பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Psalms சங்கீதம் תְהִלִּים
சங்கீதம் 105 | Psalms 105
Tell of His Wonders (1 Chronicles 16:7–22)
1 கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.
1 Give thanks to the LORD, call upon His name; make known His deeds among the nations.
1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.
2 அவரைப் பாடி அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.
2 Sing to Him, sing praises to Him; tell of all His wonders.
2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்!
3 அவருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.
3 Glory in His holy name; let the hearts of those who seek the LORD rejoice.
3 அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!
4 கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.
4 Seek out the LORD and His strength; seek His face always.
4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!
5 அவருடைய தாசனாகிய ஆபிரகாமின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே!
5 Remember the wonders He has done, His marvels, and the judgments He has pronounced,
5 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள்.
6 அவர் செய்த அதிசயங்களையும் அவருடைய அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.
6 O offspring of His servant Abraham, O sons of Jacob, His chosen ones.
6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே!
7 அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர், அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.
7 He is the LORD our God; His judgments carry throughout the earth.
7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித்தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன.
8 ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும்,
8 He remembers His covenant forever, the word He ordained for a thousand generations—
8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார்.
9 அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார்.
9 the covenant He made with Abraham, and the oath He swore to Isaac.
9 ஆபிரகாமுடன் தாம் செய்து கொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார்.1
10 அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:
10 He confirmed it to Jacob as a decree, to Israel as an everlasting covenant:
10 யாக்கோபுக்கு நியமமாகவும் இஸ்ரயேலுக்கு என்றுமுள உடன்படிக்கையாகவும் அதை அவர் உறுதிப்படுத்தினார்.
11 உங்கள் சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.
11 “I will give you the land of Canaan as the portion of your inheritance.”
11 'கானான் நாட்டை உங்களுக்கு அளிப்பேன்; அப்பங்கே உங்களுக்கு உரிமைச் சொத்தாய் இருக்கும்' என்றார் அவர்.2
2 தொநூ 28:13.
12 அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சொற்ப ஜனங்களும் பரதேசிகளுமாயிருந்தார்கள்.
12 When they were few in number, few indeed, and strangers in the land,
12 அப்போது, அவர்கள் மதிப்பிலும் எண்ணிக்கையிலும் குறைந்தவராய் இருந்தார்கள்; அங்கே அவர்கள் அன்னியராய் இருந்தார்கள்.
13 அவர்கள் ஒரு ஜனத்தைவிட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தைவிட்டு மறு தேசத்தாரண்டைக்கும் போனார்கள்.
13 they wandered from nation to nation, from one kingdom to another.
13 அவர்கள் ஒரு நாட்டினின்று மற்றொரு நாட்டிற்கும் ஓர் அரசினின்று மற்றொரு மக்களிடமும் அலைந்து திரிந்தார்கள்.
14 அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள்நிமித்தம் ராஜாக்களைக் கடிந்து கொண்டு:
14 He let no man oppress them; He rebuked kings on their behalf:
14 யாரும் அவர்களை ஒடுக்குமாறு அவர் விட்டு விடவில்லை; அவர்களின் பொருட்டு மன்னர்களை அவர் கண்டித்தார்.
15 நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய ராஜாக்களுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்.
15 “Do not touch My anointed ones! Do no harm to My prophets!”
15 'நான் அருள்பொழிவு செய்தாரைத் தொடாதீர்! என் இறைவாக்கினர்க்குத் தீங்கிழைக்காதீர்' என்றார் அவர்.3
3 தொநூ 20:3-7.
16 அவர் தேசத்திலே பஞ்சத்தை வருவித்து, ஆகாரமென்னும் ஆதரவு கோலை முற்றிலும் முறித்தார்.
16 He called down famine on the land and cut off all their suppliesa of food.
16 நாட்டில் அவர் பஞ்சம் வரும்படி செய்தார்; உணவெனும் ஊன்றுகோலை முறித்துவிட்டார்.4
17 அவர்களுக்கு முன்னாலே ஒரு புருஷனை அனுப்பினார்; யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான்.
17 He sent a man before them—Joseph, sold as a slave.
17 அவர்களுக்கு முன் ஒருவரை அனுப்பிவைத்தார்; யோசேப்பு என்பவர் அடிமையாக விற்கப்பட்டார்.5
5 தொநூ 37:28; 45:5.
18 அவன் கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள், அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது.
18 They bruised his feet with shackles and placed his neck in irons,
18 அவர்தம் கால்களுக்கு விலங்கிட்டு அவரைத் துன்புறுத்தினர். அவர்தம் கழுத்தில் இரும்புப் பட்டையை மாட்டினர்.
19 கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது.
19 until his prediction came true and the word of the LORD proved him right.
19 காலம் வந்தது; அவர் உரைத்தது நிறைவேறிற்று; ஆண்டவரின் வார்த்தை அவர் உண்மையானவரென மெய்ப்பித்தது.6
6 தொநூ 39:20-40:23.
20 ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச்சொன்னான்; ஜனங்களின் அதிபதி அவனை விடுதலைபண்ணினான்.
