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை என எடுத்துக்காட்டுவார்.

9περὶ ἁμαρτίας μέν ὅτι οὐ πιστεύουσιν εἰς ἐμέ

9 அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும்,
9 in regard to sin, because they do not believe in Me;
9 பாவம் பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் ,என்னிடம் அவர்கள் நம்பிக்கைக் கொள்ளவில்லை.

10δέ περὶ δικαιοσύνης ὅτι ὑπάγω πρὸς τὸν Πατέρα καὶ θεωρεῖτέ οὐκέτι με

10 நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும்,
10 in regard to righteousness, because I am going to the Father and you will no longer see Me;
10 நீதி பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில், நான் தந்தையிடம் செல்கிறேன்; நீங்களும் இனி என்னைக் காண மாட்டீர்கள்.

11δὲ περὶ κρίσεως ὅτι ὁ ἄρχων τούτου τοῦ κόσμου κέκριται

11 இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.
11 and in regard to judgment, because the prince of this world has been condemned.
11 தீர்ப்பு பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில், இவ்வுலகின் தலைவன் தண்டனை பெற்றுவிட்டான்.

12Ἔτι ἔχω πολλὰ λέγειν ὑμῖν ἀλλ’ οὐ δύνασθε ἄρτι βαστάζειν

12 இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.
12 I still have much to tell you, but you cannot yet bear to hear it.
12 "நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால், அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது.

13δὲ ὅταν ἐκεῖνος τὸ Πνεῦμα τῆς ἀληθείας ἔλθῃ ὁδηγήσει ὑμᾶς ἐν* πάσῃ* τῇ* ἀληθείᾳ* γὰρ οὐ λαλήσει ἀφ’ ἑαυτοῦ ἀλλ’ λαλήσει ὅσα ἀκούσει* καὶ ἀναγγελεῖ ὑμῖν τὰ ἐρχόμενα

13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
13 However, when the Spirit of truth comes, He will guide you into all truth. For He will not speak on His own, but He will speak what He hears, and He will declare to you what is to come.
13 உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.

14ἐκεῖνος δοξάσει ἐμὲ ὅτι λήμψεται ἐκ τοῦ ἐμοῦ καὶ ἀναγγελεῖ ὑμῖν

14 அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.
14 He will glorify Me by taking from what is Mine and disclosing it to you.
14 அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார்.

15πάντα ὅσα ἔχει ὁ Πατὴρ ἐστιν ἐμά διὰ τοῦτο εἶπον ὅτι λαμβάνει ἐκ τοῦ ἐμοῦ καὶ ἀναγγελεῖ ὑμῖν

15 பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.
15 Everything that belongs to the Father is Mine. That is why I said that the Spirit will take from what is Mine and disclose it to you.
15 தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் 'அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்' என்றேன்.

16Μικρὸν καὶ θεωρεῖτέ με οὐκέτι καὶ πάλιν μικρὸν καὶ ὄψεσθέ με

16 நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றார்.
16 In a little while you will see Me no more, and then after a little while you will see Me.”b
16 "இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்."

Grief Will Turn to Joy

17οὖν ἐκ αὐτοῦ τῶν μαθητῶν Εἶπαν πρὸς ἀλλήλους Τί ἐστιν τοῦτο ὃ λέγει ἡμῖν Μικρὸν καὶ οὐ θεωρεῖτέ με καὶ πάλιν μικρὸν καὶ ὄψεσθέ με καί Ὅτι ὑπάγω πρὸς τὸν Πατέρα

17 அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர்: நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள் என்றும், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றும் அவர் நம்முடனே சொல்லுகிறதின் கருத்தென்ன என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டதுமன்றி;
17 Then some of His disciples asked one another, “Why is He telling us, ‘In a little while you will not see Me, and then after a little while you will see Me’ and ‘Because I am going to the Father’?”
17 அப்போது அவருடைய சீடருள் சிலர், "'இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்' என்றும் 'நான் தந்தையிடம் செல்கிறேன்' என்றும் சொல்லுவதன் பொருள் என்ன?" என்று தங்களிடையே பேசிக்கொண்டனர்.

18οὖν ἔλεγον «τί ἐστιν» Τοῦτο ὃ λέγει Τὸ μικρόν οὐκ οἴδαμεν τί λαλεῖ

18 கொஞ்சக்காலம் என்கிறாரே, இதென்ன? அவர் சொல்லுகிறது இன்னதென்று நமக்கு விளங்கவில்லையே என்றார்கள்.
18 They kept asking, “Why is He saying, ‘a little while’? We do not understand what He is saying.”
18 "இந்தச் 'சிறிது காலம்' என்பது என்ன? அவர் பேசுவது நமக்குப் புரியவில்லையே" என்றும் பேசிக் கொண்டனர்.

