பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

1 Chronicles  1 நாளாகமம்  דִבְרֵי הַיָמִים א

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29

1 நாளாகமம் 23 | 1 Chronicles 23

The Divisions of the Levites

1וְדָוִ֥יד זָקֵ֖ן וְשָׂבַ֣ע יָמִ֑ים וַיַּמְלֵ֛ךְ אֶת־שְׁלֹמֹ֥ה בְנ֖וֹ עַל־יִשְׂרָאֵֽל׃

1 தாவீது கிழவனும் பூரண வயதுள்ளவனுமானபோது, தன் குமாரனாகிய சாலொமோனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினான்.
1 When David was old and full of years, he installed his son Solomon as king over Israel.
1 தாவீது வயது முதிர்ந்து கிழவரான போது, தம் மகன் சாலமோனை இஸ்ரயேலுக்கு அரசனாக்கினார்.1

2וַיֶּאֱסֹף֙ אֶת־כָּל־שָׂרֵ֣י יִשְׂרָאֵ֔ל וְהַכֹּהֲנִ֖ים וְהַלְוִיִּֽם׃

2 இஸ்ரவேலின் எல்லாப் பிரபுக்களையும், ஆசாரியரையும், லேவியரையும் கூடிவரும்படி செய்தான்.
2 Then he gathered all the leaders of Israel, as well as the priests and Levites.
2 அவர் இஸ்ரயேலின் எல்லாத் தலைவர்களையும், குருக்களையும் லேவிரையும் ஒன்றுகூட்டினார்.

3וַיִּסָּֽפְרוּ֙ הַלְוִיִּ֔ם מִבֶּ֛ן שְׁלֹשִׁ֥ים שָׁנָ֖ה וָמָ֑עְלָה וַיְהִ֨י מִסְפָּרָ֤ם לְגֻלְגְּלֹתָם֙ לִגְבָרִ֔ים שְׁלֹשִׁ֥ים וּשְׁמוֹנָ֖ה אָֽלֶף׃

3 அப்பொழுது முப்பது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர் பேர்பேராக எண்ணப்பட்டார்கள், தலைதலையாக எண்ணப்பட்ட அவர்களுடைய இலக்கம் முப்பத்தெண்ணாயிரம்.
3 The Levites thirty years of age or older were counted, and the total number of men was 38,000.
3 லேவியருள் முப்பதும் அதற்கு மேற்பட்ட வயதினரும் எண்ணப்பட்டனர். அவர்கள் மொத்தம் முப்பத்து எட்டாயிரம் ஆண்கள்.

4מֵאֵ֗לֶּה לְנַצֵּ֙חַ֙ עַל־מְלֶ֣אכֶת בֵּית־יְהוָ֔ה עֶשְׂרִ֥ים וְאַרְבָּעָ֖ה אָ֑לֶף וְשֹׁטְרִ֥ים וְשֹׁפְטִ֖ים שֵׁ֥שֶׁת אֲלָפִֽים׃

4 அவர்களில் இருபத்துநாலாயிரம்பேர் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களும், ஆறாயிரம்பேர் தலைவரும் மணியகாரருமாயிருக்கவேண்டும் என்றும்,
4 “Of these,” said David, “24,000 are to oversee the work of the house of the LORD, 6,000 are to be officers and judges,
4 அவர்களுள் இருபத்து நாலாயிரம் பேரை ஆண்டவரின் இல்லப் பணிகளுக்குப் பொறுப்பாளராகவும், ஆறாயிரம் பேரை அலுவலர், நீதிபதிகளாகவும்,

5וְאַרְבַּ֥עַת אֲלָפִ֖ים שֹׁעֲרִ֑ים וְאַרְבַּ֤עַת אֲלָפִים֙ מְהַֽלְלִ֣ים לַיהוָ֔ה בַּכֵּלִ֕ים אֲשֶׁ֥ר עָשִׂ֖יתִי לְהַלֵּֽל׃

5 நாலாயிரம்பேர் வாசல் காக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும், துதிசெய்கிறதற்குத் தான் பண்ணுவித்த கீதவாத்தியங்களால் நாலாயிரம்பேர் கர்த்தரைத் துதிக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும் தாவீது சொல்லி,
5 4,000 are to be gatekeepers, and 4,000 are to praise the LORD with the instruments I have made for giving praise.”
5 நாலாயிரம் பேரை வாயில்காப்போராகவும், நாலாயிரம் பேரை ஆண்டவரைப் புகழ்வதற்காகத் தாம் செய்து வைத்திருந்த இசைக்கருவிகளுடன் புகழ் பாடுவோராகவும் நியமித்தார்.

