பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
2 Chronicles 2 நாளாகமம் דִבְרֵי הַיָמִים ב
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36
2 நாளாகமம் 22 | 2 Chronicles 22
Ahaziah Reigns in Judah (2 Kings 8:25–29)
1 எருசலேமின் குடிகள், அவன் இளையகுமாரனாகிய அகசியாவை அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்; அரபியரோடே கூடவந்து பாளயமிறங்கினதை தண்டிலிருந்தவர்கள் மூத்தகுமாரரையெல்லாம் கொன்றுபோட்டார்கள்; இவ்விதமாய் அகசியா என்னும் யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அரசாண்டான்.
1 Then the people of Jerusalem made Ahaziah, the youngest son of Jehoram, king in his place, since the raiders who had come into the camp with the Arabsa had killed all the older sons. So Ahaziah son of Jehoram became king of Judah.
1 எருசலேம் வாழ் மக்கள் யோராமுக்குப் பதிலாக அவனுடைய இளையமகன் அகசியாவை அரசனாக்கினார்கள். ஏனெனில், அரேபியருடன் பாளையத்திற்குள் நுழைந்த கொள்ளைக் கூட்டத்தினர் மூத்த பிள்ளைகள் அனைவரையும் கொன்றுவிட்டனர். இவ்வாறு, யூதாவின் அரசன் யோராமின் மகன் அகசியா ஆட்சியேற்றான்.
2 அகசியா ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; ஒம்ரியின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் அத்தாலியாள்.
2 Ahaziah was twenty-twob years old when he became king, and he reigned in Jerusalem one year. His mother’s name was Athaliah, the granddaughter of Omri.
2 அவன் ஆட்சியேற்றபோது அவனுக்கு வயது நாற்பத்திரண்டு. ஒரே ஆண்டுதான் அவன் எருசலேமில் ஆட்சி செய்தான். ஓம்ரியின் மகளான அத்தலியா என்பவளே அவன் தாய்.
3 அவனும் ஆகாப் குடும்பத்தாரின் வழிகளில் நடந்தான்; துன்மார்க்கமாய் நடக்க அவனுடைய தாய் அவனுக்கு ஆலோசனைக்காரியாயிருந்தாள்.
3 Ahaziah also walked in the ways of the house of Ahab, for his mother was his counselor in wickedness.
3 அவனும், ஆகாபு வீட்டாரின் வழிமுறைகளைப் பின்பற்றினான். அவன் தீயவழியில் நடப்பதற்கு அவன் தாயின் கெடுமதியே காரணம்.
4 அவன் ஆகாபின் குடும்பத்தைப்போல் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் தகப்பன் சென்றுபோனபின்பு, அவர்கள் அவனுக்குக் கேடாக அவனுடைய ஆலோசனைக்காரராயிருந்தார்கள்.
4 And he did evil in the sight of the LORD, as the house of Ahab had done, for to his destruction they were his counselors after the death of his father.
4 ஆகவே, அவன் ஆகாபின் வீட்டாரைப்போல் ஆண்டவரின் பார்வையில் தீயன செய்தான். ஏனெனில், அவன் தந்தை இறந்தபின் அந்தக் குடும்பத்தாரே அவனுக்கு ஆலோசகராக இருந்தனர்.
5 அவர்களுடைய ஆலோசனைக்கு உட்பட்டவனாய், அவன் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராம் என்னும் ஆகாபின் குமாரனோடே கூட, கிலேயாத்திலுள்ள ராமோத்திற்குச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு விரோதமாக யுத்தம்பண்ணப்போனான்; அங்கே சீரியர் யோராமைக் காயப்படுத்தினார்கள்.
5 Ahaziah also followed their counsel and went with Joram son of Ahab king of Israel to fight against Hazael king of Aram at Ramoth-gilead. But the Arameansc wounded Joram;d
5 அகசியா, அவர்களுடைய ஆலோசனையின்படி நடந்து, ஆகாபின் மகனும் இஸ்ரயேலின் அரசனுமான யோராமுடன் சேர்ந்து கொண்டு, சிரியா மன்னன் அசாவேலுக்கு எதிராக இராமோத்தில் போர் தொடுத்தான். அங்கே சிரியர் யோராமைத் தாக்கினர்.