19Ἰησοῦς Ἔγνω [ὁ] ὅτι ἤθελον ἐρωτᾶν αὐτὸν καὶ εἶπεν αὐτοῖς ζητεῖτε μετ’ ἀλλήλων Περὶ τούτου ὅτι εἶπον Μικρὸν καὶ οὐ θεωρεῖτέ με καὶ πάλιν μικρὸν καὶ ὄψεσθέ με

19 அதைக்குறித்துத் தம்மிடத்தில் கேட்கும்படி அவர்கள் விரும்புகிறதை இயேசு அறிந்து, அவர்களை நோக்கி: கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்று நான் சொன்னதைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே விசாரிக்கிறீர்களோ?
19 Aware that they wanted to question Him, Jesus said to them, “Are you asking one another why I said, ‘In a little while you will not see Me, and then after a little while you will see Me’?
19 அவர்கள் தம்மிடம் கேள்வி கேட்க விரும்பவதை அறிந்த இயேசு அவர்களிடம் கூறியது: "'இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்' என்று நான் சொன்னதைப் பற்றி உங்களிடையே சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

20ἀμὴν ἀμὴν λέγω ὑμῖν ὅτι ὑμεῖς κλαύσετε καὶ θρηνήσετε δὲ ὁ κόσμος χαρήσεται ὑμεῖς λυπηθήσεσθε ἀλλ’ ὑμῶν ἡ λύπη γενήσεται εἰς χαρὰν

20 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.
20 Truly, truly, I tell you, you will weep and wail while the world rejoices. You will grieve, but your grief will turn to joy.
20 உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால், உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.2

21ἡ γυνὴ ἔχει λύπην ὅταν τίκτῃ ὅτι αὐτῆς ἡ ὥρα ἦλθεν δὲ ὅταν γεννήσῃ τὸ παιδίον μνημονεύει οὐκέτι τῆς θλίψεως διὰ τὴν χαρὰν ὅτι ἄνθρωπος ἐγεννήθη εἰς τὸν κόσμον

21 ஸ்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள்.
21 A woman has pain in childbirth because her time has come; but when she brings forth her child, she forgets her anguish because of her joy that a child has been born into the world.
21 பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால், பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார்.3

22οὖν καὶ μὲν ὑμεῖς ἔχετε λύπην νῦν δὲ ὄψομαι ὑμᾶς πάλιν καὶ ὑμῶν ἡ καρδία χαρήσεται καὶ οὐδεὶς αἴρει ἀφ’ ὑμῶν ὑμῶν τὴν χαρὰν

22 அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்.
22 So also you have sorrow now, but I will see you again and your hearts will rejoice, and no one will take away your joy.
22 இப்போது நீங்களும் துயருறுகிறீர்கள். ஆனால், நான் உங்களை மீண்டும் காணும்போது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும். உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது.4

Ask in My Name (Matthew 18:19–20)

23Καὶ ἐν ἐκείνῃ τῇ ἡμέρᾳ ἐρωτήσετε ἐμὲ οὐκ οὐδέν ἀμὴν ἀμὴν λέγω ὑμῖν ἄν τι αἰτήσητε τὸν Πατέρα «ἐν μου» τῷ ὀνόματί «δώσει ὑμῖν»

23 அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்.
23 In that day you will no longer ask Me anything. Truly, truly, I tell you, whatever you ask the Father in My name, He will give you.
23 அந்நாளில் நீங்கள் என்னிடம் எதையும் கேட்கமாட்டீர்கள். நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.5

24ἕως ἄρτι ᾐτήσατε οὐκ οὐδὲν ἐν μου τῷ ὀνόματί αἰτεῖτε καὶ λήμψεσθε ἵνα ὑμῶν ἡ χαρὰ ᾖ πεπληρωμένη

24 இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.
24 Until now you have not asked for anything in My name. Ask and you will receive, so that your joy may be complete.
24 இதுவரை நீங்கள் என் பெயரால் எதையும் கேட்டதில்லை. கேளுங்கள்; பெற்றுக் கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும்.

25λελάληκα Ταῦτα ὑμῖν ἐν παροιμίαις ὥρα ἔρχεται ὅτε λαλήσω οὐκέτι ὑμῖν ἐν παροιμίαις ἀλλὰ ἀπαγγελῶ ὑμῖν παρρησίᾳ περὶ τοῦ Πατρὸς

25 இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன்.
25 I have spoken these things to you in figures of speech. An hour is coming when I will no longer speak to you this way, but will tell you plainly about the Father.
25 "நான் உங்களிடம் உருவகமாகவே பேசிவந்துள்ளேன். ஆனால், காலம் வருகிறது. அப்போது உருவகங்கள் வாயிலாய்ப் பேசாமல், தந்தையைப்பற்றி வெளிப்படையாய் எடுத்துரைப்பேன்.

