பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
1 Chronicles 1 நாளாகமம் דִבְרֵי הַיָמִים א
1 நாளாகமம் 25 | 1 Chronicles 25
Twenty-Four Divisions of Musicians
1 மேலும் சுரமண்டலங்களாலும் தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; தங்கள் ஊழியத்தின் கிரியைக்குக் குறித்துவைக்கப்பட்ட மனுஷர்களின் தொகையாவது:
1 Additionally, David and the commanders of the army set apart some of the sons of Asaph, Heman, and Jeduthun to prophesy with the accompaniment of lyres, harps, and cymbals. The following is the list of the men who performed this service:
1 தாவீதும் படைத்தலைவர்களும் ஆசாபு, எமான், எதுத்தூன் ஆகியோரின் புதல்வருள் சிலரைத் தெரிந்தெடுத்தனர். அவர்கள் சுரமண்டலங்களையும், தம்புருகளையும், கைத்தாளங்களையும் இசைத்து இறைவாக்குரைக்க நியமிக்கப்பட்டனர். பணியாளர் பட்டியலும், அவர்கள் செய்த பணிகளும் பின்வருமாறு:
2 ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப்பின் வசத்திலிருக்கிற, ஆசாப்பின் குமாரரில் சக்கூர், யோசேப்பு, நெதானியா, அஷாரேலா என்பவர்களும்,
2 From the sons of Asaph: Zaccur, Joseph, Nethaniah, and Asarelah. These sons of Asaph were under the direction of Asaph, who prophesied under the direction of the king.
2 ஆசாபின் புதல்வர் சக்கூர், யோசேப்பு நெத்தனியா, அசரேலா. இவர்கள் ஆசாபின் மேற்பார்வையில் அரச கட்டளைப்படி இறைவாக்குரைத்தனர்.
3 கர்த்தரைப் போற்றித் துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தங்கள் தகப்பனாகிய எதுத்தூனின் வசத்திலே சுரமண்டலங்களை வாசிக்க, எதுத்தூனின் குமாரராகிய கெதலியா, சேரீ, எஷாயா, அஷபியா, மத்தித்தியா என்னும் ஆறுபேரும்,
3 From the sons of Jeduthun: Gedaliah, Zeri, Jeshaiah, Shimei, Hashabiah, and Mattithiah—six in all—under the direction of their father Jeduthun, who prophesied with the harp, giving thanks and praise to the LORD.
3 எதுத்தூனும், கெதலியா, செரீ, ஏசாயா, அசபியா, மத்தித்தயா ஆகிய எதுத்தூனின் புதல்வர்கள் மொத்தம் அறுவர். இவர்கள் தந்தை எதுத்தூனின் மேற்பார்வையில் சுரமண்டலத்துடன் இறைவாக்குரைத்து ஆண்டவருக்கு நன்றியும் புகழும் செலுத்தினர்.
4 கொம்பைத் தொனிக்கப்பண்ண, தேவவிஷயத்தில் ராஜாவுக்கு ஞானதிருஷ்டியுள்ள புருஷனாகிய ஏமானின் குமாரரான புக்கியா, மத்தனியா, ஊசியேல், செபுவேல், எரிமோத், அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்தி, ரொமந்தியேசர், யோஸ்பெகாஷா, மலோத்தி, ஒத்திர், மகாசியோத் என்பவர்களுமே.
4 From the sons of Heman: Bukkiah, Mattaniah, Uzziel, Shebuel, Jerimoth, Hananiah, Hanani, Eliathah, Giddalti, Romamti-ezer, Joshbekashah, Mallothi, Hothir, and Mahazioth.
4 ஏமானின் புதல்வர் புக்கியா, மத்தனியா, உசியேல், செபுவேல், எரிமோத்து, அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்த்தி, ரோமம்த்தி, எசேர், யோசபக்காசா, மல்லோத்தி, ஓதிர், மகசியோத்து.
5 இவர்களெல்லாரும் ஏமானின் குமாரராயிருந்தார்கள்; தேவன் ஏமானுக்குப் பதினாலு குமாரரையும் மூன்று குமாரத்திகளையும் கொடுத்தார்.
5 All these sons of Heman the king’s seer were given him through the promises of God to exalt him, for God had given Heman fourteen sons and three daughters.
