பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
2 Chronicles 2 நாளாகமம் דִבְרֵי הַיָמִים ב
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36
2 நாளாகமம் 25 | 2 Chronicles 25
Amaziah Reigns in Judah (2 Kings 14:1–7)
1 அமத்சியா இருபத்தைந்தாம் வயதிலே ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளாகிய அவனுடைய தாயின்பேர் யோவதானாள்.
1 Amaziah was twenty-five years old when he became king, and he reigned in Jerusalem twenty-nine years. His mother’s name was Jehoaddan; she was from Jerusalem.
1 அமட்சியா அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் எருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான்; எருசலேமைச் சார்ந்த எயோயதான் என்பவளே அவன் தாய்.
2 அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் முழுமனதோடே அப்படிச் செய்யவில்லை.
2 And he did what was right in the eyes of the LORD, but not wholeheartedly.
2 ஆண்டவரின் பார்வையில் நேர்மையானதையே அவன் செய்தான்; இருப்பினும், முழு மனத்துடன் அவ்வாறு செய்யவில்லை.
3 ராஜ்யபாரம் அவனுக்கு ஸ்திரப்பட்டபோது, அவன் தன் தகப்பனாகிய ராஜாவைக் கொலைசெய்த தன்னுடைய ஊழியக்காரரைக் கொன்றுபோட்டான்.
3 As soon as the kingdom was firmly in his grasp, Amaziah executed the servants who had murdered his father the king.
3 அவனது அரசை வலுப்படுத்தியபின் தன் தந்தையான அரசனைக் கொன்ற அலுவலர்களைக் கொலை செய்தான்.
4 ஆனாலும் பிள்ளைகளினிமித்தம் பிதாக்களும், பிதாக்களினிமித்தம் பிள்ளைகளும் கொலைசெய்யப்படாமல், அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டுமென்று மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி, கர்த்தர் கட்டளையிட்டபிரகாரம், அவர்களுடைய பிள்ளைகளை அவன் கொல்லாதிருந்தான்.
4 Yet he did not put their sons to death, but acted according to what is written in the Law, in the Book of Moses, where the LORD commanded: “Fathers must not be put to death for their children, and children must not be put to death for their fathers; each is to die for his own sin.”a
4 புதல்வர் பொருட்டுத் தந்தையரும், தந்தையர் பொருட்டுப் புதல்வரும் இறக்கக்கூடாது; மாறாக அவனவன் தனது பாவத்தின் பொருட்டே இறக்கவேண்டும் என்ற மோசேயின் திருச்சட்ட நூலில் எழுதப்பட்டுள்ள ஆண்டவரின் கட்டளைப்படி, அவர்களின் புதல்வர்களை அவன் கொல்லவில்லை.1
1 இச 24:16.
Amaziah’s Victories
5 அமத்சியா யூதா மனுஷரைக் கூடிவரச் செய்து, அவர்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படியே, யூதா பென்யமீன் தேசங்கள் எங்கும் ஆயிரம்பேருக்கு அதிபதிகளையும் நூறுபேருக்கு அதிபதிகளையும் வைத்து, இருபது வயதுமுதற்கொண்டு அதற்கு மேற்பட்டவர்களை இலக்கம்பார்த்து, யுத்தத்திற்குப் புறப்படவும், ஈட்டியையும் கேடகத்தையும் பிடிக்கவுந்தக்க யுத்தவீரர் மூன்றுலட்சம்பேரென்று கண்டான்.
5 Then Amaziah gathered the people of Judah and assigned them according to their families to commanders of thousands and of hundreds. And he numbered those twenty years of age or older throughout Judah and Benjamin and found 300,000 chosen men able to serve in the army, bearing the spear and shield.
5 பின்னர், அமட்சியா யூதா மக்களை ஒன்று திரட்டி, யூதா, பென்யமின் நாடெங்கும் மூதாதையரின் குடும்பங்கள் வாரியாக ஆயிரத்தவர் தலைவர்களையும், நூற்றுவர் தலைவர்களையும் ஏற்படுத்தினான். இருபது வயதும் அதற்கு மேலும் உள்ளவர்களை அவன் ஒன்றுசேர்த்தபோது கேடயம் தாங்கிப் போரிடும் வேல்வீரர் மூன்று இலட்சம் பேர் இருந்தனர்.