6 அப்பொழுது தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தமபண்ணுகையில், தன்னை அவர்கள் ராமாவிலே வெட்டின காயங்களை யெஸ்ரெயேலிலே ஆற்றிக்கொள்ள அவன் திரும்பினான், அப்பொழுது ஆகாபின் குமாரனாகிய யோராம் வியாதியாயிருந்தபடியினால் தாவீதின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா, யெஸ்ரெயேலிலிருக்கிற அவனைப் பார்க்கிறதற்குப் போனான்.
6 so he returned to Jezreel to recover from the wounds they had inflicted on him at Ramahe when he fought against Hazael king of Aram. Then Ahaziahf son of Jehoram king of Judah went down to Jezreel to visit Joram son of Ahab, because Joram had been wounded.
6 சிரியா அரசன் அசாவேலுடன் இராமாவில்* போரிட்டபோது தனக்கு ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்திக்கொள்ள யோராம் இஸ்ரயேலுக்குத் திரும்பினான். ஆகாபின் மகன் யோராம் நோயுற்றிருந்ததைக் காண்பதற்காக யூதாவின் அரசனும் யோராமின் மகனுமான அகசியா இஸ்ரயேலுக்குச் சென்றான்.1
1 'இராமோத்து' என்பது மறுபெயர்.
7 அகசியா யோராமிடத்துக்கு வந்தது அவனுக்கு தேவனால் உண்டான கேடாக லபித்தது; எப்படியென்றால், அவன் வந்தபோது யோராமுடனே கூட, கர்த்தர் ஆகாபின் குடும்பத்தாரைச் சங்கரிக்க அபிஷேகம்பண்ணுவித்த நிம்சியின் குமாரனாகிய யெகூவுக்கு நேராக வெளியே போனான்.
7 Ahaziah’s downfall came from God when he went to visit Joram. When Ahaziah arrived, he went out with Joram to meet Jehu song of Nimshi, whom the LORD had anointed to destroy the house of Ahab.
7 அகசியா யோராமைப் பார்க்கச் சென்றது கடவுளின் திருவுளப்படி அவனது வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. எப்படியெனில், அவன் இஸ்ரயேலுக்கு வந்ததும், யோராமுடன் நிம்சியின் மகன் ஏகூவிடம் சென்றான். ஆகாபின் குடும்பத்தை அழிப்பதற்காகக் கடவுளால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இந்த ஏகூ.
Jehu Kills the Princes of Judah (2 Kings 9:14–29)
8 யெகூ, ஆகாபின் குடும்பத்தாருக்கு ஆக்கினை நடப்பிக்கும்போது, அவன் அகசியாவைச் சேவிக்கிற யூதாவின் பிரபுக்களையும், அகசியாவுடைய சகோதரரின் குமாரரையும் கண்டுபிடித்துக் கொன்றுபோட்டான்.
8 So while Jehu was executing judgment on the house of Ahab, he found the rulers of Judah and the sons of Ahaziah’s brothers who were serving Ahaziah, and he killed them.
8 ஏகூ ஆகாபின் குடும்பத்தார்க்குரிய தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, அகசியாவிடம் பணியாற்றிய யூதாவின் தலைவர்களையும், அகசியாவுடைய சகோதரரின் பிள்ளைகளையும், அவன் அலுவலர்களையும் கண்டு அவர்களைக் கொன்றொழித்தான்.
9 பின்பு அவன் அகசியாவைத் தேடினான்; சமாரியாவில் ஒளித்துக்கொண்டிருந்த அவனை அவர்கள் பிடித்து, யெகூவினிடத்தில் கொண்டுவந்து, அவனைக் கொன்றுபோட்டு: இவன் தன் முழுஇருதயத்தோடும் கர்த்தரைத் தேடின யோசபாத்தின் குமாரன் என்று சொல்லி, அவனை அடக்கம்பண்ணினார்கள்; அப்படியே அரசாளுகிறதற்குப் பெலன்கொள்ளத்தக்க ஒருவரும் அகசியாவின் குடும்பத்தில் இல்லாமற்போயிற்று.
9 Then Jehu looked for Ahaziah, and Jehu’s soldiers captured him while he was hiding in Samaria. So Ahaziah was brought to Jehu and put to death. They buried him, for they said, “He is the grandson of Jehoshaphat, who sought the LORD with all his heart.” So no one was left from the house of Ahaziah with the strength to rule the kingdom.
