பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

1 Chronicles  1 நாளாகமம்  דִבְרֵי הַיָמִים א

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29

1 நாளாகமம் 5 | 1 Chronicles 5

The Descendants of Reuben

1וּבְנֵ֨י רְאוּבֵ֥ן בְּכֽוֹר־יִשְׂרָאֵל֮ כִּ֣י ה֣וּא הַבְּכוֹר֒ וּֽבְחַלְּלוֹ֙ יְצוּעֵ֣י אָבִ֔יו נִתְּנָה֙ בְּכֹ֣רָת֔וֹ לִבְנֵ֥י יוֹסֵ֖ף בֶּן־יִשְׂרָאֵ֑ל וְלֹ֥א לְהִתְיַחֵ֖שׂ לַבְּכֹרָֽה׃

1 ரூபன் இஸ்ரவேலுக்கு முதற்பிறந்த சேஷ்டபுத்திரன்; ஆனாலும் அவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தினபடியினால், கோத்திரத்து அட்டவணையிலே அவன் முதற் பிறந்தவனாக எண்ணப்படாமல், அவனுடைய சேஷ்டபுத்திர சுதந்தரம் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் குமாரருக்குக் கொடுக்கப்பட்டது.
1 These were the sons of Reuben the firstborn of Israel. Though he was the firstborn, his birthright was given to the sons of Joseph son of Israel, because Reuben defiled his father’s bed. So he is not reckoned according to birthright.
1 இஸ்ரயேலின் தலைமகன் ரூபனின் புதல்வர்: அவர் தலைமகனாய் இருந்தும் தம் தந்தையின் மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தியதால் அவரது தலைமகனுரிமை இஸ்ரயேலின் மகன் யோசேப்பின் புதல்வர்களுக்கு வழங்கப்பட்டது. எனவே, தலைமுறை அட்டவணையில் அவர் தலைமகனாய்க் கருதப்படவில்லை.1

2כִּ֤י יְהוּדָה֙ גָּבַ֣ר בְּאֶחָ֔יו וּלְנָגִ֖יד מִמֶּ֑נּוּ וְהַבְּכֹרָ֖ה לְיוֹסֵֽף׃

2 யூதா தன் சகோதரரிலே பலத்ததினால் ராஜாதிபத்தியம் அவன் சந்ததியிலுண்டானது; ஆகிலும் சேஷ்டபுத்திர சுதந்தரம் யோசேப்புடையதாயிற்று.
2 And though Judah prevailed over his brothers and a ruler came from him, the birthright belonged to Joseph.
2 யூதா, தம் சகோதரருள் வலிமைமிக்கவராயிருந்தும் அவரிடமிருந்து தலைவர் ஒருவர் தோன்றியபோதிலும், தலைமகனுரிமை யோசேப்புக்கே உரித்தாயிற்று.2

3בְּנֵ֥י רְאוּבֵ֖ן בְּכ֣וֹר יִשְׂרָאֵ֑ל חֲנ֥וֹךְ וּפַלּ֖וּא חֶצְר֥וֹן וְכַרְמִֽי׃

3 இஸ்ரவேலின் முதற்பேறான ரூபனின் குமாரன் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள்.
3 The sons of Reuben, the firstborn of Israel: Hanoch, Pallu, Hezron, and Carmi.
3 இஸ்ரயேலின் தலைமகன் ரூபனின் புதல்வர்: அனோக்கு, பல்லூ, எட்சரோன், கர்மி.

4בְּנֵ֖י יוֹאֵ֑ל שְׁמַֽעְיָ֥ה בְנ֛וֹ גּ֥וֹג בְּנ֖וֹ שִׁמְעִ֥י בְנֽוֹ׃

4 யோவேலின் குமாரரில் ஒருவன் செமாயா; இவன் குமாரன் கோக்; இவன் குமாரன் சிமேய்.
4 The descendants of Joel: Shemaiah his son, Gog his son, Shimei his son,
4 யோவேலின் புதல்வர்: அவர் மகன் செமாயா, அவர் மகன் கோகு, அவர் மகன் சிமயி,

