பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

1 Chronicles  1 நாளாகமம்  דִבְרֵי הַיָמִים א

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29

1 நாளாகமம் 6 | 1 Chronicles 6

The Descendants of Levi

1בְּנֵ֖י לֵוִ֑י גֵּרְשׁ֕וֹן קְהָ֖ת וּמְרָרִֽי׃

1 லேவியின் குமாரர், கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
1 The sons of Levi: Gershon, Kohath, and Merari.
1 லேவியின் புதல்வர்: கேர்சோன், கோகாத்து, மெராரி.

2וּבְנֵ֖י קְהָ֑ת עַמְרָ֣ם יִצְהָ֔ר וְחֶבְר֖וֹן וְעֻזִּיאֵֽל׃

2 கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
2 The sons of Kohath: Amram, Izhar, Hebron, and Uzziel.
2 கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல்.

3וּבְנֵ֣י עַמְרָ֔ם אַהֲרֹ֥ן וּמֹשֶׁ֖ה וּמִרְיָ֑ם וּבְנֵ֣י אַהֲרֹ֔ן נָדָב֙ וַאֲבִיה֔וּא אֶלְעָזָ֖ר וְאִיתָמָֽר׃

3 அம்ராமின் பிள்ளைகள், ஆரோன், மோசே, மிரியாம் என்பவர்கள்; ஆரோனின் குமாரர், நாதாப், அபியூ, எலெயாசர், இத்தாமார் என்பவர்கள்.
3 The children of Amram: Aaron, Moses, and Miriam. The sons of Aaron: Nadab, Abihu, Eleazar, and Ithamar.
3 அம்ராமின் புதல்வர்: ஆரோன், மோசே, மிரியாம்.

4אֶלְעָזָר֙ הוֹלִ֣יד אֶת־פִּֽינְחָ֔ס פִּֽינְחָ֖ס הֹלִ֥יד אֶת־אֲבִישֽׁוּעַ׃

4 எலெயாசார் பினெகாசைப் பெற்றான்; பினெகாஸ் அபிசுவாவைப் பெற்றான்.
4 Eleazar was the father of Phinehas, Phinehas was the father of Abishua,
4 ஆரோனின் புதல்வர்: நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர். எலயாசருக்குப் பினகாசு பிறந்தார்; பினகாசுக்கு அபிசூவா பிறந்தார்.

5וַאֲבִישׁ֙וּעַ֙ הוֹלִ֣יד אֶת־בֻּקִּ֔י וּבֻקִּ֖י הוֹלִ֥יד אֶת־עֻזִּֽי׃

5 அபிசுவா புக்கியைப் பெற்றான், புக்கி ஊசியைப் பெற்றான்.
5 Abishua was the father of Bukki, Bukki was the father of Uzzi,
5 அபிசூவாவுக்குக் புக்கி பிறந்தார்; புக்கிக்கு உசீ பிறந்தார்.

6וְעֻזִּי֙ הוֹלִ֣יד אֶת־זְרַֽחְיָ֔ה וּֽזְרַֽחְיָ֖ה הוֹלִ֥יד אֶת־מְרָיֽוֹת׃

6 ஊசி செராகியாவைப் பெற்றான்; செராகியா மெராயோதைப் பெற்றான்.
6 Uzzi was the father of Zerahiah, Zerahiah was the father of Meraioth,
6 உசீக்கு செரகியா பிறந்தார்; செரகியாவுக்கு மெரயோத்து பிறந்தார்.

7מְרָיוֹת֙ הוֹלִ֣יד אֶת־אֲמַרְיָ֔ה וַאֲמַרְיָ֖ה הוֹלִ֥יד אֶת־אֲחִיטֽוּב׃

7 மெராயோத் அமரியாவைப் பெற்றான்; அமரியா அகிதூபைப் பெற்றான்.
7 Meraioth was the father of Amariah, Amariah was the father of Ahitub,
7 மெரயோத்துக்கு அமரியா பிறந்தார்; அமரியாவுக்கு அகித்தூபு பிறந்தார்;

8וַאֲחִיטוּב֙ הוֹלִ֣יד אֶת־צָד֔וֹק וְצָד֖וֹק הוֹלִ֥יד אֶת־אֲחִימָֽעַץ׃

8 அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் அகிமாசைப் பெற்றான்.
8 Ahitub was the father of Zadok, Zadok was the father of Ahimaaz,
8 அகித்தூபுக்குச் சாதோக்கு பிறந்தார்; சாதோக்குக்கு அகிமாசு பிறந்தார்.

9וַאֲחִימַ֙עַץ֙ הוֹלִ֣יד אֶת־עֲזַרְיָ֔ה וַעֲזַרְיָ֖ה הוֹלִ֥יד אֶת־יוֹחָנָֽן׃

9 அகிமாஸ் அசரியாவைப் பெற்றான்; அசரியா யோகனானைப் பெற்றான்.
9 Ahimaaz was the father of Azariah, Azariah was the father of Johanan,
9 அகிமாசுக்கு அசரியா பிறந்தார்; அசரியாவுக்கு யோகனான் பிறந்தார்.

10וְיוֹחָנָ֖ן הוֹלִ֣יד אֶת־עֲזַרְיָ֑ה ה֚וּא אֲשֶׁ֣ר כִּהֵ֔ן בַּבַּ֕יִת אֲשֶׁר־בָּנָ֥ה שְׁלֹמֹ֖ה בִּירוּשָׁלָֽ͏ִם׃

10 . யோகனான் அசரியாவைப் பெற்றான்; சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்திலே ஆசாரிய பணிவிடையைச் செய்தவன் இவன்தான்.
10 Johanan was the father of Azariah, who served as priest in the temple that Solomon built in Jerusalem,
10 யோகனானுக்கு அசரியா பிறந்தார்; சாலமோன் எருசலேமில் கட்டிய திருக்கோவிலில் குருவாகப் பணி புரிந்தவர் இவரே.

11וַיּ֥וֹלֶד עֲזַרְיָ֖ה אֶת־אֲמַרְיָ֑ה וַאֲמַרְיָ֖ה הוֹלִ֥יד אֶת־אֲחִיטֽוּב׃

11 . அசரியா அமரியாவைப் பெற்றான்; அமரியா அகிதூபைப் பெற்றான்.
11 Azariah was the father of Amariah, Amariah was the father of Ahitub,
11 அசரியாவுக்கு அமரியா பிறந்தார்; அமரியாவுக்கு அகித்தூபு பிறந்தார்.

12וַאֲחִיטוּב֙ הוֹלִ֣יד אֶת־צָד֔וֹק וְצָד֖וֹק הוֹלִ֥יד אֶת־שַׁלּֽוּם׃

12 . அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் சல்லூமைப் பெற்றான்.
12 Ahitub was the father of Zadok, Zadok was the father of Shallum,
12 அகித்தூபுக்குச் சாதோக்கு பிறந்தார்; சாதோக்குக்கு சல்லூம் பிறந்தார்.

13וְשַׁלּוּם֙ הוֹלִ֣יד אֶת־חִלְקִיָּ֔ה וְחִלְקִיָּ֖ה הוֹלִ֥יד אֶת־עֲזַרְיָֽה׃

13 . சல்லூம் இல்க்கியாவைப் பெற்றான்; இல்க்கியா அசரியாவைப் பெற்றான்.
13 Shallum was the father of Hilkiah, Hilkiah was the father of Azariah,
13 சல்லூமுக்கு இல்க்கியா பிறந்தார்; இல்க்கியாவுக்கு அசரியா பிறந்தார்.