6 இஸ்ரவேலிலும் லட்சம் பராக்கிரமசாலிகளை நூறுதாலந்து வெள்ளி கொடுத்துக் கூலிக்கு அமர்த்தினான்.
6 He also hired 100,000 mighty warriors from Israel for a hundred talents of silver.b
6 இஸ்ரயேல் நாட்டிலிருந்து ஒர் இலட்சம் போர் வீரரை நாலாயிரம் கிலோகிராம்* வெள்ளிக்கு அமர்த்தினான்.2
2 'நூறு தாலந்து' என்பது எபிரேய பாடம்.
7 தேவனுடைய மனுஷன் ஒருவன் அவனிடத்தில் வந்து: ராஜாவே, இஸ்ரவேலின் சேனை உம்முடனே வரலாகாது; கர்த்தர் எப்பிராயீமின் சகல புத்திரராகிய இஸ்ரவேலோடும் இருக்கவில்லை.
7 But a man of God came to him and said, “O king, do not let the army of Israel go with you, for the LORD is not with Israel—not with any of the Ephraimites.
7 அப்பொழுது கடவுளின் மனிதர் ஒருவர் அவனிடம் வந்து, "அரசே! இஸ்ரயேல் படையினர் உம்மோடு செல்லக்கூடாது. ஏனெனில், ஆண்டவர் இஸ்ரயேலோடு இல்லை! எப்ராயிம் புதல்வரோடும் இல்லை!
8 போக மனதானால் நீர் போம், காரியத்தை நடத்தும்; யுத்தத்திற்குத் திடன்கொண்டு நில்லும்; தேவன் உம்மைச் சத்துருவுக்கு முன்பாக விழப்பண்ணுவார்; ஒத்தாசை செய்யவும் விழப்பண்ணவும் தேவனாலே கூடும் என்றான்.
8 Even if you go and fight bravely in battle, God will make you stumble before the enemy, for God has power to help and power to overthrow.”
8 ஆனால், அப்படிச் சென்று போரில் வலிமை வாய்ந்தவராகத் திகழலாம் என்று நீர் கருதினால், கடவுள் உம்மை எதிரிகள்முன் வீழ்த்துவார்; ஏனெனில், உதவி புரியவும், வீழ்ச்சியுறச் செய்யவும் கடவுளுக்கு ஆற்றல் உண்டு" என்றார்.
9 அப்பொழுது அமத்சியா: அப்படியானால் நான் இஸ்ரவேலின் சேனைக்குக் கொடுத்த நூறுதாலந்திற்காகச் செய்யவேண்டியது என்ன என்று தேவனுடைய மனுஷனைக் கேட்டான். அதற்கு தேவனுடைய மனுஷன்: அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும் என்றான்.
9 Amaziah asked the man of God, “What should I do about the hundred talents I have given to the army of Israel?” And the man of God replied, “The LORD is able to give you much more than this.”
9 அப்பொழுது அமட்சியா கடவுளின் மனிதரை நோக்கி, "இஸ்ரயேலின் படைக்கு நான் கொடுத்துள்ள நாலாயிரம் கிலோகிராம் வெள்ளி வீணாகுமே!" என்றான். அதற்குக் கடவுளின் மனிதர், "ஆண்டவரால் இதைவிட மிகுதியாக உனக்குக் கொடுக்க முடியும்" என்றார்.
10 அப்பொழுது அமத்சியா எப்பிராயீமரில் தன்னிடத்துக்கு வந்த சேனையைத் தங்கள் வீட்டிற்குப் போய்விடப் பிரித்துவிட்டான்; அதினால் அவர்களுக்கு யூதாவின்மேல் மிகுந்த கோபமூண்டு, உக்கிரமான எரிச்சலோடே தங்களிடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
10 So Amaziah dismissed the troops who had come to him from Ephraim and sent them home. And they were furious with Judah and returned home in great anger.