5מִיכָ֥ה בְנ֛וֹ רְאָיָ֥ה בְנ֖וֹ בַּ֥עַל בְּנֽוֹ׃

5 இவன் குமாரன் மீகா; இவன் குமாரன் ராயா; இவன் குமாரன் பாகால்.
5 Micah his son, Reaiah his son, Baal his son,
5 அவர் மகன் மீக்கா, அவர் மகன் இரயாயா, அவர் மகன் பாகால்,

6בְּאֵרָ֣ה בְנ֔וֹ אֲשֶׁ֣ר הֶגְלָ֔ה תִּלְּגַ֥ת פִּלְנְאֶ֖סֶר מֶ֣לֶךְ אַשֻּׁ֑ר ה֥וּא נָשִׂ֖יא לָרֽאוּבֵנִֽי׃

6 இவன் குமாரன் பேரா; ரூபனியரின் பிரபுவான இவனை அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசர் சிறைபிடித்துப்போனான்.
6 and Beerah his son, whom Tiglath-pileser king of Assyria carried into exile. Beerah was a leader of the Reubenites.
6 அவர் மகன் பெயேரா; ரூபனியரின் தலைவரான அவரை அசீரிய மன்னன் தில்கத்பில்னேசர் சிறைப்படுத்திச் சென்றான்.3

7וְאֶחָיו֙ לְמִשְׁפְּחֹתָ֔יו בְּהִתְיַחֵ֖שׂ לְתֹלְדוֹתָ֑ם הָרֹ֥אשׁ יְעִיאֵ֖ל וּזְכַרְיָֽהוּ׃

7 தங்கள் சந்ததிகளின்படியே தங்கள் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட அவன் சகோதரரில் தலைவர் ஏயேலும், சகரியாவும்,
7 His relatives by their clans are recorded in their genealogy: Jeiel the chief, Zechariah,
7 அவர்களது உறவின்முறையில் குடும்ப வாரியாகத் தலைமுறை அட்டவணையில் குறிக்கப்பட்டோர்; தலைவர் எயியேல், செக்கரியா,

8וּבֶ֙לַע֙ בֶּן־עָזָ֔ז בֶּן־שֶׁ֖מַע בֶּן־יוֹאֵ֑ל ה֚וּא יוֹשֵׁ֣ב בַּעֲרֹעֵ֔ר וְעַד־נְב֖וֹ וּבַ֥עַל מְעֽוֹן׃

8 யோவேலின் மகனாகிய சேமாவுக்குப் பிறந்த ஆசாசின் குமாரன் பேலாவும்; இவன் சந்ததியார் ஆரோவேரிலும்; நேபோமட்டும், பாகால்மயோன்மட்டும் வாசம்பண்ணினார்கள்.
8 and Bela son of Azaz, the son of Shema, the son of Joel. They settled in Aroer and as far as Nebo and Baal-meon.
8 யோவேல் மகன் செமாவிற்குப் பிறந்த ஆசாசு புதல்வன் பெலா. அவர் வழிமரபினர் அரோயேரிலிருந்து நேபோ, பாகால்மெயோன் வரை குடியேறியிருந்தனர்.

9וְלַמִּזְרָ֗ח יָשַׁב֙ עַד־לְב֣וֹא מִדְבָּ֔רָה לְמִן־הַנָּהָ֖ר פְּרָ֑ת כִּ֧י מִקְנֵיהֶ֛ם רָב֖וּ בְּאֶ֥רֶץ גִּלְעָֽד׃

9 கிழக்கே ஐபிராத்து நதிதொடங்கி வனாந்தரத்தின் எல்லைமட்டும் அவர்கள் வாசம்பண்ணினார்கள்; அவர்கள் ஆடுமாடுகள் கீலேயாத்தேசத்தில் மிகுதியாயிற்று.
9 They also settled in the east as far as the edge of the desert that extends to the Euphrates River, because their livestock had increased in the land of Gilead.
9 அவர்கள் கிழக்கே யூப்பிரத்தீசு நதி முதல் பாலைநிலத்தின் எல்லை வரை வாழ்ந்து வந்தனர்; கிலயாது நாட்டில் அவர்களின் கால்நடைகள் பெருகின.