14וַעֲזַרְיָה֙ הוֹלִ֣יד אֶת־שְׂרָיָ֔ה וּשְׂרָיָ֖ה הוֹלִ֥יד אֶת־יְהוֹצָדָֽק׃

14 . அசரியா செராயாவைப் பெற்றான்; செராயா யோசதாக்கைப் பெற்றான்.
14 Azariah was the father of Seraiah, and Seraiah was the father of Jehozadak.
14 அசரியாவுக்குச் செராயா பிறந்தார்; செராயாவுக்கு யோசதாக்கு பிறந்தார்.

15וִיהוֹצָדָ֣ק הָלַ֔ךְ בְּהַגְל֣וֹת יְהוָ֔ה אֶת־יְהוּדָ֖ה וִירוּשָׁלָ֑͏ִם בְּיַ֖ד נְבֻכַדְנֶאצַּֽר׃

15 . கர்த்தர் நேபுகாத்நேச்சாரைக்கொண்டு யூதா ஜனங்களையும் எருசலேமியரையும் சிறைபிடித்துக்கொண்டுபோகச் செய்தபோது யோசதாக்கும் சிறைப்பட்டுப்போனான்.
15 Jehozadak went into captivity when the LORD sent Judah and Jerusalem into exile by the hand of Nebuchadnezzar.
15 ஆண்டவர் நெபுகத்னேசரின் கைவன்மை கொண்டு எருசலேமையும் யூதாவையும் சிறைப்படுத்தியபோது யோசதாக்கும் நாடுகடத்தப்பட்டார்.

16בְּנֵ֖י לֵוִ֑י גֵּרְשֹׁ֕ם קְהָ֖ת וּמְרָרִֽי׃

16 . லேவியின் குமாரர், கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்களே.
16 The sons of Levi: Gershom, Kohath, and Merari.
16 லேவியின் புதல்வர்: கேர்சோம், கோகாத்து, மெராரி,

17וְאֵ֛לֶּה שְׁמ֥וֹת בְּֽנֵי־גֵרְשׁ֖וֹם לִבְנִ֥י וְשִׁמְעִֽי׃

17 . கெர்சோமுடைய குமாரரின் நாமங்கள், லிப்னி, சிமேயி என்பவைகள்.
17 These are the names of the sons of Gershom: Libni and Shimei.
17 கேர்சோமின் புதல்வர் பெயர்கள் இவையே; லிப்னி, சிமயி,

18וּבְנֵ֖י קְהָ֑ת עַמְרָ֣ם וְיִצְהָ֔ר וְחֶבְר֖וֹן וְעֻזִּיאֵֽל׃

18 . கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
18 The sons of Kohath: Amram, Izhar, Hebron, and Uzziel.
18 கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல்.

19בְּנֵ֥י מְרָרִ֖י מַחְלִ֣י וּמֻשִׁ֑י וְאֵ֛לֶּה מִשְׁפְּח֥וֹת הַלֵּוִ֖י לַאֲבוֹתֵיהֶֽם׃

19 . மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள். லேவியருக்கு அவர்கள் பிதாக்கள் வழியாய் உண்டான வம்சங்கள்:
19 The sons of Merari: Mahli and Mushi. These are the clans of the Levites listed according to their fathers:
19 மெராரியின் புதல்வர்: மக்லி, மூசி; இவர்கள் அவர்களின் மூதாதை வழி வந்த லேவியர் குடும்பங்கள்.*

20לְֽגֵרְשׁ֑וֹם לִבְנִ֥י בְנ֛וֹ יַ֥חַת בְּנ֖וֹ זִמָּ֥ה בְנֽוֹ׃

20 . கெர்சோமின் குமாரன் லிப்னி; இவன் குமாரன் யாகாத்; இவன் குமாரன் சிம்மா.
20 Of Gershom: Libni his son, Jahath his son, Zimmah his son,
20 கேர்சோமின் புதல்வர்: லிப்னி; அவர் மகன் யாகத்து; அவர் மகன் சிம்மா;

21יוֹאָ֤ח בְּנוֹ֙ עִדּ֣וֹ בְנ֔וֹ זֶ֥רַח בְּנ֖וֹ יְאָתְרַ֥י בְּנֽוֹ׃

21 . இவன் குமாரன் யோவா; இவன் குமாரன் இத்தோ; இவன் குமாரன் சேரா; இவன் குமாரன் யாத்திராயி.
21 Joah his son, Iddo his son, Zerah his son, and Jeatherai his son.
21 அவர் மகன் யோவாகு; அவர் மகன் இத்தோ; அவர் மகன் செராகு; அவர் மகன் எயத்தராய்.

22בְּנֵ֖י קְהָ֑ת עַמִּינָדָ֣ב בְּנ֔וֹ קֹ֥רַח בְּנ֖וֹ אַסִּ֥יר בְּנֽוֹ׃

22 . கோகாத்தின் குமாரரில் ஒருவன் அம்மினதாப், இவன் குமாரன் கோராகு, இவன் குமாரன் ஆசீர்.
22 The descendants of Kohath: Amminadab his son, Korah his son, Assir his son,
22 கோகாத்தின் புதல்வர்: அம்மினதாபு; அவர் மகன் கோராகு; அவர் மகன் அசீர்;

23אֶלְקָנָ֥ה בְנ֛וֹ וְאֶבְיָסָ֥ף בְּנ֖וֹ וְאַסִּ֥יר בְּנֽוֹ׃

23 . இவன் குமாரன் இல்க்கானா; இவன் குமாரன் அபியாசாப்; இவன் குமாரன் ஆசீர்.
23 Elkanah his son, Ebiasaph his son, Assir his son,
23 அவர் மகன் எல்கானா; அவர் மகன் எபியசாபு; அவர் மகன் அசீர்;

24תַּ֤חַת בְּנוֹ֙ אוּרִיאֵ֣ל בְּנ֔וֹ עֻזִּיָּ֥ה בְנ֖וֹ וְשָׁא֥וּל בְּנֽוֹ׃

24 . இவன் குமாரன் எல்க்கானா; இவன் குமாரன் ஊரியேல்; இவன் குமாரன் ஊசியா; இவன் குமாரன் சவுல்.
24 Tahath his son, Uriel his son, Uzziah his son, and Shaul his son.
24 அவர் மகன் தாகத்து; அவர் மகன் ஊரியேல்; அவர் மகன் உசியா; அவர் மகன் சாவூல்.

25וּבְנֵי֙ אֶלְקָנָ֔ה עֲמָשַׂ֖י וַאֲחִימֽוֹת׃

25 . எல்க்கானாவின் குமாரர், அமாசாயி, ஆகிமோத் என்பவர்கள்.
25 The descendants of Elkanah: Amasai, Ahimoth,
25 எல்கானாவின் புதல்வர்: அமாசாய், அகிமோத்து,

26אֶלְקָנָ֑ה בנו אֶלְקָנָ֔ה צוֹפַ֥י בְּנ֖וֹ וְנַ֥חַת בְּנֽוֹ׃

26 . எல்க்கானாவின் குமாரரில் ஒருவன் சோபாய், இவன் குமாரன் நாகாத்.
26 Elkanah his son, Zophai his son, Nahath his son,
26 அவர் மகன் எல்கானா; அவர் மகன் சோப்பாய்; அவர் மகன் நாகத்து,

27אֱלִיאָ֥ב בְּנ֛וֹ יְרֹחָ֥ם בְּנ֖וֹ אֶלְקָנָ֥ה בְנֽוֹ׃

27 . இவன் குமாரன் எலியாப்; இவன் குமாரன் எரோகாம்; இவன் குமாரன் எல்க்கானா.
27 Eliab his son, Jeroham his son, and Elkanah his son.
27 அவர் மகன் எலியாபு; அவர் மகன் எரோகாம்; அவர் மகன் எல்கானா.

