பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
2 Chronicles 2 நாளாகமம் דִבְרֵי הַיָמִים ב
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36
2 நாளாகமம் 24 | 2 Chronicles 24
Joash Repairs the Temple (2 Kings 12:1–16)
1 யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழுவயதாயிருந்து, நாற்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; பெயெர்செபாபட்டணத்தாளான அவன் தாயின் பேர் சிபியாள்.
1 Joash was seven years old when he became king, and he reigned in Jerusalem forty years. His mother’s name was Zibiah; she was from Beersheba.
1 யோவாசு அரசரானபோது அவர் வயது ஏழு; அவர் எருசலேமில் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். பெயேர்செபாவைச் சார்ந்த சிபியா என்பவளே அவர் தாய்.
2 ஆசாரியனாகிய யோய்தாவின் நாளெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
2 And Joash did what was right in the eyes of the LORD all the days of Jehoiada the priest.
2 குரு யோயாதாவின் வாழ்நாள் முழுவதும், யோவாசு ஆண்டவர் பார்வையில் நேரியன செய்தார்.
3 அவனுக்கு யோய்தா இரண்டு ஸ்திரீகளை விவாகஞ்செய்து கொடுத்தான்; அவர்களால் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
3 Jehoiada took for him two wives, and he had sons and daughters.
3 யோயாதா அவருக்கு இரு பெண்களை மணமுடித்து வைத்தார். அவர்கள் வழியாக அவருக்குப் புதல்வர், புதல்வியர் பிறந்தனர்.
4 அதற்குப்பின்பு கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்க யோவாஸ் விருப்பங்கொண்டான்.
4 Some time later, Joash set his heart on repairing the house of the LORD.
4 பின்னர், ஆண்டவரின் இல்லத்தைப் புதுப்பிக்க யோவாசு விரும்பினார்.
5 அவன் ஆசாரிரையும் லேவியரையும் கூடி வரச்செய்து, அவர்களை நோக்கி: நீங்கள் யூதா பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், உங்கள் தேவனுடைய ஆலயத்தை வருஷாவருஷம் பழுதுபார்க்கிறதற்கு, இஸ்ரவேலெங்கும் பணம் சேகரியுங்கள்; இந்தக் காரியத்தைத் தாமதமில்லாமல் செய்யுங்கள் என்றான். ஆனாலும் லேவியர் தாமதம்பண்ணினார்கள்.
5 So he gathered the priests and Levites and said, “Go out to the cities of Judah and collect the money due annually from all Israel, to repair the house of your God. Do it quickly.” The Levites, however, did not make haste.
5 எனவே, அவர் குருக்களையும் லேவியரையும் ஒன்றுகூட்டி அவர்களிடம், "நீங்கள் யூதா நகர்களுக்கெல்லாம் சென்று உங்கள் கடவுளின் இல்லத்தை ஆண்டுதோறும் பழுதுபார்க்க இஸ்ரயேல் எங்கும் பணம் சேகரியுங்கள். இதனை விரைவாகச் செய்யுங்கள்" என்றார். ஆனால், லேவியர் இதை விரைவாகச் செய்யவில்லை.
6 அப்பொழுது ராஜா யோய்தா என்னும் தலைவனை அழைப்பித்து: சாட்சியின் வாசஸ்தலத்துக்குக் கொடுக்க, கர்த்தரின் தாசனாகிய மோசே கட்டளையிட்ட வரியை யூதாவினிடத்திலும், எருசலேமியரிடத்திலும், இஸ்ரவேல் சபையாரிடத்திலும் வாங்கி வருகிறதற்கு, லேவியரை நீர் விசாரியாமற்போனதென்ன?
6 So the king called Jehoiada the high priest and said, “Why have you not required the Levites to bring from Judah and Jerusalem the tax imposed by Moses the servant of the LORD and by the assembly of Israel for the Tent of the Testimony?”