10וּבִימֵ֣י שָׁא֗וּל עָשׂ֤וּ מִלְחָמָה֙ עִם־הַֽהַגְרִאִ֔ים וַֽיִּפְּל֖וּ בְּיָדָ֑ם וַיֵּשְׁבוּ֙ בְּאָ֣הֳלֵיהֶ֔ם עַֽל־כָּל־פְּנֵ֖י מִזְרָ֥ח לַגִּלְעָֽד׃

10 சவுலின் நாட்களில் ஆகாரியரோடு அவர்கள் யுத்தம்பண்ணி, தங்கள் கையால் அவர்கள் விழுந்தபின், அவர்கள் கூடாரங்களிலே கீலேயாத்தின் கீழ்ப்புறமெல்லாம் குடியேறினார்கள்.
10 During the days of Saul they waged war against the Hagrites, who were defeated at their hands, and they occupied the homes of the Hagrites throughout the region east of Gilead.
10 அவர்கள் சவுலின் நாள்களில் அகாரியருடன் போர்த்தொடுத்துத் தம் கையால் அவர்களை வீழ்த்தினர்; கிலயாதின் கிழக்குப் புறம் எங்கும் தங்கள் கூடாரங்களில் வாழ்ந்தனர்.

The Descendants of Gad

11וּבְנֵי־גָ֣ד לְנֶגְדָּ֗ם יָֽשְׁב֛וּ בְּאֶ֥רֶץ הַבָּשָׁ֖ן עַד־סַלְכָֽה׃

11 காத்தின் புத்திரர் அவர்களுக்கு எதிரே பாசான்தேசத்திலே சல்காமட்டும் வாசம்பண்ணினார்கள்.
11 The descendants of Gad lived next to the Reubenites in the land of Bashan, as far as Salecah:
11 அவர்களுக்கு வடக்கே பாசான் நிலப்பகுதியில் சலிக்காவரை காத்தின் புதல்வர் குடியேறியிருந்தனர்.

12יוֹאֵ֣ל הָרֹ֔אשׁ וְשָׁפָ֖ם הַמִּשְׁנֶ֑ה וְיַעְנַ֥י וְשָׁפָ֖ט בַּבָּשָֽׁן׃

12 அவர்களில் யோவேல் தலைவனும், சாப்பானும் அவனுக்கு இரண்டாவதுமாயிருந்தான்; யானாயும் சாப்பாத்தும் பாசானில் இருந்தார்கள்.
12 Joel was the chief, Shapham the second, then Jaanai and Shaphat, who lived in Bashan.
12 பாசானில், தலைவரான யோவேல், அடுத்தவரான சாப்பாம், யானாய், சாப்பாத்து ஆகியோர் வாழ்ந்தனர்.

13וַאֲחֵיהֶ֞ם לְבֵ֣ית אֲבוֹתֵיהֶ֗ם מִֽיכָאֵ֡ל וּמְשֻׁלָּ֡ם וְ֠שֶׁבַע וְיוֹרַ֧י וְיַעְכָּ֛ן וְזִ֥יעַ וָעֵ֖בֶר שִׁבְעָֽה׃

13 அவர்கள் பிதாக்களின் வீட்டாராகிய அவர்கள் சகோதரர், மிகாவேல், மெசுல்லாம், சேபா, யோராயி, யாக்கான், சீகா, ஏபேர் என்னும் ஏழுபேர்.
13 Their kinsmen by families were Michael, Meshullam, Sheba, Jorai, Jacan, Zia, and Eber—seven in all.
13 அவர்கள் மூதாதையர் வீட்டுச் சகோதரர் மிக்கேல், மெசுல்லாம், சேபா, யோராய், யாக்கான், சீயா, ஏபேர் என்னும் ஏழு பேர்.