10 பின்னர், அமட்சியா எப்ராயிமிலிருந்து வந்த போர்ப்படையைப் பிரித்து, அவர்கள் இடத்திற்கு அனுப்பி வைத்தான். அவர்கள் யூதாவின்மீது கடுஞ்சினமுற்று, கோபக்கனலுடன் தங்கள் நாடு திரும்பினர்.
11 அமத்சியாவோ திடன்கொண்டு, தன் ஜனத்தைக் கூட்டி, உப்புப் பள்ளத்தாக்குக்குப் போய், சேயீர் புத்திரரில் பதினாயிரம்பேரை வெட்டினான்.
11 Amaziah, however, summoned his strength and led his troops to the Valley of Salt, where he struck down 10,000 men of Seir,
11 பின்னர், அமட்சியா தன்னை வலுப்படுத்திக்கொண்டு, உப்புப் பள்ளத்தாக்கிற்குத் தன் மக்களை அழைத்து சென்றான். அங்கே சேயீர் புதல்வருள் பத்தாயிரம் பேரைக் கொன்றான்.
12 யூதா புத்திரர், பதினாயிரம்பேரை உயிரோடு பிடித்து, ஒரு கன்மலையுச்சியிலே கொண்டுபோய், அவர்களெல்லாரும் நொறுங்கிப்போகத்தக்கதாய் அந்தக் கன்மலையுச்சியிலிருந்து கீழே தள்ளிவிட்டார்கள்.
12 and the army of Judah also captured 10,000 men alive. They took them to the top of a cliff and threw them down so that all were dashed to pieces.
12 யூதாவின் புதல்வர் மற்றுமொரு பத்தாயிரம் பேரை உயிரோடு பிடித்து ஒரு குன்றின் உச்சிக்குக் கொண்டு சென்று, அவர்களை அங்கிருந்து கீழே தள்ள, அவர்கள் நொறுக்கப்பட்டனர்.
13 தன்னோடுகூட யுத்தத்திற்கு வராதபடிக்கு, அமத்சியா திருப்பிவிட்ட யுத்தபுருஷர், சமாரியா துவக்கிப் பெத்தொரோன்மட்டுமுள்ள யூதா பட்டணங்களின்மேல் விழுந்து, அவைகளில் மூவாயிரம்பேரை வெட்டி, திரளாய்க் கொள்ளையிட்டார்கள்.
13 Meanwhile the troops that Amaziah had dismissed from battle raided the cities of Judah, from Samaria to Beth-horon. They struck down 3,000 people and carried off a great deal of plunder.
13 இதற்கிடையில் அமட்சியா தன்னோடு போருக்கு அழைத்துச் செல்லாமல் திருப்பி அனுப்பிய போர் வீரர்கள் சமாரியா முதல் எபத்கோரோன் வரையிலுள்ள யூதா நகர்களைச் சூறையாடினர்; மூவாயிரம் பேரைக் கொன்றதுடன் மிகுந்த பொருள்களையும் கொள்ளையடித்தனர்.
Amaziah Rebuked for Idolatry
14 அமத்சியா ஏதோமியரை முறிய அடித்து, சேயீர் புத்திரரின் தெய்வங்களைக் கொண்டுவந்தபின்பு, அவன் அவைகளைத் தனக்கு தெய்வங்களாக வைத்து, அவைகளுக்கு முன்பாகப் பணிந்து அவைகளுக்குத் தூபங்காட்டினான்.
14 When Amaziah returned from the slaughter of the Edomites, he brought back the gods of the Seirites, set them up as his own gods, bowed before them, and burned sacrifices to them.
14 அமட்சியா, ஏதோமியரை முறியடித்து சேயீர் புதல்வர்களின் தெய்வச் சிலைகளைக் கொண்டு வந்தான்; தன் தெய்வங்களாக அவற்றை நிறுத்தி வைத்து, அவற்றின் முன்பாகப் பணிந்து, அவற்றுக்குத் தூபம் காட்டினான்.