6וַיֶּֽחָלְקֵ֥ם דָּוִ֖יד מַחְלְק֑וֹת לִבְנֵ֣י לֵוִ֔י לְגֵרְשׁ֖וֹן קְהָ֥ת וּמְרָרִֽי׃

6 அவர்களை லேவியின் குமாரராகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய வகுப்புகளின்படி வகுத்தான்.
6 Then David divided the Levites into divisions according to the sons of Levi: Gershom, Kohath, and Merari.
6 தாவீது அவர்களை லேவிய மக்களான கேர்சோன், கோகாத்து, மெராரி என்னும் குடும்பங்களின்படி பிரித்தார்:

The Gershonites (Numbers 3:21–26; Numbers 4:21–28)

7לַגֵּרְשֻׁנִּ֖י לַעְדָּ֥ן וְשִׁמְעִֽי׃

7 கெர்சோனியரில், லாதானும், சிமேயும் இருந்தார்கள்.
7 The Gershonites: Ladan and Shimei.
7 கேர்சோனியரில் இலாதானும் சிமயியும்;

8בְּנֵ֣י לַעְדָּ֗ן הָרֹ֧אשׁ יְחִיאֵ֛ל וְזֵתָ֥ם וְיוֹאֵ֖ל שְׁלֹשָֽׁה׃

8 லாதானின் குமாரர், யெகியேல், சேத்தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைமையாயிருந்தான்.
8 The sons of Ladan: Jehiel the first, Zetham, and Joel—three in all.
8 இலாதானின் புதல்வர்: தலைவரான எகியேல், சேத்தாம், யோவேல் ஆகிய மூவர்;

9בְּנֵ֣י שִׁמְעִ֗י שלמות וַחֲזִיאֵ֛ל וְהָרָ֖ן שְׁלֹשָׁ֑ה אֵ֛לֶּה רָאשֵׁ֥י הָאָב֖וֹת לְלַעְדָּֽן׃

9 சிமேயின் குமாரர், செலோமித், ஆசியேல், ஆரான் என்னும் மூன்றுபேர்; இவர்கள் லாதான் வம்சப் பிதாக்களில் தலைமையாயிருந்தார்கள்.
9 The sons of Shimei: Shelomoth, Haziel, and Haran—three in all. These were the heads of the families of Ladan.
9 சிமயின் புதல்வர்: செலமோத்து, அசியேல், ஆரான், ஆகிய மூவர். இவர்கள் இலாதானின் மூதாதையரில் தலைவர்கள்.

10וּבְנֵ֣י שִׁמְעִ֔י יַ֣חַת זִינָ֔א וִיע֖וּשׁ וּבְרִיעָ֑ה אֵ֥לֶּה בְנֵי־שִׁמְעִ֖י אַרְבָּעָֽה׃

10 யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்னும் நாலுபேரும் சிமேயின் குமாரராயிருந்தார்கள்.
10 And the sons of Shimei: Jahath, Zina, Jeush, and Beriah. These were the sons of Shimei—four in all.
10 சிமயின் புதல்வர்: யாகாத்து, சீனா, எயூசு, பெரியா இந்த நால்வர் சிமயியின் புதல்வர்.