28וּבְנֵ֧י שְׁמוּאֵ֛ל הַבְּכֹ֥ר וַשְׁנִ֖י וַאֲבִיָּֽה׃

28 . சாமுவேலின் குமாரர், அவனுடைய முதற்பேறான வஷ்னீ அபியா என்பவர்கள்.
28 The sons of Samuel: Joel his firstborn and Abijah his second son.
28 சாமுவேலின் புதல்வர்: தலை மகன் யோவேல், இரண்டாமவர் அபியா.

29בְּנֵ֥י מְרָרִ֖י מַחְלִ֑י לִבְנִ֥י בְנ֛וֹ שִׁמְעִ֥י בְנ֖וֹ עֻזָּ֥ה בְנֽוֹ׃

29 . மெராரியின் குமாரரில் ஒருவன் மகேலி; இவன் குமாரன் லிப்னி; இவன் குமாரன் சிமேயி; இவன் குமாரன் ஊசா.
29 The descendants of Merari: Mahli, Libni his son, Shimei his son, Uzzah his son,
29 மெராரியின் புதல்வர்: மக்லி; அவர் மகன் லிப்னி; அவர் மகன் சிமயி; அவர் மகன் உசா,

30שִׁמְעָ֥א בְנ֛וֹ חַגִּיָּ֥ה בְנ֖וֹ עֲשָׂיָ֥ה בְנֽוֹ׃

30 . இவன் குமாரன் சிமெயா; இவன் குமாரன் அகியா; இவன் குமாரன் அசாயா.
30 Shimea his son, Haggiah his son, and Asaiah his son.
30 அவர் மகன் சிமயா, அவர் மகன் அகியா; அவர் மகன் அசாயா.

The Temple Musicians

31וְאֵ֗לֶּה אֲשֶׁ֨ר הֶעֱמִ֥יד דָּוִ֛יד עַל־יְדֵי־שִׁ֖יר בֵּ֣ית יְהוָ֑ה מִמְּנ֖וֹחַ הָאָרֽוֹן׃

31 . கர்த்தருடைய பெட்டி நிலைபெற்றபோது, தாவீது கர்த்தருடைய ஆலயத்தில் சங்கீத சேவையை நடத்துகிறதற்கு ஸ்தாபித்தவர்களும்,
31 These are the men David put in charge of the music in the house of the LORD after the ark rested there.
31 ஆண்டவரின் இல்லத்தில் பேழை தங்கியிருந்தபோது அங்கே திருப்பாடல் பணிக்கெனத் தாவீது நியமித்திருந்தவர்கள் இவர்களே.

32וַיִּהְי֨וּ מְשָׁרְתִ֜ים לִפְנֵ֨י מִשְׁכַּ֤ן אֹֽהֶל־מוֹעֵד֙ בַּשִּׁ֔יר עַד־בְּנ֧וֹת שְׁלֹמֹ֛ה אֶת־בֵּ֥ית יְהוָ֖ה בִּירוּשָׁלָ֑͏ִם וַיַּעַמְד֥וּ כְמִשְׁפָּטָ֖ם עַל־עֲבוֹדָתָֽם׃

32 . சாலொமோன் எருசலேமிலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டித் தீருமட்டும் ஆசரிப்புக் கூடார வாசஸ்தலத்திற்கு முன்பாக சங்கீத சேவையுடன் தங்கள் முறைமையின்படியே பணிவிடை செய்துவந்தவர்களுமாகிய மனுஷரும் அவர்கள் குமாரருமானவர்கள்.
32 They ministered with song before the tabernacle, the Tent of Meeting, until Solomon built the house of the LORD in Jerusalem. And they performed their duties according to the regulations given them.
32 எருசலேமில் சாலமோன் ஆண்டவரின் இல்லத்தைக் கட்டியெழுப்பும் வரை, அவர்கள் சந்திப்புக்கூடாரத் திருஉறைவிடத்தின்முன் திருப்பாடல்கள் பாடிப் பணியாற்றினார்கள். அவர்கள் தங்கள் பணிமுறையின்படி ஊழியம் செய்து வந்தார்கள்.

33וְאֵ֥לֶּה הָעֹמְדִ֖ים וּבְנֵיהֶ֑ם מִבְּנֵי֙ הַקְּהָתִ֔י הֵימָן֙ הַמְשׁוֹרֵ֔ר בֶּן־יוֹאֵ֖ל בֶּן־שְׁמוּאֵֽל׃

33 . கோகாத்தியரின் குமாரரில் ஏமான் என்னும் பாடகன்; இவன் யோவேலின் குமாரன்; இவன் சாமுவேலின் குமாரன்.
33 These are the men who served, together with their sons. From the Kohathites: Heman the singer, the son of Joel, the son of Samuel,
33 அங்குத் திருப்பணியாற்றியவர்களும் அவர்களின் புதல்வரும் இவர்களே; கோகாத்திய மக்களுள் ஏமான் என்னும் பாடகர்; அவர் யோவேலின் மகன்; அவர் சாமுவேலின் மகன்;

34בֶּן־אֶלְקָנָה֙ בֶּן־יְרֹחָ֔ם בֶּן־אֱלִיאֵ֖ל בֶּן־תּֽוֹחַ׃

34 . இவன் எல்க்கானாவின் குமாரன்; இவன் யெரொகாமின் குமாரன்; இவன் எலியேலின் குமாரன்; இவன் தோவாகின் குமாரன்.
34 the son of Elkanah, the son of Jeroham, the son of Eliel, the son of Toah,
34 அவர் எல்கானாவின் மகன்; அவர் எரோகாமின் மகன்; அவர் எலியேலின் மகன்; அவர் தோவாகின் மகன்;

35בֶּן־ציף בֶּן־אֶלְקָנָ֔ה בֶּן־מַ֖חַת בֶּן־עֲמָשָֽׂי׃

35 . இவன் சூப்பின் குமாரன்; இவன் இல்க்கானாவின் குமாரன்; இவன் மாகாத்தின் குமாரன்; இவன் அமாசாயின் குமாரன்.
35 the son of Zuph, the son of Elkanah, the son of Mahath, the son of Amasai,
35 அவர் சூப்பின் மகன்; அவர் எல்கானாவின் மகன்; அவர் மாகாத்தின் மகன்; அவர் அமாசாயின் மகன்;

36בֶּן־אֶלְקָנָה֙ בֶּן־יוֹאֵ֔ל בֶּן־עֲזַרְיָ֖ה בֶּן־צְפַנְיָֽה׃

36 . இவன் எல்க்கானாவின் குமாரன்; இவன் யோவேலின் குமாரன்; இவன் அசரியாவின் குமாரன்; இவன் செப்பனியாவின் குமாரன்.
36 the son of Elkanah, the son of Joel, the son of Azariah, the son of Zephaniah,
36 அவர் எல்கானாவின் மகன்; அவர் யோவேலின் மகன்; அவர் அசரியாவின் மகன்; அவர் செப்பனியாவின் மகன்;

37בֶּן־תַּ֙חַת֙ בֶּן־אַסִּ֔יר בֶּן־אֶבְיָסָ֖ף בֶּן־קֹֽרַח׃

37 . இவன் தாகாதின் குமாரன்; இவன் ஆசீரின் குமாரன்; இவன் எபியாசாப்பின் குமாரன், இவன் கோராகின் குமாரன்.
37 the son of Tahath, the son of Assir, the son of Ebiasaph, the son of Korah,
37 அவர் தாகத்தின் மகன்; அவர் அசீரின் மகன், அவர் எபியாசாபின் மகன்; அவர் கோராகின் மகன்;

38בֶּן־יִצְהָ֣ר בֶּן־קְהָ֔ת בֶּן־לֵוִ֖י בֶּן־יִשְׂרָאֵֽל׃

38 . இவன் இத்சாரின் குமாரன்; இவன் கோகாத்தின் குமாரன்; இவன் இஸ்ரவேலின் குமாரனாகிய லேவியின் குமாரன்.
38 the son of Izhar, the son of Kohath, the son of Levi, the son of Israel.
38 அவர் இஸ்காரின் மகன், அவர் கோகாத்தின் மகன்; அவர் லேவியின் மகன்; அவர் இஸ்ரயேலின் மகன்.