14אֵ֣לֶּה ׀ בְּנֵ֣י אֲבִיחַ֗יִל בֶּן־חוּרִ֡י בֶּן־יָ֠רוֹחַ בֶּן־גִּלְעָ֧ד בֶּן־מִיכָאֵ֛ל בֶּן־יְשִׁישַׁ֥י בֶּן־יַחְדּ֖וֹ בֶּן־בּֽוּז׃

14 இவர்கள் ஊரிக்குப் பிறந்த அபியேலின் குமாரர்; ஊரி என்பவன் யெரொவாவுக்கும், யெரொவா கீலேயாத்துக்கும், கீலேயாத் மிகாவேலுக்கும், மிகாவேல் எசிசாயிக்கும், எசிசாயி யாதோவுக்கும், யாதோ பூசுக்கும் குமாரராயிருந்தவர்கள்.
14 These were the sons of Abihail son of Huri, the son of Jaroah, the son of Gilead, the son of Michael, the son of Jeshishai, the son of Jahdo, the son of Buz.
14 இவர்கள் ஊரிக்குப் பிறந்த அபிகயிலின் புதல்வர்: ஊரி யாரோவாகின் மகன்; அவர் கிலெயாதின் மகன்; அவர் மிக்கேலின் மகன்; அவர் எசிசாயின் மகன்; அவர் யாகுதோவின் மகன்; அவர் பூசின் மகன்.

15אֲחִי֙ בֶּן־עַבְדִּיאֵ֣ל בֶּן־גּוּנִ֔י רֹ֖אשׁ לְבֵ֥ית אֲבוֹתָֽם׃

15 கூனியின் குமாரனாகிய அப்தியேலின் மகன் அகி, அவர்கள் பிதாக்களின் வீட்டுத் தலைவனாயிருந்தான்.
15 Ahi son of Abdiel, the son of Guni, was head of their family.
15 கூனிக்குப் பிறந்த அப்தியேலின் மகன் அகி அவர்களின் மூதாதை வீட்டுக்குத் தலைவராய் இருந்தார்.

16וַיֵּֽשְׁב֛וּ בַּגִּלְעָ֥ד בַּבָּשָׁ֖ן וּבִבְנֹתֶ֑יהָ וּבְכָֽל־מִגְרְשֵׁ֥י שָׁר֖וֹן עַל־תּוֹצְאוֹתָֽם׃

16 அவர்கள் கீலேயாத்திலிருக்கிற பாசானிலும் அதின் வெளிநிலங்களிலும், சாரோனின் எல்லாப் பேட்டைகளிலும் அவைகளின் கடையாந்தரங்கள்மட்டும் வாசம்பண்ணினார்கள்.
16 They lived in Gilead, in Bashan and its towns, and throughout the pasturelands of Sharon.
16 அவர்கள் கிலயாது, பாசான், அதைச் சார்ந்த நகர்கள், சாரோனின் மேய்ச்சல் நிலப்பகுதிகள் மற்றும் அவற்றின் எல்லைகள்வரை குடியேறினர்.

17כֻּלָּם֙ הִתְיַחְשׂ֔וּ בִּימֵ֖י יוֹתָ֣ם מֶֽלֶךְ־יְהוּדָ֑ה וּבִימֵ֖י יָרָבְעָ֥ם מֶֽלֶךְ־יִשְׂרָאֵֽל׃

17 இவர்களெல்லாரும் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் நாட்களிலும் தங்கள் வம்சத்து அட்டவணைப்படி தொகை, ஏற்றப்பட்டார்கள்.
17 All of them were reckoned in the genealogies during the reigns of Jotham king of Judah and Jeroboam king of Israel.
17 அவர்கள் யாவரும் யூதா அரசன் யோத்தாம் காலத்திலும் இஸ்ரயேல் அரசன் எரொபவாம் நாள்களிலும் தலைமுறை அட்டவணையில் பதிவு செய்யப்பட்டனர்.