26ἐν ἐκείνῃ τῇ ἡμέρᾳ αἰτήσεσθε ἐν μου τῷ ὀνόματί καὶ οὐ λέγω ὑμῖν ὅτι ἐγὼ ἐρωτήσω τὸν Πατέρα περὶ ὑμῶν

26 அந்த நாளில் நீங்கள் என் நாமத்தினாலே வேண்டிக்கொள்வீர்கள். உங்களுக்காகப் பிதாவை நான் கேட்டுக்கொள்வேனென்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை.
26 In that day you will ask in My name. I am not saying that I will ask the Father on your behalf.
26 அந்நாளில் நீங்கள் என் பெயரால் வேண்டுவீர்கள். அப்போது 'உங்களுக்காகத் தந்தையிடம் கேட்கிறேன்' என நான் சொல்லமாட்டேன்.

27γὰρ ὁ Πατὴρ αὐτὸς φιλεῖ ὑμᾶς ὅτι ὑμεῖς πεφιλήκατε ἐμὲ καὶ πεπιστεύκατε ὅτι ἐγὼ ἐξῆλθον παρὰ τοῦ Θεοῦ

27 நீங்கள் என்னைச் சிநேகித்து, நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால் பிதாதாமே உங்களைச் சிநேகிக்கிறார்.
27 For the Father Himself loves you, because you have loved Me and have believed that I came from God.c
27 ஏனெனில், தந்தையே உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார். நீங்கள் என்மீது அன்புகொண்டு, நான் கடவுளிடமிருந்து வந்தேன் என்று நம்புவதால்தான் தந்தையும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளார்.

28ἐξῆλθον ἐκ τοῦ Πατρὸς καὶ ἐλήλυθα εἰς τὸν κόσμον πάλιν ἀφίημι τὸν κόσμον καὶ πορεύομαι πρὸς τὸν Πατέρα

28 நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டு பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார்.
28 I came from the Father and entered the world. In turn, I will leave the world and go to the Father.”
28 நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன்."6

29αὐτοῦ οἱ μαθηταὶ Λέγουσιν Ἴδε νῦν λαλεῖς ἐν παρρησίᾳ καὶ οὐδεμίαν λέγεις παροιμίαν

29 அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: இதோ, இப்பொழுது நீர் உவமையாய்ப் பேசாமல், வெளிப்படையாய்ப் பேசுகிறீர்.
29 His disciples said, “See, now You are speaking plainly and without figures of speech.
29 இதைக் கேட்ட அவருடைய சீடர்கள், "இப்போதுதான் உருவகம் எதுவுமின்றி வெளிப்படையாகப் பேசுகிறீர்.

30νῦν οἴδαμεν ὅτι οἶδας πάντα καὶ ἔχεις οὐ χρείαν ἵνα τίς ἐρωτᾷ σε ἐν τούτῳ πιστεύομεν ὅτι ἐξῆλθες ἀπὸ Θεοῦ

30 நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், ஒருவன் உம்மை வினாவ வேண்டுவதில்லையென்றும், இப்பொழுது அறிந்திருக்கிறோம்; இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீரென்று விசுவாசிக்கிறோம் என்றார்கள்.
30 Now we understand that You know all things and that You have no need for anyone to question You. Because of this, we believe that You came from God.”
30 உமக்கு அனைத்தும் தெரியும். யாரும் உம்மிடம் கேள்வி கேட்கத் தேவையில்லை என்பது எங்களுக்கு இப்போது புரிகிறது. இதிலிருந்து நீர் கடவுளிடமிருந்து வந்தவர் என்பதை நம்புகிறோம்" என்றார்கள்.

31Ἄρτι πιστεύετε Ἰησοῦς Ἀπεκρίθη αὐτοῖς

31 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்கள்.
31 “Do you finally believe?” Jesus replied.
31 இயேசு அவர்களைப் பார்த்து, "இப்போது நம்புகிறீர்களா!

32ἰδοὺ ὥρα ἔρχεται καὶ ἐλήλυθεν ἵνα σκορπισθῆτε ἕκαστος εἰς τὰ ἴδια ἀφῆτε κἀμὲ μόνον καὶ εἰμὶ οὐκ μόνος ὅτι ὁ Πατὴρ ἐστιν μετ’ ἐμοῦ

32 இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்.
32 “Look, an hour is coming and has already come when you will be scattered, each to his own home, and you will leave Me all alone. Yet I am not alone, because the Father is with Me.
32 இதோ! காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது. அப்போது நீங்கள் சிதறடிக்கப்பட்டு ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள்; என்னைத் தனியே விட்டு விடுவீர்கள். ஆயினும், நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை என்னோடு இருக்கிறார்.7

33λελάληκα ὑμῖν ταῦτα ἵνα ἐν ἐμοὶ ἔχητε εἰρήνην ἐν τῷ κόσμῳ ἔχετε θλῖψιν ἀλλὰ θαρσεῖτε ἐγὼ νενίκηκα τὸν κόσμον

33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
33 I have told you these things so that in Me you may have peace. In the world you will have tribulation. But take courage; I have overcome the world!”
33 என் வழியாய் நீங்கள் அமைதி காணும் பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்" என்றார்.8


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

John Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

Footnotes:
7 a Or Comforter  or Helper  or Counselor ; Greek Paraclete
16 b BYZ and TR include because I go away to the Father.
27 c WH from the Father

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.