39וְאָחִ֣יו אָסָ֔ף הָעֹמֵ֖ד עַל־יְמִינ֑וֹ אָסָ֥ף בֶּן־בֶּרֶכְיָ֖הוּ בֶּן־שִׁמְעָֽא׃

39 . இவன் சகோதரனாகிய ஆசாப் இவன் வலதுபக்கத்திலே நிற்பான், ஆசாப் பெரகியாவின் குமாரன்; இவன் சிமேயாவின் குமாரன்.
39 Heman’s kinsman was Asaph, who served at his right hand: Asaph the son of Berechiah, the son of Shimea,
39 ஏமானின் வலப்புறம் பணியாற்றியவர் அவர் சகோதரர் ஆசாபு. ஆசாபு பெரக்கியாவின் மகன்; அவர் சிமயாவின் மகன்.

40בֶּן־מִיכָאֵ֥ל בֶּן־בַּעֲשֵׂיָ֖ה בֶּן־מַלְכִּיָּֽה׃

40 . இவன் மிகாவேலின் குமாரன்; இவன் பாசெயாவின் குமாரன்; இவன் மல்கியாவின் குமாரன்.
40 the son of Michael, the son of Baaseiah, the son of Malchijah,
40 அவர் மிக்கேலின் மகன்; அவர் பாசேயாவின் மகன்; அவர் மல்கியாவின் மகன்;

41בֶּן־אֶתְנִ֥י בֶן־זֶ֖רַח בֶּן־עֲדָיָֽה׃

41 . இவன் எத்னியின் குமாரன்; இவன் சேராவின் குமாரன்; இவன் அதாயாவின் குமாரன்.
41 the son of Ethni, the son of Zerah, the son of Adaiah,
41 அவர் எத்னியின் மகன்; அவர் செராகின் மகன்; அவர் அதாயாவின் மகன்;

42בֶּן־אֵיתָ֥ן בֶּן־זִמָּ֖ה בֶּן־שִׁמְעִֽי׃

42 . இவன் ஏத்தானின் குமாரன்; இவன் சிம்மாவின் குமாரன்; இவன் சீமேயின் குமாரன்.
42 the son of Ethan, the son of Zimmah, the son of Shimei,
42 அவர் ஏத்தானின் மகன்; அவர் சிம்மாவின் மகன்; அவர் சிமயியின் மகன்;

43בֶּן־יַ֥חַת בֶּן־גֵּרְשֹׁ֖ם בֶּן־לֵוִֽי׃

43 . இவன் யாகாதின் குமாரன்; இவன் கெர்சோமின் குமாரன்; இவன் லேவியின் குமாரன்.
43 the son of Jahath, the son of Gershom, the son of Levi.
43 அவர் யாகாத்தின் மகன்; அவர் கேர்சோமின் மகன், அவர் லேவியின் மகன்.

44וּבְנֵ֧י מְרָרִ֛י אֲחֵיהֶ֖ם עַֽל־הַשְּׂמֹ֑אול אֵיתָן֙ בֶּן־קִישִׁ֔י בֶּן־עַבְדִּ֖י בֶּן־מַלּֽוּךְ׃

44 . மெராரியின் புத்திரராகிய இவர்களுடைய சகோதரர் இடதுபக்கத்திலே நிற்பார்கள்; அவர்களில் ஏதான் என்பவன் கிஷியின் குமாரன், இவன் அப்தியின் குமாரன்; இவன் மல்லூகின் குமாரன்.
44 On the left were their kinsmen, the sons of Merari: Ethan the son of Kishi, the son of Abdi, the son of Malluch,
44 ஏமானின் இடப்புறம் பணியாற்றிய அவர்களின் சகோதரரான மெராரியின் புதல்வர்: அவர் ஏத்தான், அவர் கீசியின் மகன்; அவர் அப்தியின் மகன்; அவர் மல்லூக்கின் மகன்,

45בֶּן־חֲשַׁבְיָ֥ה בֶן־אֲמַצְיָ֖ה בֶּן־חִלְקִיָּֽה׃

45 . இவன் அஸபியாவின் குமாரன்; இவன் அமத்சியாவின் குமாரன்; இவன் இல்க்கியாவின் குமாரன்.
45 the son of Hashabiah, the son of Amaziah, the son of Hilkiah,
45 அவர் அசபியாவின் மகன்; அவர் அமட்சியாவின் மகன், அவர் இல்க்கியாவின் மகன்;

46בֶּן־אַמְצִ֥י בֶן־בָּנִ֖י בֶּן־שָֽׁמֶר׃

46 . இவன் அம்சியின் குமாரன்; இவன் பானியின் குமாரன்; இவன் சாமேரின் குமாரன்.
46 the son of Amzi, the son of Bani, the son of Shemer,
46 அவர் அம்சியின் மகன்; அவர் பானியின் மகன்; அவர் செமேரின் மகன்;

47בֶּן־מַחְלִי֙ בֶּן־מוּשִׁ֔י בֶּן־מְרָרִ֖י בֶּן־לֵוִֽי׃

47 . இவன் மகேலியின் குமாரன்; இவன் மூசியின் குமாரன்; இவன் மெராரியின் குமாரன்; இவன் லேவியின் குமாரன்.
47 the son of Mahli, the son of Mushi, the son of Merari, the son of Levi.
47 அவர் மக்லியின் மகன்; அவர் மூசியின் மகன்; அவர் மெராரியின் மகன்; அவர் லேவியின் மகன்.

The Descendants of Aaron

48וַאֲחֵיהֶ֖ם הַלְוִיִּ֑ם נְתוּנִ֕ים לְכָ֨ל־עֲבוֹדַ֔ת מִשְׁכַּ֖ן בֵּ֥ית הָאֱלֹהִֽים׃

48 . அவர்கள் சகோதரராகிய மற்ற லேவியர் தேவனுடைய ஆலயமாகிய வாசஸ்தலத்தின் பணிவிடைக்கெல்லாம் வைக்கப்பட்டிருந்தார்கள்.
48 Their fellow Levites were assigned to every kind of service of the tabernacle, the house of God.
48 அவர்கள் சகோதரராகிய பிற லேவியர் கடவுளது இல்லத்தின் திருஉறைவிடத்து அனைத்துப் பணிகளுக்குமென்று நியமிக்கப்பட்டனர்.