18בְּנֵֽי־רְאוּבֵ֨ן וְגָדִ֜י וַחֲצִ֥י שֵֽׁבֶט־מְנַשֶּׁה֮ מִן־בְּנֵי־חַיִל֒ אֲ֠נָשִׁים נֹשְׂאֵ֨י מָגֵ֤ן וְחֶ֙רֶב֙ וְדֹ֣רְכֵי קֶ֔שֶׁת וּלְמוּדֵ֖י מִלְחָמָ֑ה אַרְבָּעִ֨ים וְאַרְבָּעָ֥ה אֶ֛לֶף וּשְׁבַע־מֵא֥וֹת וְשִׁשִּׁ֖ים יֹצְאֵ֥י צָבָֽא׃

18 ரூபன் புத்திரரிலும், காத்தியரிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரிலும் கேடகமும் பட்டயமும் எடுத்து, வில்லெய்து, யுத்தத்திற்குப் பழகி, படைக்குப் போகத்தக்க, சேவகர் நாற்பத்து நாலாயிரத்து எழுநூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.
18 The Reubenites, the Gadites, and the half-tribe of Manasseh had 44,760 warriors—valiant men who carried the shield and sword, drew the bow, and were trained for battle.
18 ரூபனின் புதல்வர், காத்தின் புதல்வர், மனாசேயின் பாதிக்குலத்தார் ஆகியோர்களிடையே கேடயத்தையும் வாளையும் ஏந்தி, வில் எய்து, போர்ப்பயிற்சி பெற்ற வலிமைமிக்கோர் நாற்பத்து நாலாயிரத்து எழுநூற்று அறுபது பேர் இருந்தனர்.

19וַיַּעֲשׂ֥וּ מִלְחָמָ֖ה עִם־הַֽהַגְרִיאִ֑ים וִיט֥וּר וְנָפִ֖ישׁ וְנוֹדָֽב׃

19 அவர்கள் ஆகாரியரோடும், யெத்தூர் நாப்பீஸ் நோதாப் என்பவர்களோடும் யுத்தம்பண்ணுகிறபோது,
19 They waged war against the Hagrites, as well as Jetur, Naphish, and Nodab.
19 அவர்கள் ஆகாரியர், எத்தூர், நாப்பிசு, நோதாபு ஆகியோரை எதிர்த்துப் போரிட்டனர்.

20וַיֵּעָזְר֣וּ עֲלֵיהֶ֔ם וַיִּנָּתְנ֤וּ בְיָדָם֙ הַֽהַגְרִיאִ֔ים וְכֹ֖ל שֶׁ֣עִמָּהֶ֑ם כִּ֠י לֵאלֹהִ֤ים זָעֲקוּ֙ בַּמִּלְחָמָ֔ה וְנַעְתּ֥וֹר לָהֶ֖ם כִּי־בָ֥טְחוּ בֽוֹ׃

20 அவர்களோடே எதிர்க்கத் துணைபெற்றபடியினால், ஆகாரியரும் இவர்களோடிருக்கிற யாவரும் அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டார்கள்; அவர்கள் யுத்தத்திலே தேவனை நோக்கிக் கூப்பிட்டு, அவர்மேல் நம்பிக்கை வைத்தபடியினால் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.
20 And because they cried out to God in battle, they were helped against their enemies, and the Hagrites and all their allies were delivered into their hands. Because they put their trust in God, He answered their prayers.
20 அப்பொழுது அவர்கள் ஆகாரியரையும் அவர்களோடு இருந்த யாவரையும் எதிர்ப்பதற்குரிய ஆற்றலைக் கடவுளிடமிருந்து பெற்றார்கள். பகைவரும் அவர்களிடம் கையளிக்கப்பட்டனர். ஏனெனில், அவர்கள் போர் நடக்கும் போது கடவுளை நோக்கி மன்றாடினார்கள். அவர் மேல் அவர்கள் நம்பிக்கை வைத்ததால் அவரும் அவர்களின் மன்றாட்டைக் கேட்டருளினார்.

21וַיִּשְׁבּ֣וּ מִקְנֵיהֶ֗ם גְּֽמַלֵּיהֶ֞ם חֲמִשִּׁ֥ים אֶ֙לֶף֙ וְצֹ֗אן מָאתַ֤יִם וַחֲמִשִּׁים֙ אֶ֔לֶף וַחֲמוֹרִ֖ים אַלְפָּ֑יִם וְנֶ֥פֶשׁ אָדָ֖ם מֵ֥אָה אָֽלֶף׃

21 அவர்கள் இவர்களுக்கு இருந்த மிருகஜீவன்களாகிய ஐம்பதினாயிரம் ஒட்டகங்களையும், இரண்டுலட்சத்து ஐம்பதினாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், மனுஷரில் லட்சம்பேர்களையும் பிடித்தார்கள்.
21 They seized the livestock of the Hagrites—50,000 camels, 250,000 sheep, and 2,000 donkeys. They also took 100,000 captives,
21 அவர்கள் தம் எதிரிக்குச் சொந்தமான கால்நடைகளான ஐம்பதாயிரம் ஒட்டகங்களையும், இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், இலட்சம் ஆள்களையும் உயிருடன் கைப்பற்றினார்கள்.

