பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Psalms சங்கீதம் תְהִלִּים
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 அடுத்தது >
(பென்யமீனியனாகிய கூஷ் என்பவனுடைய வார்த்தைகளினிமித்தம் தாவீது கர்த்தரை நோக்கிப் பாடின சிகாயோன் என்னும் சங்கீதம்.)
சங்கீதம் 7 | Psalms 7
I Take Refuge in You
A Shiggaion a of David, which he sang to the LORD concerning the words of Cush, a Benjamite.
1 என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும்.
1 A Shiggaion of David, which he sang to the LORD concerning the words of Cush, a Benjamite. O LORD my God, I take refuge in You; save me and deliver me from all my pursuers,
1 என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன்; என்னைத் துரத்துவோர் அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றித் தப்புவியும்.
2 சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாமையால். அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்.
2 or they will shred my soul like a lion and tear me to pieces with no one to rescue me.
2 இல்லையெனில், என் எதிரிகள் சிங்கம்போல § என்னைப் பீறிக் கிழித்துப் போடுவார்கள்; விடுவிப்போர் எவரும் இரார்.
3 என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், என் கைகளில் நியாயக்கேடிருக்கிறதும்,
3 O LORD my God, if I have done this, if injustice is on my hands,
3 என் கடவுளாகிய ஆண்டவரே, நான் இவற்றைச் செய்திருந்தால் – என் கை தவறிழைத்திருந்தால்,
4 என்னோடே சமாதானமாயிருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், காரணமில்லாமல் எனக்குச் சத்துருவானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால்,
4 if I have rewarded my allyb with evil, if I have plundered my foe without cause,
4 என்னோடு நல்லுறவு கொண்டிருந்தவனுக்கு நான் தீங்கிழைத்திருந்தால், என் பகைவனைக் காரணமின்றிக் காட்டிக்கொடுத்திருந்தால் –
5 பகைஞன் என் ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து, என் பிராணனைத் தரையிலே தள்ளி மிதித்து, என் மகிமையைத் தூளிலே தாழ்த்தக்கடவன்.(சேலா.)
5 then may my enemy pursue me and overtake me; may he trample me to the ground and leave my honor in the dust. Selah
5 எதிரி என்னைத் துரத்திப் பிடிக்கட்டும்; என்னைத் தரையில் தள்ளி மிதித்து நசுக்கட்டும்; என் பெருமையைப் புழுதியில் புதைக்கட்டும். (சேலா)
6 கர்த்தாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என் சத்துருக்களுடைய மூர்க்கங்களினிமித்தம் உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே.
6 Arise, O LORD, in Your anger; rise up against the fury of my enemies. Awake, my God, and ordain judgment.
6 ஆண்டவரே, சினங்கொண்டு எழுந்தருளும்; என் பகைவரின் சீற்றத்தை அடக்க வாரும்; எனக்காக விழித்தெழும்; ஏனெனில், நீதியை நிலைநாட்டுபவர் நீர் ஒருவரே.
7 ஜனக்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளும்; அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும்.
7 Let the assembled peoples gather around You; take Your seat over them on high.
7 எல்லா இனத்தாரும் ஒன்றுகூடி உம்மைச் சூழச் செய்யும்; அவர்கள்மீது உயரத்தினின்று ஆட்சி செலுத்தும்.
8 கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ்செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்.
8 The LORD judges the peoples; vindicate me, O LORD, according to my righteousness and integrity.
8 ஆண்டவரே, நீரே மக்களினத்தார் அனைவருக்கும் நீதி வழங்குபவர்; ஆண்டவரே, என் நேர்மைக்கும் வாய்மைக்கும் ஏற்ப எனக்குத் தீர்ப்பளியும்.
9 துன்மார்க்கனுடைய பொல்லாங்கை ஒழியப்பண்ணும்; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர்.
9 Put an end to the evil of the wicked, but establish the righteous, O righteous God who searches hearts and minds.c
9 பொல்லாரின் தீமையை முடிவுக்குக் கொண்டுவாரும்; நல்லாரை நிலைநிறுத்தும்; நீர் எண்ணங்களையும் விருப்பங்களையும் கண்டறிபவர்; நீதி அருளும் கடவுள்.*
* திவெ 2:23.
10 செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என்கேடகம் இருக்கிறது.
10 My shield is with God, who saves the upright in heart.
10 கடவுளே என் கேடயம்; நேரிய உளத்தோரை அவர் விடுவிப்பார்.
11 தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.
11 God is a righteous judge and a God who feels indignation each day.
11 கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி; நாள்தோறும் அநீதியைப் பொறுத்துக் கொள்ளாத இறைவன்.
12 அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.
12 If one does not repent, God will sharpen His sword; He has bent and strung His bow.
12 பொல்லார் மனமாற்றம் அடையாவிடில், அவர் தம் வாளைக் கூர்மையாக்குவார்; வில்லை நாணேற்றி ஆயத்தம் செய்வார்.
13 அவனுக்கு மரணாயுதங்களை ஆயத்தம்பண்ணினார்; தம்முடைய அம்புகளை அக்கினி அம்புகளாக்கினார்.
13 He has prepared His deadly weapons; He ordains His arrows with fire.
13 கொலைக் கருவிகளை ஆயத்தமாக்குவார்; அம்புகளை அனல் பறக்கும்படி எய்வார்;
14 இதோ, அவன் அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப்பெறுகிறான்.
14 Behold, the wicked man travails with evil; he conceives trouble and births falsehood.
14 ஏனெனில், பொல்லார் கொடுமையைக் கருக்கொள்கின்றனர்; அவர்கள் தீவினையைக் கருத்தாங்கி, பொய்மையைப் பெற்றெடுக்கின்றனர்.
15 குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.
15 He has dug a hole and hollowed it out; he has fallen into a pit of his own making.
15 அவர்கள் குழியை வெட்டி ஆழமாகத் தோண்டுகின்றனர்; அவர்கள் வெட்டிய குழியில் அவர்களே விழுகின்றனர்;
16 அவன் தீவினை அவன் சிரசின்மேல் திரும்பும், அவன் கொடுமை அவன் உச்சந்தலையின்மேல் இறங்கும்.
16 His trouble recoils on himself, and his violence falls on his own head.
16 அவர்கள் செய்த கேடு அவர்கள் தலைக்கே திரும்பும். அவர்கள் செய்த கொடுமை அவர்கள் உச்சந்தலையிலேயே விழும்.
17 நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதித்து, உன்னதமான கர்த்தருடைய நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்.
17 I will thank the LORD for His righteousness and sing praise to the name of the LORD Most High.
17 ஆண்டவர் வழங்கிய நீதிக்காக அவருக்கு நன்றி கூறுவேன்; உன்னதரான ஆண்டவரின் பெயரைப் போற்றிப் பாடுவேன்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a Shiggaion is probably a musical or liturgical term.
4 b Hebrew the one at peace with me
9 c Hebrew hearts and kidneys
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.