6 ஆகையால், அரசர் தலைமைக் குரு யோயாதாவை அழைத்து, "ஆண்டவரின் அடியாராகிய மோசே உடன்படிக்கைக் கூடாரத்திற்காக இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் வரிகொடுக்குமாறு பணித்தார். லேவியரோ அவ்வரியை யூதாவிலும் எருசலேமிலும் வசூலிக்காமல் இருப்பதை நீர் ஏன் கண்டிக்காமல் இருக்கறீர்?1
1 விப 30:11-16.
7 அந்தப் பொல்லாத ஸ்திரீயாகிய அத்தாலியாளுடைய மக்கள் தேவனுடைய ஆலயத்தைப் பலவந்தமாய்த் திறந்து, கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பிரதிஷ்டை பண்ணப்பட்டவைகளையெல்லாம் பாகால்களுக்காகச் செலவுபண்ணிப்போட்டார்களே என்றான்.
7 For the sons of that wicked woman Athaliah had broken into the house of God and had even used the sacred objects of the house of the LORD for the Baals.
7 அந்தத் தீய பெண் அத்தலியாவும் அவளுடைய புதல்வர்களும் கடவுளின் இல்லத்தினுள் வன்முறையாய் நுழைந்து, ஆண்டவரின் இல்லத்துப் புனிதப் பொருள்களையெல்லாம் கொள்ளையிட்டு அவற்றைப் பாகால்களுக்காகப் பயன்படுத்தினர்" என்றார்.
8 அப்பொழுது ராஜாவின் சொற்படி ஒரு பெட்டியை உண்டாக்கி, அதைக் கர்த்தருடைய ஆலயத்து வாசலுக்குப் புறம்பே வைத்து,
8 At the king’s command a chest was made and placed outside, at the gate of the house of the LORD.
8 பின்னர், அரசரின் கட்டளைக்கேற்ப ஒரு பெட்டியைச் செய்து, அதை ஆண்டவரின் இல்லத்து வாயிலுக்கு வெளியே வைத்தனர்.
9 கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்தரத்தில் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்ட வரியைக் கர்த்தருக்குக் கொண்டுவாருங்கள் என்று யூதாவிலும் எருசலேமிலும் பறைசாற்றுவித்தார்கள்.
9 And a proclamation was issued in Judah and Jerusalem that they were to bring to the LORD the tax imposed by Moses the servant of God on Israel in the wilderness.
9 "கடவுளின் அடியார் மோசே பாலைநிலத்தில் இஸ்ரயேலருக்குக் கட்டளையிட்ட வரிப்பணத்தை ஆண்டவருக்குக் கொண்டு வாருங்கள்" என்று யூதாவிலும் எருசலேமிலும் பறைசாற்றினர்.
10 அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் எல்லா ஜனங்களும் சந்தோஷமாய்க் கொண்டுவந்து பெட்டிநிறைய அதிலே போட்டார்கள்.
10 All the officers and all the people rejoiced and brought their contributions, and they dropped them in the chest until it was full.
10 இதைக் கேட்டு எல்லாத் தலைவர்களும் மக்களும் மகிழ்ச்சியுற்று, தங்கள் வரிப்பணத்தைக் கொண்டு வந்து பெட்டியில் போடவே, பெட்டியும் நிறைந்தது.
11 வெகுபணம் உண்டென்று கண்டு, லேவியர் கையால் அந்தப் பெட்டி ராஜாவின் விசாரிப்புக்காரர் அண்டையிலே கொண்டுவரப்படும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனுடைய விசாரிப்புக்காரனும் வந்து, பெட்டியிலிருக்கிறதைக் கொட்டியெடுத்து, அதைத் திரும்ப அதின் ஸ்தானத்திலே வைப்பார்கள்; இப்படி நாளுக்குநாள் செய்து மிகுந்த பணத்தைச் சேர்த்தார்கள்.