15 அப்பொழுது, கர்த்தர் அமத்சியாவின்மேல் கோபமூண்டவராகி, அவனிடத்துக்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார்; இவன் அவனை நோக்கி: தங்கள் ஜனத்தை உமது கைக்குத் தப்புவிக்காதேபோன ஜனத்தின் தெய்வங்களை நீர் நாடுவானேன் என்றான்.
15 Therefore the anger of the LORD burned against Amaziah, and He sent him a prophet, who said, “Why have you sought this people’s gods, which could not deliver them from your hand?”
15 எனவே, ஆண்டவர் அமட்சியாவின் மீது கடுஞ்சினமுற்று, அவனிடம் ஓர் இறைவாக்கினரை அனுப்பினார். அவர் அமட்சியாவை நோக்கி, "தங்கள் மக்களை உம் கையினின்று காப்பாற்ற இயலாத தெய்வங்களில் நாட்டம் கொண்டது ஏன்?" என்று கேட்டார்.
16 தன்னோடே அவன் இப்படிப் பேசினபோது, ராஜா அவனை நோக்கி: உன்னை ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக வைத்தார்களோ? அதை விட்டுவிடு; நீ ஏன் வெட்டப்படவேண்டும் என்றான்; அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி அதைவிட்டுவிட்டு: நீர் இப்படிச் செய்து, என் ஆலோசனையைக் கேளாமற்போனபடியினால், தேவன் உம்மை அழிக்க யோசனையாயிருக்கிறார் என்பதை அறிவேன் என்றான்.
16 While he was still speaking, the king asked, “Have we made you the counselor to the king? Stop! Why be struck down?” So the prophet stopped, but he said, “I know that God has determined to destroy you, because you have done this and have not heeded my advice.”
16 இவ்வாறு, அவர் பேசிக்கொண்டிருக்கையில் அமட்சியா அவரை நோக்கி, "அரசருக்கு ஆலோசகனாக உன்னை நானா நியமித்தேன்? நிறுத்து! நீ ஏன் வீணாக சாக வேண்டும்?" என்றான். இறைவாக்கினரும் சற்று நிறுத்தி, பின் அமட்சியாவை நோக்கி, "எனது ஆலோசனையைக் கேட்காமல் நீ இவ்வாறு செய்ததனால் கடவுள் உன்னை அழிக்க முடிவு செய்திருப்பதை நான் அறிவேன்" என்று கூறினார்.
Jehoash Defeats Amaziah (2 Kings 14:8–14)
17 பின்பு யூதாவின் ராஜாவாகிய அமத்சியா யோசனைபண்ணி, யெகூவின் குமாரனாகிய யோவாகாசின் புத்திரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவுக்கு: நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம்வா என்று சொல்லியனுப்பினான்.
17 Then Amaziah king of Judah took counsel and sent word to the king of Israel Jehoashc son of Jehoahaz, the son of Jehu. “Come, let us meet face to face,” he said.
17 பின்னர், அமட்சியா ஆலோசனை செய்து, ஏகூவின் மகன் யோவகாசுக்குப் பிறந்த யோவாசு என்ற இஸ்ரயேலின் அரசனிடம், "வாரும், நாம் நேருக்கு நேர் பார்த்துக்கொள்வோம்" என்று சவால் விட்டான்.
18 அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி: நீ உன் மகளை என் மகனுக்கு மனைவியாக விவாகஞ்செய்து கொடு என்று கேட்கச்சொல்லிற்று; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒருகாட்டுமிருகம் அந்த வழி போகையில் ஓடி அந்த முட்செடியை மிதித்துப்போட்டது.
18 But Jehoash king of Israel replied to Amaziah king of Judah: “A thistle in Lebanon sent a message to a cedar in Lebanon, saying, ‘Give your daughter to my son in marriage.’ Then a wild beast in Lebanon came along and trampled the thistle.