11וַֽיְהִי־יַ֣חַת הָרֹ֔אשׁ וְזִיזָ֖ה הַשֵּׁנִ֑י וִיע֤וּשׁ וּבְרִיעָה֙ לֹֽא־הִרְבּ֣וּ בָנִ֔ים וַיִּֽהְיוּ֙ לְבֵ֣ית אָ֔ב לִפְקֻדָּ֖ה אֶחָֽת׃

11 யாகாத் தலைமையாயிருந்தான்; சீனா இரண்டாம் குமாரனாயிருந்தான்; எயூஷுக்கும் பெரீயாவுக்கும் அநேகம் குமாரர் இராதபடியினால், அவர்கள் பிதாக்களின் குடும்பத்தாரில் ஒரே வம்சமாக எண்ணப்பட்டார்கள்.
11 Jahath was the first and Zizah was the second; but Jeush and Beriah did not have many sons, so they were counted as one family and received a single assignment.
11 இவர்களுள் யாகாத்து மூத்தவர், சீசா இரண்டாம் மகன், எயூசுக்கும் பெரியாவுக்கும் புதல்வர் பலர் இல்லாததால், ஒரே மூதாதையரின் குடும்பத்தினராய்க் கணக்கிடப்பட்டனர்.

The Kohathites (Numbers 3:27–32; Numbers 4:1–20)

12בְּנֵ֣י קְהָ֗ת עַמְרָ֥ם יִצְהָ֛ר חֶבְר֥וֹן וְעֻזִּיאֵ֖ל אַרְבָּעָֽה׃

12 கோகாத்தின் குமாரர் அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்னும் நாலுபேர்.
12 The sons of Kohath: Amram, Izhar, Hebron, and Uzziel—four in all.
12 கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல் ஆகிய நால்வர்.

13בְּנֵ֥י עַמְרָ֖ם אַהֲרֹ֣ן וּמֹשֶׁ֑ה וַיִּבָּדֵ֣ל אַהֲרֹ֡ן לְֽהַקְדִּישׁוֹ֩ קֹ֨דֶשׁ קָֽדָשִׁ֤ים הֽוּא־וּבָנָיו֙ עַד־עוֹלָ֔ם לְהַקְטִיר֩ לִפְנֵ֨י יְהוָ֧ה לְשָׁרְת֛וֹ וּלְבָרֵ֥ךְ בִּשְׁמ֖וֹ עַד־עוֹלָֽם׃

13 அம்ராமின் குமாரர், ஆரோன், மோசே என்பவர்கள்; ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்தத்திற்குப் பரிசுத்தமான ஸ்தலத்தை என்றைக்கும் பரிசுத்தமாய்க் காக்கிறதற்கும், என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக தூபங்காட்டுகிறதற்கும், அவருக்கு ஆராதனை செய்கிறதற்கும், அவர் நாமத்திலே ஆசீர்வாதம் கொடுக்கிறதற்கும் பிரித்துவைக்கப்பட்டார்கள்.
13 The sons of Amram: Aaron and Moses. Aaron and his descendants were set apart forever to consecrate the most holy things, to burn incense before the LORD, to minister before Him, and to pronounce blessings in His name forever.
13 அம்ராமின் புதல்வர்: ஆரோன், மோசே. ஆரோனும் அவர் புதல்வரும் திருத்தூயகத்தை என்றும் புனிதமாய்க் காக்கவும், என்றென்றும் ஆண்டவருக்கு முன்பாகத் தூபங்காட்டவும், அவர்தம் திருமுன் பணிசெய்யவும், அவர் பெயரால் ஆசி வழங்கவும், அர்ப்பணிக்கப்பட்டனர்.2

14וּמֹשֶׁ֖ה אִ֣ישׁ הָאֱלֹהִ֑ים בָּנָ֕יו יִקָּרְא֖וּ עַל־שֵׁ֥בֶט הַלֵּוִֽי׃

14 தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் குமாரரோவெனில், லேவிகோத்திரத்தாருக்குள் எண்ணப்பட்டார்கள்.
14 As for Moses the man of God, his sons were named among the tribe of Levi.
14 கடவுளின் அடியவரான மோசேயின் புதல்வரும் லேவி குலத்தாரோடு சேர்த்துக் கணக்கிடப்பட்டனர்.