11 Whenever the chest was brought by the Levites to the king’s overseers and they saw that there was a large amount of money, the royal scribe and the officer of the high priest would come and empty the chest and carry it back to its place. They did this daily and gathered the money in abundance.
11 பெட்டியில் பணம் நிறைந்து விட்டதைக் கண்ட லேவியர், பெட்டியை அரசரின் அலுவலரிடம் எடுத்துச் சென்றனர். அரசரின் செயலரும் தலைமைக் குருவின் அலுவலரும் பெட்டியிலிருக்கும் பணத்தைக் கொட்டி எடுத்தபின் அதைத் திரும்ப அதன் இடத்திலேயே வைத்தனர். இவ்வாறு, அவர்கள் நாள்தோறும் செய்து, ஏராளமாகப் பணம் சேர்த்தனர்.
12 அதை ராஜாவும் யோய்தாவும் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கும் ஊழியக்காரர் கையிலே கொடுத்தார்கள்; அதினால் அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும்படி, கல்தச்சரையும் தச்சரையும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி கொற்றரையும் கன்னாரையும் கூலிக்கு அமர்த்திக்கொண்டார்கள்.
12 Then the king and Jehoiada would give the money to those who supervised the labor on the house of the LORD to hire stonecutters and carpenters to restore the house of the LORD, as well as workers in iron and bronze to repair the house of the LORD.
12 அதை அரசரும் யோயாதாவும் ஆண்டவரின் இல்லப்பணியைக் கவனித்து வந்த வேலையாள்களிடம் கொடுத்தனர். அவர்கள் ஆண்டவரின் இல்லத்தைப் புதுப்பிக்கக் கொத்தர்களையும் தச்சர்களையும் கூலிக்கு அமர்த்தினர்; ஆண்டவரின் இல்லத்தை வலுப்படுத்துமாறு இரும்பு, வெண்கல வேலையில் தேர்ச்சி பெற்றோரையும் வேலைக்கென அமர்த்தினர்.
13 அப்படி வேலையை விசாரிக்கிறவர்கள் தங்கள் கையினாலே வேலையை நடந்தேறப்பண்ணி, தேவனுடைய ஆலயத்தை அதின் முந்தின சீருக்குக் கொண்டுவந்து அதைப் பலப்படுத்தினார்கள்.
13 So the workmen labored, and in their hands the repair work progressed. They restored the house of God according to its specifications, and they reinforced it.
13 வேலையாள்களின் பொறுப்பில் கடவுளின் இல்லத்தைப் புதுப்பிக்கும் பணி விரைவாக முன்னேறியது; அவர்கள் முன்னைய நிலைக்கு அதனைக் கொணர்ந்து இன்னும் வலுப்படுத்தினர்.
14 அதை முடித்துத் தீர்ந்தபின்பு, மீந்த பணத்தை ராஜாவுக்கும் யோய்தாவுக்கும் முன்பாக கொண்டுவந்தார்கள்; அதிலே கர்த்தருடைய ஆலயத்தில் செய்யப்படும் பணிமுட்டுகளையும், ஆராதனை பலி முதலியவைகளுக்கு வேண்டிய பணிமுட்டுகளையும், கலசங்களையும், பொற்பாத்திரங்களையும், வெள்ளிப்பாத்திரங்களையும் பண்ணுவித்தான்; யோய்தாவின் நாளெல்லாம் நித்தம் கர்த்தருடைய ஆலயத்திலே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி வந்தார்கள்.
14 When they were finished, they brought the rest of the money to the king and Jehoiada to make with it the articles for the house of the LORD—utensils for the service and for the burnt offerings, dishes, and other objects of gold and silver. Throughout the days of Jehoiada, burnt offerings were presented regularly in the house of the LORD.