9 பின்னர், அவன் அகசியாவைத் தேடினான். சமாரியாவில் ஒளிந்திருக்கும்போது அகசியா பிடிப்பட்டான்; உடனே ஏகூவிடம் அவனை அழைத்து வர, ஏகூ அவனையும் கொன்றான். 'இவன்ஆண்டவரை முழு இதயத்தோடு நாடிய யோசபாத்தின் மகன்' என்பதனால் அவர்கள் அவனை அடக்கம் செய்தனர். இதனால் அரசுப் பொறுப்பை ஏற்க அவன் குடும்பத்தில் யாருமே இல்லை.
Athaliah and Joash (2 Kings 11:1–3)
10 அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது, அவள் எழும்பி, யூதா குடும்பத்திலுள்ள ராஜவம்சமான யாவரையும் சங்காரம்பண்ணினாள்.
10 When Athaliah the mother of Ahaziah saw that her son was dead, she proceeded to annihilate all the royal heirs of the house of Judah.
10 அகசியாவின் தாய் அத்தலியா தன் மகன் இறந்ததை அறிந்ததும், கொதித்தெழுந்து யூதா வீட்டு அரச வழிமரபினர் அனைவரையும் கொன்றழித்தாள்.
11 ராஜாவின் குமாரத்தியாகிய யோசேபியாத், கொன்றுபோடப்படுகிற ராஜகுமாரருக்குள் இருக்கிற அகசியாவின் ஆண்பிள்ளையாகிய யோவாசைக் களவாயெடுத்துக்கொண்டு, அவனையும் அவன் தாதியையும் சயனவீட்டிலே வைத்தாள்; அப்படியே அத்தாலியாள் அவனைக் கொன்றுபோடாதபடிக்கு, ராஜாவாகிய யோராமின் குமாரத்தியும் ஆசாரியனாகிய யோய்தாவின் பெண்ஜாதியுமாகிய யோசேபியாத் அவனை ஒளித்துவைத்தாள், அவள் அகசியாவின் சகோதரியாயிருந்தாள்.
11 But Jehoshabeathh daughter of King Jehoram took Joash son of Ahaziah and stole him away from among the sons of the king who were being murdered, and she put him and his nurse in a bedroom. Because Jehoshabeath, the daughter of King Jehoram and the wife of Jehoiada the priest, was Ahaziah’s sister, she hid Joash from Athaliah so that she could not kill him.
11 ஆனால், அரசனின் மகள் யோசபியாத்து,* கொல்லப்படவிருந்த அரச புதல்வர்களுள் அகசியாவின் மகன் யோவாசைத் தூக்கிக் கொண்டுபோய் அவனையும் அவன் செவிலித் தாயையும் படுக்கையறையில் மறைத்து வைத்தாள். இந்த யோசபியாத்து, அரசன் யோராமின் மகளும் தலைமைக் குரு யோயாதாவின் மனைவியும் அகசியாவின் சகோதரியும் ஆவாள். அவள் யோவாசை அத்தலியாவிடமிருந்து மறைத்ததால் அவளால் அவனைக் கொல்ல இயலவில்லை.2
2 'சேபா' என்பது மறுபெயர்.
12 இவர்களோடு அவன் ஆறுவருஷமாய்க் கர்த்தருடைய ஆலயத்திலே ஒளித்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ராஜ்யபாரம்பண்ணினாள்.
12 And Joash remained hidden with them in the house of God for six years while Athaliah ruled the land.
12 நாட்டை அத்தலியா ஆட்சி செய்த ஆறு ஆண்டளவும் அரசனின் மகன் அவர்களோடு கடவுளின் இல்லத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தான்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a Or since the marauding bands of Arabs
2 b Some LXX manuscripts and Syriac (see also 2 Kings 8:26); Hebrew forty-two
5 c Some LXX manuscripts the archers
5 d Hebrew Jehoram , a variant of Joram ; also in verses 6 and 7
6 e Ramah is a variant of Ramoth ; see verse 5.
6 f Some Hebrew manuscripts, LXX, Vulgate, and Syriac (see also 2 Kings 8:29); most Hebrew manuscripts Azariah
7 g Or grandson ; see 2 Kings 9:14.
11 h Jehoshabeath is a variant of Jehosheba ; twice in this verse; see 2 Kings 11:2.
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.