49וְֽאַהֲרֹ֨ן וּבָנָ֜יו מַקְטִירִ֨ים עַל־מִזְבַּ֤ח הָֽעוֹלָה֙ וְעַל־מִזְבַּ֣ח הַקְּטֹ֔רֶת לְכֹ֕ל מְלֶ֖אכֶת קֹ֣דֶשׁ הַקֳּדָשִׁ֑ים וּלְכַפֵּר֙ עַל־יִשְׂרָאֵ֔ל כְּכֹל֙ אֲשֶׁ֣ר צִוָּ֔ה מֹשֶׁ֖ה עֶ֥בֶד הָאֱלֹהִֽים׃

49 . ஆரோனும் அவன் குமாரரும் சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டும் பீடத்தின்மேல் தூபங்காட்டி, மகா பரிசுத்த ஸ்தலத்தின் எல்லாவேலைக்கும், தேவனுடைய தாசனாகிய மோசே கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தியுண்டாக்குகிறதற்கும் வைக்கப்பட்டிருந்தார்கள்.
49 But Aaron and his sons did all the work of the Most Holy Place. They presented the offerings on the altar of burnt offering and on the altar of incense to make atonement for Israel, according to all that Moses the servant of God had commanded.
49 ஆரோனும் அவர் புதல்வரும் எரி பலி பீடத்தில் பலியிட்டு, தூபப் பீடத்தில் தூபம் காட்டினர். அவர்கள் திருத்தூயகத் தொடர்பான அனைத்துத் திருப்பணிகளையும், செய்து ஆண்டவரின் ஊழியன் மோசேயின் கட்டளைப்படி இஸ்ரயேலுக்கெனப் பாவம் போக்கும் பலி செலுத்தி வந்தார்கள்.

50וְאֵ֖לֶּה בְּנֵ֣י אַהֲרֹ֑ן אֶלְעָזָ֥ר בְּנ֛וֹ פִּֽינְחָ֥ס בְּנ֖וֹ אֲבִישׁ֥וּעַ בְּנֽוֹ׃

50 . ஆரோனின் குமாரரில் எலெயாசர் என்பவனுடைய குமாரன் பினேகாஸ்; இவன் குமாரன் அபிசுவா.
50 These were the descendants of Aaron: Eleazar his son, Phinehas his son, Abishua his son,
50 ஆரோனின் புதல்வர் இவர்களே; பினகாசின் மகன் எலயாசர்; அவர் மகன் அபிசூவா;

51בֻּקִּ֥י בְנ֛וֹ עֻזִּ֥י בְנ֖וֹ זְרַֽחְיָ֥ה בְנֽוֹ׃

51 . இவன் குமாரன் புக்கி; இவன் குமாரன் ஊசி, இவன் குமாரன் செராகியா.
51 Bukki his son, Uzzi his son, Zerahiah his son,
51 அவர் மகன் புக்கி; அவர் மகன் உசி; அவர் மகன் செரகியா;

52מְרָי֥וֹת בְּנ֛וֹ אֲמַרְיָ֥ה בְנ֖וֹ אֲחִיט֥וּב בְּנֽוֹ׃

52 . இவன் குமாரன் மெராயோத்; இவன் குமாரன் அமரியா; இவன் குமாரன் அகித்தூப்.
52 Meraioth his son, Amariah his son, Ahitub his son,
52 அவர் மகன் மெரயோத்து; அவர் மகன் அமரியா; அவர் மகன் அகித்தூபு

53צָד֥וֹק בְּנ֖וֹ אֲחִימַ֥עַץ בְּנֽוֹ׃

53 . இவன் குமாரன் சாதோக்; இவன் குமாரன் அகிமாஸ்.
53 Zadok his son, and Ahimaaz his son.
53 அவர் மகன் சாதோக்கு, அவர் மகன் அகிமாசு.

Territories for the Levites (Numbers 35:1–8; Joshua 21:1–45)

54וְאֵ֙לֶּה֙ מוֹשְׁבוֹתָ֔ם לְטִירוֹתָ֖ם בִּגְבוּלָ֑ם לִבְנֵ֤י אַהֲרֹן֙ לְמִשְׁפַּחַ֣ת הַקְּהָתִ֔י כִּ֥י לָהֶ֖ם הָיָ֥ה הַגּוֹרָֽל׃

54 . அவர்கள் பேட்டைகளின்படியே அவர்கள் எல்லைக்குள்ளான அவர்கள் வாசஸ்தலங்களாவன: கோகாத்தியரின் வம்சமான ஆரோனின் புத்திரருக்கு விழுந்த சீட்டின்படியே,
54 Now these were the territories assigned to the descendants of Aaron from the Kohathite clan for their settlements, because the first lot fell to them:
54 லேவியரின் எல்லைகளுக்குள் விழுமாறு குறிக்கப்பட்ட குடியிருப்புகள் இவையே; ஆரோன் புதல்வருள் கோகாத்தியக் குடும்பத்தாருக்கு முதல் சீட்டு விழுந்தது.

55וַֽיִּתְּנ֥וּ לָהֶ֛ם אֶת־חֶבְר֖וֹן בְּאֶ֣רֶץ יְהוּדָ֑ה וְאֶת־מִגְרָשֶׁ֖יהָ סְבִיבֹתֶֽיהָ׃

55 . யூதாதேசத்திலிருக்கிற எப்ரோனையும் அதைச் சுற்றியிருக்கிற வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்.
55 They were given Hebron in the land of Judah and its surrounding pasturelands.
55 அதன்படி யூதா நாட்டிலுள்ள எபிரோனும் அதைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களும் அளிக்கப்பட்டன.

56וְאֶת־שְׂדֵ֥ה הָעִ֖יר וְאֶת־חֲצֵרֶ֑יהָ נָתְנ֖וּ לְכָלֵ֥ב בֶּן־יְפֻנֶּֽה׃

56 . அந்தப் பட்டணத்தின் வயல்களையும் அதின் பட்டிகளையும் எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்குக் கொடுத்தார்கள்.
56 But the fields and villages around the city were given to Caleb son of Jephunneh.
56 அந்நகரின் வயல்வெளிகளும் அதன் சிற்றூர்களும் எபுன்னேயின் மகன் காலேபுக்கு அளிக்கப்பட்டன.

57וְלִבְנֵ֣י אַהֲרֹ֗ן נָתְנוּ֙ אֶת־עָרֵ֣י הַמִּקְלָ֔ט אֶת־חֶבְר֥וֹן וְאֶת־לִבְנָ֖ה וְאֶת־מִגְרָשֶׁ֑יהָ וְאֶת־יַתִּ֥ר וְאֶֽת־אֶשְׁתְּמֹ֖עַ וְאֶת־מִגְרָשֶֽׁיהָ׃

57 . இப்படியே ஆரோனின் புத்திரருக்கு எப்ரோன் என்னும் அடைக்கலப்பட்டணங்களில் ஒன்றையும், லிப்னாவையும் அதின் வெளிநிலங்களையும், யாத்தீரையும் எஸ்தமோவாவையும் அவற்றின் வெளிநிலங்களையும்,
57 So the descendants of Aaron were given Hebron (a city of refuge), Libnah, Jattir, Eshtemoa,
57 ஆரோனின் புதல்வருக்கு வழங்கப்பட்ட புகலிடங்கள்; எபிரோன், லிப்னா, அவற்றின் மேய்ச்சல் நிலங்கள்; யத்தீர், எஸ்தமோவா, அவற்றின் மேய்ச்சல் நிலங்கள்;

58וְאֶת־חִילֵז֙ וְאֶת־מִגְרָשֶׁ֔יהָ אֶת־דְּבִ֖יר וְאֶת־מִגְרָשֶֽׁיהָ׃

58 . ஈலேனையும் அதின் வெளிநிலங்களையும், தெபீரையும் அதின் வெளிநிலங்களையும்,
58 Hilen, Debir,
58 லேன் அதன் மேய்ச்சல் நிலங்கள்; தெபீர் அதன் மேய்ச்சல் நிலங்கள்;

59וְאֶת־עָשָׁן֙ וְאֶת־מִגְרָשֶׁ֔יהָ וְאֶת־בֵּ֥ית שֶׁ֖מֶשׁ וְאֶת־מִגְרָשֶֽׁיהָ׃

59 . ஆசானையும் அதின் வெளிநிலங்களையும், பெத்சேமேசையும் அதின் வெளிநிலங்களையும்,
59 Ashan, Juttah, and Beth-shemesh, together with their pasturelands.
59 ஆசான், அதன் மேய்ச்சல் நிலங்கள்; பெத்-செமேசு அதன் மேய்ச்சல் நிலங்கள்.