15בְּנֵ֣י מֹשֶׁ֔ה גֵּרְשֹׁ֖ם וֶאֱלִיעֶֽזֶר׃

15 மோசேயின் குமாரர், கெர்சோம், எலியேசர் என்பவர்கள்.
15 The sons of Moses: Gershom and Eliezer.
15 மோசேயின் புதல்வர்: கெர்சோம், எலியேசர்,

16בְּנֵ֥י גֵרְשׁ֖וֹם שְׁבוּאֵ֥ל הָרֹֽאשׁ׃

16 கெர்சோமின் குமாரரில் செபுவேல் தலைமையாயிருந்தான்.
16 The descendants of Gershom: Shebuel was the first.
16 கெர்சோமின் புதல்வருள் செபுயேல் தலைவராய் இருந்தார்.

17וַיִּֽהְי֥וּ בְנֵי־אֱלִיעֶ֖זֶר רְחַבְיָ֣ה הָרֹ֑אשׁ וְלֹא־הָיָ֤ה לֶאֱלִיעֶ֙זֶר֙ בָּנִ֣ים אֲחֵרִ֔ים וּבְנֵ֥י רְחַבְיָ֖ה רָב֥וּ לְמָֽעְלָה׃

17 எலியேசருடைய குமாரரில் ரெகபியா என்னும் அவன் குமாரன் தலைமையாயிருந்தான்: எலியேசருக்கு வேறே குமாரர் இல்லை, ரெகபியாவின் குமாரர் அநேகராயிருந்தார்கள்.
17 The descendants of Eliezer: Rehabiah was the first. Eliezer did not have any other sons, but the sons of Rehabiah were very numerous.
17 எலியேசர் புதல்வருள் இரகபியா தலைவராய் இருந்தார். எலியேசருக்கு வேறு புதல்வர் இல்லை. ஆனால், இரகபியாவுக்குப் புதல்வர் பலர் இருந்தனர்.

18בְּנֵ֥י יִצְהָ֖ר שְׁלֹמִ֥ית הָרֹֽאשׁ׃

18 இத்சேரின் குமாரரில் செலோமித் தலைமையாயிருந்தான்.
18 The sons of Izhar: Shelomith was the first.
18 இட்சகார் புதல்வருள் செலோமித்து தலைவராய் இருந்தார்.

19בְּנֵ֖י חֶבְר֑וֹן יְרִיָּ֤הוּ הָרֹאשׁ֙ אֲמַרְיָ֣ה הַשֵּׁנִ֔י יַחֲזִיאֵל֙ הַשְּׁלִישִׁ֔י וִֽיקַמְעָ֖ם הָרְבִיעִֽי׃

19 எப்ரோனின் குமாரரில் எரியா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல் நாலாவது எக்காமியாம்.
19 The sons of Hebron: Jeriah was the first, Amariah the second, Jahaziel the third, and Jekameam the fourth.
19 எப்ரோன் புதல்வர்: தலைவரான எரிய்யா, இரண்டாமவர் அமரியா, மூன்றாமவர் யாகசியேல், நான்காமவர் எக்கமயாம்.

20בְּנֵ֖י עֻזִּיאֵ֑ל מִיכָ֣ה הָרֹ֔אשׁ וְיִשִּׁיָּ֖ה הַשֵּׁנִֽי׃

20 ஊசியேலின் குமாரரில் மீகா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது இஷியா.
20 The sons of Uzziel: Micah was the first and Isshiah the second.
20 உசியேல் புதல்வர்: தலைவரான மீக்கா, இரண்டாமவர் இசியா.

The Merarites (Numbers 3:33–37; Numbers 4:29–33)

21בְּנֵ֤י מְרָרִי֙ מַחְלִ֣י וּמוּשִׁ֔י בְּנֵ֥י מַחְלִ֖י אֶלְעָזָ֥ר וְקִֽישׁ׃

21 மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; மகேலியின் குமாரர், எலெயாசார், கீஸ் என்பவர்கள்.
21 The sons of Merari: Mahli and Mushi. The sons of Mahli: Eleazar and Kish.
21 மெராரியின் புதல்வர்: மக்லி, மூசி, மக்லியின் புதல்வர்: எலயாசர், கீஸ்.