14 வேலைகள் எல்லாம் முடிந்தபின், எஞ்சியுள்ள பணத்தை அரசருக்கும் யோயாதாவுக்கும் முன்பாகக் கொண்டுவந்தனர்; அவர்கள் அதைக் கொண்டு ஆண்டவரின் இல்லப்பணிக்கெனப் பாத்திரங்களையும், திருப்பணி, எரிபலி ஆகியவற்றுக்கான பாத்திரங்களையும் கிண்ணங்களையும், மற்றும் பொன், வெள்ளிப் பாத்திரங்களையும் செய்தனர். யோயாதாவின் வாழ்நாள் முழுவதும் ஆண்டவரின் இல்லத்தில் எரிபலிகள் தொடர்ந்து செலுத்தப்பட்டன.
Jehoiada’s Death and Burial
15 யோய்தா தீர்க்காயுசுள்ளவனாய் முதிர்வயதில் மரித்தான்; அவன் மரணமடைகிறபோது நூற்றுமுப்பது வயதாயிருந்தான்.
15 When Jehoiada was old and full of years, he died at the age of 130.
15 யோயாதா நிறை ஆயுள் கண்டு முதுமை எய்தி இறந்தார். அவர் இறந்தபோது அவருக்கு வயது நூற்றுமுப்பது.
16 அவன் தேவனுக்காகவும் அவனுடைய ஆலயத்திற்காகவும் இஸ்ரவேலுக்கு நன்மைசெய்தபடியினால், அவனைத் தாவீதின் நகரத்தில் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.
16 And Jehoiada was buried with the kings in the City of David, because he had done what was good in Israel for God and His temple.
16 அவர் இஸ்ரயேலருக்கும் கடவுளுக்கும் அவரது இல்லத்துக்கும் நற்பணி செய்திருந்ததனால், அவரைத் தாவீதின் நகரில் அரசர்களுக்கு அருகே அடக்கம் செய்தனர்.
The Wickedness of Joash
17 யோய்தா மரணமடைந்தபின்பு யூதாவின் பிரபுக்கள் வந்து, ராஜாவை பணிந்துகொண்டார்கள்; அப்பொழுது ராஜா அவர்களுக்குச் செவிகொடுத்தான்.
17 After the death of Jehoiada, however, the officials of Judah came and paid homage to the king, and he listened to them.
17 ஆனால், யோயாதா இறந்தபின், அரசர் தம்மைப் பணிந்து நின்ற தலைவர்களின் சொற்களுக்கு இணங்கினார்.
18 அப்படியே அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தை விட்டுவிட்டு, தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் சேவித்தார்கள்; அப்பொழுது அவர்கள் செய்த இந்தக் குற்றத்தினிமித்தம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் கடுங்கோபம் மூண்டது.
18 They abandoned the house of the LORD, the God of their fathers, and served the Asherah poles and idols. So wrath came upon Judah and Jerusalem for this guilt of theirs.
18 அதனால், அவர்கள் தங்கள் முன்னோர்களின் கடவுளான ஆண்டவரின் இல்லத்தைப் புறக்கணித்து, அசேராக் கம்பங்களையும் சிலைகளையும் வழிப்பட்டனர். அவர்கள் செய்த இப்பாவத்தின் பொருட்டு யூதாவின் மேலும் எருசலேமின் மேலும் இறைவன் கடுங்கோபம் கொண்டார்.
19 அவர்களைத் தம்மிடத்திற்குத் திரும்பப்பண்ணக் கர்த்தர் அவர்களிடத்திலே தீர்க்கதரிசிகளை அனுப்பினார்; அவர்கள் ஜனங்களைத் திடச்சாட்சியாகக் கடிந்துகொண்டார்கள்; ஆனாலும் அவர்கள் செவிகொடுக்கவில்லை.
19 Nevertheless, the LORD sent prophets to bring the people back to Him and to testify against them; but they would not listen.
19 அவர்கள் தம்மிடம் மீண்டும் வருவதற்கு ஆண்டவர் அவர்களிடம் இறைவாக்கினர்களை அனுப்பினார். அவர்களும் மக்களைக் கண்டித்தனர். ஆனால், அவர்கள் செவிகொடுக்கவில்லை.