18 இஸ்ரயேலின் அரசன் யோவாசு யூதாவின் அரசன் அமட்சியாவுக்கு ஆளனுப்பி, "லெபனோன் முட்செடி, லெபனோன் கேதுரு மரத்திடம் தூது அனுப்பி, 'நீ உன் மகளை என் மகனுக்கு மணமுடித்துக்கொடு என்று கேட்டதாம்; அப்பொழுது லெபனோன் காட்டு விலங்கு ஒன்று அவ்வழியே போகையில் அம் முட்செடியை மிதித்துப் போட்டதாம்!
19 நீ ஏதோமியரை அடித்தாய் என்று பெருமைபாராட்ட உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளப்பண்ணினது; இப்போதும் நீ உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடே யூதாவும்கூட விழும்படிக்கு, பொல்லாப்பைத் தேடிக்கொள்வானேன் என்று சொல்லச்சொன்னான்.
19 You have said, ‘Look, I have defeated Edom,’ and your heart has become proud and boastful. Now stay at home. Why should you stir up trouble so that you fall—you and Judah with you?”
19 ஏதோமை நீர் முறியடித்ததனால், உம் இதயம் தற்பெருமை கொண்டு எழுகிறது; இப்பொழுது நீர் உம் வீட்டிலேயே இரும்! நீரும் உம்மோடு யூதாவும் வீழ்ச்சியுறும்படி, தீமையை நீர் ஏன் தேடிக்கொள்ள வேண்டும்?" என்று பதிலளித்தான்.
20 ஆனாலும் அமத்சியா செவிகொடாதேபோனான்; அவர்கள் ஏதோமின் தெய்வங்களை நாடினதினிமித்தம் அவர்களை அவர்கள் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படிக்கு தேவனாலே இப்படி நடந்தது.
20 But Amaziah would not listen, for this had come from God in order to deliver them into the hand of Jehoash, because they had sought the gods of Edom.
20 ஆனால், அமட்சியா அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ஏதோமின் தெய்வங்களை அவன் வழிபட்டு வந்ததனால், அவனை எதிரிகளின் கையில் ஒப்பவிக்கக் கடவுள் திட்டமிட்டிருந்தார்.
21 அப்படியே இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான்; யூதாவிலிருக்கிற பெத்ஷிமேசிலே அவனும், அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவும் தங்கள் சாமர்த்தியத்தைப் பார்த்தார்கள்.
21 So Jehoash king of Israel advanced, and he and Amaziah king of Judah faced each other at Beth-shemesh in Judah.
21 ஆகவே, இஸ்ரயேலின் அரசன் யோவாசு போருக்குக் புறப்பட்டு வர, அவனும் யூதா அரசன் அமட்சியாவும் யூதாவின் பெத்செமேசில் நேருக்கு நேர் மோதினர்.
22 யூதா இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
22 And Judah was routed before Israel, and every man fled to his own home.
22 யூதாவினர் இஸ்ரயேலரால் முறியடிக்கப்பட்டு, அவரவர் தம் கூடாரத்திற்கு ஓடினர்.
23 இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அகசியாவின் குமாரனாகிய யோவாசுக்குப் பிறந்த அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவைப் பெத்மேசிலே பிடித்து, அவனை எருசலேமுக்குக்கொண்டுவந்து, எருசலேமின் அலங்கத்திலே எப்பிராயீம் வாசல்தொடங்கி மூலைவாசல்மட்டும் நானூறுமுழ நீளம் இடித்துப்போட்டு,
23 There at Beth-shemesh, Jehoash king of Israel captured Amaziah king of Judah, the son of Joash, the son of Jehoahaz.d Then Jehoash brought him to Jerusalem and broke down the wall of Jerusalem from the Ephraim Gate to the Corner Gate—a section of four hundred cubits.e
23 யூதாவின் அரசனும் யோவாசின் மகனுமான அமட்சியாவை யோவகாசின் மகனும் இஸ்ரயேலின் அரசனுமான யோவாசு பெத்செமேசில் சிறைப்பிடித்து, எருசலேமுக்கு இட்டுச் சென்றான். எப்ராயிம் வாயில் தொடங்கி மூலைவாயில் வரை நானூறு முழ நீளத்திற்கு எருசலேம் மதிலை யோவாசு இடித்துத் தள்ளினான்.