22כִּֽי־חֲלָלִ֤ים רַבִּים֙ נָפָ֔לוּ כִּ֥י מֵהָאֱלֹהִ֖ים הַמִּלְחָמָ֑ה וַיֵּשְׁב֥וּ תַחְתֵּיהֶ֖ם עַד־הַגֹּלָֽה׃

22 யுத்தம் தேவனால் நடந்தபடியினால் அநேகர் வெட்டுண்டு விழுந்தார்கள்; தாங்கள் சிறைப்பட்டுப்போகுமட்டும் இவர்களுடைய ஸ்தலத்திலே குடியிருந்தார்கள்.
22 and many others fell slain, because the battle belonged to God. And they occupied the land until the exile.
22 அந்தப் போர் கடவுளால் நடத்தப்பட்டதால், பலர் வெட்டி வீழ்த்தப்பட்டனர். நாடு கடத்தப்படும்வரை அவர்கள் அங்கேயே வாழ்ந்தார்கள்.

The Half-Tribe of Manasseh

23וּבְנֵ֗י חֲצִי֙ שֵׁ֣בֶט מְנַשֶּׁ֔ה יָשְׁב֖וּ בָּאָ֑רֶץ מִבָּשָׁ֞ן עַד־בַּ֧עַל חֶרְמ֛וֹן וּשְׂנִ֥יר וְהַר־חֶרְמ֖וֹן הֵ֥מָּה רָבֽוּ׃

23 மனாசேயின் பாதிக்கோத்திரத்துப் புத்திரரும் அந்த தேசத்தில் குடியிருந்து, பாசான்தொடங்கிப் பாகால் எர்மோன்மட்டும், செனீர்மட்டும், எர்மோன் பர்வதமட்டும் பெருகியிருந்தார்கள்.
23 Now the people of the half-tribe of Manasseh were numerous. They settled in the land from Bashan to Baal-hermon (that is, Senir, also known as Mount Hermon).
23 மனாசேயின் பாதிக்குலத்துப் புதல்வரும் இந்த நாட்டிலேயே வாழ்ந்த வந்தனர். அவர்கள் பாசான் முதல் பாகால்எர்மோன், செனிர், எர்மோன் மலைவரைக்கும் பெருவாரியாகப் பெருகியிருந்தனர்.

24וְאֵ֖לֶּה רָאשֵׁ֣י בֵית־אֲבוֹתָ֑ם וְעֵ֡פֶר וְיִשְׁעִ֡י וֶאֱלִיאֵ֡ל וְ֠עַזְרִיאֵל וְיִרְמְיָ֨ה וְהוֹדַוְיָ֜ה וְיַחְדִּיאֵ֗ל אֲנָשִׁים֙ גִּבּ֣וֹרֵי חַ֔יִל אַנְשֵׁ֣י שֵׁמ֔וֹת רָאשִׁ֖ים לְבֵ֥ית אֲבוֹתָֽם׃

24 அவர்கள் தங்கள் பிதாக்களின் வீட்டுத் தலைவராகிய ஏப்பேர், இஷி, ஏலியேல், அஸரியேல், எரேமியா, ஒதாவியா, யாதியேல் என்பவர்கள் பராக்கிரம வீரரான மனுஷரும் பேர்பெற்ற தலைவருமாயிருந்தார்கள்.
24 These were the heads of their families: Epher, Ishi, Eliel, Azriel, Jeremiah, Hodaviah, and Jahdiel. They were mighty men of valor, famous men, and heads of their families.
24 அவர்களின் மூதாதை வீட்டுத் தலைவர்கள் இவர்களே; ஏப்பேர், இசி, எலியேல், அஸ்ரியேல், எரேமியா, ஓதவியா, எகுதியேல். அவர்கள் ஆற்றல்மிக வீரர்களாகவும் புகழ்மிக்கவர்களாகவும் தம் மூதாதை வீட்டுத் தலைவர்களாகவும் திகழ்ந்தார்கள்.