22וַיָּ֙מָת֙ אֶלְעָזָ֔ר וְלֹא־הָ֥יוּ ל֛וֹ בָּנִ֖ים כִּ֣י אִם־בָּנ֑וֹת וַיִּשָּׂא֥וּם בְּנֵי־קִ֖ישׁ אֲחֵיהֶֽם׃

22 எலெயாசார் மரிக்கிறபோது, அவனுக்குக் குமாரத்திகளே அல்லாமல் குமாரர் இல்லை; கீசின் குமாரராகிய இவர்களுடைய சகோதரர் இவர்களை விவாகம்பண்ணினார்கள்.
22 Eleazar died without having any sons; he had only daughters. Their cousins, the sons of Kish, married them.
22 எலயாசர் இறந்தபோது அவருக்குப் புதல்வியரேயன்றிப் புதல்வர் எவரும் இல்லை. அவர் சகோதரராகிய கீசின் புதல்வர் அவர்களை மணந்து கொண்டனர்.

23בְּנֵ֣י מוּשִׁ֗י מַחְלִ֥י וְעֵ֛דֶר וִירֵמ֖וֹת שְׁלֹשָֽׁה׃

23 மூசியின் குமாரர், மகலி, ஏதேர், எரேமோக் என்னும் மூன்றுபேர்.
23 The sons of Mushi: Mahli, Eder, and Jeremoth—three in all.
23 மூசியின் புதல்வர் மக்லி, ஏதேர், எரேமோத்து ஆகிய மூவர்.

Levite Duties Revised

24אֵ֣לֶּה בְנֵֽי־לֵוִי֩ לְבֵ֨ית אֲבֹתֵיהֶ֜ם רָאשֵׁ֧י הָאָב֣וֹת לִפְקוּדֵיהֶ֗ם בְּמִסְפַּ֤ר שֵׁמוֹת֙ לְגֻלְגְּלֹתָ֔ם עֹשֵׂה֙ הַמְּלָאכָ֔ה לַעֲבֹדַ֖ת בֵּ֣ית יְהוָ֑ה מִבֶּ֛ן עֶשְׂרִ֥ים שָׁנָ֖ה וָמָֽעְלָה׃

24 தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே, பிதாக்களில் தலைமையாயிருந்த லேவி புத்திரரின் பேர்டாப்பின்படியே, தலைதலையாக எண்ணப்பட்ட இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இவர்களுடைய சந்ததியார் கர்த்தருடைய ஆலயத்துப் பணிவிடையைச் செய்தார்கள்.
24 These were the descendants of Levi by their families—the heads of families, registered individually by name—those twenty years of age or older who worked in the service of the house of the LORD.
24 தங்கள் மூதாதையரின் குலங்களின்படியே, மூதாதையர் குடும்பத் தலைவர்களாய் இருந்த லேவியரின் புதல்வர் இவர்களே. இவர்கள் இருபதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்கள். தனித்தனியே நபர்களின் பெயர்களின் எண் வரிசைப்படியே பதிவு செய்யப்பட்டு ஆண்டவரின் திருக்கோவிலின் பணியோடு தொடர்புகொண்ட வேலைகளைச் செய்யவேண்டியவர்கள்.

25כִּ֚י אָמַ֣ר דָּוִ֔יד הֵנִ֛יחַ יְהוָ֥ה אֱלֹהֵֽי־יִשְׂרָאֵ֖ל לְעַמּ֑וֹ וַיִּשְׁכֹּ֥ן בִּירוּשָׁלַ֖͏ִם עַד־לְעוֹלָֽם׃

25 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை இளைப்பாறியிருக்கப்பண்ணினார்; அவர் என்றென்றைக்கும் எருசலேமில் வாசம்பண்ணுவாரென்றும்,
25 For David had said, “The LORD, the God of Israel, has given rest to His people and has come to dwell in Jerusalem forever.
25 ஏனெனில், "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி தந்து, எருசலேமில் என்றும் குடியிருக்கிறார்.