24 தேவனுடைய ஆலயத்தில் ஓபேத் ஏதோமின் வசத்திலே அகப்பட்ட சகல பொன்னையும், வெள்ளியையும், சகல பணிமுட்டுகளையும், ராஜாவின் அரமனைப்பொக்கிஷங்களையும், கிரியிருப்பவர்களையும், பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான்.
24 He took all the gold and silver and all the articles found in the house of God with Obed-edom and in the treasuries of the royal palace, as well as some hostages. Then he returned to Samaria.
24 கடவுளின் இல்லத்தில் ஓபேது-ஏதோமின் பொறுப்பில் இருந்த அனைத்துப் பொன், வெள்ளி, அனைத்துக் கலன்கள், அரண்மனையின் கருவூலங்களில் இருந்தவை ஆகியவற்றைக் கொள்ளையடித்தான்; பிணைக் கைதிகளையும் சமாரியாவுக்கு இட்டுச் சென்றான்.
The Death of Amaziah (2 Kings 14:17–20)
25 யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜா மரணமடைந்தபின்பு, யோவாசின் குமாரனாகிய அமத்சியா என்னும் யூதாவின் ராஜா பதினைந்து வருஷம் உயிரோடிருந்தான்.
25 Amaziah son of Joash king of Judah lived for fifteen years after the death of Jehoash son of Jehoahaz king of Israel.
25 யோவகாசின் மகனும் இஸ்ரயேலின் அரசனுமான யோவாசு இறந்த பின்னும் யூதாவின் அரசனும் யோவாசின் மகனுமான அமட்சியா பதினைந்து ஆண்டுகள் உயிரோடிருந்தான்.
26 அமத்சியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தமானங்கள் யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
26 As for the rest of the acts of Amaziah, from beginning to end, are they not written in the Book of the Kings of Judah and Israel?
26 அமட்சியாவின் பிற செயல்கள், தொடக்க முதல் இறுதிவரை, யூதா, இஸ்ரயேல் அரசர்களின் ஆட்சிக் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன அல்லவா?
27 அமத்சியா கர்த்தரை விட்டுப் பின்வாங்கின காலமுதற்கொண்டு எருசலேமிலிருந்தவர்கள் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணிக்கொண்டார்கள்; அதினிமித்தம் அவன் லாகீசுக்கு ஓடிப்போனான்; ஆனாலும் அவன் பிறகே லாகீசுக்கு மனுஷரை அனுப்பினார்கள்; அவர்கள் அங்கே அவனைக் கொன்றுபோட்டு,
27 From the time that Amaziah turned from following the LORD, a conspiracy was formed against him in Jerusalem, and he fled to Lachish. But men were sent after him to Lachish, and they killed him there.
27 அமட்சியா ஆண்டவரைப் புறக்கணித்த காலம் முதல் எருசலேமில் அவனுக்கெதிராகச் சதி உருவானது; அவன் இலாக்கிசுக்குத் தப்பியோட, அங்கேயும் அவர்கள் ஆள்களை அனுப்பி அவனைக் கொன்றனர்.
28 குதிரைகள்மேல் அவனை எடுத்துவந்து, யூதாவின் நகரத்தில் அவன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.
28 They carried him back on horses and buried him with his fathers in the City of Judah.f
28 அவன் உடலைக் குதிரைகளால் எடுத்துச் சென்று, யூதாவின் நகரில் அவன் மூதாதையருடன் அடக்கம் செய்தனர்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
4 a Deuteronomy 24:16
6 b 100 talents is approximately 3.77 tons or 3.42 metric tons of silver; also in verse 9.
17 c Jehoash is a variant of Joash ; also in verses 18, 21, 23, and 25.
23 d Jehoahaz is a variant of Ahaziah .
23 e 400 cubits is approximately 600 feet or 182.9 meters.
28 f Most Hebrew manuscripts; some Hebrew manuscripts, LXX, Vulgate, and Syriac City of David ; see 2 Kings 14:20.
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.