20 The king sent and released him; the ruler of peoples set him free.
20 மன்னர் ஆளனுப்பி அவரை விடுதலை செய்தார்; மக்களினங்களின் தலைவர் அவருக்கு விடுதலை அளித்தார்;7
7 தொநூ 41:14.
21 தன் பிரபுக்களை அவன் மனதின்படி கட்டவும், தன் மூப்பர்களை ஞானிகளாக்கவும்,
21 He made him master of his household, ruler over all his substance,
21 அவர் அவரைத் தம் அரண்மனைக்குத் தலைவர் ஆக்கினார்; தம் உடைமைகளுக்கெல்லாம் பொறுப்பாளராக ஏற்படுத்தினார்.8
22 அவனைத் தன் வீட்டுக்கு ஆண்டவனும், தன் ஆஸ்திக்கெல்லாம் அதிபதியுமாக்கினான்.
22 to instruct his princes as he pleased and teach his elders wisdom.
22 அவர் அரச அலுவலரைப் பயிற்றுவித்தார்; அவருடைய அவைப்பெரியோருக்கு நல்லறிவு புகட்டினார்.
23 அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் தேசத்திலே பரதேசியாயிருந்தான்.
23 Then Israel entered Egypt; Jacob dwelt in the land of Ham.
23 பின்னர், இஸ்ரயேல் எகிப்துக்கு வந்தார்; யாக்கோபு காம் நாட்டில் அன்னியராய் வாழ்ந்தார்.9
24 அவர் தம்முடைய ஜனங்களை மிகவும் பலுகப்பண்ணி, அவர்களுடைய சத்துருக்களைப்பார்க்கிலும் அவர்களைப் பலவான்களாக்கினார்.
24 And the LORD made His people very fruitful, more numerous than their foes,
24 ஆண்டவர் தம் மக்களைப் பல்கிப் பெருகச் செய்தார்; அவர்களின் எதிரிகளைவிட அவர்களை வலிமைமிக்கவர்கள் ஆக்கினார்.
25 தம்முடைய ஜனங்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரரை வஞ்சனையாய் நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்.
25 whose hearts He turned to hate His people, to conspire against His servants.
25 தம் மக்களை வெறுக்கும்படியும், தம் அடியார்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யும்படியும் அவர் எகிப்தியரின் மனத்தை மாற்றினார்.10
10 விப 1:7-14.
26 தம்முடைய தாசனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார்.
26 He sent Moses His servant, and Aaron, whom He had chosen.
26 அவர்தம் ஊழியராகிய மோசேயையும், தாம் தேர்ந்தெடுத்த ஆரோனையும் அனுப்பினார்.11
11 விப 3:1-4:17.
27 இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.
27 They performed His miraculous signs among them, and wonders in the land of Ham.
27 அவர்கள் எகிப்தியரிடையே அவர்தம் அருஞ்செயல்களைச் செய்தனர்; காம் நாட்டில் வியத்தகு செயல்களைச் செய்து காட்டினர்.
28 அவர் இருளை அனுப்பி அந்தகாரத்தை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பாரில்லை.
28 He sent darkness, and it became dark—yet they defied His words.c
28 அவர் இருளை அனுப்பி நாட்டை இருட்டாக்கினார்; அவருடைய சொற்களை எதிர்ப்பார் இல்லை.12
12 விப 10:21-23.
29 அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய மச்சங்களைச் சாகப்பண்ணினார்.
29 He turned their waters to blood and caused their fish to die.
29 அவர்களுடைய நீர்நிலைகளை அவர் இரத்தமாக மாற்றினார்; அவற்றிலிருந்த மீன்களைச் சாகடித்தார்.13
13 விப 7:17-21.
30 அவர்களுடைய தேசம் தவளைகளைத் திரளாய்ப் பிறப்பித்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது.
30 Their land teemed with frogs, even in their royal chambers.
30 அவர்களது நாட்டிற்குள் தவளைகள் ஏறிவந்தன; மன்னர்களின் பள்ளியறைகளுக்குள்ளும் அவை நுழைந்தன.14
14 விப 8:1-6.
31 அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளில் எங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது.
31 He spoke, and insects swarmed—gnats throughout their country.
31 அவர் கட்டளையிட, அவர்களுடைய நாடு முழுவதிலும் ஈக்களும் கொசுக்களும் திரண்டு வந்தன.15
15 விப 8:16-17, 20-24.
32 அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி, அவர்களுடைய தேசத்திலே ஜுவாலிக்கிற அக்கினியை வரப்பண்ணினார்.
32 He gave them hail for rain, with lightning throughout their land.
32 அவர் நீருக்குப் பதிலாகக் கல்லை மழையாகப் பொழிந்தார்; அவர்களது நாடெங்கும் மின்னல் தெறிக்கச் செய்தார்.
33 அவர்களுடைய திராட்சச் செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து, அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார்.
33 He struck their vines and fig trees and shattered the trees of their country.
33 அவர் அவர்களின் திராட்சைச் செடிகளையும் அத்திமரங்களையும் அழித்தார்; அவர்களது நாடெங்குமுள்ள மரங்களை முறித்தார்.16
16 விப 9:22-25.