26וְגַ֖ם לַלְוִיִּ֑ם אֵין־לָשֵׂ֧את אֶת־הַמִּשְׁכָּ֛ן וְאֶת־כָּל־כֵּלָ֖יו לַעֲבֹדָתֽוֹ׃

26 இனி லேவியர் வாசஸ்தலத்தையாகிலும் அதின் ஊழியத்திற்கடுத்த அதின் பணிமுட்டுகளில் எதையாகிலும் சுமக்கத்தேவையில்லை என்றும்,
26 So now the Levites no longer need to carry the tabernacle or any of the articles for its service.”
26 அதுவுமன்றி, லேவியர் திருக்கூடாரத்தையும் வழிபாட்டுக்கான அனைத்துக் கலங்களையும் இனிச் சுமக்க வேண்டுவதில்லை" என்று தாவீது கூறினார்.3

27כִּ֣י בְדִבְרֵ֤י דָוִיד֙ הָאַ֣חֲרֹנִ֔ים הֵ֖מָּה מִסְפַּ֣ר בְּנֵי־לֵוִ֑י מִבֶּ֛ן עֶשְׂרִ֥ים שָׁנָ֖ה וּלְמָֽעְלָה׃

27 தாவீது அவர்களைக் குறித்துச்சொன்ன கடைசி வார்த்தைகளின்படியே, லேவி புத்திரரில் தொகைக்குட்பட்டவர்கள் இருபதுவயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாயிருந்தார்கள்.
27 For according to the final instructions of David, the Levites twenty years of age or older were counted,
27 தாவீதின் இறுதிச் சொற்களின்படி லேவியருள் இருபதும் அதற்கு மேற்பட்ட வயதினர் யாவரும் பதிவு செய்யப்பட்டனர்.

28כִּ֣י מַעֲמָדָ֞ם לְיַד־בְּנֵ֣י אַהֲרֹ֗ן לַעֲבֹדַת֙ בֵּ֣ית יְהוָ֔ה עַל־הַחֲצֵרוֹת֙ וְעַל־הַלְּשָׁכ֔וֹת וְעַֽל־טָהֳרַ֖ת לְכָל־קֹ֑דֶשׁ וּמֽ͏ַעֲשֵׂ֔ה עֲבֹדַ֖ת בֵּ֥ית הָאֱלֹהִֽים׃

28 அவர்கள் ஆரோனுடைய குமாரரின் கீழ்க் கர்த்தருடைய ஆலயத்தின் ஊழியமாய் நின்று, பிராகாரங்களையும், அறைகளையும், சகல பரிசுத்த பணிமுட்டுகளின் சுத்திகரிப்பையும், தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்கடுத்த வேலையையும் விசாரிப்பதும்,
28 but their duty was to assist the descendants of Aaron with the service of the house of the LORD, being responsible for the courts and chambers, the purification of all the holy things, and the work of the service of the house of God,
28 அவர்கள், ஆண்டவரின் இல்லப்பணியில் ஆரோனின் புதல்வரின்கீழ் வேலை செய்யவும், முற்றங்களையும் உள்ளறைகளையும் புனிதக் கலங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்தவும், கோவிலில் எவ்வகைப் பணியையும் செய்யவும் வேண்டும்;

29וּלְלֶ֨חֶם הַֽמַּעֲרֶ֜כֶת וּלְסֹ֤לֶת לְמִנְחָה֙ וְלִרְקִיקֵ֣י הַמַּצּ֔וֹת וְלַֽמַּחֲבַ֖ת וְלַמֻּרְבָּ֑כֶת וּלְכָל־מְשׂוּרָ֖ה וּמִדָּֽה׃

29 சமுகத்தப்பங்களையும், போஜனபலிக்கு மெல்லிய மாவையும், புளிப்பில்லாத அதிரசங்களையும், சட்டிகளிலே செய்கிறதையும் சுடுகிறதையும், திட்டமான சகல நிறையையும் அளவையும் விசாரிப்பதும்,
29 as well as for the rows of the showbread, the fine flour for the grain offering, the wafers of unleavened bread, the baking, the mixing, and all measurements of quantity and size.
29 திருமுன்னிலை அப்பங்கள், உணவுப்பலிக்கான மிருதுவான மாவு, புளிப்பற்ற அப்பம், சட்டிகளில் சுட்ட, பொரித்த அடைகள் ஆகியவற்றைத் தயாரித்து, அவற்றின் எடையையும் அளவையும் கணக்கிடுதல் வேண்டும்.