20 அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் குமாரனான சகரியாவின்மேல் இறங்கினதினால், அவன் ஜனத்திற்கு எதிரே நின்று: நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதினால் நீங்கள் சித்திபெறமாட்டீர்களென்று தேவன் சொல்லுகிறார்; நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான்.
20 Then the Spirit of God came upon Zechariah son of Jehoiada the priest, who stood up before the people and said to them, “This is what God says: ‘Why do you transgress the commandments of the LORD so that you cannot prosper? Because you have forsaken the LORD, He has forsaken you.’”
20 அப்போது கடவுளின் ஆவி குரு யோயாதாவின் மகன் செக்கரியாவின்மேல் இறங்கியது; அவர் மக்கள்முன் நின்று அவர்களை நோக்கி: "இதோ, கடவுள் கூறுகிறார்: ஆண்டவரின் கட்டளைகளை மீறுவதேன்? அதனால் நீங்கள் வாழ்வில் முன்னேற மாட்டீர்களே! ஆண்டவரை நீங்கள் புறக்கணித்ததால், அவரும் உங்களைப் புறக்கணித்துள்ளார்" என்று கூறினார்.
21 அதினால் அவர்கள் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, கர்த்தருடைய ஆலயப்பிராகாரத்தில் ராஜாவினுடைய கற்பனையின்படி அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.
21 But they conspired against Zechariah, and by order of the king, they stoned him in the courtyard of the house of the LORD.
21 அவர்கள் அவருக்கு எதிராக சதி செய்து, அரசரின் ஆணைக்கேற்ப ஆண்டவரின் இல்லத்து மண்டபத்தில் அவரைக் கல்லால் எறிந்து கொன்றனர்.2
2 மத் 22:35; லூக் 11:51.
22 அப்படியே அவனுடைய தகப்பனாகிய யோய்தா தனக்குச் செய்த தயையை ராஜாவாகிய யோவாஸ் நினையாமல் அவனுடைய குமாரனைக் கொன்றுபோட்டான்; இவன் சாகும்போது: கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான்.
22 Thus King Joash failed to remember the kindness that Zechariah’s father Jehoiada had extended to him. Instead, Joash killed Jehoiada’s son. As he lay dying, Zechariah said, “May the LORD see this and call you to account.”
22 அவர் தந்தை யோயாதா காட்டிய பேரன்பை மறந்து, அரசர் யோவாசு செக்கரியாவைக் கொல்லச் செய்தார். அவர் இறக்கும்போது, "ஆண்டவர் இதைக் கண்டு பழிவாங்குவாராக!" என்றார்.
The Death of Joash (2 Kings 12:17–21)
23 மறு வருஷத்திலே சீரியாவின் சேனைகள் அவனுக்கு விரோதமாக யூதாவிலும் எருசலேமிலும் வந்து, ஜனத்திலிருக்கிற பிரபுக்களையெல்லாம் அழித்து, கொள்ளையிட்ட அவர்கள் உடைமைகளையெல்லாம் தமஸ்குவின் ராஜாவுக்கு அனுப்பினார்கள்.
23 In the spring,a the army of Aram went to war against Joash. They entered Judah and Jerusalem and destroyed all the leaders of the people, and they sent all the plunder to their king in Damascus.
23 அடுத்த ஆண்டு, சிரியாப் படையினர் அவருக்கு எதிராக வந்து, யூதாவிலும் எருசலேமிலும் புகுந்து மக்களின் எல்லாத் தலைவர்களையும் கொன்றழித்தனர். கொள்ளைப் பொருள்கள் அனைத்தையும் தமஸ்கு மன்னனிடம் அனுப்பி வைத்தனர்.
24 சீரியாவின் சேனை சிறுகூட்டமாய் வந்திருந்தாலும், அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுவிட்டபடியினால், கர்த்தர் மகா பெரிய சேனையை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் யோவாசுக்கு தண்டனை செய்தார்கள்.