5 இவர்கள் அனைவரும் அரசரின் திருக்காட்சியாளரான ஏமானின் புதல்வர். ஆற்றலை உயர்த்துவதாகக் கூறிய வாக்குறுதியின்படியே, கடவுள் ஆமானுக்குப் பதினான்கு புதல்வரையும் மூன்று புதல்வியரையும் அளித்திருந்தார்.
6 இவர்கள் அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்க் கர்த்தருடைய ஆலயத்தில் தாளங்கள் தம்புருகள் சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க, தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக அவரவர் தங்கள் தங்கள் தகப்பன்மாராகிய ஆசாப் எதுத்தூன், ஏமான் என்பவர்கள் வசத்தில் இருந்தார்கள்.
6 All these were under the direction of their fathers for the music of the house of the LORD with cymbals, harps, and lyres, for the service of the house of God. Asaph, Jeduthun, and Heman were under the direction of the king.
6 இவர்கள் எல்லாரும் தங்கள் தந்தையின் மேற்பார்வையில் ஆண்டவரின் கோவிலில் கைத்தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகியவற்றை இசைத்துக் கடவுளின் கோவிலில் பணியாற்றினர். இவ்வாறு, ஆசாபு, எதுத்தூன், ஏமான் ஆகியோர் அரசரின் கட்டளைப்படி செயல்பட்டனர்.
7 கர்த்தரைப் பாடும் பாட்டுகளைக் கற்றுக்கொண்டு, நிபுணரான தங்கள் சகோதரரோடுங்கூட அவர்கள் இலக்கத்திற்கு இருநூற்றெண்பத்தெட்டுப்பேராயிருந்தார்கள்.
7 Together with their relatives, who were all trained and skillful in the songs of the LORD, they numbered 288.
7 இவர்களும் இவர்களின் உறவின்முறையினராக ஆண்டவரின் பாடல்களில் தேர்ச்சி பெற்றவர்களும் மொத்தம் இருநூற்று எண்பத்து எட்டுப்பேர்.
8 அவர்களில் சிறியவனும் பெரியவனும், ஆசானும் மாணாக்கனும், சரிசமானமாய் முறைவரிசைக்காகச் சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.
8 They cast lots for their duties, young and old alike, teacher as well as pupil.
8 முதியோரும் இளைஞரும், ஆசிரியரும் மாணவரும் யாவரும் ஒன்றுபோல் திருவுளச்சீட்டின் மூலமாக முறைப்பணிக்கு நியமிக்கப்பட்டார்கள்.
9 முதலாவது சீட்டு ஆசாப் வம்சமான யோசேப்பின் பேர்வழிக்கும், இரண்டாவது கெதலியா, அவன் சகோதரர், அவன் குமாரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
9 The first lot, which was for Asaph, fell to Joseph, his sons, and his brothers—12 in all; the second to Gedaliah, his sons, and his brothers—12 in all;
9 சீட்டு விழுந்த முறை; முதல் சீட்டு ஆசாபு குடும்பத்தின் யோசேப்புக்கு; இரண்டாவது கெதலியா, அவர் சகோதரர்களும் அவர் புதல்வர்களும் ஆகிய பன்னிருவர்க்கும்,
10 மூன்றாவது சக்கூர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் வழிக்கும்,
10 the third to Zaccur, his sons, and his brothers—12 in all;
10 மூன்றாவது சக்கூர், அவர் புதல்வர்கள் அவர் சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
11 நான்காவது இஸ்ரி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் வழிக்கும்,
11 the fourth to Izri, his sons, and his brothers—12 in all;
11 நான்காவது இட்சரி, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
12 ஐந்தாவது நெத்தனியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
12 the fifth to Nethaniah, his sons, and his brothers—12 in all;
12 ஐந்தாவது, நெத்தனியா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
13 ஆறாவது புக்கியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
13 the sixth to Bukkiah, his sons, and his brothers—12 in all;
13 ஆறாவது புக்கியா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
14 ஏழாவது எசரேலோ, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர்வழிக்கும்,
14 the seventh to Jesarelah, his sons, and his brothers—12 in all;
14 ஏழாவது அசரேலா, அவர் புதல்வர்கள் சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
15 எட்டாவது எஷாயா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
15 the eighth to Jeshaiah, his sons, and his brothers—12 in all;
15 எட்டாவது ஏசாயா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
16 ஒன்பதாவது மத்தனீயா, அவன் குமாரர், அவன் சகோதரர் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
16 the ninth to Mattaniah, his sons, and his brothers—12 in all;
16 ஒன்பதாவது மத்தனியா, அவர் புதல்வர்கள் சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
17 பத்தாவது சிமேயா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
17 the tenth to Shimei, his sons, and his brothers—12 in all;
17 பத்தாவது சிமயி, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
