பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

2 Chronicles  2 நாளாகமம்  דִבְרֵי הַיָמִים ב

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36

2 நாளாகமம் 27 | 2 Chronicles 27

Jotham Reigns in Judah (2 Kings 15:32–38)

1בֶּן־עֶשְׂרִ֨ים וְחָמֵ֤שׁ שָׁנָה֙ יוֹתָ֣ם בְּמָלְכ֔וֹ וְשֵׁשׁ־עֶשְׂרֵ֣ה שָׁנָ֔ה מָלַ֖ךְ בִּֽירוּשָׁלָ֑͏ִם וְשֵׁ֣ם אִמּ֔וֹ יְרוּשָׁ֖ה בַּת־צָדֽוֹק׃

1 யோதாம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் எருசாள்.
1 Jotham was twenty-five years old when he became king, and he reigned in Jerusalem sixteen years. His mother’s name was Jerushaha daughter of Zadok.
1 யோத்தாம் அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் எருசலேமில் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். சாதோக்கின் மகள் எரூசா என்பவளே அவன் தாய்.

2וַיַּ֨עַשׂ הַיָּשָׁ֜ר בְּעֵינֵ֣י יְהוָ֗ה כְּכֹ֤ל אֲשֶׁר־עָשָׂה֙ עֻזִּיָּ֣הוּ אָבִ֔יו רַ֕ק לֹא־בָ֖א אֶל־הֵיכַ֣ל יְהוָ֑ה וְע֥וֹד הָעָ֖ם מַשְׁחִיתִֽים׃

2 அவன் தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் அவனைப்போலக் கர்த்தரின் ஆலயத்திற்குள் பிரவேசியாதிருந்தான்; ஜனங்கள் இன்னும் தங்களைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
2 And he did what was right in the eyes of the LORD, just as his father Uzziahb had done. In addition, he did not enter the temple of the LORD. But the people still behaved corruptly.
2 தன் தந்தை உசியாவைப்போல் அவன் ஆண்டவரின் பார்வையில் நேரியன செய்து வந்தான்; அவனைப்போலன்றி ஆண்டவரின் இல்லத்தில் நுழையவில்லை. மக்களோ தொடர்ந்து தீய வழியில் நடந்தனர்.

3ה֗וּא בָּנָ֛ה אֶת־שַׁ֥עַר בֵּית־יְהוָ֖ה הָעֶלְי֑וֹן וּבְחוֹמַ֥ת הָעֹ֛פֶל בָּנָ֖ה לָרֹֽב׃

3 அவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினதுமல்லாமல், ஓபேலின் மதிலின்மேல் அநேக கட்டடங்களையும் கட்டினான்.
3 Jotham rebuilt the Upper Gate of the house of the LORD, and he worked extensively on the wall at the hill of Ophel.
3 அவன் ஆண்டவரது இல்லத்தின் உயர் வாயிலைக் கட்டியதுடன், ஒபேலின் மதில்களைப் பெரிதாகக் கட்டினான்.

4וְעָרִ֥ים בָּנָ֖ה בְּהַר־יְהוּדָ֑ה וּבֶחֳרָשִׁ֣ים בָּנָ֔ה בִּֽירָינִיּ֖וֹת וּמִגְדָּלִֽים׃

4 யூதாவின் மலைகளிலே பட்டணங்களையும், காடுகளிலே கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான்.
4 He also built cities in the hill country of Judah and fortresses and towers in the forests.
4 அவன் யூதாவின் மலைகளில் நகர்களையும், காடுகளில் கோட்டைகளையும் கொத்தளங்களையும் கட்டினான்.

5וְ֠הוּא נִלְחַ֞ם עִם־מֶ֣לֶךְ בְּנֵי־עַמּוֹן֮ וַיֶּחֱזַ֣ק עֲלֵיהֶם֒ וַיִּתְּנוּ־ל֨וֹ בְנֵֽי־עַמּ֜וֹן בַּשָּׁנָ֣ה הַהִ֗יא מֵאָה֙ כִּכַּר־כֶּ֔סֶף וַעֲשֶׂ֨רֶת אֲלָפִ֤ים כֹּרִים֙ חִטִּ֔ים וּשְׂעוֹרִ֖ים עֲשֶׂ֣רֶת אֲלָפִ֑ים זֹ֗את הֵשִׁ֤יבוּ לוֹ֙ בְּנֵ֣י עַמּ֔וֹן וּבַשָּׁנָ֥ה הַשֵּׁנִ֖ית וְהַשְּׁלִשִֽׁית׃