60וּמִמַּטֵּ֣ה בִנְיָמִ֗ן אֶת־גֶּ֤בַע וְאֶת־מִגְרָשֶׁ֙יהָ֙ וְאֶת־עָלֶ֣מֶת וְאֶת־מִגְרָשֶׁ֔יהָ וְאֶת־עֲנָת֖וֹת וְאֶת־מִגְרָשֶׁ֑יהָ כָּל־עָרֵיהֶ֛ם שְׁלֹשׁ־עֶשְׂרֵ֥ה עִ֖יר בְּמִשְׁפְּחוֹתֵיהֶֽם׃

60 . பென்யமீன் கோத்திரத்திலே கேபாவையும் அதின் வெளிநிலங்களையும், அலெமேத்தையும் அதின் வெளிநிலங்களையும், ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவர்கள் வம்சங்களுக்குக் கொடுத்த இவர்கள் பட்டணங்களெல்லாம் பதின்மூன்று.
60 And from the tribe of Benjamin they were given Gibeon, Geba, Alemeth, and Anathoth, together with their pasturelands. So they had thirteen cities in all among their families.
60 பென்யமின் குலத்தினின்று கிடைத்தவை; கேபா, அதன் மேய்ச்சல் நிலங்கள்; ஆலமேத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்; அனத்தோத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள். இந்த நகர்கள் பதின்மூன்றும் அவர்கள் குடும்பங்கள் வாரியாகக் கோகாத்தியருக்கு வழங்கப்பட்டன.

61וְלִבְנֵ֨י קְהָ֜ת הַנּוֹתָרִ֗ים מִמִּשְׁפַּ֣חַת הַמַּטֶּ֡ה מִֽ֠מַּחֲצִית מַטֵּ֨ה חֲצִ֧י מְנַשֶּׁ֛ה בַּגּוֹרָ֖ל עָרִ֥ים עָֽשֶׂר׃

61 . கோகாத்தின் மற்றப் புத்திரருக்கு வேறொரு கோத்திர வம்சத்திலும், பாதிக்கோத்திரமாகிய மனாசேயின் பாதியிலும் விழுந்த சீட்டின்படியே பத்துப் பட்டணங்கள் இருந்தது.
61 To the rest of the Kohathites, ten cities were allotted from the half-tribe of Manasseh.
61 எஞ்சியருந்த கோகாத்தின் புதல்வருக்கு அவர்கள் குடும்ப வாரியாக மனாசேயின் பாதிக்குலத்தின் பத்து நகர்கள் சீட்டுக் குலுக்கி வழங்கப்பட்டன.

62וְלִבְנֵ֨י גֵרְשׁ֜וֹם לְמִשְׁפְּחוֹתָ֗ם מִמַּטֵּ֣ה יִ֠שָׂשכָר וּמִמַּטֵּ֨ה אָשֵׁ֜ר וּמִמַּטֵּ֣ה נַפְתָּלִ֗י וּמִמַּטֵּ֤ה מְנַשֶּׁה֙ בַּבָּשָׁ֔ן עָרִ֖ים שְׁלֹ֥שׁ עֶשְׂרֵֽה׃

62 . கெர்சோமின் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படியே, இசக்கார் கோத்திரத்திலும், ஆசேர் கோத்திரத்திலும், நப்தலி கோத்திரத்திலும், பாசானிலிருக்கிற மனாசே கோத்திரத்திலும் பதின்மூன்று பட்டணங்கள் இருந்தது.
62 The Gershomites, according to their clans, were allotted thirteen cities from the tribes of Issachar, Asher, Naphtali, and Manasseh in Bashan.
62 கேர்சோம் புதல்வருக்கு அவர்கள் குடும்ப வாரியாக இசக்கார், ஆசேர், நப்தலி பாசானிலிருக்கும் மனாசே ஆகிய குலங்களிலிருந்து கிடைத்த நகர்கள் பதின்மூன்று.

63לִבְנֵ֨י מְרָרִ֜י לְמִשְׁפְּחוֹתָ֗ם מִמַּטֵּ֣ה רְ֠אוּבֵן וּֽמִמַּטֵּה־גָ֞ד וּמִמַּטֵּ֤ה זְבוּלֻן֙ בַּגּוֹרָ֔ל עָרִ֖ים שְׁתֵּ֥ים עֶשְׂרֵֽה׃

63 . மெராரியின் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படியே ரூபன் கோத்திரத்திலும், காத் கோத்திரத்திலும், செபுலோன் கோத்திரத்திலும் விழுந்த சீட்டின்படி பன்னிரண்டு பட்டணங்கள் இருந்தது.
63 The Merarites, according to their families, were allotted twelve cities from the tribes of Reuben, Gad, and Zebulun.
63 மெராரியின் புதல்வருக்கு அவர்கள் குடும்ப வாரியாக ரூபன், காத்து, செபுலோன் ஆகிய குலங்களிலிருந்து விழுந்த சீட்டின்படி பன்னிரண்டு நகர்கள் வழங்கப்பட்டன.

64וַיִּתְּנ֥וּ בְנֵי־יִשְׂרָאֵ֖ל לַלְוִיִּ֑ם אֶת־הֶעָרִ֖ים וְאֶת־מִגְרְשֵׁיהֶֽם׃

64 . அப்படியே இஸ்ரவேல் புத்திரர் லேவியருக்குக் கொடுத்த பட்டணங்களும் அவைகளின் வெளிநிலங்களும் என்னவென்றால்,
64 So the Israelites gave to the Levites these cities and their pasturelands.
64 இவ்வாறு, இஸ்ரயேல் மக்கள் லேவியருக்கு நகர்களையும் மேய்ச்சல் நிலங்களையும் வழங்கினர்.

65וַיִּתְּנ֣וּ בַגּוֹרָ֗ל מִמַּטֵּ֤ה בְנֵי־יְהוּדָה֙ וּמִמַּטֵּ֣ה בְנֵי־שִׁמְע֔וֹן וּמִמַּטֵּ֖ה בְּנֵ֣י בִנְיָמִ֑ן אֵ֚ת הֶעָרִ֣ים הָאֵ֔לֶּה אֲשֶׁר־יִקְרְא֥וּ אֶתְהֶ֖ם בְּשֵׁמֽוֹת׃

65 . சீட்டுப்போட்டு, சிலருக்கு யூதா புத்திரரின் கோத்திரத்திலும், சிமியோன் புத்திரரின் கோத்திரத்திலும், பென்யமீன் புத்திரரின் கோத்திரத்திலும், பேர்பேராகச் சொல்லப்பட்ட அந்தப் பட்டணங்களைக் கொடுத்தார்கள்.
65 They assigned by lot the cities named above from the tribes of Judah, Simeon, and Benjamin.
65 இவ்வாறு, அவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட நகர்களை குலுக்கல் முறையில் இஸ்ரயேலுக்கு யூதா, சிமியோன், பென்யமின் ஆகிய குலங்களிலிருந்து லேவியருக்கு வழங்கினார்கள்.