18 பதினோராவது அசாரியேல், அவன்குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
18 the eleventh to Azarel, his sons, and his brothers—12 in all;
18 பதினொன்றாவது அசரியேல், அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
19 பன்னிரண்டாவது அஷாபியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
19 the twelfth to Hashabiah, his sons, and his brothers—12 in all;
19 பன்னிரண்டாவது அசபியா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
20 பதின்மூன்றாவது சுபவேல், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
20 the thirteenth to Shubael, his sons, and his brothers—12 in all;
20 பதின்மூன்றாவது சூபாவேல், அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
21 பதினான்காவது மத்தித்தியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,
21 the fourteenth to Mattithiah, his sons, and his brothers—12 in all;
21 பதினான்காவது மத்தித்தியா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
22 பதினைந்தாவது எரேமோத், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,
22 the fifteenth to Jeremoth, his sons, and his brothers—12 in all;
22 பதினைந்தாவது எரேமோத்து, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
23 பதினாறாவது அனனியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,
23 the sixteenth to Hananiah, his sons, and his brothers—12 in all;
23 பதினாறாவது அனனியா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
24 பதினேழாவது யோஸ்பேக்காஷா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
24 the seventeenth to Joshbekashah, his sons, and his brothers—12 in all;
24 பதினேழாவது யோசபக்காசா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
25 பதினெட்டாவது ஆனானி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,
25 the eighteenth to Hanani, his sons, and his brothers—12 in all;
25 பதினெட்டாவது அனானி, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
26 பத்தொன்பதாவது, மலோத்தி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,
26 the nineteenth to Mallothi, his sons, and his brothers—12 in all;
26 பத்தொன்பதாவது மல்லோத்தி, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
27 இருபதாவது எலியாத்தா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
27 the twentieth to Eliathah, his sons, and his brothers—12 in all;
27 இருபதாவது எலியாத்தா, அவர் புதல்வர், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
28 இருபத்தோராவது ஒத்திர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,
28 the twenty-first to Hothir, his sons, and his brothers—12 in all;
28 இருபத்து ஒன்றாவது ஓதீர், அவர் புதல்வர், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
29 இருபத்திரண்டாவது கிதல்தி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,
29 the twenty-second to Giddalti, his sons, and his brothers—12 in all;
29 இருபத்து இரண்டாவது கிதல்த்தி, அவர் புதல்வர், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
30 இருபத்துமூன்றாவது மகாசியோத், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,
30 the twenty-third to Mahazioth, his sons, and his brothers—12 in all;
30 இருபத்து மூன்றாவது மகசியோத்து, அவர் புதல்வர், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்.
31 இருபத்துநான்காவது ரொமந்தியேசர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும் விழுந்தது.
31 and the twenty-fourth to Romamti-ezer, his sons, and his brothers—12 in all.
31 இருபத்து நான்காவது ரோமம்த்திஎசேர், அவர் புதல்வர், சகோதரர்கள் பன்னிருவர்க்கும்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
3 a One Hebrew manuscript and some LXX manuscripts (see also verse 17); most Hebrew manuscripts do not include Shimei .
4 b Shebuel is a variant of Shubael ; see verse 20.
4 c Jerimoth is a variant of Jeremoth ; see verse 22.
9 d See LXX and the total in verse 7; Hebrew does not include his sons, and his brothers—12 in all;
11 e Izri is a variant of Zeri ; see verse 3.
14 f Jesarelah is a variant of Asarelah ; see verse 2.
18 g Azarel is a variant of Uzziel ; see verse 4.
22 h Jeremoth is a variant of Jerimoth ; see verse 4.
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.