34 அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து,
34 He spoke, and the locusts came—young locusts without number.
34 அவரது சொல்லால் வெட்டுக் கிளிகளும் எண்ணற்ற வெட்டுப்புழுக்களும் அங்கே தோன்றின.
35 அவர்களுடைய தேசத்திலுள்ள சகல பூண்டுகளையும் அரித்து, அவர்களுடைய நிலத்தின் கனியைத் தின்றுபோட்டது.
35 They devoured every plant in their land and consumed the produce of their soil.
35 அவை அவர்களது நாட்டின் பயிர் பச்சைகளைத் தின்றுத்தீர்த்தன; அவர்களது நிலத்தின் விளைச்சல்களை விழுங்கிவிட்டன.17
17 விப 10:12-15.
36 அவர்களுடைய தேசத்திலே தலைச்சன்கள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான யாவரையும் சங்கரித்தார்.
36 Then He struck all the firstborn in their land, the firstfruits of all their vigor.
36 அவர் அவர்களது நாட்டின் தலைப்பேறுகள் அனைத்தையும் தாக்கினார்; அவர்களது ஆண்மையின் முதற்பேறுகள் அனைத்தையும் வீழ்த்தினார்.18
18 விப 12:29.
37 அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படப்பண்ணினார்; அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை.
37 He brought Israel out with silver and gold, and none among His tribes stumbled.
37 அவர் இஸ்ரயேலரை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச் செய்தார்; அவர்கள் குலங்களில் எவரும் தளர்ந்து போகவில்லை.
38 எகிப்தியர் அவர்களுக்குப் பயந்ததினால் அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள்.
38 Egypt was glad when they departed, for the dread of Israel had fallen on them.
38 அவர்கள் வெளியேறுகையில் எகிப்தியர் அகமகிழ்ந்தனர்; ஏனெனில், இஸ்ரயேலர் பற்றிய பேரச்சம் அவர்களை ஆட்கொண்டிருந்தது.19
19 விப 12:33-36.
39 அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக அக்கினியையும் தந்தார்.
39 He spread a cloud as a covering and a fire to light up the night.
39 அவர் அவர்களைப் பாதுகாக்க மேகத்தைப் பரப்பினார்; இரவில் ஒளிதர நெருப்பைத் தந்தார்.20
20 விப 13:21-22.
40 கேட்டார்கள், அவர் காடைகளை வரப்பண்ணினார்; வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார்.
40 They asked, and He brought quail and satisfied them with the bread of heaven.
40 அவர்கள் கேட்டதால் அவர் காடைகளை வரச்செய்தார்; வானினின்று வந்த உணவால் அவர்களை நிறைவுறச் செய்தார்.21
21 விப 16:2-15.
41 கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு வறண்ட வெளிகளில் ஆறாய் ஓடிற்று.
41 He opened a rock, and water gushed out; it flowed like a river in the desert.
41 அவர் கற்பாறையைப் பிளந்தார்; தண்ணீர் பொங்கி வழிந்தது; அது பாலைநிலங்களில் ஆறாய் ஓடிற்று.22
22 விப 17:1-7; எண் 20:2-13.
42 அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், தம்முடைய தாசனாகிய ஆபிரகாமையும் நினைத்து,
42 For He remembered His holy promise to Abraham His servant.
42 ஏனெனில், தம் அடியார் ஆபிரகாமுக்கு அளித்த தமது தூய வாக்குறுதியை அவர் நினைவுகூர்ந்தார்.
43 தம்முடைய ஜனத்தைக் களிப்போடும் தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படப்பண்ணினார்.
43 He brought forth His people with rejoicing, His chosen with shouts of joy.
43 அவர் தம் மக்களை மகிழ்ச்சியோடு வெளிக்கொணர்ந்தார்; அவர்தாம் தெரிந்தெடுத்தவர்களை ஆரவாரத்தோடு கூட்டிச் சென்றார்.
44 தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,
44 He gave them the lands of the nations, that they might inherit the fruit of others’ labor,
44 அவர் வேற்றினத்தாரின் நாடுகளை அவர்களுக்கு அளித்தார்; மக்களினங்களது உழைப்பின் பயனை அவர்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு செய்தார்.23
23 யோசு 11:16-23; 16:1; 1 குறி 16:34; 2 குறி 5:13; 7:3; எஸ்ரா 3:11; திபா 11:5; 107:1; 119:1; 136:1; எரே 33:11.
45 அவர்களுக்குப் புறஜாதிகளுடைய தேசங்களைக் கொடுத்தார்; அந்நிய ஜனங்களுடைய பிரயாசத்தின்பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். அல்லேலுூயா.
45 that they might keep His statutes and obey His laws. Hallelujah!d
45 அவர்கள் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும், அவருடைய சட்டங்களின்படி ஒழுகவுமே அவர் இவ்வாறு செய்தார். அல்லேலூயா!
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
16 a Hebrew staff
22 b LXX and Syriac; MT to bind
28 c LXX and Syriac; Hebrew for had they not defied His words?
45 d Or Hallelu YAH , meaning Praise the LORD
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.