66וּמִֽמִּשְׁפְּח֖וֹת בְּנֵ֣י קְהָ֑ת וַיְהִי֙ עָרֵ֣י גְבוּלָ֔ם מִמַּטֵּ֖ה אֶפְרָֽיִם׃

66 . கோகாத் புத்திரரில் மற்ற வம்சங்களுக்கு அவர்கள் எல்லையான பட்டணங்கள் அவர்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலே இருந்தது.
66 And some of the clans of the Kohathites were given cities from the tribe of Ephraim for their territory:
66 கோகாத்தின் புதல்வர்களுள் இன்னும் சில குடும்பங்களுக்கு எப்ராயிம் குலத்தின் எல்லைகளிலிருந்து நகர்கள் கிடைத்தன.

67וַיִּתְּנ֨וּ לָהֶ֜ם אֶת־עָרֵ֧י הַמִּקְלָ֛ט אֶת־שְׁכֶ֥ם וְאֶת־מִגְרָשֶׁ֖יהָ בְּהַ֣ר אֶפְרָ֑יִם וְאֶת־גֶּ֖זֶר וְאֶת־מִגְרָשֶֽׁיהָ׃

67 . எவையெனில், அடைக்கலப்பட்டணங்களில் அவர்களுக்கு எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும்,
67 They were given Shechem (a city of refuge) with its pasturelands in the hill country of Ephraim, and Gezer,
67 அவர்களுக்கு அளிக்கப்பட்ட புகலிட நகர்கள்; எப்ராயிம் மலைப்பகுதியில் இருக்கும் செக்கேம், அதன் மேய்ச்சல் நிலங்கள்; கெசேர், அதன் மேய்ச்சல் நிலங்கள்;

68וְאֶֽת־יָקְמְעָם֙ וְאֶת־מִגְרָשֶׁ֔יהָ וְאֶת־בֵּ֥ית חוֹר֖וֹן וְאֶת־מִגְרָשֶֽׁיהָ׃

68 . யோக்மேயாமையும் அதின் வெளிநிலங்களையும், பேத்ஓரோனையும் அதின் வெளிநிலங்களையும்,
68 Jokmeam, Beth-horon,
68 யோக்மயாம், அதன் மேய்ச்சல் நிலங்கள்; பெத்கோரோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்;

69וְאֶת־אַיָּלוֹן֙ וְאֶת־מִגְרָשֶׁ֔יהָ וְאֶת־גַּת־רִמּ֖וֹן וְאֶת־מִגְרָשֶֽׁיהָ׃

69 . ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும்,
69 Aijalon, and Gath-rimmon, together with their pasturelands.
69 அய்யலோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்; கத்ரிம்மோன் அதன் மேய்ச்சல் நிலங்கள்,

70וּמִֽמַּחֲצִית֙ מַטֵּ֣ה מְנַשֶּׁ֔ה אֶת־עָנֵר֙ וְאֶת־מִגְרָשֶׁ֔יהָ וְאֶת־בִּלְעָ֖ם וְאֶת־מִגְרָשֶׁ֑יהָ לְמִשְׁפַּ֥חַת לִבְנֵי־קְהָ֖ת הַנּוֹתָרִֽים׃

70 . மனாசேயின் பாதிக்கோத்திரத்திலே ஆனேரையும் அதின் வெளிநிலங்களையும், பீலியாமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவைகள் காகாத் புத்திரரிலுள்ள மற்ற வம்சங்களுக்கு இருந்தது.
70 And from the half-tribe of Manasseh the remaining clans of the Kohathites were given Aner and Bileam, together with their pasturelands.
70 மனாசேயின் பாதிக்குலத்தில் ஆனேர், அதன் மேய்ச்சல் நிலங்கள்; பிலயாம், அதன் மேய்ச்சல் நிலங்கள்; இவையே கோகாத்தின் புதல்வரின் எஞ்சிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டவை.

71לִבְנֵי֮ גֵּרְשׁוֹם֒ מִמִּשְׁפַּ֗חַת חֲצִי֙ מַטֵּ֣ה מְנַשֶּׁ֔ה אֶת־גּוֹלָ֥ן בַּבָּשָׁ֖ן וְאֶת־מִגְרָשֶׁ֑יהָ וְאֶת־עַשְׁתָּר֖וֹת וְאֶת־מִגְרָשֶֽׁיהָ׃

71 . கெர்சோம் புத்திரருக்கு மனாசேயின் பாதிக்கோத்திர வம்சத்திலே பாசானிலிருக்கிற கோலானும் அதின் வெளிநிலங்களும், அஸ்தரோத்தும் அதின் வெளிநிலங்களும்,
71 The Gershomites received the following: From the clan of the half-tribe of Manasseh they were given Golan in Bashan and also Ashtaroth, together with their pasturelands.
71 கேர்சோம் புதல்வருக்கு மனாசே பாதிக்குலக் குடும்பங்களினின்று கிடைத்தவை; பாசானிலுள்ள கோலான், அதன் மேய்ச்சல் நிலங்கள்; அஸ்தரோத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்.

72וּמִמַּטֵּ֣ה יִשָׂשכָ֔ר אֶת־קֶ֖דֶשׁ וְאֶת־מִגְרָשֶׁ֑יהָ אֶת־דָּבְרַ֖ת וְאֶת־מִגְרָשֶֽׁיהָ׃

72 . இசக்கார் கோத்திரத்திலே கேதேசும் அதின் வெளிநிலங்களும், தாபிராத்தும் அதின் வெளிநிலங்களும்,
72 From the tribe of Issachar they were given Kedesh, Daberath,
72 இசக்கார் குலத்திலிருந்து கிடைத்தவை; கெதேசு, அதன் மேய்ச்சல் நிலங்கள்; தபராத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்.

73וְאֶת־רָאמוֹת֙ וְאֶת־מִגְרָשֶׁ֔יהָ וְאֶת־עָנֵ֖ם וְאֶת־מִגְרָשֶֽׁיהָ׃

73 . ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், ஆனேமும் அதின் வெளிநிலங்களும்,
73 Ramoth, and Anem, together with their pasturelands.
73 இராமோத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்; ஆனேம் அதன் மேய்ச்சல் நிலங்கள்.

74וּמִמַּטֵּ֣ה אָשֵׁ֔ר אֶת־מָשָׁ֖ל וְאֶת־מִגְרָשֶׁ֑יהָ וְאֶת־עַבְדּ֖וֹן וְאֶת־מִגְרָשֶֽׁיהָ׃

74 . ஆசேர் கோத்திரத்திலே மாஷாலும் அதின் வெளிநிலங்களும், அப்தோனும் அதின் வெளிநிலங்களும்,
74 From the tribe of Asher they were given Mashal, Abdon,
74 ஆசேர் குலத்திலிருந்து கிடைத்தவை; மாசால், அதன் மேய்ச்சல் நிலங்கள்; அப்தோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்;

75וְאֶת־חוּקֹק֙ וְאֶת־מִגְרָשֶׁ֔יהָ וְאֶת־רְחֹ֖ב וְאֶת־מִגְרָשֶֽׁיהָ׃

75 . உக்கோக்கும் அதின் வெளிநிலங்களும், ரேகோபும் அதின் வெளிநிலங்களும்.
75 Hukok, and Rehob, together with their pasturelands.
75 உக்கோக்கு, அதன் மேய்ச்சல் நிலங்கள்; இரகோபு, அதன் மேய்ச்சல் நிலங்கள்.