25וַיִּֽמְעֲל֔וּ בֵּאלֹהֵ֖י אֲבוֹתֵיהֶ֑ם וַיִּזְנ֗וּ אַחֲרֵי֙ אֱלֹהֵ֣י עַמֵּי־הָאָ֔רֶץ אֲשֶׁר־הִשְׁמִ֥יד אֱלֹהִ֖ים מִפְּנֵיהֶֽם׃

25 அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனுக்குத் துரோகம்பண்ணி, தேவன் அவர்களுக்கு முன்பாக அழித்திருந்த தேச ஜனங்களின் தேவர்களைப் பின்பற்றிச் சோரம்போனார்கள்.
25 But they were unfaithful to the God of their fathers, and they prostituted themselves with the gods of the peoples of the land, whom God had destroyed before them.
25 அவர்களோ தங்கள் கண்முன்னே கடவுள் அழித்து விட்ட நாட்டு மக்களின் தெய்வங்களைப் பின்பற்றிய வேசித்தனத்தின் மூலம் தங்கள் மூதாதையரின் கடவுளுக்குத் துரோகம் செய்தனர்.

26וַיָּעַר֩ אֱלֹהֵ֨י יִשְׂרָאֵ֜ל אֶת־ר֣וּחַ ׀ פּ֣וּל מֶֽלֶךְ־אַשּׁ֗וּר וְאֶת־ר֙וּחַ֙ תִּלְּגַ֤ת פִּלְנֶ֙סֶר֙ מֶ֣לֶךְ אַשּׁ֔וּר וַיַּגְלֵם֙ לָראוּבֵנִ֣י וְלַגָּדִ֔י וְלַחֲצִ֖י שֵׁ֣בֶט מְנַשֶּׁ֑ה וַ֠יְבִיאֵם לַחְלַ֨ח וְחָב֤וֹר וְהָרָא֙ וּנְהַ֣ר גּוֹזָ֔ן עַ֖ד הַיּ֥וֹם הַזֶּֽה׃

26 ஆகையால் இஸ்ரவேலின் தேவன் அசீரியா ராஜாவாகிய பூலின் ஆவியையும், அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசரின் ஆவியையும் எழுப்பினதினாலே, அவன் ரூபனியரும், காத்தியரும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தாருமாகிய அவர்களைச் சிறைபிடித்து இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, ஆலாவுக்கும் ஆபோருக்கும் ஆராவுக்கும் கோசான் ஆற்றங்கரைக்கும் கொண்டுபோனான்.
26 So the God of Israel stirred up the spirit of Pul king of Assyria (that is, Tiglath-pileser king of Assyria) to take the Reubenites, the Gadites, and the half-tribe of Manasseh into exile. And he brought them to Halah, Habor, Hara, and the river of Gozan, where they remain to this day.
26 ஆதலால், இஸ்ரயேலின் கடவுள் அசீரிய மன்னன் பூலையும், அசீரிய மன்னன் தில்கத்பில்னேசரையும் கிளர்ந்தெழச் செய்தார். அவன் ரூபனியரையும், காத்தியரையும், மனாசேயின் பாதிக்குலத்தாரையும் சிறைப்படுத்தி, அலாகு, ஆபோர், ஆரா, கோசான் ஆற்றுப்பகுதி ஆகிய இடங்களுக்கு இழுத்துச் சென்றான். இன்று வரை அவர்கள் அங்கேயே உள்ளனர்.4


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

1 Chronicles Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29

Footnotes:
6 a Hebrew Tilgath-pilneser , a variant spelling of Tiglath-pileser ; also in verse 26
23 b Literally from Bashan to Baal-hermon and Senir and Mount Hermon.

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.