24 Although the Aramean army had come with only a few men, the LORD delivered into their hand a very great army. Because Judah had forsaken the LORD, the God of their fathers, judgment was executed on Joash.
24 சிரியர் மிகச் சிறு படையுடன்தான் வந்தனர்; இருப்பினும், தங்கள் முன்னோரின் கடவுளான ஆண்டவரை இஸ்ரயேலர் புறக்கணித்ததால், ஆண்டவர் அவர்களது பெரும் படையைச் சிரியரின் கையில் ஒப்புவித்தார். அவர்கள் யோவாசைத் தண்டித்தனர்.
25 அவர்கள் அவனை மகா வேதனைக்குள்ளானவனாக விட்டுப்போனார்கள்; அவர்கள் புறப்பட்டுப்போனபின்பு, அவனுடைய ஊழியக்காரர் ஆசாரியனாகிய யோய்தாவுடைய குமாரரின் இரத்தப்பழியினிமித்தம், அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் படுக்கையிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்; செத்துப்போன அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.
25 And when the Arameans had withdrawn, they left Joash severely wounded. His own servants conspired against him for shedding the blood of the sonb of Jehoiada the priest, and they killed him on his bed. So he died and was buried in the City of David, but not in the tombs of the kings.
25 கடும் காயமுற்ற நிலையில் யோவாசைச் சிரியர் விட்டுச் சென்றனர்; அவருடைய அலுவலர்களோ அவருக்கெதிராகச் சதி செய்து, குரு யோயாதாவின் மகனின் இரத்தப்பழியின் பொருட்டு அவரது படுக்கையிலேயே அவரைக் கொன்றனர். தாவீதின் நகரத்தில் அவர் சடலத்தை அடக்கம் செய்தனர்; ஆனால், அரசர்களின் கல்லறையில் அவரை அடக்கம் செய்யவில்லை.
26 அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணினவர்கள், அம்மோனிய ஸ்திரீயான சீமாத்தின் குமாரனாகிய சாபாத்தும், மோவாப் ஸ்திரீயான சிம்ரீத்தின் குமாரனாகிய யோசபாத்துமே.
26 Those who conspired against Joash were Zabadc son of Shimeath the Ammonitess and Jehozabad son of Shimrithd the Moabitess.
26 அவருக்கெதிராகச் சதி செய்தவர் அம்மோனியனான சிமயாத்தின் மகன் சாபாத்தும், மோவாபியனான சிம்ரித்தின் மகன் யோசபாத்தும் ஆவர்.
27 அவன் குமாரரைப்பற்றியும். அவன்மேல் வந்த பெரிய பாரத்தைப்பற்றியும், தேவனுடைய ஆலயத்தை அவன் பலப்படுத்தினதைப்பற்றியும் ராஜாக்களின் புஸ்தகமான சரித்திரத்தில் எழுதியிருக்கிறது; அவன் குமாரனாகிய அமத்சியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
27 The accounts of the sons of Joash, as well as the many pronouncements about him and about the restoratione of the house of God, are indeed written in the Treatisef of the Book of the Kings. And his son Amaziah reigned in his place.
27 அவர் புதல்வர் பற்றியும் அவருக்கெதிராக பல இறைவாக்குகள் பற்றியும், கடவுளின் இல்லத்தை அவர் வலுப்படுத்தியது குறித்தும் அரசர்களின் ஆய்வேட்டில் எழுதப்பட்டுள்ளன; அவருக்குப்பின் அவர் மகன் அமட்சியா அரசனானான்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
23 a Literally At the turn of the year
25 b LXX and Vulgate; Hebrew of the sons
26 c Zabad is a variant of Jozabad ; see 2 Kings 12:21.
26 d Shimrith is a variant of Shomer ; see 2 Kings 12:21.
27 e Or founding
27 f Or Exposition or Study
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.