76וּמִמַּטֵּ֣ה נַפְתָּלִ֗י אֶת־קֶ֤דֶשׁ בַּגָּלִיל֙ וְאֶת־מִגְרָשֶׁ֔יהָ וְאֶת־חַמּ֖וֹן וְאֶת־מִגְרָשֶׁ֑יהָ וְאֶת־קִרְיָתַ֖יִם וְאֶת־מִגְרָשֶֽׁיהָ׃

76 . நப்தலி கோத்திரத்திலே கலிலேயாவிலிருக்கிற கேதேசும் அதின் வெளிநிலங்களும், அம்மோனும் அதின் வெளிநிலங்களும், கீரியாத்தாயிமும் அதின் வெளிநிலங்களும் இருந்தது.
76 And from the tribe of Naphtali they were given Kedesh in Galilee, Hammon, and Kiriathaim, together with their pasturelands.
76 நப்தலி குலத்திலிருந்து கிடைத்தவை; கலிலேயாவிலிருக்கும் கெதேசு, அதன் மேய்ச்சல் நிலங்கள்; அம்மோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்; கிரியத்தாயிம், அதன் மேய்ச்சல் நிலங்கள்.

77לִבְנֵ֣י מְרָרִי֮ הַנּוֹתָרִים֒ מִמַּטֵּ֣ה זְבוּלֻ֔ן אֶת־רִמּוֹנ֖וֹ וְאֶת־מִגְרָשֶׁ֑יהָ אֶת־תָּב֖וֹר וְאֶת־מִגְרָשֶֽׁיהָ׃

77 . மெராரியின் மற்றப் புத்திரருக்கு செபுலோன் கோத்திரத்திலே ரிம்மோனும் அதின் வெளிநிலங்களும், தாபோரும் அதின் வெளிநிலங்களும்,
77 The Merarites (the rest of the Levites) received the following: From the tribe of Zebulun they were given Rimmono and Tabor, together with their pasturelands.
77 மெராரியின் எஞ்சிய புதல்வருக்குச் செபுலோன் குலத்திலிருந்து கிடைத்தவை; ரிம்மோனோ, அதன் மேய்ச்சல் நிலங்கள்; தாபோர், அதன் மேய்ச்சல் நிலங்கள்.

78וּמֵעֵ֜בֶר לְיַרְדֵּ֣ן יְרֵחוֹ֮ לְמִזְרַ֣ח הַיַּרְדֵּן֒ מִמַּטֵּ֣ה רְאוּבֵ֔ן אֶת־בֶּ֥צֶר בַּמִּדְבָּ֖ר וְאֶת־מִגְרָשֶׁ֑יהָ וְאֶת־יַ֖הְצָה וְאֶת־מִגְרָשֶֽׁיהָ׃

78 . எரிகோவுக்கு அப்புறமாயிருக்கிற யோர்தானுக்கு அப்பாலே யோர்தானுக்குக் கிழக்கே இருக்கிற ரூபன் கோத்திரத்திலே வனாந்தரத்திலுள்ள பேசேரும் அதின் வெளிநிலங்களும், யாத்சாவும் அதின் வெளிநிலங்களும்,
78 From the tribe of Reuben east of the Jordan opposite Jericho they were given Bezer in the wilderness, Jahzah,
78 எரிகோவுக்கு அப்பால், யோர்தானுக்குக் கிழக்கே ரூபன் குலத்திலிருந்து கிடைத்தவை; பாலை நிலத்திலுள்ள பெட்சேர், அதன் மேய்ச்சல் நிலங்கள்; யாகுசா, அதன் மேய்ச்சல் நிலங்கள்;

79וְאֶת־קְדֵמוֹת֙ וְאֶת־מִגְרָשֶׁ֔יהָ וְאֶת־מֵיפַ֖עַת וְאֶת־מִגְרָשֶֽׁיהָ׃

79 . கேதேமோத்தும் அதின் வெளிநிலங்களும், மேப்பாத்தும் அதின் வெளிநிலங்களும்,
79 Kedemoth, and Mephaath, together with their pasturelands.
79 கெதமோத்து அதன் மேய்ச்சல் நிலங்கள்; மேபாத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்.

80וּמִ֨מַּטֵּה־גָ֔ד אֶת־רָאמ֥וֹת בַּגִּלְעָ֖ד וְאֶת־מִגְרָשֶׁ֑יהָ וְאֶֽת־מַחֲנַ֖יִם וְאֶת־מִגְרָשֶֽׁיהָ׃

80 . காத் கோத்திரத்திலே கீலேயாத்திலுள்ள ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், மக்னாயீமும் அதின் வெளிநிலங்களும்,
80 And from the tribe of Gad they were given Ramoth in Gilead, Mahanaim,
80 காத்து குலத்திலிருந்து கிடைத்தவை; கிலயாதிலுள்ள இராமோத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்; மகனயிம், அதன் மேய்ச்சல் நிலங்கள்;

81וְאֶת־חֶשְׁבּוֹן֙ וְאֶת־מִגְרָשֶׁ֔יהָ וְאֶת־יַעְזֵ֖יר וְאֶת־מִגְרָשֶֽׁיהָ׃

81 . எஸ்போனும் அதின் வெளிநிலங்களும், யாசேரும் அதின் வெளிநிலங்களும் இருந்தது.
81 Heshbon, and Jazer, together with their pasturelands.
81 கெஸ்போன், அதன் மேய்ச்சல் நிலங்கள்; யாசேர், அதன் மேய்ச்சல் நிலங்கள்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

1 Chronicles Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29

Footnotes:
14 a Jehozadak  is a variant of Jozadak ; also in verse 15; see Ezra 3:2.
16 b Gershom  is a variant of Gershon ; similarly in verses 17, 20, 43, 62, and 71; see verse 1.
23 c Ebiasaph  is a variant of Abiasaph ; also in verse 37; see Exodus 6:24.
26 d Some Hebrew manuscripts, LXX, and Syriac; most Hebrew manuscripts Elkanah. The sons of Elkanah:
27 e Eliab  is also called Eliel ; see verse 34. Both of these are other names for Elihu ; see 1 Samuel 1:1.
27 f Hebrew; some LXX manuscripts include and Samuel his son ; see verses 3334 and 1 Samuel 1:19–20.
28 g See Syriac and some LXX manuscripts (also verse 33 and 1 Samuel 8:2); Hebrew The sons of Samuel: the firstborn Vashni, then Abiah .
34 h Eliel  is also called Eliab ; see verse 27. Both of these are other names for Elihu ; see 1 Samuel 1:1.
40 i Most Hebrew manuscripts; some Hebrew manuscripts, one LXX manuscript, and Syriac Maaseiah
49 j Or the Holy of Holies
57 k As in the parallel text at Joshua 21:13; Hebrew were given the cities of refuge: Hebron, Libnah
58 l Some Hebrew manuscripts; MT Hilez ; parallel text at Joshua 21:15 Holon
59 m Ashan  is a variant of Ain ; see Joshua 21:16.
59 n Syriac and the parallel text at Joshua 21:16; MT does not include Juttah,
60 o LXX, Syriac, and parallel text at Joshua 21:17; MT does not include Gibeon,
62 p Gershomites  is a variant of Gershonites ; also in verse 71; see 1 Chronicles 23:7.
67 q As in the parallel text at Joshua 21:21; Hebrew They were given the cities of refuge: Shechem
77 r LXX (they were given) Jokneam, Kartah, Rimmono, and Tabor ; see Joshua 21:34.
78 Jahzah  is a variant of Jahaz ; see Numbers 21:23.

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.