5 அவன் அம்மோன் புத்திரருடைய ராஜாவோடு யுத்தம்பண்ணி அவர்களை மேற்கொண்டான்; ஆதலால் அம்மோன் புத்திரர் அவனுக்கு அந்த வருஷத்திலே நூறுதாலந்து வெள்ளியையும், பதினாயிரங்கலக் கோதுமையையும், பதினாயிரங்கல வாற்கோதுமையையும் கொடுத்தார்கள்; இரண்டாம் மூன்றாம் வருஷத்திலும் அம்மோன் புத்திரர் அப்படியே அவனுக்குச் செலுத்தினார்கள்.
5 Jotham waged war against the king of the Ammonites and defeated them, and that year they gave him a hundred talents of silver,c ten thousand cors of wheat,d and ten thousand cors of barley.e They paid him the same in the second and third years.
5 அவன் அம்மோனியரின் மன்னனுடன் போர்புரிந்து வெற்றி பெற்றான். அந்த ஆண்டில் அம்மோனியர் அவனுக்கு நாலாயிரம் கிலோகிராம்* வெள்ளியும், பத்தாயிரம் கலம்** கோதுமையும், பத்தாயிரம் கலம் வாற்கோதுமையும் அளித்தனர். இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளிலும் அவ்வாறே அம்மோனியர் அவனுக்கு அளித்தனர்.12

1 'நூறு தாலந்து' என்பது எபிரேய பாடம்.

2 'கோர்' என்பது எபிரேய பாடம்.

6וַיִּתְחַזֵּ֖ק יוֹתָ֑ם כִּ֚י הֵכִ֣ין דְּרָכָ֔יו לִפְנֵ֖י יְהוָ֥ה אֱלֹהָֽיו׃

6 யோதாம் தன் வழிகளைத் தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நேராக்கினதினால் பலப்பட்டான்.
6 So Jotham grew powerful because he ordered his ways before the LORD his God.
6 யோத்தாமின் வழிகள் அவன் கடவுளாம் ஆண்டவரின் திருமுன் நேரியனவாக இருந்தமையால், அவன் வலிமையுடையவன் ஆனான்.

7וְיֶ֙תֶר֙ דִּבְרֵ֣י יוֹתָ֔ם וְכָל־מִלְחֲמֹתָ֖יו וּדְרָכָ֑יו הִנָּ֣ם כְּתוּבִ֔ים עַל־סֵ֥פֶר מַלְכֵֽי־יִשְׂרָאֵ֖ל וִיהוּדָֽה׃

7 யோதாமின் மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய சகல யுத்தங்களும், அவனுடைய நடைகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
7 As for the rest of the acts of Jotham, along with all his wars and his ways, they are indeed written in the Book of the Kings of Israel and Judah.
7 யோத்தாமின் பிற செயல்களும், அவனுடைய எல்லாப் போர்களும், அவன் வழிமுறைகளும் இஸ்ரயேல், யூதா அரசர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன.

8בֶּן־עֶשְׂרִ֧ים וְחָמֵ֛שׁ שָׁנָ֖ה הָיָ֣ה בְמָלְכ֑וֹ וְשֵׁשׁ־עֶשְׂרֵ֣ה שָׁנָ֔ה מָלַ֖ךְ בִּירוּשָׁלָֽ͏ִם׃

8 அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.
8 He was twenty-five years old when he became king, and he reigned in Jerusalem sixteen years.
8 அவன் அரசனான போது அவனுக்கு வயது இருபத்தைந்து. பதினாறு ஆண்டுகள் எருசலேமில் அவன் ஆட்சி செய்தான்.

9וַיִּשְׁכַּ֤ב יוֹתָם֙ עִם־אֲבֹתָ֔יו וַיִּקְבְּר֥וּ אֹת֖וֹ בְּעִ֣יר דָּוִ֑יד וַיִּמְלֹ֛ךְ אָחָ֥ז בְּנ֖וֹ תַּחְתָּֽיו׃

9 யோதாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனைத் தாவீதின் நகரத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய, ஆகாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
9 And Jotham rested with his fathers and was buried in the City of David. And his son Ahaz reigned in his place.
9 யோத்தாம் தன் மூதாதையருடன் துயில்கொண்டு, தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் அவனுக்குப் பின் அரசனானான்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

2 Chronicles Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36

Footnotes:
1 a Jerushah  is a variant of Jerusha ; see 2 Kings 15:33.
2 b Uzziah  is also called Azariah ; see 2 Kings 14:21.
5 c 100 talents  is approximately 3.77 tons or 3.42 metric tons of silver.
5 d 10,000 cors  is approximately 62,400 bushels or 2.2 million liters (probably about 1,920 tons or 1,740 metric tons of wheat).
5 e 10,000 cors  is approximately 62,400 bushels or 2.2 million liters (probably about 1,450 tons or 1,315 metric tons of barley).

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.