30וְלַעֲמֹד֙ בַּבֹּ֣קֶר בַּבֹּ֔קֶר לְהֹד֥וֹת וּלְהַלֵּ֖ל לַיהוָ֑ה וְכֵ֖ן לָעָֽרֶב׃

30 நாள்தோறும் காலையிலும் மாலையிலும் கர்த்தரைப் போற்றித் துதித்து, ஓய்வுநாட்களிலும், அமாவாசைகளிலும், பண்டிகைகளிலும், கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகள் செலுத்தப்படுகிற சகல வேளைகளிலும்,
30 They were also to stand every morning to give thanks and praise to the LORD, and likewise in the evening.
30 ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் ஆண்டவருக்கு நன்றி கூறவும் அவரைப் போற்றவும் வேண்டும்;

31וּלְכֹ֨ל הַעֲל֤וֹת עֹלוֹת֙ לַיהוָ֔ה לַשַּׁבָּת֔וֹת לֶחֳדָשִׁ֖ים וְלַמֹּעֲדִ֑ים בְּמִסְפָּ֨ר כְּמִשְׁפָּ֧ט עֲלֵיהֶ֛ם תָּמִ֖יד לִפְנֵ֥י יְהוָֽה׃

31 இலக்கத்திற்குள்ளான அவர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்டபடியே, எப்பொழுதும் அந்தப் பிரகாரமாய்ச் செய்ய, கர்த்தருக்கு முன்பாக நிற்பதும்,
31 Whenever burnt offerings were presented to the LORD on the Sabbaths, New Moons, and appointed feasts, they were to serve regularly before the LORD in the numbers prescribed for them.
31 அத்தோடு ஓய்வு நாள்களிலும் அமாவாசை நாள்களிலும் மற்றைய விழாக்களிலும் ஆண்டவருக்கு எரிபலி செலுத்தும்போது எண்ணிக்கைப்படியும் பிரிவுகளின்படியும் ஆண்டவர் முன் எப்போதும் நிற்கவேண்டும்.

32וְשָׁמְר֞וּ אֶת־מִשְׁמֶ֣רֶת אֹֽהֶל־מוֹעֵ֗ד וְאֵת֙ מִשְׁמֶ֣רֶת הַקֹּ֔דֶשׁ וּמִשְׁמֶ֕רֶת בְּנֵ֥י אַהֲרֹ֖ן אֲחֵיהֶ֑ם לַעֲבֹדַ֖ת בֵּ֥ית יְהוָֽה׃

32 ஆசரிப்புக் கூடாரத்தின் காவலையும் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும் தங்கள் சகோதரராகிய ஆரோனுடைய குமாரரின் காவலையும் காப்பதும், கர்த்தருடைய ஆலயத்தின் பணிவிடையைச் செய்வதும் அவர்கள் வேலையாயிருந்தது.
32 So the Levites were to carry out the responsibilities for the Tent of Meeting and the Holy Place, and, under their brothers the descendants of Aaron, the service of the house of the LORD.
32 ஆண்டவர் தங்கும் சந்திப்புக் கூடாரத்தையும், திருத்தலத்தையும் கண்காணிக்கவும், ஆரோனின் வழிமரபில் வந்த அவர்கள் சகோதரரான குருக்களுக்கு ஆண்டவரின் இல்லப் பணியில் உதவி செய்யவும் வேண்டும்.4


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

1 Chronicles Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29

Footnotes:
4 a Hebrew does not include said David,
7 b Ladan  is a variant of Libni ; also in verses 8 and 9; see 1 Chronicles 6:17.
8 c Jehiel  is a variant of Jehieli ; see 1 Chronicles 26:21.
10 d Shimei  was possibly a son or grandson of the Shimei  listed in verse 9.
10 e Most Hebrew manuscripts; one Hebrew manuscript, LXX, and Vulgate (see also verse 11) Zizah
23 f Jeremoth  is a variant of Jerimoth ; see 1 Chronicles 24:30.

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.